Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் சிரமதான பணிமூலம் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சூழ படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவு பணியினை முன்னெடுத்தனர். இதன் போது வன்னிவிளாங்ளும் வீதி முழுவதும் பொலிசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். காலை முதல் நண்பகல் ஒரு மணிவரை நடைபெற்ற சிரமதான பணியின் போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சிர…

  2. நாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை (16.11.2020) மேலும் 311 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,806 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் 17,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5,423 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 464 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 58 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/94517

  3. சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஆதி 56 Views கடந்த காலங்களில் சலுகைகளாக வழங்கப்பட்ட, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவு கூரல் அனுமதிகள், தற்போது அடக்குமுறைக்கு துணைபோகும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீளக்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தடையுத்தரவுகள் விதித்து வருகிறது இலங்கை அரசாங்கம். இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அடிப்படை உரிமை மீறல் குறித்து ஆதி (சட்டத்தரணி, சமூக செயற்பாட்டாளர்- தமிழகம் ) ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவிக்கையில், “இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல், போரில் இறந்து போன தமது உறவுகளை நின…

  4. 33 Views இலங்கையில் கடந்த மைத்திரிபால அரசாங்கம் நினைவு கூரும் உரிமையை ஒரு சலுகையின் அடிப்படையில் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த சூழலில் தற்போதைய கோட்டபாய அரசாங்கம் அதற்கு பலவாறான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து இலக்கு மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், “உயிர்நீத்த எமது உறவுகளை நினைவுகூர முடியாத் தடைகளும், நீதிமன்ற உத்தரவுகளும் தற்போது தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகிறது. இவைகள் மனித உரிமை மீறல் என்பதை எல்லோரும் அறிந்தாலும், இலங்கையில் ஆட்சியாளருக்கு எதிராக மனிதஉரிமை மீறல் தொடர்பான எந்த விடயமும் காத்திரமாக அமைந்த…

  5. அனைத்து இனங்களின் உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் – பவ்ரல் 36 Views புதிய அரசமைப்பைத் தயாரிக்கும்போது அனைத்து இனங்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் வகையில் தயாரிப்பது அவசியம் என்று பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியிருக்கிறார். புதிய அரசமைப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஆணைக்குழுவின் செயலாளருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “அண்மைக்காலத்தில் புதிய அரசமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 42 வருடகாலத்தில் 20 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட அர…

  6. வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.கந்தசஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பெருமளவான அடியார்கள் ஆலயத்திற்கு சென்றிருந்தபோதும் வெளி வீதியில் வைத்தே சந்நிதியானையை தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறான நடைமுறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆலய வெளி வீதிக்குள் செல்லும்…

  7. கொழும்பில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அபாயமானவை – தொற்று நோயியல் பிரிவு கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அபாயமுடையவை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்பதன் காரணமாகவே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அந்தப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்…

  8. தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம். தீபாவளி பண்டிகை நாளில் கோப்பாய் சந்தியில் மாட்டிறைச்சி கடைக்காரனின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாட்டு இறைச்சிபோல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் க…

  9. மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ் தேசியவாதிகள் - குதுகலிக்க போகும் தென்னிலங்கை.! தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவு கூரப்படவுள ்ள நிலையில் மாவீரர் நாள் நினைவு கூரலுக்காக துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதே வேளை துப்பரவு பணிகள…

  10. வல்லரசுகளை கையாள இராஜதந்திரமே தேவை-சிவசக்தி ஆனந்தன் இலங்கையை மையப்படுத்திய அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போட்டி வலுத்துள்ளது. இந்தப்போட்டி எதிர்வரும்காலத்தில் மிகவும் தீவிரமடைந்து தொடரத்தான் போகின்றது. ஆகவே இந்த நாடுகளை தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்டு இராஜதந்திர மூலோய வியூகங்களுடன் கையாள வேண்டும் என்பதே எமது கட்சியினது நிலைப்பாடாகவும் உள்ளது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ரொசான் நாகலிங்கத்திற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கேள்வி:- பத்துக்கட்சிகளின் கூட்டும் அடுத்தக்கட்டச் செயற்பாடுகளும…

  11. யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் சுமார் 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுட்குப்பட்ட கொழும்புத்துறை ஜெ 161 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள , எழிலூர், மகேந்திரபுரம் கிராமங்களில், சுமார் 50 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அத்தோடு ஜெ 68 கிராம உத்தியோகத்தர் பிரிவில், தொடர்மாடி அருகாமை கிழக்கு பகுதியில் சுமார் 35 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளுக்கு யாழ் மாட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சூரியராஜா பார்வையிட்டுள்ளார். அத்தோடு, யாழ்ப்பாணம் பிரதேச …

  12. தமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – சாணக்கியன் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கா…

  13. இலங்கைக்கு இந்தியா, அமெரிக்க போன்ற நிலைவரும்

  14. 2025 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களையே பெறும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் BATTINEWS MAINNovember 11, 2020 (ரீ.எல்.ஜவ்பர்கான்) எதிர்வரும் 2025ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெறும். இது தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதற்கான பலனாகும். 22- 16 ஆக மாறியது. 16 இப்போது 10 ஆக மாறியுள்ளது. இது 5 ஆக மாறப்போகிறது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் தொடர்ந்து பேசிய அவர், நான்கரை ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பாதுகாத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. ஆனால் அந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான எத்தகைய உரி…

  15. இலங்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை.. : விளக்குகிறார் கமலா ஹரிஸின் மாமனார் *உலகத்தில் உள்ள மக்கள் குழுமங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கமலா அதுபற்றி கரிசனை கொண்டு நிச்சயமாக குரல் கொடுப்பார் *சர்வதேசத்தில் உள்ள நாடுகளின் இருதரப்பு மூலோபாய அடிப்படையில் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாற்றமடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகமுள்ளன *ட்ரம்பின் நிருவாக முறைக்கு நேர் எதிரான தாராளவாத ஜனநாயக அடிப்படையிலான ஆட்சியையே பைடன்-கமலா கூட்டணி முன்னெடுக்கும் 'அவர் அவருடைய தாயாரைப் போன்றவர். அவருடைய தாயாரான சியாமளாவும் தான் எடுக்கும் தீர்மானங்கள் வெற்றியடைய வேண்டும் என்று உறுதியான நம்பிக்கையுடனேயே செயற்படுவார். அதில் வெற்றியும் காண்பார். அப்படியொரு தீர்மானத்தினை எடுத்தே அவர் 1958இல் …

  16. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாத…

  17. யாழ். பல்கலைக் கழக பேரவைக்குப் புதிய உறுப்பினர் நியமனம் 41 Views யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகள் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள் தலைவரும், வாழ் நாள் பேராசிரியருமான அருட்பணி ஞானமுத்து பிலேந்திரன், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக பல்கலைக கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நேற்று முன்தின…

  18. குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை அறிவிப்பு! கல்வி நடவடிக்கைகளை வீட்டில் இருந்தவாறே தொடரும் வகையில், கல்வி அமைச்சினால் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்த கல்வி சேவைக்கான நேர அட்டவணை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 வரை இந்த கல்வி சேவை ஒளிபரப்பாகும் என கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது. 3ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொலைக்கா…

  19. அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துறைமுக சேவைகள் ஊழியர்கள் தொழிலுக்கு செல்ல தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கப்பல்கள் அருகில் உள்ள துறைமுகங்களை நோக்கி சென்றுள்ளது. அதனை இலங்கைக்கு மீண்டும் கொண்டு வர தாமதம் ஏற்படுவதுடன் மேலதிக செலவுகளையும் ஏற்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/261260?ref=imp-news

  20. உதயமாகிறது தமிழர் தேசிய சபை.! தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் நான் விடுத்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சி…

  21. இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா இங்கிலாந்துடன் தகவல்ப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைநீக்க வேண்டுகோள்களினைப் பரிசீலிக்கும் தீர்ப்பாயம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக எடுத்த முடிவிவினையடுத்தே இந்தியா அத்தடை நீட்டிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தத்தினை இங்கிலாந்து மீது திணித்திருக்கிறது. இந்திய ஒன்றியம் இத்தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்மானம்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பயங்கரவாதிகள் எனும் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தொடரப்படுவதை தமது நாடு விரும்புகிறதென்று அறிவித்தி…

    • 6 replies
    • 816 views
  22. மட்டு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விடயங்கள் ஆராய்வு November 14, 2020 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் நேற்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற…

  23. கொரனாவால் இறந்த உடல்களை மன்னாரில் புதைக்கும் போது மக்கள் தொடர்பிலும் கரிசனை தேவை : செல்வம் கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார், முசலிப்பகுதியில் கொரனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறான வாதபிரதிவாதத்திற்கு பின்னர் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின்…

  24. இலங்கைப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை 42 Views இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டுக்கு நுழைவு அனுமதி வழங்குவதற்காக பணம் அல்லது எந்தவொரு நிதிக் கட்டணத்தையும் கோரும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பயணிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிவித்தலில், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களைத் தவிர இலங்கைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மேலதிக மற்றும் உண்மைத் தகவல்களுக்கு தமக்கு அருகிலுள…

  25. அஞ்ஞான இருளகற்ற தீபங்கள் ஏற்றி அறிவொளி பரப்புவதே தீபாவளி வழிபாடு; வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி நாளைய தினம் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தீபாவளித் தினத்தை கொண்டாடவுள்ளனர். இந் நிலையில் அதனை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான நாளை, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்குவதுடன், தாம் ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி - அன்பை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.