Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனீவா பிரேரணைக்கான புலம்பெயர் அமைப்புக்களின் முன்மொழிவு ஆவணத்திற்கு எம்.பி.கள் எழுவர் ஒப்புதல் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46 ஆவது அமர்வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளால் புதிய பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளது. குறித்த பிரேரணையின் உள்ளடக்கமானது எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் இம்முறை புலம்பெயர் அமைப்புக்களிடையே பல்வேறு கட்டப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அதனடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட மேலும் சில புலம் பெயர் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாடு ஏற்படுத்தப்பட்ட முன்மொழிவுகளைக் கொண்ட ஆவணம் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி…

  2. ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..! இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். நேற்றைய தினம், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரிலேயே வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் நேற்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே இன்று ஜெய்சங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பில், இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/97982

  3. மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை. நிலைமைகளைக் கவனத்திலெடுத்தே அதற்கு அனுமதி வழங்க முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் சந்தைக் கொத்தணி பரவலையடுத்து மூடப்பட்டுள்ள தமது வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மருதனார்மடம் சந்தைச் சூழலிலுள்ள வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கேட்டபோதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையதாக நேற்றும் (நேற்றுமுன்தினமும்) 7பேர் அடையாளம் காணப்பட்டுள்ள…

  4. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு மற்றுமொரு உயரிய பொறுப்பு.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் நாடாளுமன்றத்தில் மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும். இவற்றில் UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundat…

  5. ஜெனீவாவை கூட்டாகக் கையாள்வதற்கு 3 பிரதான தமிழ்க் கட்சிகள் இணக்கம் 45 Views சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையையும் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா குருமண்காடு விருந்தினர…

  6. மாவையின் தலைமைக்கு சோதனை ; மேயர் யார் எனத் தீர்மானித்த டக்ளஸ் – அகிலன் 164 Views பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துப் போட்டி இப்போது யாழ். மாநகர சபையை இழக்கும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. இது மாவை. சேனாதிராஜாவின் தலைமைக்கு ஏற்பட்ட கடும் சோதனை. அதேபோல, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய சவால் ஒன்றைச் சந்தித்திருக்கின்றது. மாநகர சபையில் அதற்கிருந்த 13 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருப்பது கஜேந்திரன்களுக்குப் பலத்த அடியாக விழுந்திருக்கின்றது. எந்தக் கட்சியிலிருக்கின்றார் என்பதே தெரியாமல் தனித…

    • 9 replies
    • 1.4k views
  7. தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக நாம் தயாராக உள்ளோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு By Ragavi இந்த நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் ஏற்பட்டு அதனால் நாட்டில் இத்தனை தாக்கங்கள் ஏற்பட ஜனாதிபதியே பிரதான காரணமாகும்.சுகாதார துறையினர் கையாள வேண்டிய விடயங்களை இராணுவத்திடம் ஒப்படைத்தமையினாலேயே அனைத்தும் பிழைத்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார். கொவிட் -19 தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் விடுவிக்க வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையாளர்களாக நாம் தயாராக …

  8. பல்கலை மாணவர்களின் உணவு ஒறுப்பு முடிவுக்கு வந்தது January 5, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பிரதாய பூர்வ வாயிலில் நேற்று முதல் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மாணவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு ஒறுப்பை முடித்து வைத்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகப் பேரவையினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று 04 ஆம் திகதி, திங்க…

  9. தமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் க…

    • 7 replies
    • 1.1k views
  10. திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி December 29, 2020 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார். இந்நிலையில்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர்…

  11. மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். விடுதலை செய், விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரபட்சம் காட்டாதே, கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும். என பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது எழுப்பினர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்ன…

  12. ஜெனிவா: கஜேந்திரகுமார்-சுமந்திரன்-விக்னேஸ்வரன் கொழும்பில் நேரில் சந்திக்கின்றனர்.! ஜெனிவா விவகாரத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ம.ஆ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் கொழும்பில் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட்டுக் கையாள்வதற்கான வாய்ப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் கூட…

  13. ’வடமராட்சியை முடக்க இன்னும் தீர்மானிக்கவில்லை’ -என்.ராஜ் தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், வடமராட்சி பிரதேசத்தில் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதனால், சுகாதாரப் பிரிவு அவருடைய தரவுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்களென்றார். அதனுடைய பின்னணி தொடர்பாக ஆராய்ந்த பின்னரே, அதனை முடக்குவதாக இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியுமெனவும, அவர்; கூறினார். எனினும், சுகாதாரப் பிரிவினராலேயே அந்த முடிவு அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவ…

  14. அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை – கமால் குணரத்ன by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/11/Kamal-Gunaratne.jpg சாரதி அனுமதிப் பத்திரத்தை இராணுவத்தினர் அச்சடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தாற்காலிமானது என்றும் இது அரச நிதியை சேமிப்பதற்கான நடவடிக்கை என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை என கூறினார். மேலும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் மற்ற நடவடிக்கையில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்றும் இராணுவம் அச்சிடும் பணி…

    • 0 replies
    • 425 views
  15. தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும்; வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு…

    • 0 replies
    • 360 views
  16. நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் – க.வி.விக்னேஸ்வரன் J 57 Views நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன். சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த …

    • 1 reply
    • 571 views
  17. கருணாவை கத்தியுடன் சந்திக்க சென்றவர் கைது Sayanolipavan கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை , நேற்றைய தினம் சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.வயலிற்கு பசளைகளை இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில் கருணாவை சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார் எ…

    • 2 replies
    • 794 views
  18. இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இந்திய வௌிவிவகார அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் இந்த விஜயத்தின் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் உயர்மட்ட வௌிநாட்டு தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகு…

  19. தமிழ்தேசி தலைவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தவர்கள் முஷ்லிம் அரசியல் தலைவர்களே. - பா.அரியநேத்திரன் மு.பா.உ. January 4, 20215:47 pm தமிழ்முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ்தேசிய தலைவர்கள் தந்தை செல்வாகாலம் தொடக்கம் ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், தற்போதைய சம்மந்தன் ஐயா காலம் வரை இருந்தனர் ஆனால் அதை தட்டிக்கழித்தவர்கள் முஷ்லிம் அரசியல்வாதிகளே என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ஜக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் செயலாளருமான ஹசன் அலி தமி…

  20. அரசே விடுதலை செய்!! – அரசியல் கைதிகளுக்காய் கிளிநொச்சியிலும் போராட்டம் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி – பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று (5) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். https://newuthayan.com/அரசே-விடுதலை-செய்/

  21. சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைக்கான தடைகளை உடைக்க வேண்டும்! – சுதந்திர ஊடக இயக்கம்! January 4, 2021 ஊடக அறிக்கை 2021 ஜனவரி 04 சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கண்மூடித்தனமான முறையில் தடைசெய்யும் போக்கு குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மேலும் கைதுகள் இடம்பெறும் என்றும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2020 நவம்பர் மாதத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பாக ஏர…

  22. புதிய அரசமைப்பு இவ்வருடம் பாராளுமன்றில்? சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற திட்டம் 35 Views புதிய அரசமைப்பு தொடர்பான சட்ட வரைவை இந்த வருடம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.. புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசு நிபுணர்கள் குழுவொன்றை அமைத்திருந்தது. மேற்படி குழு பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் கருத்துக்களைக் கோரியிருந்தது. பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர். இந்தக் குழுவின் யோசனை…

  23. போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கும் அபாயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக தாழ் நிலங்களை அண்டிய கிராமங்களான பழுகாமம் கோவில் போரதீவு,பட்டாபுராம்,பெரியபோரதீவு,முனைத்தீவு ஆகிய கிராமங்களில் மழை நீர் உட்புகுந்துள்ளமையினால் மக்களின் வீடுகள் வீதிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக மட்டக்களப்பு மண்டூர் வீதி உட்பட சில பிரதான வீதிகளில் ஊடாகவும் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக மக்கள் போக்குவரத்து செய்வதில் சிக்கல் நிலையேற்பட்டுள்ளது. இதேவேளை போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி போரதீவுப்பற்று பிரதேசசபை செய…

  24. 2020ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகித முறை 3.9 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் லக்‌ஷ்மனன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலே நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்ததுடன், 3வது காலண்டில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.9% குறைந்தது! – NewUthayan

  25. யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழக வாயிலைச் சுற்றி படையினரும், பொலிசாரும் குவிக்கப்பட்டிருப்பதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி, கைகலப்பில் முடிந்திருந்தது. அன்றைய தினம் இரவு வரை தொடர்ந்த முரண்பாடுகள், மூன்றாம் வருட மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் முரண் நிலையைத் தோற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.