ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது – பிரித்தானியாவிடம் இந்தியா கோரிக்கை? பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000ஆம் ஆண்டளவில் பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்தது. யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த நிலையில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாக…
-
- 3 replies
- 771 views
- 1 follower
-
-
2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது – மஹிந்த 2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020 முதல் இலங்கை 4200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்த…
-
- 1 reply
- 485 views
-
-
தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்வதை இலக்காகக் கொண்டே தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரா? - இரா.சாணக்கியன் Published: November 11, 2020 Thuyavan Mathi பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷ போன்ற இந்த நாட்டில் சில முக்கிய குழப்பங்களை உருவாக்கிய அரசியற் தலைவர்களினால் சாதிக்க முடியாத தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்யும் முயற்சியை ஒரு சவாலாக எடுத்து தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரோ என்று சந்திதேகிக்கத் தோணுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபையில் வரவுசெலவுத் திட்ட சபை அமர்வில் கலந்த…
-
- 1 reply
- 448 views
-
-
யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது! யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்று (புதன்கிழமை), வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்க தொலைபேசியும் பறித்து சென்றது. கொரோனோ தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது ஒரு அமைப்பு உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முகநூலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பதிவொன்றினை இட்டிருந்தார். பதிவினை நீக்க கோரி க…
-
- 0 replies
- 377 views
-
-
பிள்ளையானுக்கு ஒரு நீதி; அரசியல் கைதிகளுக்கு மற்றொரு நீதியா? கேள்வி எழுப்பகின்றார் சிவாஜி 29 Views பிள்ளையான் சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு அபிவிருத்திக்குழுத் தலைவர் அலுவலகத்தை திறக்க முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு; “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலி…
-
- 1 reply
- 481 views
-
-
“கார்த்திகை வீரர்கள் தினம் நினைவு கூரும் போது, தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்தத் தடை” 32 Views கடந்த காலங்களில் சலுகைகளாக வழங்கப்பட்ட, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவு கூரல் அனுமதிகள், தற்போது அடக்குமுறைக்கு துணைபோகும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீளக்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தடையுத்தரவுகள் விதித்து வருகிறது இலங்கை அரசாங்கம். இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அடிப்படை உரிமை மீறல் குறித்து இலங்கை தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரி…
-
- 0 replies
- 471 views
-
-
பா.உ சிவநேசதுரை சந்திரகாந்தனால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது BATTINEWS MAIN மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரின் காரியாலயம் மட்டக்களப்பு கச்சேரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது . மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் , சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் கட்சி முக்கிய உறுப்பின…
-
- 2 replies
- 467 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் சுரேன் ராகவன் ஈடுபட வேண்டாம் – சிவாஜிலிங்கம் சுரேன் ராகவன் எம்பி தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் எம்பியுமான சுரேன் ராகவன் தன் வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும், தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார். நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற …
-
- 2 replies
- 375 views
-
-
மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான் November 10, 2020 (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்போம் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார். அதேவேளை காத்திகை 27ஆம் திகதி மாவீரர் தினத்தையும் அவர் நினைவுபடுத்தினார். மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வழக்கிற்கு வருகைதந்த பிள்ளையானை வழக்கு முடிவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வி…
-
- 16 replies
- 1.5k views
-
-
யாழில் பண்டிகைக்கால அங்காடி வியாபாரத்துக்குத் தடை: யாழ்.மாநகர முதல்வர் November 11, 2020 யாழ்ப்பாணம் மாநகருக்குள் பண்டிகைக்கால அங்காடி வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இம்மானுவேல் ஆர்னல்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழமையாக யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அனுமதிக்கப்படும் ‘பண்டிகைக் கால அங்காடி’ வியாபாரத்திற்கு இவ்வருடம் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது என முதல்வரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள…
-
- 2 replies
- 585 views
-
-
தமிழர் தாயகத்தை இல்லாமல் செய்வதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றாரா-இரா.சாணக்கியன் 22 Views பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமா, மஹிந்த போன்ற இந்த நாட்டில் சில முக்கிய குழப்பங்களை உருவாக்கிய அரசியற் தலைவர்களினால் சாதிக்க முடியாத “தமிழர் தாயகம்” என்ற ஒன்றை இல்லாமல் செய்யும் முயற்சியை ஒரு சவாலாக எடுத்து தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரோ என்று சந்திதேகிக்கத் தோணுகின்றது என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “இனி வரும் காலங்கள் உண்மையில் மிகவும் சவாலான ஒரு காலப்பகுதி. தமிழர…
-
- 1 reply
- 493 views
-
-
“இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை” -க.வி.விக்னேஸ்வரன் 46 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. அதற்குப் பின் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைகிறது. அவ்வாறான சலுகைகளில் ஒன்றுதான் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நினைவு கூரல் அனுமதிகள். ஆனால் தற்போது அதற்கு எதிராக தடையுத்தரவுகளை இலங்கை அரசாங்கம் விதித்து வருகின்றது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ‘இலக்கு மின்னிதழ்’ கண்ட நேர்காணலில் தமிழ் ம…
-
- 1 reply
- 739 views
-
-
கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனையானது (Infectious Disease Hospital for Northern Province) கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (11) காலை11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.கேதீஸ்வரன், பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் திலீபன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, உலக வங்கியின் இலங்கைக்கான திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார, வவுனியா மாவட்ட வைத்தியாசலையின் பணிப்பாளர் வைத்…
-
- 0 replies
- 654 views
-
-
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததையடுத்து இவ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/94200
-
- 0 replies
- 419 views
-
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதா? போர்க்கொடி தூக்கும் ‘சிங்ஹலே’ அமைப்பு Bharati கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று ‘சிங்ஹலே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் தெரிவித்தார். “சிங்ஹலே” அமைப்பால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் …
-
- 5 replies
- 1.2k views
-
-
நாட்டின் மிகப் பெரிய கப்பலை டொக்யார்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது! நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் 51 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கும் 35 சதவீதப் பங்களிப்பு இலங்கையின் அரச நிறுவனமொன்றுக்கும் உரித்தாகும். 113 .1 மீற்றர் நீளமான இந்தக் கப்பலின் அகலம் 21 . 5 மீற்றர்களும், ஆழம் 8 . 8 மீற்றர்களும் ஆகும். மணிக்கு 14 . 5 மைல் வேகத்தில் இந்தக் கப்பலால் பயணிக்க முடியும். முழுமையாக உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் இந்தக் கப்பல் 21 மாதங்களில் தயாரிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://a…
-
- 1 reply
- 376 views
-
-
யாழில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் விடுவிப்பு November 11, 2020 யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை இன்று காலையில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம், யாழ்ப் பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டகுருநகர், திருநகர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் காரணமாக சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். குறித்த தொற்றாளர்கள் அக்கிராமங்களில் நடமாடி இருந்ததால் அக்கிராமங்களிலிருந்து யாரும் வெள…
-
- 0 replies
- 322 views
-
-
நவம்பர் 7 க்கு பின்னர் யாழ்ப்பாணம் வந்தவர்கள் தம்மை பதிவு செய்ய வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் November 11, 2020 தற்போது நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. எனவே கடந்த 7 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து வருகை தந்தவர்கள் அனைவரும் தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: “கடந்த 7ஆம் திகதிக்குப் பின்னர் வருகை தந்தோரை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்து…
-
- 0 replies
- 176 views
-
-
யாழ். மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை November 11, 2020 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந…
-
- 0 replies
- 187 views
-
-
யாழ்.நகர அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி திரும்பி செல்லும் நிலை..! பொறுப்பு வாய்ந்தவர்களின் அசமந்தம்..! சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் யாழ்.நகரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படுத்தப்படும் யாழ்.தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தின் பெரும் பங்கு நிதி திரும்பிச் செல்லும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. உலக வங்கியின் அனுசரணையுடன் செயல்படுத்தப்படும் குறித்த திட்டம் யாழ்.நகரை அழகுபடுத்தும் முகமாக நான்கு பிரதான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது யாழ்.நகர வடிகாலமைப்பு திட்டம், குளங்கள் ஆழமாக்குதல், நகரை அழகுபடுத்துதல் மற்றும் யாழ்.மாநகர இயலளவு அபிவிருத்தி ஆகிய பிரிவுகளின் கீழ் குறித்த திட்டம் செயல்படுத்தப…
-
- 4 replies
- 635 views
-
-
6 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை பாதிப்பு - தீர்வைக்கோரும் மட்டு. விவசாயிகள் மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் தாழ் நிலப்பகுதியில் உள்ள வயல் பகுதில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் 6 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முகத்துவாரம் ஆற்று வாயை வெட்டி நீரை கடலுக்கு வெளியேற்றுமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ள எருமைத்தீவு, திமிலைத்தீவுகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (10) படகில் ஊடகவியலாளர்களை விவசாயிகள் அழைத்து சென்று வெள்ளத்தில் மூழ்கியுள்ள வயல் பிரதேசங்களை காட்டிய பின்னர் உடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மட்டக்களப்பு ஆற்றுவாயில்…
-
- 1 reply
- 481 views
-
-
கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம் என்பவரது வயல் காணி துப்பரவு செய்து அந்தக் காணியில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காணி பெக்கோ இயந்திரங்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டு மீண்டும் உழவு இயந்திரம் மூலம் உழவு செய்யப்பட்டு நெல் விதைக்கப்பட்ட நிலையில் மண்வெட்டி கொண்டு குறித்த வயல் நிலங்களுக்கான வரம்புகளை அமைக்க முற்பட்டபோது வெடிபொருள் இருந்தை அவதானித்தவர்கள்…
-
- 3 replies
- 594 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/138278/Kilinochchi_GA_photos.jpg குறித்த ஊடக சந்திப்பில், தற்போது 310 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், ஜெயபுரம் பகுதியில் கொழும்பில் தொழில் புரிந்து வீடு திரும்பிய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புபட்ட குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை நிறைவடைந்து தொற்று இல்லை என உ…
-
- 0 replies
- 750 views
-
-
கொரோனா உயிரிழப்புக்களை அரசாங்கம் மறைக்கின்றது- ஹரின் பெர்ணான்டோ http://athavannews.com/wp-content/uploads/2019/07/harin-fernando.jpg நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் மறைக்கின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஹரின் பெர்ணான்டோ மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேச…
-
- 0 replies
- 269 views
-
-
மாமனிதர் ரவிராஜ் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! November 10, 202000 சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் “மாமனிதர்” நடராஜா ரவிராஜ் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்றது. மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வினை சுமந்திரன் எம்பி அணியினர் காலை 9 மணிக்கும் நடராஜா ரவிராஜ் மனைவி சசிகலா ரவிராஜ் தலைமையிலான அணியினர் 9.30 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியிருந்தனர். ஏ…
-
- 0 replies
- 401 views
-