Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான தமிழர் எழுர்ச்சி பேரணி இடம்பெற்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் எம்.பியுடன் வாக்குவாதப்பட்டனர். "இன்றும் இனப்படுகொலை" என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்ட போதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் எம்.பி வாக்குவாதப்பட்டார். பாராள…

  2. (எம்.நியூட்டன்) பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே இந்த "பி" அறிக்கைகள் பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த பி அறி…

  3. மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய தீர்மானம் – உறுதி செய்தது பிரிட்டன் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதை முகன்மைக் குழுவில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் உறுதி செய்துள்ளது. ஜெனீவாவிற்கான பிரிட்டனின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு இதனை அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 22ம் திகதி முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வு குறித்து திட்டங்களை உறுதி செய்வதற்காக மனித உரிமை பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்ற வேளை பிரிட்டன் தனது தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளம…

    • 0 replies
    • 703 views
  4. தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பு! தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேயிலை மற்றும் இறப்பர் சம்பந்தமான சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளது. தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (08) நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொழில்அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சுமார் ஐந்து வருட காலதாமதப்படுத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பிற்கான கோரிக்கை நிறைவேற்றப்படுமென ஜனாதிபதியின் ´சுபீட்சத்தின் தொலைநோக்கு´ கொள்கைப் பிரகடனத்தில்…

    • 0 replies
    • 592 views
  5. ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் தனி திருமணச் சட்டம்?: ரத்தன தேரர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/Rathana-Thero.jpg ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையில் பயணிக்கும் இலங்கையில், காதி நீதிமன்றங்கள் தொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு நாடு ஒரு சட்டம் என்பதுதான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதானக் கொள்கையாகக் க…

    • 0 replies
    • 785 views
  6. புலம்பெயர் தமிழர்களின் காசில் நடந்ததாம் பேரணி :சவேந்திர சில்வா புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கடந்த சில நாட்களாக நடைபெற்ற இவ்வாறான போராட்டங்கள் ஒரு சில தரப்பினரின் குறுகிய நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், எரியும் தீயில் எண்ணெய்யை வார்ப்பதுபோல இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும…

    • 3 replies
    • 493 views
  7. உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர். இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். நாடாளுமன்றம் உங்களின் க…

  8. சிங்கள அரசாங்கங்கள் கயிறு கொடுப்பதில் மன்னாதி மன்னர்கள்: இந்தியாவின் தென்கோடியின் பாதுகாப்பு தமிழர் கைகளில்- சி.வி. இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கின் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்லவரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கள அரசாங்கங்கள் கயிறு கொடுப்பதில் மன்னாதி மன்னர்கள் எனவும் இதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாராந்த கேள்வி பதிலில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லை என அமைச்சரவையில் எடுத்துள்ள முடிவு குறித்துப் பதிலளிக்கும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ…

  9. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியை வழங்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அறியப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறு பேராயர் கோரியுள்ளாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athav…

    • 2 replies
    • 398 views
  10. மஹிந்தவை பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற விமலின் கருத்தால் கூட்டணிக்குள் குழப்பம் 3 Views “பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற கூறியமைக்காக அமைச்சர் விமல் வீரவன்ச அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அவர் வெளியிட்டகருத்தினை மீளப்பெற்றுக்கொள்ளவும் வேண்டும். எமது கட்சியில் தலைமைத்துவம் மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்தை கூறுவதற்கு அவருக்கு எந்தவித தகுதியும் கிடையாது.” இவ்வாறு காட்டமாகக் கூறியிருக்கின்றார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிய…

    • 2 replies
    • 854 views
  11. இந்தியாவும் தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் உதவியாக இல்லா விட்டால் அதோ கதி தான்“ க.வி.விக்னேஸ்வரன் February 8, 2021 Share 53 Views “இந்தியாவும் இலங்கைத் தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் உதவியாக இல்லா விட்டால் இருவருக்குமே அதோ கதி தான்“ என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி பதில் செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வழங்கியுள்ள கேள்வி,பதிலில்…. கேள்வி: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லை என்று அமைச…

  12. விமல் வீரவன்சவின் தேசிய சுந்திர முன்னணி கட்சியில் வெளிநாட்டு உளவாளிகள் இருவர் பணியாற்றுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேனுக பெரோ குற்றஞ்சாட்டியுள்ளார். பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு கோத்தாபய ராஜபக்சவை தலைவராக நியமிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டதை தொடர்ந்து ஆளும் தரப்பினரிடையே சர்ச்சை எழுந்துள்ளது. விமல் வீரவன்ச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பெரமுன! இந்நிலையிலேயே வெளிநாட்டு உளவாளிகளிடம் பணம் பெற்று பணியாற்றும் இருவர் விமலுடன் இருப்பதாக பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது. விமலுடன் வெளிநாட்டு உளவாளிகள் – பெரமுனவினர் திடீர் தாக்குதல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  13. (எம்.மனோசித்ரா) முழு நாடும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஜனநாயக உரிமைகளில் தலையிட்டு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அறிவுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டு இவ்வாறு கூறியிருக்கும் அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது : 1991 ஆம் ஆண்டில் யாழ் கோட்டையை கைப்பற்றும் போராட்டத்தில் நீங்கள் எதிரியை முன்னால் வைத்துக் கொண்டு திறந்த பாதையில் சென்று பாதிக்கப்பட்ட போது உங்களையும் உங்கள் படையையும் நான் உ…

    • 3 replies
    • 612 views
  14. யாழ். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கொவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அவர் மாற்றப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று மீளவும் மாற்றப்பட்டார். அவரை கொவிட் -19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்…

  15. செ.கீதாஞ்சன் ஜனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் கீழ், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன செழிப்பு எனும் 5,000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்டத்தில், 78 குளங்கள் புனரமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட திருமுறுகாண்டிக்குளத்தைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதன் அங்குராப்பண நிகழ்வு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில், நேற்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக, ஆறு மில்லிய…

  16. க.ஆ.கோகிலவாணி, ஆர்.ரமேஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது. சம்பள நிர்ணயச் சபையின் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், 3 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்குவதுத் தொடர்பிலான பேச்சுவார்தை, சம்பள நிர்ணயச் சபையில் இன்று (8) நடைபெற்றது. தொழில் ஆணையாளர் தலைமையில், தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று 2.30 மணியளவில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை, 4.30 மணிவரை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், …

    • 5 replies
    • 589 views
  17. ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு சோளச்செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்குரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு எதிராக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர், வனஜீவராசிகள் அமைச்சர், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தங்களுடைய மக்கள் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக பாதுகாத்த வனத்தில்,…

  18. மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் உண்மையாக இங்கு குடியிருக்காத சிங்கள மக்களுக்கு ஆதரவாக உங்கள் பதவியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிழையான விடயத்துக்கு துணை போகவேண்டாம். மீறிச் செயற்பட்டால் மக்கள் உங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மேலும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை என்கின்ற மாங்கேணி கிராம அதிகாரிக்குட்பட்ட தெற்கு பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த மக்களை குடியேற்றுவதற்கான செயற்திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகவும்…

  19. பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று இன்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவுப் பொலிசாரால் ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய B அறிக்கையிலான வழக்குகள் பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த B அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ,வினோ நோகராதலிங்கம், துரை…

  20. பேரணியின் இடைநடுவில் வந்து சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது!-ரவூப் ஹக்கீம் By கிருசாயிதன் February 8, 2021 (நூறுல் ஹுதா உமர்)காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்…

    • 8 replies
    • 1.7k views
  21. பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் - நடந்தது என்ன? தமிழீழம் பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் விரிவாக தெரியவருவதாவது, திருமலையில் தொடங்கிய முறுகல் கடந்த 0…

  22. சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…

  23. ‘மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்’: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்! வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. குறித்த பிரகடனத்தில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றதுமான இன…

  24. மத்தளை விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாத் துறையின் மீட்புத் திட்டத்தின் பேரில் கசகஸ்தானின் அஸ்தானா விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 160 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வந்ததன் பிரதிபலனாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் சுற்றுலாத்துறை முகவர் நிறுவனமான எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தினர் இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை கசகஸ்தானிலிருந்து 350 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். கசகஸ்…

  25. சுயாதீன மனித உரிமை குறித்த ஆணைக்குழுவின் செயலாளராக சிவஞானசோதி நியமிப்பு! சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளராகக் கடமையாற்றியவரும் தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றி வருபவருமான வே.சிவஞானசோதியே இந்த ஆணைக்குழுவின் செயலா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.