Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கூத்தா நல்லூர் தம்ரூட் தேவையான பொருட்கள் ரவை - 2 1/2 டம்ளர் சீனி - 3 டம்ளர் முட்டை - 12 நெய் - 250 கிராம் கண்டன்ஸ்ட் மில்க் - 150 கிராம் ஏலக்காய் - 7 முந்திரி -12 உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை : தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். முட்டையை மிக்ஸியில் உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். வானலியில் ரவையை நிறம் மாறாமல் லேசாக வறுத்து கொள்ளவும்.(நன்றாக வறுத்து விட கூடாது). அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி விட்டு அதில் உப்பையும் சீனியையும் சேர்த்து கைகளினாலோ அல்லது மரக்கரண்டியாலோ நன்கு கரைத்து கொள்ளவும்.(பீட்டரால் வேண்டாம்) முட்டையில் சீனி கரைந்ததும் ரவை, கண்டஸ்ட்மில்க் மற்றும் ஏலக்காய் பொடியையும் ச…

    • 2 replies
    • 1.8k views
  2. இன்று கடைப்பக்கம் போன போது... இந்தப் பழத்தைக் கண்டு, ஆசையில் வாங்கி விட்டேன். இதனை எப்படிச் சாப்பிடுவது என்று, யாருக்காவது தெரியுமா?

  3. கைக்குத்தல் அரிசி முட்டை தம் பிரியாணி இதுவரை பாசுமதி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி போன்றவற்றைக் கொண்டு தான் பிரியாணி செய்திருப்பீர்கள். ஆனால் ப்ரௌன் ரைஸ் எனப்படும் கைக்குத்தல் அரிசியைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம், இந்த அரிசியைக் கொண்டும் பிரியாணி செய்யலாம். சொல்லப்போனால், இந்த அரிசியை அன்றாடம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் பிரியாணி செய்வதற்கு இந்த அரிசியைப் பயன்படுத்தினால், பிரியாணியின் சுவை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இங்கு கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்படும் முட்டை தம் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி - 1 கப் எண்ணெய் …

  4. தேவை? தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு, துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப், தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்), எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு. எப்படிச் செய்வது? தூதுவளையை துண்டுகளாக வெட்டி, மசித்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்புச் சேர்க்கவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து, பூண்டு நசுக்கிப் போடவும். மிளகு, சீரகத் தூள், ம…

  5. சிக்கன் கருவேப்பிலை ப்ரை சிக்கன்- அரை கிலோ கருவேப்பிலை -2 கொத்து வர மிளகாய் – 5. மிளகு -1 ஸ்பூன் கடலை பருப்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு. பூண்டு – சிறிது அளவு. உப்பு -தேவையான அளவு. எண்ணெய் -தேவையான அளவு. கொத்தமல்லி தூள் -1 ஸ்பூன். முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும். வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவ…

  6. அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடியது தான் காளான். இந்த காளானை பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அருமையாக இருக்கும். அதில் ஒன்று தான் மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். காளான் பஜ்ஜி செய்வதென்பது மிகவும் ஈஸி. இங்கு அந்த காளான் பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) மைதா - 100 கிராம் அரிசி மாவு - 100 கிராம் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற…

  7. கன்னியாகுமரி நண்டு மசாலா விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை எப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிடலாம் என்ற யோசியுங்கள். இங்கு கடல் உணவுகளில் ஒன்றான நண்டை கன்னியாகுமரி ஸ்டைலில் எப்படி மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கன்னியாகுமரி நண்டு மசாலாவின் செய்முறையைப் படித்து தவறாமல் செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: நண்டு - 1/2 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) கறிவேப்பில…

  8. சுவையான மலாய் கார்ன் பாலக் பசலைக்கீரையின் நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அத்தகைய பசலைக்கீரையை பலர் கடைந்து மட்டும் தான் சாப்பிடுவார்கள். ஆனால் பசலைக்கீரையை அருமையான சுவையில் மலாய் மற்றும் கார்ன் சேர்த்து கிரேவி செய்து சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இங்கு அந்த மலாய் கார்ன் பாலக் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: பசலைக்கீரை - 4 கட்டு வேக வைத்த சோளம் - 1 கப் க்ரீம் அல்லது மலாய் - 1/2 கப் இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) உலர்ந்த வெந்தய…

  9. வரகரசி பால் பொங்கல் நாளொரு பண்டிகையும் பொழுதொரு கொண்டாட்டமுமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை தனித்துவமிக்கது. நம் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்புடையது. நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது. நம்மை உயிர் வாழவைக்கும் உழவுக்கும் அதற்கு உதவும் பகலவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்தத் திருநாளின் மாண்பு, அன்று சமைக்கப்படும் உணவு வகைகளிலும் பிரதிபலிக்கும். “வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய உணவு வகைகளில் புதுமையைப் புகுத்தினால் பொங்கல் கொண்டாட்டம் இரு மடங்காகிவிடும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். அதற்கு உதவியாகச் சில உணவு வகைகளின் செய்முறைகளையும் அவர் தருகிறார். வரகரசி பால் பொங்கல் என்னென்ன தேவை? வரகரசி - 1 கப் பா…

  10. தயிர் உருளைகிழங்கு தேவையான பொருட்கள்: சிறிய உருளை கிழங்கு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 சற்று புளித்த தயிர் – 1/2 கப் இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள். * வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும். * எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். * பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். * பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 ந…

  11. ருசியான... கேரட் பொரியல் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண் பார்வை தெளிவாகும் என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, கேரட் உடலின் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்கும். அத்தகைய கேரட்டை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது பொரியல் போன்றோ செய்து சாப்பிடலாம். இங்கு மிகவும் ஈஸியான கேரட் பொரியல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கேரட் - 3-4 கடுகு - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 1/2 (நறுக்கியது) உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய்…

  12. காலையில் இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிம்பிளான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளியைக் கொண்டே அருமையான சட்னி செய்யலாம். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றவாறு செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். இங்கு அந்த சிம்பிளான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: தக்காளி - 3 இஞ்சி - 1 இன்ச் மிளகு - 1/2 டீஸ்பூன் கிராம்பு - 2 வரமிளகாய் - 3 கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்…

  13. செட்டிநாடு மீன் பிரியாணி என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி -3/4 கிலோ மீன் – 3/4 கிலோ (பெரிய வகை) வெங்காயம் – 3 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 இஞ்சி, பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை – தலா 2 தயிர் – ஒன்றரை கப் மிளகாய் தூள் – 2 + 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1 + 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி சோம்பு தூள் – அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி கெட்டி தேங்காய் பால் – ஒரு கப் எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்,புதினா, மல்லித் தழை, உப்பு – தேவையான அளவு. எப்படிச் செய்வது? மீனை சுத்தம் …

  14. ப்ராக்கோலி ரோஸ்ட் மாலையில் டீ/காபி குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தான் செய்து சாப்பிட வேண்டும் என்றில்லை. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ப்ராக்கோலியை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். அதிலும் உங்கள் வீட்டில் மைக்ரோ ஓவன் தூங்கிக் கொண்டிருந்தால், ப்ராக்கோலி ரோஸ்ட் செய்து சாப்பிடுவது சிறந்தது. சரி, இப்போது ப்ராக்கோலி ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! ப்ராக்கோலி ரோஸ்ட் தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி - 2 கப் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் (பேஸ்ட் செய்தது) எலுமிச்சை தோல் பொடி - 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் எள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: …

  15. நேற்று சனவரி முதலாம் திகதி வழக்கம் போன்று சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து வீட்டில் சாப்பிடுவம் என்று நினைத்து சமைத்து ருசித்த உணவு இது. Singapore Chilly crab curry என்பது உலகப் பிரசித்தமான ஒரு நண்டுக் கறி. சிங்கபூர் செல்லும் அசைவ பிரியர்கள் தவறாமல் உண்ணும் உணவு இது. அதைச் செய்யும் முறையை கூகிளின் உதவியுடன் பின் வரும் இணையத்தளத்தில் பார்த்து விட்டு அதில் உள்ளது போன்றே செய்யாமல் சின்ன சின்ன வித்தியாசங்களுடன் செய்து பார்த்தது. http://www.sbs.com.au/food/recipes/singapore-chilli-crab?cid=trending தேவையானவை: நண்டுகள்: 04 (நண்டுக் கறிக்கு நண்டு போடாமல் செய்ய முடியாது) பெரிய வெங்காயம்: 02 செத்த மிளகாய்: 15 (உறைப்பு கூடவாக இருக்க நான் 15 போட்டேன்) எண்ணெய்:…

    • 11 replies
    • 3.6k views
  16. பொதுவாக புடலங்காயை கூட்டு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குளிர்காலத்தில் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது இதமாக ஏதேனும் மொறுமொறுவென்று சாப்பிட நினைத்தால், புடலங்காயை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது புடலங்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புடலங்காய் - 1 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு பஜ்ஜி மாவிற்கு... கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர்…

  17. பொடேட்டோ ஆம்லெட்! இப்படி காலை உணவை பற்றி கவலைப்படாமல் எஸ்கேப்பாகும் மக்களின் நலனுக்காக எளிமையான பொடேட்டோ ஆம்லெட்டை பிரேக் பாஸ்ட்டுக்கு செய்து பாருங்கள். நேரமாகிறது என்று சொல்பவர் கூட, நிதானமாக சாப்பிட்டு செல்வார்கள். தேவையானவை உருளைக்கிழங்கு – 1 முட்டை – 3 கொத்தமல்லி – சிறிது மஞ்சள் தூள் – சிறிது பச்சை மிளகாய் – தேவைகேற்ப உப்பு/ எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்த முட்டை, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள். உருளைக்கிழங்கை சிரிது நேரம் தண்ணீரில் சிறிது உப்புடன் ஊறவைத்து ‌பிறகு அதை துருவி நீரில் வேக வைத்தப்பிறகு, அதை முட்டை…

  18. துளசி பக்கோடா என்னென்ன தேவை? துளசி, கடலை மாவு - தலா 1 கப் அரிசி மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன் வெங்காயம் (நறுக்கியது) 1 கப் பெருங்காயம் சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு எப்படிச் செய்வது? துளசியை அலசி, நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு இவற்றுடன் நறுக்கிய துளசி, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். இருமல், சளி, ஜலதோஷம் ஆகி…

  19. பருப்பு ரசம் மதிய வேளையில் பலருக்கு ரசம் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் எப்போதும் ஒரே மாதிரி ரசம் செய்து சாப்பிடாமல், அவ்வப்போது வித்தியாசமான ரசத்தையும் செய்து சுவைக்கலாம். அதில் ஒன்று தான் பருப்பு ரசம். இந்த பருப்பு ரசம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் சுவையானதாகவும் இருக்கும். சரி, இப்போது பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி - 1 (பெரியது மற்றும் நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்து லேசாக மசித்தது) புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 5 பற்கள் ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்…

  20. பப்பாளிக்காய் பொரியல் என்னென்ன தேவை? பப்பாளிக்காய் (துருவியது) - 1 கப் குடமிளகாய் 3 ( பச்சை, சிவப்பு, மஞ்சள்) நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் 2 தேங்காய்த் துருவல் - அரை மூடி கடலைப் பருப்பு 2 டீஸ்பூன் கடுகு, உளுந்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு எப்படிச் செய்வது? பப்பாளிக்காயை சேமியாபோல் துருவிக் கொள்ளவும். மூன்று நிற குடமிளகாயையும் நீளவாக்கில் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். அதில் கடலை பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய வெங்கா…

  21. முட்டை... முழுமையான தகவல்கள்! Posted Date : 17:28 (30/12/2014)Last updated : 18:17 (30/12/2014) மலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் என இதில் இருக்கும் சத்துப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவர், சரியான உணவு பட்டியலை தயார் செய்யும்போது, அதில் முட்டையும் இருக்கும் பட்சத்தில் 'டயட் லிஸ்ட்' முழுமை பெறும். 1. முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், மைல்டான பழுப்பு நிறத்தில் தெரியும். முட்டையை வாங்கியதும் ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால், 3 வாரத்துக்கு மேல் வைக்கக் கூடாது…

  22. காளான் பொரியல் பலருக்கு காளான் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். அத்தகைய காளானை எந்த மாதிரி சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவை அருமையாக இருக்கும். அதிலும் காளானை பொரியல் செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இங்கு காளானை எப்படி பொரியல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் சின்ன வெங்காயம் - 5 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்ப…

  23. Started by தமிழரசு,

    ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தக்காளி ரசம் தான். ஆனால் அதற்கு சமமான சுவையில் பூண்டு ரசம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, உங்களுக்கு பூண்டு ரசம் வைக்கத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை பூண்டு ரசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பூண்டு பற்கள் - 6 பச்சை மிளகாய் - 1 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.