ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று (27.01.2021) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என தெரிவித்து கடந்த 22 ஆம் திகதிய வழக்கில் ஆஜராகியிருந்த பூசகர் உட்பட்ட மூவரையும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழங்கு இன்று புதன்கிழம…
-
- 3 replies
- 940 views
-
-
(செய்திப்பிரிவு) இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார். அவ்வறிக்கையில், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்குத் தவறிய…
-
- 1 reply
- 340 views
-
-
திருகோணமலை - தேவநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதியில் செயற்படுவதாக கூறப்படும் 'குட்டிப்புலி' என்ற வன்முறை குழுவின் 5 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய காவல்துறை விசேட அதிரடி படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய தேவநகர் பகுதியில் முதலாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து வாள், 12 தொலைபேசிகள், 5 சிம் அட்டைகள், கமரா, சட்டவிரோதமாக பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விடுவிப்பதற்கு குட்டிப்புலி என்ற குழுவின் உறுப்பினர்கள் முயற்சித்த போது…
-
- 0 replies
- 603 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021ஆம்ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதைஅடுத்து அவர் பதவி இழந்தார். அதன் பின் நடைபெற்ற மேயர் தெ ரி வி ல் இ.ஆர்னோல்ட் மற்றும் வி.மணிவண் ணன் ஆகியோ போட்டியிட்டனர். அதில் வி.மணிவண்ணன் மேயராகத்தெரிவு செய்யப்பட்டார். அதையடுத்து அவரால் இன்று புதிய வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. 45 உறுப்பினர்…
-
- 0 replies
- 600 views
-
-
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு! யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,…
-
- 0 replies
- 686 views
-
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கை அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத் திணைக்கள முன்றலில் இன்று புதன்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் மாநகரம் ஊடாக ஸ்ரானி வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கை மனுவை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் | Vir…
-
- 1 reply
- 289 views
-
-
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் தேவை என கோரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வடமாகாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவேண்டிய சுகாதாரத் துறையினரின் விவரங்களை சுகாதார அமைச்சுக் கேட்டிருந்தது. அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர். அவர்களுடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ …
-
- 0 replies
- 212 views
-
-
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்றையதினம் விஜயம் செய்து நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இன்று காலை (27.01.2021) குறித்த பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரை அங்கு காவல் கடமையில் நின்ற இராணுவத்தினர் உள்ளே செல்லவிடாது தடுத்ததோடு, தமது மேலதிகாரியின் உத்தரவுப்படி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவ முகாமின் இராணுவ மேலதிகாரி பணித்துள்ளதாக தெரிவித்து தடை விதித்தனர். அவ்விடத்திலிருந்து தொலைபேசி வாயிலாக …
-
- 0 replies
- 386 views
-
-
Facebook தமது இரத்த தான அம்சத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்திட சுகாதார அமைச்சுடன் கைகோர்க்கிறது மக்களுக்கு இரத்த தானம் செய்வதை எளிதாக்கும் முயற்சியாக. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஆதரவுடன் சுகாதார அமைச்சின் தேசிய இரத்த பரிமாற்றுச் சேவையுடன் கூட்டிணைந்து Facebook தமது தளத்தில் இரத்த தானத்திற்கான புதியதோர் அம்சத்தினை அறிமுகப்படுத்தியது. இக்கூட்டிணைவு முயற்சியின் ஒரு பகுதியாக இன்று வரை 24 இரத்த வங்கிகள் இதில் பங்கேற்று செயற்படுகின்றன. உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கிலான உயிர்கள் பாதுகாப்பானதும் நிலையானதுமான இரத்த விநியோக அணுகலில் தங்கியுள்ளன. கொவிட் 19 தொற்றின் பரவலானது மக்கள் எங்கு எப்படி இரத்த தானம் செய்கிறார்கள் என்பதையும் மாற்றியுள்ளது. வழமையான இரத்த பர…
-
- 0 replies
- 271 views
-
-
கொரோனா வைரஸ் மருந்துகளிற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தது அமைச்சரவை இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை அனுப்பிவைப்பதற்காக அமைச்சரவை இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனா வைரஸ் மருந்துகளை அனுப்பிவைக்கவுள்ளது அவை நாளை வந்தடையவுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார். இதற்காக இந்திய அரசாங்கத்திற்கு அமைச்சரவை தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பெறவுள்ள எட்டாவது நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. Thinakkural.lk
-
- 0 replies
- 237 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நிறைவடைந்த விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக நிறைவடையவுள்ளது. இன்று இடம்பெறும் இறுதி அமர்வுக்குப் பிறகு உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்தது. அதனடிப்படையில் ஒரு வருடகாலத்திற்கும் அதிகமாக 440 பேரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நிறைவடைந்த விசாரணைகள் (adaderana.lk)
-
- 0 replies
- 586 views
-
-
புதிய ஆணைக்குழு மீது நம்பிக்கை வைக்க முடியாது – முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் January 27, 2021 நாட்டில் போர்க் குற்றங்களோ அல்லது மனித உரிமை மீறல்களோ இடம் பெறவில்லை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. இத்தகைய அரசாங்கத்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக் குழுவின் மீது நம்பிக்கை கொள்ளமுடியாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக் குழு தொடர்பில் வினவியபோது அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இலங்கையில் நடைபெற்றனவாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள…
-
- 1 reply
- 518 views
-
-
போரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை - இப்படிக் கூறுகின்றது அரசு.! போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.என்று அமைச்சரவைப் பேச்சாளாரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே எமது நிலைப்பாடாகும். ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே 2015இல் ஆட்சி மாற்றம் ஏ…
-
- 1 reply
- 938 views
-
-
அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதுமானதென முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே: சுமந்திரன் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் மாத்திரம் கையொப்பம் இட்டால் போதுமானது என்று வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே அந்த ஆவணத்தில் முதலில் கையொப்பமிட வேண்டும் என்று விக்னேஸ்வரனே பிரேரித்தார் என்று…
-
- 6 replies
- 902 views
-
-
ஜெனீவாவில் நெருக்கடியை தவிர்ப்பதற்கு இலங்கை தீவிர முயற்சி-இணக்கப்பாட்டுடனான தீர்மானம் குறித்து பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் பரஸ்பர இணக்கப்பாட்டுடனான தீர்மானமொன்றை கொண்டுவருவது குறித்து பிரிட்டன் தலைமையிலான முகன்மை குழுவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். எனினும் இவ்வாறான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது அரசியல்ரீதியில் சவாலான விடயம் என்பதை அவர் டீவி ஒன் இன் நியுஸ்லைன் உடனான உரையாடலின் போது ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது. இலங்கை புதிய தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கவேண்டும் அல்லது வாக்கெடுப்பை எதிர்கொள்ளவேண்டும் என அழ…
-
- 0 replies
- 310 views
-
-
தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021 தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொழில் உறவுகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2020 – நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதனை செயற்படுத்தும் வகையில் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை. பெருந்தோட்ட முதலாளிமார் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த…
-
- 0 replies
- 275 views
-
-
யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம் ஜனாதிபதி செயலணிக்கு தாரை வார்க்கப்பட்டது..! யாழ்.நல்லுார் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி செயலணியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருக்கின்றது. மாகாண கல்வியமைச்சின் ஆளுகைக்குட்பட்ட குறித்த பாடசாலை சைவ பாடசாலையாக மிக நீண்ட காலம் இயங்கி வந்த நிலையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் வட மாகாண கல்வியமைச்சினால் பாடசாலை அண்மையில் மூடப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து ஜனாதிபதியின் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வழங்கும் செயலணியின் பயன்பாட்டுக்காக குறித்த பாடசாலை கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண கல்வியமைச்சினால் ஒரு வருடத்திற்கு குறித்த பாடசாலை வழங்கப்பட்டிருக்கின்ற…
-
- 1 reply
- 942 views
-
-
யாழ்.தீவகத்தில் மேலும் பல ஏக்கர் மக்களின் காணிகளை இராணுவ பயன்பாட்டிற்காக சுவீகரிக்க அரசு இரகசிய திட்டம் - பலருடைய காணி பறிபோகும் அபாயம்.! யாழ்.தீவகத்தில் சுமார் 101 ஏக்கர் தனியார் காணிகள் அரச படைகளின் வசம் உள்ள நிலையில் மேலும் 30 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. தீவகத்தில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 111.37 ஏக்கர் தனியார் காணிகள் அரச படைகள் வசம் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் 30 ஏக்கருக்கு மேல் பாதுகாப்பு பாதுகாப்புப் படைககளின் பயன்பாட்டிற்காக சுவீகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்படுவதாக அறியக் கிடைத்தது. நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகு…
-
- 1 reply
- 470 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலும் மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இதன் கீழ் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரி…
-
- 0 replies
- 291 views
-
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் இனத்தைச் சேர்ந்த B.1.258 என்ற புது வகை வைரஸை ஒத்த வைரஸே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்த நாடுகளில் தற்போது பரவி வரும் புதிய வைரஸ் வகையைச் சேர்ந்ததல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த வைரஸின் தொற்று வீதம் அதிகமாக காணப்படுவதுடன், தற்போது அதிகளவில் பேசப்படும் பிரி…
-
- 0 replies
- 381 views
-
-
மைத்திரியின் ஊடாக கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்- பிள்ளையான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்களென ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது யாழ்ப்ப…
-
- 0 replies
- 243 views
-
-
வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் இன்னும் இராணுவப் பிடியிலிருந்து மீளவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1958 ஆண்டுகளில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்கு முறை 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவபிடிக்குள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். நடைபெற இருக்கின்ற ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்…
-
- 2 replies
- 426 views
-
-
கொரோனா தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் – அரசாங்கம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 3 இலட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் இருந்து 6 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இந்த வாரம் இலங்கைக்கு வரும் என்றும் இதனை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மறுநாளே ஆரம்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 499 views
-
-
TMVP கட்சி பிள்ளையானின் சொத்து அல்ல. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய கட்சியாக மாற்றக் கூடிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது By கிருசாயிதன் (எஸ்.எம்.எம்.முர்ஷித்.) அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபை முறைமை ஒன்று வருமாக இருந்தால் மாகாண சபையை ஆட்சியமைக்கும் பொறுப்பும், ஆட்சியமைக்க வைக்கும் பொறுப்பும் மக்கள் கையில் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுங்கான்கேணி கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய மு…
-
- 1 reply
- 442 views
-
-
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடல் தகுதிகாண் பரீட்சை வவுனியாவில் இடம்பெற்றது
-
- 0 replies
- 443 views
-