ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142918 topics in this forum
-
யாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனாலும் பலத்த காற்றுடனான கனமழையினால் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் நேற்றைய தினம் பலத்த காற்றுடனான கனமழை பெய்தது. இதனால் 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், சண்டில…
-
- 0 replies
- 263 views
-
-
யாழில் தொடர் மழையால் 1,500இற்கு மேற்பட்டோர் பாதிப்பு- மூவரைக் காணவில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்…
-
- 0 replies
- 307 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்தலுக்கு மேல், மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது. வவுனியா- கண்டி வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1384 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட கடும் காற்றினால் பந்தல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் காணப்பட்ட மரத்தில் இருந்து பாரிய கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையினால், பந்தல் சேதமடைந்துள்ளது. குறித்த பந்தலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான வயோதிப தாய்மார் சிலர் இரவில் தங்கி…
-
- 0 replies
- 268 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 2021 ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுமென தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான இராமநாதன் அங்கஜன். முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139892/afafaf.jpg இலங்கையில் முன்பள்ளிக்கல்வி தொடர்பில் எந்தவொரு அரசும் இதுவரை கவனம் செலுத்தாத …
-
- 2 replies
- 485 views
-
-
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு கிழக்கு மாகாணத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு நாவலடிப் பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் மக்கள் வசிப்பிடம் நோக்கிவரும் நிலையேற்பட்டுள்ளது. இதனால் கடல் தொழிலாளர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று புரவி சூறாவளி கிழக்கு மாகாணத்தினை ஊடறுத்துச்செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், க…
-
- 2 replies
- 502 views
-
-
வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்திருந்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139739/snapshot_011.png இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்கா…
-
- 15 replies
- 1.5k views
-
-
வல்வெட்டித்துறை ஆதிகோவிலை அண்மித்த பகுதியில் புரேவி புயல் காரணமாக இன்று (02) இரவு 10 மணியளவில் வீசிய கடும் காற்றால் நால்வர் காயமடைந்துள்ளனர். சிறுமி உட்பட்ட நால்வர் காயமடைந்த நிலையில் மூவர் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த காற்றினால் பாதிக்கப்பட்டு 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் புரேவியால் குடும்பங்கள் பல இடம்பெயர்வு! | NewUthayan
-
- 0 replies
- 666 views
-
-
மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தர…
-
- 46 replies
- 5k views
-
-
புரவிப் புயலின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. காற்றின் வேகமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. காற்றின் வேகம் காரணமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதி ஓரமாக இருந்த மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்து உள்ளது. இதனால் சற்று நேரம் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், பொதுமக்கள், பொலிசார் மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள். தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது ந…
-
- 1 reply
- 489 views
-
-
மன்னார் – விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக இன்று (02) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்ச்சியான மழை நீடித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளனர். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. மன்னாரில் கடல் நீர் உட்புகுந்தது! |…
-
- 0 replies
- 710 views
-
-
கொழும்பு வாழ்க்கையும் கொரோனாவும் எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 நோயின் காரணமாக, பெரும் நெருக்கடியை நாடு, எதிர்நோக்கி இருக்கிறது. கொரோனோ வைரஸ் தொற்று, ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி, கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தாலும் அம் மாவட்டத்தின் நிலையை விட, கொழும்பு மாவட்டத்தின் நிலைமை, அதிலும் கொழும்பு மாநகரத்தின் நிலைமை, மிகவும் மோசமாக இருக்கிறது. கொழும்பில் மட்டும், நாளொன்றுக்கு சுமார் 200 புதிய தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். இது, உண்மையான தரவென எவரும் கூறுவதில்லை. ஏனென்றால், மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், அதிக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவர் என்பது, இப்போது தெளிவாகத் தெரிகிறது. “கொழும்பில் கொவிட்-19 நோய், மிகவும் மோசமாக இருக்கிறது” என்ற…
-
- 1 reply
- 822 views
-
-
தமிழர்களுக்கு படுகொலைகள் புதிதல்ல’ R.Maheshwary மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறைச்சாலை படுகொலைகள் புதியவையல்ல என்றார். இன்று (2) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் 2012ஆம் ஆண்டு வெலிகட சிறையில் கைதிகள் கொல்லப்பட்டனர். வுpசாரணைகள் முடிவடைந்தும் இந்த கொலைகளுக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. அதேப்போல் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத கொலை தான் 1983ஆம் ஆண…
-
- 1 reply
- 425 views
-
-
யாழ். மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்! by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு by : Dhackshala யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (புதன்கிழமை) யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கைத் தமிழரசிக் கட்சியின் 16 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என…
-
- 0 replies
- 329 views
-
-
போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம். இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்ற…
-
- 5 replies
- 1.2k views
-
-
வடக்கின் அனைத்து பாடசாலைகளும் பூட்டு - ஆளுநரின் திடீர் அறிவிப்பு வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளையும் நாளை மறுதினமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/sri…
-
- 0 replies
- 388 views
-
-
மாவீரர் நினைவேந்தல் தடைக்கு அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தான் பொறுப்பு. சாணக்கியன் குற்றச்சாட்டு December 1, 20201:29 pm மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிக…
-
- 0 replies
- 302 views
-
-
யாழ். மாவட்டத்தில் 08 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன – அங்கஜன் இராமநாதன் 2021 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 08 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட இருப்பதாக நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.முன்பள்ளிக்கல்வி தொடர்பில் எந்த அரசும் இதுவரை கவனம் செலுத்தவில்லை. எமது அரசு முன்பள்ளிக்கல்வியை அரச கட்டமைப்புக்குள் உள்ளீர்த்து நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளது. முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரச நியமனங்களை வழங்குவதுடன் நிரந்தர சம்பளத்தையும் வழங்க வேண்டும். 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் நடவ…
-
- 0 replies
- 301 views
-
-
புயல் எச்சரிக்கை- பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு 64 Views கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து முன்னாயத்த செயற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. தென் கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து கிழக்கு ஊடாக கடந்துசெல்லும் நிலையேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை ஆராயப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகரசபையின் …
-
- 3 replies
- 559 views
- 1 follower
-
-
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து குறித்து இன்று ஆராய்வு இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்று (புதன்கிழமை) விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாகவே இதன்போது ஆராயப்படவுள்ளது. சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி இது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 50 தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள…
-
- 0 replies
- 337 views
-
-
கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம் (எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் வாதிட்டார். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ( முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்) உயர் நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்த போதே, ஹில்மி அஹமட்…
-
- 6 replies
- 812 views
-
-
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரரட்ணம் நிமனம் 43 Views மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரரட்ணம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியராக பதவி உயர்வு பெறும் இரண்டாவது மலையகத் தமிழர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 25 ஆண்டுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் வழக்குத் தொடுனராக கடமையாற்றிய சட்டத்தரணி பிரபாகரன் குமாரரட்ணம், மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிவரை பதவியுயர்வு பெற்று பல்லாயிரக் கணக்கான குற்றவியல் வழக்குகளை நெறிப்படுத்தியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிர…
-
- 0 replies
- 773 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட இளைஞன் கை, கால் கட்டப்பட்ட நிலையில் மீட்பு! வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சிப் பகுதியில் அவர் மீட்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி - சிங்கைநகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தாமாக பிறிதொரு இடத்தில் இருக்கும் வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதனால் ம…
-
- 1 reply
- 457 views
-
-
கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம் -(கனகராசா சரவணன்)- வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வங்காள வி…
-
- 1 reply
- 425 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) மஹர சிறைச்சாலை சம்பவத்தை படுகொலை சம்பவமாகவே பார்ப்பதாக கூறும் சி.பி.ஆர்.பி. எனப்படும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அது தொடர்பில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. நேற்றைய தினம் ராஜகிரிய பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்திய சி.பி.ஆர்.பி. தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா உள்ளிட்டோர் இதனை அறிவித்தனர். மஹர சிறையில் கைதிகள் கொல்லப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சேனக பெரேரா, கைதிகளின் கோரிக்கை நியாயமானது எனவும், உரிமைகளை கோரும் போது, நிராயுதபானிகளான கைதிகள் மீது தோட்டாக்களால் பதிலளிக்கப்பட்டமையை ஏ…
-
- 0 replies
- 380 views
-