கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
வீடற்றவன்... - வ.ந.கிரிதரன் - சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. 'ஹாட் டாக்' நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தெரு மூலைகளில் இத்தனைக் களேபரத்திற்குமிடையில் …
-
- 0 replies
- 793 views
-
-
--------------------------------------------------------------------- தண்ணீர் தேசம் கவிஞர் வைரமுத்து --------------------------------------------------------------------- 1 கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட கு…
-
- 0 replies
- 15.2k views
-
-
இப்படியும் மனிதர்கள் ................ வழக்கம் போல புலம் பெயர்ந்த ஒரு பெண்ணின் கதை இது . அழகான கிராமிய மனம் கொண்ட ஒரு சிறு ஊர் ,அதில் இன்பமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்களிடையே ஒரு பெண் பருவ வயது அடைந்ததும் திரு மணம் எனும் பொன் விலங்கு பூட்டி வாழ்க்கை எனும் காலடி வைத்த போது ,கொண்டவனின் கோலம் ,கண்டு உறவுகள் மனங்கள் கலங்கின . ...வருடங்களும் ஓட ,இரு ஆண் பிள்ளை களின் தந்தை ஆனான் . அரபூ நாட்டில் வேலை பார்த்தவன் ,பல தில்லு முல்லுகளால் ,இடை நிறுத்த பட்டு சொந்த ஊர் வந்தான் ... குடிஉம்... குடித்தனமுமாக ..வாழும் காலத்தில் ,வேலை இன்றி இருந்தான் ..அவளது l சக உறவுகள் புலத்தில் இருந்து உதவி செய்து ..போக்கு வரத்து செய்யும் வாகனம் எடுத்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
சாபத் நாளில் மட்டும் நடேசன் ( ஆஸ்திரேலியா ) அவுஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து வந்த பின்னர் உணவு விடுதி, தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் முதலான சில இடங்களில் பலரோடு பணியாற்றியிருக்கின்றேன். இந்தப் பணிகள் மிருகவைத்தியராக என்னை நான் இந்த நாட்டில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக இடைக்காலத்தில் மேற்கொண்டவை. இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை கவனித்தவாறு எனது துறையில் படிப்பது என்பது, கடலில் தனியாக படகைச் செலுத்தியபடி வலைவீசி மீன்பிடிப்பது போன்றது. இலங்கையில் ஐந்து பேருக்கு மேலதிகாரியாகவும் கார், மோட்டார் சைக்கிள் என வைத்திருந்து விட்டு சமையலறையில்; வேலை செய்வது இலகுவானதாக இருக்கவில்லை. சப்பாத்தி வட்டமாக போடத் தெரியவில்லை என்று ஒரு பஞ்சாபி முதலாளியிடம் ஏச்சு …
-
- 0 replies
- 1.1k views
-
-
வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை லைலா எக்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம் 1 அந்த அமைதியான மாலைப் பொழுதில் கழிவறைக்குள் தென்னை விளக்குமாற்றால் சரசரவெனக் கூட்டிக் கழுவும் சத்தம், பள்ளியின் வராந்தா முழுவதும் ஒலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கேட்ட சத்தம், முழுவதுமாக நின்றுபோன சற்றுநேரத்தில் வெறும் பக்கெட்டை ஒரு கையிலும், பொருள்கள் நிறைந்திருந்த பக்கெட்டை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் வித்யா. அந்த பக்கெட்களிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட, அவள் நடந்துவந்த வராந்தாவில் சிந்தவில்லை. இத்தனைக்கும் அவள் கைகளிலிருந்த அழுத்தமான பிளாஸ்ட்டிக் பக்கெட்டின் விளிம்பு பிளந்துகொண்டிருந்தது. அதில் சிறிய விரிசல் ஒன்றும் இருந்தது. அதன் …
-
- 0 replies
- 2.3k views
-
-
ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது. கனவின் எழுச்சி மிக…
-
- 0 replies
- 1k views
-
-
சவுக்கம் - உமா வரதராஜன் பிரான்சிஸ் என்னை அழைத்து வருமாறு ஒரு போலீஸ்காரனை அனுப்பியிருந்தார் . ”தையல் மெஷினில் ஏதாவது கோளாறா ?” என்று அவனைக் கேட்டேன் . ”அப்படி எதுவும் சொல்லவில்லை ” என வந்தவன் சொன்னான் .அவனுடைய சலனமற்ற முகத்தில் எதையும் என்னால் படித்தறிய முடியவில்லை .ஒரு வேளை மரணம் தன் கண்முன்னால் நின்று வெறிக்கூத்தாடிச் சென்ற திகைப்பிலிருந்து இப்போது வரை மீளாமல் அவன் பேதலித்துப் போயிருக்கலாம் .ஏதோ ஒரு தூணின் பின்னால் அல்லது மண்மூடைகளுக்குப் பின்னால் அல்லது பொலிஸ் நிலைய வளவினுள் நின்ற முறுக்கேறிய பெரிய மரங்களில் ஒன்றின் பின்னால் அல்லது கழிப்பறைக்குள் மறைந்து நின்று தன்னைத் தற்காத்துக் கொள்ள கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளியிருக்கலாம் . எல்லா ஓசைகளும் ,புழுதியும் அடங்கி…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதை- ஏக்கம் உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார். “என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபஞ்ச கானம் – மௌனி அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான். சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்…
-
- 0 replies
- 1.5k views
-
-
காலப்பயணம் காதலை வாழ வைக்குமா? - சயின்ஸ் ஃபிக்ஷன் சிறுகதை #LetsLove இப்போது மட்டும் வாழ்வோம்! ஒரு படைப்பு தன்னைத்தானே படைத்துக் கொள்ளுமா? ஒரு கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமா? ஒரு நிகழ்வு தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்ளுமா? பிரபஞ்ச இருள் சூழ, முப்பத்து முக்கோடி கோள்கள் சுழல, காலம் மட்டும் தன்னைத்தானே கடத்திக்கொண்டிருக்கிறது! காலந்தானே கடவுள்? அந்த அறையின் ஜன்னல் அரைகுறையாக மூடப்பட்டிருந்தது. வெளியே மண்டி கிடக்கும் இருள், அந்த ஜன்னல் வழியே வெளிச்சத்தைப் போலவே அந்த அறைக்குள் பரவியதா, இல்லை அந்த இருள் அந்த அறைக்குள் முன்னரே இருந்ததா என்பதெல்லாம் அறிவியலாளர…
-
- 0 replies
- 833 views
-
-
நான் ரசித்த ஒரு அருமையான பதிவு..விண்வெளியின் அதிசயங்களை ஒரு எழுத்தாளனின் பார்வையில் எங்கள் கண்முன் கொண்டுவந்துதந்திருக்கிறார் இந்தக்கட்டுரையாளர்..எல்லைகளற்ற வானம்போலவே மனிதனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் ஏது...பிரபஞசத்தை பற்றி நான் கேட்டு வாசித்து படித்து அறிந்து கொண்டவைகளால் ஏற்பட்ட பிரமிப்பால் வானவியல் சம்பந்தமான பல அறிவியல் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன்..ஆனாலும் தமிழ்ச்சுவையோடு தீட்டப்பட்டுள்ள இந்தக்கட்டுரையை வாசித்து முடித்தபொழுது ஒரு தனி சுகம் இருந்தது... வாசித்து முடித்த பொழுது விண்வெளிக்கு ஒரு இலக்கியப் பயணம் போய் வந்தது போன்றதெரு உணர்வு...இதோ உங்களுக்கும் அவரின் அனுமதியுடன் அந்த அநுபவம் கிடைக்கட்டும்... ஒரு எல்லைகளற்ற பயணம்-கை.அறிவழகன் …
-
- 0 replies
- 1.7k views
-
-
கதை சொல்லவா? (06)/ சிறுகதை/ யாழ் சுமந்த சிறுவன்- தீபச்செல்வன்/ திரு தியா காண்டீபன் தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை
-
- 0 replies
- 690 views
-
-
ஜான்ஸி மலையகம் வாசகத்திற்கு ஏற்பவே சூழவும் மலைகளைக் கொண்டு விளங்கியது. அதிலும் சிறப்பு என்னவென்றால் அம்மலைகள் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இன்ப மகிழ்ச்சியையும் அள்ளித்தெளிக்கும் பச்சைப்பசேல என்ற தேயிலைச் செடிகளால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டு இருந்ததுதான். இதனைத் தவிர மரக்கறித் தோட்டங்கள், மெய்சிலிக்கும் நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டங்கள் என பல வகைப் பண்புகளையும் சிறப்புக்களையும் கொண்ட பண்டாரவளையில் அம்பிட்டிய என்பது ஒரு சிறிய தோட்டக் கிராமம். அதில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அதிலும் பெண்கள் தான் பெரும்பான்மையாக இருந்தது. அவர்களின் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
ஃபாதியா - சிறுகதை சிவகுமார் முத்தய்யா - ஓவியங்கள்: ஸ்யாம் பாலக்காடு ரயில்வே நிலையத்தில் இறங்கி மூர்த்தி செல்லைப் பார்த்தான். பின்னிரவு மூன்று மணியைக் கடந்திருந்தது. பயணிகள் சிலர் அங்கங்கே இருக்கும் சிமென்ட் பெஞ்சுகளில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டேசனை விட்டு இறங்கி எதிரேயிருந்த டீக்கடையில் ஒரு சாயா குடித்தான். மீண்டும் ஸ்டேசன் வந்து கடைசியில் இருந்த வடக்குப் பார்த்த இருக்கையில் அமர்ந்தான். குழப்பம், பதற்றம், பயம் மாறி மாறி ஆட்கொண்டன. முடிவு எடுக்க முடியாத ஒரு மனக் குலைவு. இவற்றையெல்லாம் தாண்டி ஃபாதியா ஒரு பறவையைப் போல தோளில் அமர்ந்தாள். மூர்த்தி வேங்கரையில் நின்று திரும்பி…
-
- 0 replies
- 2.8k views
-
-
கண்ணன் காட்டிய வழி ஆர் வி சுப்பிரமணியன் துச்சாதனன் கீழ்ஸ்தாயியில் உறுமினான். “நீ சொல்வது பொய்யாக – வேண்டாம் தவறாக இருந்தால் உன் தலை இருக்காது”. அனுகூலன் நிமிர்ந்து துச்சாதனனை நோக்கினான். அவனது கண்கள் கலங்கி இருந்தன. “தங்களிடம் நாற்பது ஆண்டுகளாக அணுக்க ஒற்றனாக பணி புரிகிறேன். இது வரை நான் தங்கள் வரை கொண்டு வந்த எந்த செய்தியும் தவறாக இருந்ததுண்டா?” என்று தழுதழுத்த குரலில் வினவினான். “ஆம் அதனால்தான் உன்னிடம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். உன் தலை இன்னும் உடலில் இருக்கிறது. நீ அலர் உரைப்பது யாரைப் பற்றி? கர்ணன் என் தமையனுக்கு அடுத்த நிலையில் உள்ளவன், என் தமையனுக்கு மட்டுமல்ல எனக்கும் உயிர் நண்பன்!” என்று மீண்டும் கடுமையான குரலில் சொன்னான். ஆனால் தன் குரல் அனுகூலனைத் தவிர …
-
- 0 replies
- 346 views
-
-
பழைய பறணிலிருந்து (மாவீரர் வாரத்தையொட்டிய நினைவு தாங்கிய சிறுகதை) "எதிர்பார்ப்பு" இசையும் கதையும். " அம்மாளைக்கும்பிடுறான்கள்" சிறுகதைத் தொகுப்பிலிருந்து 8வருடம் முதல் இசையும் கதையுமானது. எதிர்பார்ப்பு இசையும் கதையும்
-
- 0 replies
- 987 views
-
-
எங்கட | நெற்கொழு தாசன் ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து விலகிவர முடியவில்லை. அரைகுறை மனதோடு அவரது கதையினைக் கேட்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தேன். எனது நினைவெல்லாம் விடுமுறைக் காலம் முடிய இன்னும் நான்கு நாள்கள் தான் இருக்கிறது என்பதாகவே இருந்தது. அவர் அறிமுகமாகிய அந்தக் காலத்தில், நான் உடுப்பிட்டியில் இருக்கும் பிரபல கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து செல்வதுதான் வழமையானது. சில தினங்களுக்கு ஒருமுறை, அம்மா ஒருரூபாய் காசு தருவார். வீடு தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐந்து ஆண்டு தண்டனை முடிந்து, சிறையில் இருந்து சுதந்திர காற்றை சுவாசித்தபடி வெளியே வந்தான் சிதம்பரம். வரவேற்க காந்திமதி வந்திருப்பாள் என எதிர்பார்த்து ஏமாந்து போனான். "ச்சே, ஜெயில்ல இருக்கும் போது, தனக்கு ஆதரவாக இருந்தவள், அவள் மட்டும் தான். இப்ப வெளியே வரும்போது அவளை காணலயே' என கவலையுடன் நடந்தான். சில மாதங்களுக்கு முன் தன்னை பார்க்க வந்தபோது, அவள் கொடுத்த அட்ரசை தேடினான். பக்கத்து வீடுகளில் விசாரித்தான். சிதம்பரத்தை ஏற இறங்க பார்த்தவர்கள் ஏளனமாக, "ஓ... நீ அந்த ஆளா? அவ, இந்த வீட்டை காலி செஞ்சு மாசக்கணக்கா ஆச்சு' என விரட்டாத குறையாக பதில் அளித்தனர். ஏற்கனவே, காந்திமதியைப் பற்றி தெரிந்திருந்தவன், அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான். தூரத்தில் நின்றிருந்த ஆட்டோக…
-
- 0 replies
- 1.1k views
-
-
காதல் சொல்ல… வா… – சிறுகதை கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டில்தான் சந்தித்தான் வளவன். வழக்கமாய் சினிமாக்களிலும், கதைகளிலும் வருவது போல் மோதல் இல்லை. அந்த மழை நாளில், நனைந்து விடாமலிருக்க கல்லூரி பேருந்துக்குள்ளே நெருக்கியடித்து ஏறிக் கொண்டிருந்தனர் மாணவர்களும் மாணவிகளும். கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் நின்று கொண்டிருந்தாள் குழலி. மழைத்தண்ணீரின் ஈரத்தில் செருப்பு நழுவ, கீழே விழவிருந்தவளை, பின்னால் நின்று கொண்டிருந்த வளவன்தான் கைகொடுத்து நிலை நிறுத்தினான். உடனே, பாரதிராஜா படத்தில் வருவது போல் தேவதைகள் புடைசூழ “தந்தன.. தந்தன தாளம் வரும் வரும்..” என்றெல்லாம அவன் மனம் பாட்டு படிக்கவில்லை. அவளைத் தேடி அலையவில்லை. நண்பர்கள் மூலம் இருப்பிடம் அறிய முய…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் https://www.vikatan.com
-
- 0 replies
- 1.7k views
-
-
திருவையாறு -எஸ். சங்கரநாராயணன் கண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல… என்ன ஸ்வரம் அது, என்று மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவற்றின் துல்லியம் கவிதைத் திவலைகள். மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. …
-
- 0 replies
- 1.4k views
-
-
பாடுபட்ட சிலுவையள்-சிறுகதை-தமிழ்க்கவி காலையில் பனிபெய்து நனைந்திருந்த வயல் வரம்பு. கால்களை அவ்வப்போது வழுக்கிக் கொண்டிருந்தது. அதென்ன, புல் இல்லாத இடத்தில் கால் பட மண் ஒட்டுது. அந்தக்காலை புல்லில வைக்க பனி நனைக்குது. வழுக்கத்தானே செய்யும் என்றாலும், அவளுடைய நடையில் ஒரு கொஞ்சமும் வேகம் குறையவில்லை. அதுமட்டுமல்ல அவளுடைய தலையில் ஏற்றியிருந்த சுமைகூட அப்படியே இருந்தது. அவளுடைய ஒருகையில் அரிவாள் அவளுடைய கைவீச்சுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தது. மறுகையில் தண்ணீர்க்கலயம். அதன் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கில் பிடிக்கப்பட்டிருந்தது. தலைச்சுமை சுருட்டி வைத்த சும்மாட்டில் சிவனேயென்று கிடந்தது. என்னதான் வேகமாக நடந்தாலும் அவளுடைய உடலில் இன்றைக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
நீ அமைதியாக உறங்க… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து நீ அமைதியாக உறங்க… வியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது. கம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இருட்டில் பார்த்தால் எதுவுமே தெரியாது. நெஞ்சத்தை ஏதோவொன்று அழுத்தும். ஆனால் நிலவில் இனிமைதான். எங்கும் வெண்ணிறப் படிமங்கள். மரங்களின் நிழல்கள் மறைக்க முயன்றன; முடியவில்லை. நாலாவது வரிசையில் கடைசியா…. இடம் அடையாளம் தெரிந்தது. அங்குதான் அவனின் அண்ணன் உறங்குகின்றான். பின்பக்கம் சத்தம் கேட்டது. சமையற்கட்டைவிட்டு அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். இண்டைக்…
-
- 0 replies
- 676 views
-
-
வடுகநாதம் சிறுகதை: என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு இருள் அடர்ந்த பனி இரவு. நடுச்சாம வேளை. தோட்டத்து வீட்டின் உள் அறையில் படுத்திருந்த நான் ஏதோ சத்தம் கேட்டு, கண்விழித்தேன். நாய்கள் குரைப்பதும், ஆட்கள் விசில் அடிப்பதும் மாறி மாறிக் கேட்கத் தொடங்கின. கிழக்குப்புறத்தில் இருந்துதான் சத்தம். நான் அவசரமாக எழுந்து ஆசாரத்துக் கயிற்றுக்கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினேன். எழுந்ததும் ஏதோ ஆபத்து என உணர்ந்துகொண்டார். வெளித்திண்ணை விட்டத்தில் செருகியிருந்த குத்தீட்டியை உருவி எடுத்துக்கொண்டு, விசில் சத்தம் கேட்கும் கிழப் புறத்துத் தோட்டத்தை நோக்கி ஓடினார். அதற்குள், வடக்கே செங்கா…
-
- 0 replies
- 2k views
-