ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143644 topics in this forum
-
பயங்கரவாத்தை எதிர்க்க பாகிஸ்தானுடன் ஒன்றிணைவோம்- பிரதமர் மஹிந்த பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் உரையாற்றுபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு வரும் முதல் அரச தலைவராக நீங்கள் கருதப்படுகின்றீர்…
-
- 0 replies
- 203 views
-
-
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை ஒத்துக்கொண்ட அரச தரப்பு 45 Views மட்டக்களப்பு,மைலத்தமடு,மாதவனை பகுதியில் 617பேருக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை அரச தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த அனுமதியானது இம்மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவுபெற்றதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக வழக்கு விசாரணை மேமாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்…
-
- 0 replies
- 415 views
-
-
பிரச்சாரநடவடிக்கை என நிராகரித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார் இலங்கை வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிததுள்ள அமைச்சர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுஅந்த அறிக்கையில் முன்னொருபோதும் இல்லாத பிரச்சார நடவடிக்கை காணப்படுகின்றது.மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் இலங்கையின் வீரமிக்க படையினர் விடுதலைப்புலிகளை செயல் இழக்கச்செய்தனர்இலங்கை அரசாங்கம் நாட்டின் ஒருமைப்பாடு இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை…
-
- 5 replies
- 876 views
-
-
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஏ -9 , 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலிஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப…
-
- 17 replies
- 1.3k views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிரான புதிய பிரேரனையை எதிர்க்கொள்ள 47 உறுப்பு நாடுகளிடம் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமகள் பேரவையின் 46 கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆணையாளரின் அறிக்கை காணப்படுவதோடு, மற்றுமொரு புதிய பிரேரனையை இலங்கைக்கு எதிராக ஆவணப்படுத்த பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இவ்வாறு சவால்மிக்கதொரு சூழலை ஜெனிவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ளது. ஆனால் மனித உரிமைகள் ஆiணாயளரின் அறிக்கையை முழுமையாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை, புதிய பிரேரனையை கொண்டு வரும் நாடுகளுக்கு எதிராக கடும் இராஜதந்…
-
- 0 replies
- 369 views
-
-
முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமர் மஹிந்தவின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையை முன்னிட்டு பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறி குறித்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார் முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படு…
-
- 0 replies
- 264 views
-
-
2021ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம்- 1ற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட மிகவும் குறைவானதாகும். இது அபாயகரமானது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்திற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது. உலக மக்கள் தொகை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான். ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலை…
-
- 1 reply
- 356 views
-
-
(நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. அளுத்கம தாக்குதல் நடைபெற்றபோதே விசேட ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் அதனைச் செய்யவில்லை. எனவே அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்குப் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆ…
-
- 1 reply
- 402 views
-
-
காணாமல் போனவர்கள் விவகாரம் – உறவுகளின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் – அமெரிக்கா 26 Views காணாமல் போயுள்ள தங்களது அன்புக்குரியவர்களை எண்ணி ஏங்கும் உறவுகளின் உணர்வுகளை பொறுப்புள்ள அரசாங்கம் மதித்துச் செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டேப்ளிட்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “உங்கள் மகனையோ அல்லது உங்கள் கணவரையோ இழப்பது குறித்து கற்பனை செய்து பாருங்கள். அப்போதே தங்கள் உறவுகளுக்கு என்ன ஆனது? என எதுவுமே தெரியாவர்கள் அனுபவிக்கும் துயரம் உங்களுக்கும் தெரியும்“ என அவா் குறிப்பிட்டுள்ளார். வட பகுதிக்கு வந்துள்ள அமெரிக்க தூதுவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகளைச்…
-
- 0 replies
- 350 views
-
-
யாழ்.தீவக மின்திட்ட விவகாரம் – சர்வதேச ஏல விதிகளை சிறீலங்கா பின்பற்ற வேண்டும் 26 Views வடமாகாணத்தின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறியளவிலான மின்னுற்பத்தி செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 3ம் தரப்பினாரால் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறியிருக்கும் சினோசோர் ஹைபிரிட் ( பீஜீங்) டெக்னோலொஜி லிமிட்டெ நிறுவனம், அதன் உண்மைத்தன்மை தொடர்பிலும் விளக்கமளித்திருக்கிறது. இது குறித்து சினோசோர் ஹைபிரிட் (பீஜிங்) டெக்னோலொஜி லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, “அண்மையில் இலங்கையின் வடபகுதியிலுள்ள 3 தீவுகளில் சிறியளவிலான மின்னுற்பத்தித் திட்டத்தை ஆர…
-
- 0 replies
- 329 views
-
-
இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் அவர் இவ்வாறு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார் (adaderana.lk)
-
- 0 replies
- 342 views
-
-
பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது – எஸ்.சிவயோகநாதன் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/scv20210223_151128-720x450.jpeg பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என சிவில் அமைப்புக்களின் இணைத்தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டாதாகத் தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு பொலிசாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க…
-
- 0 replies
- 228 views
-
-
சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/M.K.Sivajilingam-1.jpg தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டிலிருந்த அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! | Athavan News
-
- 1 reply
- 582 views
-
-
எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை! கருணா திட்டவட்டம் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம் என மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு அம்பாறை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், இரவு கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வரு…
-
- 1 reply
- 393 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் முஸ்லிம் தலைவர்களுக்கு மறுப்பு முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ரவூப்ஹக்கீம் ரிசாத் பதியுதீன் உடனான பாக்கிஸ்தான் பிரதமரின் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு காரணங்களிற்காகவே இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான முடிவுகளை இருநாடுகளையும் சேர்ந்த அரசியல்குழுவொன்றே எடுக்கி…
-
- 2 replies
- 315 views
-
-
அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந்நிலையில் அமெரிக்க தூதுவர் நாளையதினம் யாழ்பாணம்வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்ப்படுத்துவதாக தெரிவித்த அவர் அரசு இவ்வாறான அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என அவர் தெரிவ…
-
- 0 replies
- 183 views
-
-
வில்பத்து அண்மித்த அழிவில் அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம் February 22, 2021 வில்த்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுகிறது. கற்றாழை பயிர் செய்கைக்காக, வில்பத்து தேசிய பூங்காவில் இடை வலயப் பிரதேசங்கள் மேலும் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலயத்தின், ராஜாங்கனய யாய 18 கிராமத்தில் அமைந்துள்ள வனப் பிரதேசம், வரையறுக்கப்பட்ட அவுரா லங்கா தனியார் நிவனத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக, இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்…
-
- 0 replies
- 377 views
-
-
பாகிஸ்தான் பிரதமரின் வருகை – ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்! பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார். இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணிக்கு பலவந்த தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் …
-
- 0 replies
- 270 views
-
-
புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த இருவர் கைது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த நபர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் தொலைபேசியை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட அமைப்பின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்…
-
- 0 replies
- 302 views
-
-
ஜெனீவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும் - ஜி.எல். பீரிஸ் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது.ஜெனிவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும். அதற்கான அவசியமும் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தமது வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும். இலங்கை நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும்.இலங்கைக்கு எதிராக செயற்படவும் மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரமில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் , கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஷ் தெரிவித்தார் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://vanakkamlondon.com/world/srila…
-
- 0 replies
- 271 views
-
-
5 கோடி செலவில் அபிவிருத்தியாம்..! ஒரு பயனும் இல்லை என்கின்றனர் மீனவர்கள், கேள்வி கேட்டால் விழி பிதுங்கும் அதிகாரிகள்.. நல்லாட்சி அரசாங்க காலத்தில் சுமார் 5 கோடிக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட அராலி மேற்கு இறங்குதுறை அப்பகுதி மீனவ அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றப்படாத திட்டமாக முடிவுறுத்தப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அராலி மீனவ மக்களின் வாழ்வாதார தொழிலாக மேற்கொள்ளப்படும் மீன்பிடி குறித்த இறங்குதுறையைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறித்த அராலி இறங்குதுறை மீனவ அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய தமது இறங்கு துறையை ஆழப்படுத்தி தமது வள்ளங்கள் கட்டுவதற்கு ஏற்ற வகையில் இறங்குதுறையை புனர…
-
- 0 replies
- 249 views
-
-
ஜெனிவாச் சவாலை முறியடிப்போம்! - கோட்டா சூளுரை.! "நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாச் சவாலை நாம் முறியடித்தே தீருவோம். புதிய பிரேரணையையும் வலுவிழக்கச் செய்வோம்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத் தொடர்பில் இலங்கை குறித்து விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை நேற்று ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியபோதே …
-
- 0 replies
- 288 views
-
-
சிறுபான்மை சமூகங்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன – ஐநா 41 Views உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதல்நாள் அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். மனித நல்வாழ்வுக்கு பல்லுயிர் அடிப்படை என்பது போல, சமூகங்களின் பன்முகத்தன்மையும் மனிதகுலத்திற்கு அடிப்படை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சிறுபான்மை சமூகங்கள் கலாச்சார வளர்ச்சிக்கு மு…
-
- 0 replies
- 218 views
-
-
பிரேரணை பற்றி பிரித்தானியாவுக்கு ரெலோ கடும் விசனம் தெரிவிப்பு 75 Views எதிர்வரும் மாசி 22 ல் ஆரம்பிக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கைமீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணையை பிரித்தானியாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்குமுகமாக காத்திரமானதாக அமைந்திருக்கவில்லை என்பதில் ரெலோ கடும் விசனத்தை பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்திற்கு த…
-
- 0 replies
- 232 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா..? துருவ ஆரம்பிக்கிறது TID.. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களில் வெளிநாட்டு கொடிகள் பிடிக்கப்படுவது ஏன்? குறித்த போராட்டங்களுக்கு வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறதா? என வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவர், செயலாளரிடம் TID விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணை இன்றைய தினம் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. குறித்த விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அமைப்பின் செயலாளர் ராஜ்குமார் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று என்னிடம் விசாரண…
-
- 2 replies
- 476 views
-