ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
மகேஸ்வரனின் 13வது நினைவு தின நிகழ்வு January 1, 2021 முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் 13வது ஆண்டு நினைவு தினம் வட்டுக்கோட்டை தொகுதி காரியாலயத்தில் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள் தற்கால கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது #அமைச்சர்_மகேஸ்வரனின் #நினைவுதின_நிகழ்வு #மலரஞ்சலி https://globaltamilnews…
-
- 0 replies
- 625 views
-
-
கையில் கிடைத்த ஒரு மாநகரசபை ஆட்சியையே நடத்த தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாணசபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது என எள்ளிநகையாடியுள்ளார் கோட்டாபய அரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர. தமிழரசுகட்சியின் ஒரு குழு, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் குழுவின் முக்கூட்டு திரைமறைவு நடவடிக்கையில், அண்மையில் மாநகரசபை ஆட்சியை மணிவண்ணன் குழு கைப்பற்றியது. இந்த நிலைமையினால் கோட்டாபய அரசு மகிழ்ச்சியடைந்துள்ளது என்பதை, அதன் அமைச்சர் வீரசேகர எதிரொலித்துள்ளார். அவர் கூறுகையில், புதிய அரசியலமைப்பில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கோரி நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், மாகாணசபை முறைமையிலானடிஅதிகாரப் பகிர்வையும் வேண்டி நிற்கின்றனர். இது இரண்டும் அறவே வேண…
-
- 1 reply
- 566 views
-
-
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் தோல்வி மற்றும் அண்மைக்கால தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு எம். ஏ. சுமந்திரனே காரணமென கட்சிக்குள்ளும் வெளியிலும் வமர்ச்சிக்கின்றனர் அதனை நான் பொது வெளியில் கதைக்கவில்லை கட்சிக்குள்ளேயே கதைத்துள்ளோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார். பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது. யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லுர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஆகியவற்றில் கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்தது. கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத…
-
- 1 reply
- 854 views
-
-
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர். தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதன்படி மதுசுதனன் 08 வாக்குகளையும் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர். மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் ம…
-
- 32 replies
- 3k views
-
-
மணல் கள்ளர்களும், வேலைவாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர்களும் என்னுடன் இருக்க முடியாது - மாநகர முதல்வர் மணிவண்ணன் சாட்டை.! யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மாநகரசபையில் வேலைவாய்ப்பு பெற்றுக் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டிருந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராக உள்ளேன். என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ் மாநகர சபையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஒரு உறுப்பினர் நிதி மோசடி செய்துள்ளதாக எனக்கும் முறைப்பாடுகள் வந்திருக்கின்…
-
- 3 replies
- 853 views
-
-
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட விடத்தற்பளையில் நள்ளிரவு ஆராதனைக்கு சென்ற வீடு உடைத்து கொள்ளையிடும் முயற்சி அயலவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொடிகாமம் விடத்தற்பளை பகுதியைச் சேர்ந்த குறித்த வீட்டார் புதுவருட ஆராதனைக்காக தேவாலயம் சென்றபோது அவர்களது வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த ஐவர் கொண்ட கொள்ளைக் கும்பல் வீட்டை உடைத்து கொள்ளையிட முற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் திடீரென ஆரவாரம் ஏற்பட்டதை அவதானித்த அயல் வீட்டார் சத்தமெழுப்பியவாறு வளவுக்குள் நுழைந்தபோது கொள்ளை கும்பல் ஓடி அருகில் உள்ள பற்றைக்குள் மறைந்துள்ளது. …
-
- 4 replies
- 678 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே ஈ.பி.டி.பி.யின் துணையுடன் தோழர் மணிவண்ணன் யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.. யாழில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த ஊடக சந்திப்பில் சுகாஷ் மேலும் கூறியுள்ளதாவது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவும் தலைமையும் எடுத்த முடிவு சரியென்பதை வெகு சீக்கிரத்தில் காலம் காட்டியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொள்கை ரீதியாக நீக்கப்பட்ட முன்னாள் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், தமிழ் தேச விரோ…
-
- 1 reply
- 687 views
-
-
மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுவதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில், எதிர்ப்பு யோசனையையும் நிறைவேற்றி உள்ளதாகஇ அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர், நீதிமன்ற வைத்தியர் அசேல மென்டிஸின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை நீதிமன்ற வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் சுயாதீன மரண நிர்வாகச் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடு மற்றும், சுகாதார அமைச்சால் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை அகற்றுவது குறித்து நியம…
-
- 0 replies
- 620 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! 30 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். காத்தான்குடி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் காத்தான்குடி பிரதேசமும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளமையினால், அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மேலும், பொலிஸாரும் இரா…
-
- 2 replies
- 338 views
-
-
(இராஜதுரை ஹஷான்) மாகாண சபை முறைமை நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும்.இலங்கைக்கு மாகாண சபை முறைமை தேவையற்றது.என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது இரு வேறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. மாகாண சபை தேர்தல் முறைமை இலங்கைக்கு பொறுத்தமற்றது என்றே குறிப்பிட வேண்டும். மாகாண சபை தேர்தல் வெள்ளை யானை என்றே குறிப்பிட வேண்டும்.. மாகாண சபை முறைமையினால் தேவையற்ற செலவுகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன. மாகாண சபைக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அரசியல் நோக்கங்களை இலக்காக கொண்டுள்ளார்கள். தேவையற்ற செலஙுகளை குறைப்பது அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது…
-
- 0 replies
- 252 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் 'சூப்பர் முஸ்லிம்' எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் கடந்த செவ்வாயன்று (டிசம்ன்பர் 29) இரகசிய அறிக்கையாக இந்த விஷேட அறிக்கையை கையளித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த சூப்பர் முஸ்லிம் எனும் அமைப்பு தொடர்பில், எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவை தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் முன்னர் சேவையாற்றியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர்…
-
- 0 replies
- 356 views
-
-
ஆயிரம் ரூபாய் கைகளுக்கு கிடைக்கும் வரை எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது – இராதாகிருஷ்ணன் by : Vithushagan 5 வருடங்களாக ஆயிரம் ரூபாய் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அத்தொகை கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது ஆயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பை இலங்கை…
-
- 3 replies
- 724 views
-
-
கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந் 26 Views தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆலயங்களை மையமாக கொண்டும் கலைகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஒவ்வொரு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள் இருந்து வந்ததுடன், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை தமது சந்ததிக்கு கொண்டும் சென்றுள்ளனர். கலைஞர்களின் திறமையும், நுணுக்கமும் பலரையும் கவர்ந்துள்ளதுடன், கலைகள் கலைகளுக்காக அல்ல. மக்களுக்காகவே கலைகள் என்ற சிந்…
-
- 0 replies
- 602 views
-
-
ஜெனிவா பிரேரணையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 46 Views காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். புதுவருடதினமான இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 409 views
-
-
விக்கியின் முன்மொழிவு - சம்பந்தன்,கஜன் அணிகளுக்கு சமர்ப்பிப்பு.! தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநீதிகள் என்பன தொடர்பில் நீதியான – பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை உள்ளடங்கலாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு முன்வைக்கவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் முன்மொழிவுகளை அதன் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்குச் சமர்ப்பிப…
-
- 2 replies
- 628 views
-
-
யாழ். மாநகர சபையைக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்ல! - இரா.சம்பந்தன்.! யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. யாழ். மாநகர சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்லன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூ…
-
- 7 replies
- 1k views
-
-
ஒருமித்த நாட்டுக்குள் தமிழருக்கான தீர்வு! - புத்தாண்டுச் செய்தியில் இரா.சம்பந்தன்.! "நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும். இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குற…
-
- 2 replies
- 796 views
-
-
சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதில்- மாவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே மாவை சேனாதிராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சுமந…
-
- 3 replies
- 432 views
-
-
மாகாணசபை முறைக்கு அப்பால் செல்ல வேண்டும் – கஜேந்திரகுமார் வலியுறுத்தல் January 1, 2021 34 Views தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாக கிடைக்கவில்லை எனவும் இதனால், தானும் மாகாண சபை முறைமையை எதிர்ப்பதாகவும் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனினும் பெளத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் தனது நிலைப்பாட்டுக்கும் முற்றிலும் வேறுபாடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபை முறைமையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. மாகாண சபை முறைமைக்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்ப…
-
- 0 replies
- 358 views
-
-
சவால்களை முறியடித்து அபிவிருத்திக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டினை மாற்றியமைப்போம்; அங்கஜன் ராமநாதன் வாழ்த்து January 1, 20212:22 am சவால்களை முறியடித்து அபிவிருத்திக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டினை மாற்றியமைப்போம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தனது புத்தாண்டு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மலர்ந்துள்ள இப் புத்தாண்டானது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் செழிப்பானதும், மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள். நாட்டு மக்களுடைய நம்பிக்கையையும், எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றும் ஆண்டாக அமையும் அதேவேளையில் அபிவிருத்திக்…
-
- 0 replies
- 320 views
-
-
நாசிவன்தீவு பகுதியை அழிக்கும் செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் சகாக்கள் December 31, 20203:54 am மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய தீவு பகுதியான நாசிவன்தீவு பகுதியை அழிக்கும் செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் சகாக்கள் ஈடுபட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்த காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், நாசிவன்தீவு பகுதிக்கு வாழைச்சேனை கோறளைப் பற்று பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (TMVP) கட்சியின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் உடன் பிள்ளையானின் ஆதரவாளர்கள் சென்று மக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்க…
-
- 3 replies
- 675 views
-
-
கட்சித் தலைமையை விமர்சிக்கும் சுமந்திரனுக்கு இன்று உரிய பதில் - மாவை.! கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் இன்று உரிய முறையில் பதில் வழங்குவேன்.என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோதமான மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டினால்தான் யாழ். மாநகர சபையை இழந்தோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கடிதம் ஒ…
-
- 4 replies
- 728 views
-
-
சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேச குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது. இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின்…
-
- 78 replies
- 8.2k views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) காெரானாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிடமுடியாத பிரச்சினையாகவே இருக்கின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படுவார்கள் என தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் எழுந்திருக்கும் விமர்சனம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/142213/33.jpg இதுதொடர்பாக அவர்…
-
- 0 replies
- 372 views
-
-
மாகாணசபைகள் குறித்த புதிய தீர்மானத்துக்கு முன்னர் இந்தியாவுடன் பேச வேண்டும்.! இலங்கையில் மாகாண சபைகள் முறைமை குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், இந்தியாவுடன் அரசு கலந்துரையாட வேண்டும்." - இவ்வாறு பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "மாகாண சபைகள் முறைமை தொடர்பில் இலங்கை தனியாக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. மாகாண சபைகள் முறைமையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப்பட வேண…
-
- 1 reply
- 653 views
-