Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த கடத்தல், காணாமல் ஆக்கல் குறித்த வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்ப்ட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அ…

  2. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வட கிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று (19.02.2021) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். வடக்கில் வல்வெ…

  3. (செய்திப்பிரிவு) தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணு வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றது. ஆனால் நாம் எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் இலங்கையர்களாக கருதியே சேவையாற்றுகின்றோம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ வைத்தியசாலைகளில் கொவிட் தடுப்பூசி பெற தயாராக இல்லை என தமிழ் கட்சிகள் சில தெரிவித்துள்ளமை தொடர்பில் கூறும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், எம்மிடம் இருப்பது மனிதாபிமானமிக்க இராணுவமாகும். எங்களுக்கு மறைக்க ஏதுவும் இல்லை. நாட்டு மக்கள் தங்களது மனங…

  4. யாழ்.நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் சீனாவுக்கு வழங்கப்போகும் காணிகளை அடையாளப்படுத்தியுள்ள மின்சாரசபை..! யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு நிலம் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை காணிகளை அடையாளப்படுத்தி தமது பெயர் பலகைளை நாட்டியுள்ளது. தீவகத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு காணி வழங்கப்படவுள்ளதாகவும், சீனாவுக்கு இல்லை இந்தியாவுக்கே காணி வழங்கப்படும் எனவும் இழுபறிநிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே திட்டமிட்டு காணிகளை அடையாளப்படுத்தி மின்சாரசபையினர் தமது பெயர் பலகைகளை நாட்டியிருக்கின்றமையினை காணக்கூடியதாகவுள்…

  5. புலம்பெயர்ந்தோரின் பங்களிப்புடன் சமூகப் பணி ஆற்றும் நபர் 2ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி மத்தி பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் சமூகச் செயற்பட்டாளருமான சிங்கபாகு சிவகுமார் (பொக்சிங் சிவகுமார்) என்பவர் கொழும்பு 2ஆம் மாடிக்கு விசாரணைக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளார். குறித்த விசாரணைப்பிரிவுப் பொலிஸார் அவரை இன்று சந்தித்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். இதுகுறித்து சிவகுமார் கருத்துத் தெரிவிக்கையில், தான் புலம்பெயர் தேசங்களிலிருந்து கிடைக்கும் பணத்தினைக் கொண்டு இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்துவருவதாகவும் அவ்வாறான உதவிகளுக்கான நிதி எவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற…

  6. பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் குறித்து மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு கூறுவதென்ன ? (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் மிகவும் முக்கியமான தருணத்தில் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவத…

  7. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சியில் பங்கேற்ற இளைஞன் கைதாகி விடுதலை பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று மதியம் கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார். பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வ…

  8. சுகாதார இறுக்கத்துடன் பட்டமளிப்பை நடத்துங்கள்; இல்லையேல் ஒத்திப்போடுங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொரோனா நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பட்டமளிப்பு நிகழ்வை கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துமாறு கோரி, அந்நடைமுறைகளைப் பட்டியலிட்டு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைக…

  9. யாழ்.காரைநகரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டது..! தீவகத்தில் காணி கபளீகர முயற்சி தீவிரம்.. யாழ்.காரைநகர் - நீலங்காடு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து கணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வளிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இ…

  10. இலங்கையில் கோவிட் தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா.! கோவிட் -19 தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருசிலர் அதன் பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார். இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் காலி மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றுபதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். தடுப்பூசி பெற்ற மூன்று வாரங்களின் பின்னரும் உடலில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை . இது தடுப்…

  11. வடக்கு கிழக்கு போராட்டங்களுக்கு மட்டும் தடை எதற்காக? சபாநாயகரிடம் மனோ கேள்வி 26 Views நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் குறிவைத்து பெறப்பட்டு, நேற்று என்னிடம் இது தொடர்பில் பொலிஸ்துறை வாக்குமூலம் பெற்றது ஏன் என்பது பற்றி பொலிஸ் மாஅதிபரிடம் வினவி எங்களுக்கு அறிவியுங்கள் என நான் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் கேள்வி எழுப்பினேன். எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது என கொழு…

  12. ஆட்சி மாறினாலும் சிங்கள இனவாதிகளின் நிகழ்ச்சி நிரல் தொடரும் - கருணா கட்சியின் செயலாளர்.! எந்த அரசாக இருந்தாலும் சிங்கள இனவாதிகளின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலிற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை செயற்படுத்துபவர்களாகவே இருப்பார்கள் என கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் செயலாளர வ. கமலதாஸ் தெரிவித்தார். கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.... தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் வடமாகாண கிளையின் சந்திப்பு இன்று (நேற்று) இடம்பெற்றது. தமிழ் மக்களின்…

    • 3 replies
    • 462 views
  13. எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர! உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பக்கச் சார்பானது. ‘தருஸ்மன்’ அறிக்கையை அடிப்படையாக கொண்டதோர் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. ‘தருஸ்மன்’ அறிக்கை பொய் காரணிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதென டெஸ்மன் சில்வா முதல் சர்வதேச போர்க்…

  14. மாணவர் சமூகம், எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்று-கலையரசன் 34 Views மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது என தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். மேலும் “கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். திருக் கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் டி.இராசநாதன் தலைமயில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவ…

  15. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் அவரை கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார். பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்ப…

  16. (ஆர்.யசி) இந்திய பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் கட்சியாக உருவாக முடியாது. ஆனால் அவர்களின் பிரதிநிதிகளாக இலங்கையில் ஒரு கட்சி உருவாகி அவர்களின் கொள்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த எந்த தடைகளும் இல்லை. அனேகமாக பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் சஹா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்…

  17. கொவிட்-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டரில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் காணும்போது ஏமாற்றமடைகிறது என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் முன்னர் அளித்த வாக்குறுதியை அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்ப…

    • 1 reply
    • 368 views
  18. பளையிலும் நூற்றுக்கணக்கான காணிகள் சீன நிறுவனத்துக்கு: அம்பலப்படுத்தினார் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாண மாவட்டம் பளை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கையை கோட்டாபய அரசு முன்னெடுத்துவருவதாகவும் இதனை செய்யும்பொருட்டு பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழு…

    • 1 reply
    • 428 views
  19. தமிழ் கட்சிகள் மீதான அதிருப்தியே புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியது..! தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாகவே தமிழ் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக தொழிலதிபர் ஜெயந்திரன் கூறியுள்ளார். “அகில இலங்கை தமிழ் மக்கள் எழுச்சி கட்சி” என்ற கட்சியை அங்குரார்ப்பணம் செய்து யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் தற்போதைய தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் சரியான பாதையை காட்டாத நிலையில் மக்களின் பிரச்சினைகள…

    • 1 reply
    • 501 views
  20. வடகிழக்கில் தமிழர்களின் காணிகளை முப்படைகளுக்கு கபளீகரம் செய்யும் நடவடிக்கை தீவிரம்..! இப்போதும் தமிழ் தரப்பு கள்ள மௌனம்.. வடகிழக்கில் முப்படைகளின் பயன்பாட்டிற்காக மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் நடந்துவரும் நிலையில் தமிழ் தரப்புக்கள் தொடர்ந்தும் கள்ள மௌனம் சாதிப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் கூறியுள்ளார். யாழ்.காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. காரைநகர் இந்துமகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான இந்தக் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக பிரதேச மக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையி…

  21. தமிழ் மொழியில் பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு..! யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கு முதல்வர் அதிரடி அறிவிப்பு.. யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார். குறித்த விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் தாமாகவே விரும்பி தங்களுடைய விளம்பர பதாகைகளில் தமிழுக்கு முன்னுரிமையளித்தால் 50% வியாபாரக்கழிவு வழங்கப்படுமென சபையினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…

    • 2 replies
    • 625 views
  22. தீச்சட்டி... போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு! எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்ப போராட்டத்தை ஆரம்பித்து 20ஆம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடைய…

  23. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – ஞானசாரர் 4 Views ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்று கருதியே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனா…

    • 2 replies
    • 661 views
  24. இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான தனி கட்சி ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்று இலங்கை சிவசேனை இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு (காந்தளகம்) சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/sevanai-president-maravanpulavu-sachithananthan-announces-to-launch-bjp-in-srilanka-412299.html

  25. இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை "மீண்டும் அச்சத்திற்குள் இலங்கை: புதிய ஆடையில் பழைய பேய்கள்' (Old ghosts in new garb: Sri Lanka return to fear) என அந்த ஆட்சியை குறிப்பிட்டுள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட் டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிக்கையை மன்னிப்புச் சபையின் கொழும்பில் உள்ள தென்னாசிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை' என்ற தலைப்பில் இலங்கை தொடர்பாக பிந்திய அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாற்று ரீதியான குற்றங்களுக்கான நீத…

    • 1 reply
    • 740 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.