ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கும் யாழ் இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையில் இன்று (04.01.2021) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாச்சார மத்திய நிலையத்தை, யாழ் மாநகர சபை பொறுப்பேற்பது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதாக முதல்வரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானமும் உடனிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மாநகர சபை முதல்வர் இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிக்குமடையில் விசேட சந்திப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 643 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்.! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் .ஜெயசங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத்தின் போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்தித்து உத்தியோகபூர்வ பேச்சுக்களில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 இல் வெளிநாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இந்தப் பயணத்தின் மூலம் இலங்கை - இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. http://aruvi.com/article/tam/2021/01/04/21161/ …
-
- 0 replies
- 331 views
-
-
கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குக - சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை.! கொத்து ரொட்டி, பிரைட் றைஷ் உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குமாறு குறித்த உணவுகளால் இலங்கையர்களிடம் நோய் எதிர்ப்பு எக்தி குறைந்து வருவதாகவும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். கொத்து, ப்ரைட் ரைஸ், ஷொட்டிஸ் உள்ளிட்ட அவசர உணவு (Fast Food) வகைகளை உட்கொள்வதன் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். …
-
- 2 replies
- 505 views
-
-
உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழக வாயிலைச் சுற்றி படையினரும், பொலிசாரும் குவிக்கப்பட்டிருப்பதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி, கைகலப்பில் முடிந்திருந்தது. அன்றைய தினம் இரவு வரை தொடர்ந்த முரண்பாடுகள், மூன்றாம்…
-
- 0 replies
- 333 views
-
-
மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது By Sayanolipavan (ரீ.எல்.ஜவ்பர்கான்) சட்டவிரோதமான முறையில் பாரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்களினை இன்று மாலை மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த நிலையில் கைப்பற்றபபட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்குக்கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிசின் வழிகாட்டலில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறின் ஆலோசனையின் பேரில் மாவட்ட குற்ற விசா…
-
- 0 replies
- 447 views
-
-
தனிச் சிங்களத்தில் வெற்றிச் சான்றிதழ் - ஏற்க மறுத்த கிளிநொச்சி இளைஞர்கள்.! சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தின் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வில் குறித்த சர்ச்சை ஏற்பட்டது. குறித்த நிகழ்வின் இறுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட குறித்த வெற்றி சான்றிதழ் முழுக்க முழுக்க சிங்கள மொழியிலேயே காணப்பட்டது. இந்நிலையில் குறித்த நிகழ்வின் நிறைவின் பின்னர் அச்சான்றிதழ் தனி சிங்கள மொழியில் காணப்பட்டமை தொடர்பில் இளைஞர்கள் அதிருப்தி வ…
-
- 2 replies
- 930 views
-
-
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்- இலங்கை மருத்துவ சங்கம் Digital News Team கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் தான் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சமீபகாலங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தினால் இனங்களிற்கு இடையிலான ஐக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை…
-
- 4 replies
- 705 views
-
-
“உலக குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துங்கள்” - ஜெனீவாவில் கோரத் தீர்மானம்.! சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையையும் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா குருமண்காடு விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் தமிழ்த்…
-
- 1 reply
- 706 views
-
-
இலங்கை இராணுவம் மீது போர்க்குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.! - அரசு திட்டவட்டம் இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன தெரிவித்தார். 'இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் காலப்பகுதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். இதற்கு சில அரசியல் கடசிகளும் தயாராகி வருகின்றனர்' என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரை மையப்படுத்தியே மேற்படி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், "2009ஆம் …
-
- 7 replies
- 1.2k views
-
-
விடுதலை உணர்வின் ஆண்டான 2021 இல் விடுதலை உணர்வுடைய கூட்டுத்தலைமை அவசியம் 34 Views 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை கொரோனா தொற்று செயலிழக்க வைத்த நிலையில், கொரோனா வீரியிலிருந்து விட்டு விலகும் விடுதலை உணர்வு மூலம் மனிதம் வாழ்வு பெற வைக்கும் ஆண்டாக 2021 ஐ அமைக்க உலக நாடுகள் அனைத்தும் தம்மாலான முயற்சிகளில் இறங்கியுள்ளன. மனித விடுதலை உணர்வே மனித வாழ்வின் உயிர்ப்புக்கான அடிப்படையாக அமையப் போகிறது. பாராளுமன்ற சனநாயகத்தின் தாய் எனப்படும் ஐக்கிய அரசில் இறைமை இழப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையைக் கருதி, அதிலிருந்து விட்டு விலகல் என்னும் விடுதலை உணர்வின் வழி தங்களின் இறைமையுடன் கூடிய வளர்ச்சியை முன் எடுக்க முடியும் என்னும் மன உறுதி…
-
- 0 replies
- 435 views
-
-
நாட்டின் சிவில் நிர்வாகம் முழுமையான இராணுவமயமாகின்றது - ரவூப் ஹக்கீம் SayanolipavanJanuary 3, 2021 நாட்டின் சிவில் நிர்வாகத்துறையானது முழுமையான இராணுவமயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிர்வாகத்துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.நாட்டின் பாதுகாப்புத்துறை தவிர…
-
- 1 reply
- 662 views
-
-
இலங்கைக்கு எதிராக முஸ்லீம் நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் : இரா.சாணக்கியன் SayanolipavanJanuary 3, 2021 (பாறுக் ஷிஹான், திலக்சன் ) இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் குரல் கொடுக்க முஸ்லீம் நாடுகள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் முஸ்லீம் நாடுகள் சர்வதேச பரப்பில் குரல் கொடுப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையிலும் முறைப்பாடு செய்ய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 01) அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்தார். கடந்த காலங்களில்…
-
- 2 replies
- 591 views
-
-
புதிய அரசியல் யாப்பு குறித்து கருத்தறிவதெல்லாம் ஏமாற்று – விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு 47 Views பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்பு பற்றிய கருத்துக்களைக் கோருவதெல்லாம் ஏமாற்று. பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு வகைபாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்தில் எடுத்து அதற்கேற்ப ஒரு அரசியல்யாப்பு வரைவு கொண்டு வரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பை உருவாக்க அமைக்கப்பட்டிருக்கும் நிபுணத்துவக் குழுவுக்கு நேற்று அன…
-
- 0 replies
- 323 views
-
-
சம்பந்தன் மருத்துவமனையில் அனுமதி January 2, 2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல் நிலை சீரானதால் நேற்று இரவு சாதாரண வார்ட் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். எனினும் அடுத்த சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.ilakku.org/?p=38334
-
- 10 replies
- 1.1k views
-
-
சிங்களவர்களுக்கு சார்பான அரசியல் யாப்பு ஏற்கெனவே அரசு தயாரித்து வைத்துள்ளது :விக்னேஸ்வரன் பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த வரைவை வெளிவிடுவதே அரசின் எண்ணம் என்று நாம் கருதுகின்றோம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். புதிய அரசியல் யாப்பு பற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் கருத்துக்களை அனுப்பிய போது, இதனையும் தெரிவித்துள்ளார். சிபார்சுகளுடன் அனுப்பப்பட்ட போர்வைக் கடிதத்தில், மேன்மைமிகு மற்றும் படித்த பெரியோர்கள் உங்கள் நிபுணத்துவ குழுவை அலங்கரித்துக் கொண்டிருப்பினும் எங்க…
-
- 0 replies
- 546 views
-
-
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பௌத்த மதகுருவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மீளப்பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மித்த திகதியொன்றில், மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 0 replies
- 305 views
-
-
ஜெனிவாவில் இரு அறிக்கைகளை முன்வைக்க அரசு தயார் - அமைச்சர் சரத் வீரசேகர.! "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். " - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 19ஆம் திகதி வரை நடைபெறும் குறித்த கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. இந்தநிலையில், மேற்படி கூட்டத்தொடர் குறித்து விவரிக்கையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறின…
-
- 0 replies
- 557 views
-
-
சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு... தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன். தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த ஊடக சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன அழிப்பு யுத்தத்துக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான். இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதியாகவும் இன்றைய ஜனாதிபதி அன்றைய பாதுகாப்பு செயலாளராகவும…
-
- 16 replies
- 1.5k views
-
-
எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) சற்றுமுன் தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து, யாழ்ப்பணம் மாநகர சபையின் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது இயக்கத்தில் இருந்து நீக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். டக்ளஸை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! | NewUthayan
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி ஆர்பாட்டம் 31 Views அனைத்து அரசியல்கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது… கடந்த முப்பது வருட கால இனப்பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற போரில் அரசுக்கு எதிராக ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நாட்டிலுள்ள சிறைகளில் நூற்றுக்கும் கிட்டியளவில் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டு தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டு …
-
- 1 reply
- 374 views
-
-
சிறைச் சாலைகளில்... 4 ஆயிரத்து 87 பேருக்கு, கொரோனா தொற்று. சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 71 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 347 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதுடன் மேலும் 731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். http://athavannews.com/சிறைச்சாலைகளில்-4-ஆயிரத்/
-
- 0 replies
- 288 views
-
-
இறுதிப் போரில் பங்கேற்றோர் வடக்கு கிழக்குக்கு நியமனம் – கொரோனாவைக் கட்டுப்படுத்த இராணுவ அதிகாரிகள் 11 Views கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் 25 மூத்த இராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை இராணுவத் தளபதியும் கொரோனா தேசிய கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் வழங்கினார். இவ்வாறு நியமிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களுக்கும் மேஜர் ஜெனரல் தரம் உடைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்…
-
- 2 replies
- 627 views
-
-
இலங்கை மாகாண சபைகள் ஒழிக்கப்படுகிறதா? -கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள் 39 Views இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழ் சேவையில் வெளியான செய்தி கட்டுரையில் இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதில், “எளிதான செயல் கிடையாது” மாகாண சபைகளை ரத்து செய்வது என்பது தீயுடன் விளையாடுவதை போன்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கி…
-
- 0 replies
- 504 views
-
-
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். பரீட்சார்த்த அடிப்படையில் நாளைய தினம் இருநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர் என தெரிவித்துள்ளார். நாளைய தினம் பிற்பகல் இந்த சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பது தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள் பரீட்சார்த்த அடிப்படையில் இலங்கை…
-
- 37 replies
- 2.9k views
-
-
அம்பிகாவின் கருத்து, அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் குழப்பம் – விசாரணைக்கும் உத்தரவு January 2, 2021 19 Views “மனித உரிமைகளை மீறியமையால் இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, அரசாங்கம் புதிதாக நியமித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் சுயாதீனமாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார் இது தொடர்பிலும் அரசு விசாரிக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியாமல் இலங்கை தொடர்பில் 300 அறிக…
-
- 0 replies
- 718 views
-