ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
மாணிக்கக்கற்கள் பொறிக்கப்பட்ட பழைய விநாயகர் சிலையை மூன்றரை கோடி ரூபாவிற்கு விற்க முயன்ற நால்வரை அநுராதபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். வர்த்தகர்கள் போன்று மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரே குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/93994-2013-12-21-05-47-22.html
-
- 0 replies
- 346 views
-
-
அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்திற்கு வடமாகாண சபை ஆதரவளிக்காது என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண சபை வளாகத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு திருத்தமானது நாடாளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது என முதல்வர் விளக்கினார். இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஊவா …
-
- 0 replies
- 301 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29 08 2017 , 8PM
-
- 0 replies
- 390 views
-
-
13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனம் என்கின்றார் சம்பந்தன் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார். இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது என்றாலும் இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் என கூறினார். இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனமான செயற்பாடு என்றும் இது இருப்பதை இழக்க செய்யும் நடவடிக்கை என…
-
- 2 replies
- 247 views
-
-
இந்தியக் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் பறிமுதல் by வீரகேசரி இணையம் இந்தியாவின் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைப் படகுகளை இந்திய கடலோர பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த படகுகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பினும், தற்போதே அவை கொச்சின் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன. இந்தியாவின் லட்சத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவுக்கு அருகில் வைத்தே இந்தப் படகுகள் கைபற்றப்பட்டுள்ளன. இதில் இருந்த 11 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், கடலோர பொலிசாரின் மீரா என்ற கப்பலின் மூலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த படகுகள் இரண்டும் இன…
-
- 1 reply
- 546 views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஈ.பி.டி.பி.யின் கருத்தை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். யாழ்ப்பாண குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், சமூக விரோத செயல்கள் இடம்பெறுவதாகவும் ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டின் காவல்துறைப் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். கேரள கஞ்சா போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் மறுத்துள்ளனர். ஈ.பி.டி.பி. கட்சி யாழ் குடாநாட்டின் நிலைமைகளை பிழையாக விளங்கிக. கொண்டுள்ளதா…
-
- 1 reply
- 587 views
-
-
தமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுக்கும் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது. அவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகளையும் வாக்கு மூலங்களையும் தமிழ் மொழி மூலம் பதிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருப்பதாக வடமாகாண பொலிஸ் ஆணைக்குழு பணிப்பாளர் கலாநிதி க.தியாகராஜா கூறினார். ஏதேனும் பொலிஸ் நிலையத்தில் தமிழில் வாக்குமூலத்தை பதிய மறுத்தால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர், முறைப்பாட்டை ஏற்க மறுத்த திகதி உள்ளிட்ட விபரங்களுடன் வடமாகாண பொலிஸ் குழுவில் முறையிடுமாறு அவர் கோரினார்…
-
- 1 reply
- 182 views
-
-
பளையில் பெரும் குண்டு!! – ஐந்து கிராம மக்கள் இடம்பெயர்வு! பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் பணிகளில் ஈடுபட்டிருந்த வெடிபொருள் அகற்றும் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குண்டை வெடிக்க வைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்திராபுரம், வேம்பொடுகேணி, இத்தாவில், செல்வபுரம், கச்சார்வெளி, போன்ற கிராம மக்களை குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர். குண்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து…
-
- 3 replies
- 557 views
-
-
புதிய தகவலை வெளியிட்டார் பொன்சேகா பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதிராக போராடுகின்றனர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் கும்பலாகும் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவை கைது செய்தமையில் எந்தவொரு தவறும் கிடையாது. இவர்களுக்கு நஷ்டஈடு செலுத்துவதற்கு தனியாக நிதியம் ஆரம்பிக்க வேண்டியதில்லை. தமது பணத்தை கொண்டே நஷ்டஈட்டை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதி…
-
- 0 replies
- 249 views
-
-
தேயிலை ஏற்றுமதியில் சிறிலங்கா தனது முதலிடத்தை இழந்தது [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, உலகின் தேயிலை ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த சிறிலங்காவை பின்னுக்குத தள்ளி கென்யா அந்த இடத்தைப் பிடித்தது. கென்யாவின் தேயிலை நிர்வாக சபை அளித்துள்ள புள்ளி விபரங்களின் படி அந்த நாடு 47 உலக சந்தைகளுக்கு 342 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இது உலக தேயிலை ஏற்றுமதியில் 22 சதவிகிதமாகும். சென்ற வருடம் முன்னணியில் இருந்த தேயிலை ஏற்றுமதியாளரான சிறிலங்காவை தாங்கள் பின்னுக்குத் தள்ளி விட்டதாகவும் தொடர்ந்து இதே இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயலுவதாகவும் கென்யாவில் உள்ள நைரோபி நகரின் நோர்போல்க் விடுதியில் [Norfolk Hotel] திங்களன்று துவங்கப்பட்ட ஐக்கிய…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தைப்பொங்கல் நிகழ்வு நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சீ.பி.ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/96802-2014-01-15-09-40-41.html
-
- 0 replies
- 363 views
-
-
ந்தியா இலங்கைக்கு ரோந்து கப்பல்களையே வழங்கவுள்ளதாகவும் அது போர்க்கப்பல் இல்லை எனவும் இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சின் உதவி செயலாளர் ஜோசி சத்திய கடதாசியை சென்னை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த கப்பல்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை இந்திய கடற்பகுதிக்குள் ஒரு போதும் செலுத்தமாட்டோம் என்று இலங்கை கடற்படையும் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார். இதன் போது இந்திய கடற்படையினரும் இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர் என்று ஜோசி சுட்டிக்காட்டியுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=807392592222602506#sthash.hbPbBj8m.dpuf
-
- 1 reply
- 364 views
-
-
வடக்கு கிழக்கு இளைஞர்கள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றார்கள்… 2009 இற்குப் பின்னர் வடக்கு கிழக்கிலே இளைஞர்களை உரிமை, போராட்ட சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்காக திட்டமிட்டு இளைஞர்களைத் திசை திருப்பும் கபடத்தனமான கைங்கரியத்தை அப்போது ஆட்சியில் இருந்த அரசு மேற்கொண்டது. விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை எதிர்கால இளைஞர்களை தப்பான வழியில் இருந்து ஒரு நல்ல வழிக்கு இட்டுச் செல்ல முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்குவில் பகலவன் விளையாட்டுக் கழக மைதான பெயர்ப்பலகைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் நேற்று (21)…
-
- 0 replies
- 205 views
-
-
கூட்டமைப்பினர் வடமாகாண சபையில் நிறை வேற்றியிருக்கும் தீர்மானங்களை முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெனீவா மாநாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானங்களுக்கு வந்துள்ளனர் எனவும் கட்டுமானம் பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண சபை இலங்கையின் இறைமையை மீறி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகிறது ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் தீர்மானங்களுக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, மன…
-
- 0 replies
- 250 views
-
-
அமெரிக்காவில் நாளை சிறிலங்கா தயாரிப்பு ஆடை புறக்கணிப்பு போராட்டம்: திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு தமிழர் செயலவை அழைப்பு [ வெள்ளிக்கிழமை, 19 மார்ச் 2010, 01:06 GMT ] சிறிலங்காத் தயாரிப்பு ஆடைகளைப் புறக்கணிக்கும்படி கோரும் எதிர்ப்புப் போராட்டங்களை - மனித உரிமை ஆர்வலர்களும், நுகர்வோரும் அமெரிக்கா முழுவதும் நடத்த உள்ளனர். நாளை சனிக்கிழமை அமெரிக்காவின் முதன்மையான 16 நகரங்களில் இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. New York - NY, Princeton - NJ, Baltimore - MD, Boston - MA, Atlanta - GA, Dallas - TX, Houston - TX, Columbus - OH, Cleveland - OH, Chicago - IL, Detroit - MI, Wilmington - DE, San Francisco - CA, Los Angles - CA, Sawgrass Mills - FL,…
-
- 0 replies
- 391 views
-
-
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு ஒக்டோபர் 5இல் (எம்.சி.நஜிமுதீன்) 2017 ஆம் கல்வியாண்டுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளன. இதேவேளை க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன. அதற்கான சகல ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் பரீட்சை பெறுபேறுகள் தாமதப் படுவதனால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக்கொண்…
-
- 0 replies
- 500 views
-
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்... சில உறுப்பினர்கள், சுயாதீனமாக செயற்பட முடிவு மக்களின் ஆணையை பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் உட்பட 50 இற்கும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274702
-
- 0 replies
- 134 views
-
-
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையைக் கோருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றெங்கின் தெரிவித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் தெளிவாகவும் நட்பு ரீதியாகவும் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். வட அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் ருவாண்டா மற்றும் சியேராலியோன் போன்ற நாடுகளில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நீண்டகால நல்லிணக்கம் மற்றும் உறுதியான ஸ்திரத்தன்மை ப…
-
- 0 replies
- 367 views
-
-
நாட்டின் மிகப்பெரிய இலஞ்சம்! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள் நால்வர் மீது, மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்ப்பட்டுள்ளன. சுங்கத் துறையின் உதவி கண்காணிப்பாளர் உபாலி குணரத்ன பெரேரா, சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் வசந்த விமலவீர, உபாலி விக்கிரமசிங்க, சுதீர ஜினதாஸ ஆகியோர் மீதே குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபைக்காகத் தருவிக்கப்பட்ட 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான உதிரிப் பாகங்களுக்கான வரியை விதிக்காமல் இருப்பதற்காக, 2015ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி, 125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக இவர்கள் மீது பதினான்கு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 193 views
-
-
'அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை' முடியப்பு பியசேன இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதன் காரணமாக மக…
-
- 5 replies
- 863 views
-
-
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் பரப்புரை Share இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப் பகுதிகளிலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற அரசியல் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசு உலகமெங்கும் விரிவுபடுத்துவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் பெருஞ்செயற்றிட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு கட…
-
- 0 replies
- 214 views
-
-
யாழ் போதனா வைத்திய சாலையில் கண் சிகிச்சை பிரிவில் சிங்களவர்கள் இடையே கத்திக்குத்து யாழ் நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சைப் பகுதிக்கு தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் 26 வயதுடைய கமகே என்பவர் வந்திருந்தார். அவரைச் சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் 22 வயதுடைய அஞ்சலி என்பவர் வந்திருந்தார். காதலர்களான இருவரும் உரையாடிக் கொண்டு இருக்கையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டது. இருவரும் தம் கைகளில் வைத்திருந்த கத்தியினால் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதனால் கண்சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் கதிகலங்கினர். கத்திக்குத்துப…
-
- 6 replies
- 769 views
-
-
மனிதஉரிமைகள் பெரிய விடயமே இல்லை, ஆனாலும் தலைவலியாக இருக்கிறதாம்! – அலுத்துக் கொள்கிறார் ஜனாதிபதி மகிந்த. [Friday, 2014-02-28 07:49:01] நாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி செய்திருப்பதை தவிர, ஏனைய மனித உரிமைகள் ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தம்மை அபிவிருத்தி குறித்து சிந்திக்கவிடாமல், சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதில் வழங்கிக் கொண்டே இருக்கும் வகையிலான சூழ்நிலையில் சிக்கவைக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். போர் முடிந்த பின்னர் இலங்கை மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. தற்போது நாட்டின் அபிவிருத்தியே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆனால்…
-
- 1 reply
- 244 views
-
-
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாறும்- விக்னேஸ்வரனை சந்திக்கவும் ஏற்பாடு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமடைய வேண்டும் என சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள் கடும் அழுத்தம் கொடுப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். அவசர அவசரமாக அரசியல் கட்சியாக மாற்றமடைந்து, வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் தமிழர்களின் தற்போதை அவல நிலை குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தி, தேசிய இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என ஆர்வலர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையின் யாழ், மன்னார் மறை மாவட்டங்களின் அருட்தந்தையர்கள் சிலர…
-
- 1 reply
- 579 views
-
-
எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை! தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதா…
-
- 31 replies
- 2.9k views
-