கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
ஸ்டீயரிங் வீல் சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். வேடிக்கை... அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால், பாதி வழியில் என்றும் நின்றது இல்லை. சரியாக அவள் வீட்டை அடையும் வரை காத்திருக்கும். பிறகு ஆளைவிடு என்பதுபோல பெர…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஸ்துதி - சயந்தன் ஓவியம்: ரமணன் இலங்கைப் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்குச் சற்றுத் தொலைவிலிருக்கின்ற ‘சிலோன் ஸ்பா’ என்ற நட்சத்திர மசாஜ் விடுதியின் வாசற்படியில் இந்தக் கதை தொடங்குவதால், இடையில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழும் என்று நீங்கள் கருதத் தேவையில்லை. நான் விடுதியின் வாசலோடு தரித்து நின்ற ஓட்டோவிற்குள் ஒரு குற்றவாளிக் கூண்டுக்குள் இருப்பதைப்போலக் காத்திருந் தேன். விடுதியின் கண்ணாடிகளாலான கதவினைத் தள்ளித் திறந்துகொண்டு சற்று முன்னர் உள்ளே சென்றிருந்த ஓட்டோக் காரன், எந்த நேரத்திலும் வந்து என்னை அழைத்துச் செல்வான். இவ்வாறான காரியங்களுக்கு ஓட்டோக்காரர்களை அணுகலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரியவந்தது. அன்றைக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஸ்நேகிதி சத்யராஜ்குமார் இதோ இவன்தான் அனிதாவின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியவன். அந்த அமெரிக்கப் பெருநகரத்தில் திடுமென அவள் எதிரில் நிற்கிறான். அவனுடைய அரைக்கை சட்டைக்குக் கீழே மணிக்கட்டில் இன்னமும் அந்தத் தழும்பு ஒரு கருப்புக் கோடாய் அப்படியே இருக்கிறது. நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள். இது அனிதாவின் சுபாவம். அவளுக்குக் கோபப்படத் தெரியாது. இந்தச் சுபாவம்தான் அவள் வாழ்க்கையைக் கலைத்துப் போட்டது. “டேய் ரஞ்சித்? அமெரிக்காவிலா இருக்கே? எப்படா வந்தே?” சான் …
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்பரிசம் - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: செந்தில் சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அவசரமாய்த் தட்டி எழுப்பிவிட்டதைப்போல, கண்களைச் சிவக்கச் சிவக்கத் தேய்த்துக்கொண்டே எழுந்த சூரியன் ஏரிக்கரையின் பின்னிருந்து மசமசவென முளைக்கத் தொடங்கியிருந்தான். சுற்றிலும் பரவியிருந்த சாயம்போன இருட்டிலும் உடலின் மீது போர்த்தியிருந்த வெள்ளை வேட்டி மட்டும் பளிச்செனத் தெரிந்தது. சுமைதாங்கிக் கல்லைப் பக்கவாட்டில் தாங்கியிருந்த புங்கமரம், வழக்கத்துக்கு மாறாக தன் நீண்ட கிளைகளை விறைப்பாக நீட்டிக்கொண்டு நின்ற…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஸ்பெயின் - 01 இளங்கோ-டிசே ஐரோப்பாவில் மூன்று நாடுகளுக்குக் கட்டாயம் போகவேண்டும் என்ற ஒரு கனவு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. பிரான்ஸும், இத்தாலியும், ஸ்பெயினும் என்னை எப்போதும், அவற்றின் கலை இலக்கியங்களினூடு ஈர்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள். கூடுதலாக போர்த்துக்கல்லையும் சேர்க்கலாம். சென்ற வருடம் இத்தாலியையும், அதற்கு முதல்வருடம் பிரான்ஸையும் பார்த்திருந்தேன். இந்த வருடம் ஸ்பெயினுக்கானது. La Sagarida Familla (Spain) ஸ்பெயினை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டடக்கலையாக La Sagarida Familla இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1880களில் கட்டத் தொடங்கிய இந்தத் தேவாலயமானது இன்னமும் நிறைவு செய்யப்படாது இப்போதும் கட்டப்பட்டு…
-
- 4 replies
- 1k views
-
-
ஸ்மைலி – அனங்கன் கண்களை பத்துநிமிடத்திற்கு மேல் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. எண்ணங்கள் அணுத்துகள்கள் என ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறுகின்றன. கண்களைத் திறந்தவுடன் ஏற்படும் ஆறுதல் சிறுதுநேரத்தில் நெடுஞ்சாலைகளில் வரிசையாக வரும் வாகனம் போன்ற எண்ணங்களால் கலைந்துவிடுகின்றது. தான் அந்த நெடுஞ்சாலையைக் கடக்க நினைப்பவள் போல தொடர் அர்த்தமற்ற எண்ண வரிசையை வெறித்துப்பார்த்துகொண்டிருந்தாள். எழுந்து மொபைலை எடுத்து செயலிக்குள் சென்று அவர்கள் உரையாடல்களை படிக்க ஆரம்பித்தாள். தன் முகங்களாகவும் அவன் முகங்களாகவும் மாறிப்போன இளிப்பான்களை பார்த்துகொண்டு செல்வது காலவெளியில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. தான் பேசின சொற்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு, அதே…
-
- 0 replies
- 434 views
-
-
``சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். ``தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான். சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் சமாளித்தான். அப்போதெல்லாம் சிங்களம் தெரியாது எனச் சொல்லும் மனநிலை அவனிடத்தில் இருக்கவில்லை. ``தெரியாது..? எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ இலக்கணங்கள் மீறிய போதும் கேள்வித் தொனியிலான அவர…
-
- 12 replies
- 3.5k views
-
-
ஸ்ரீவாணி மேடம் பொத்தூரி விஜயலட்சுமி மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. “அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. “சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ …
-
-
- 1 reply
- 831 views
- 1 follower
-
-
-
ஸ்லீப்பர் செல்' தீபாவளி! விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு... ''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, எப்படா விடியும்ன்னு தூங்காம காத்திருந்து, விடிஞ்சதும் ஓடிப் போய் ஆதரவு கொடுத்து, தலைவர் தர்றத வாங்கிக்கினு வரும்...'' என்று அர்ச்சித்தவள், ''சட்டுபுட்டுன்னு தலைக்கு ஊத்துகினு, தீபாவளி பலகாரம் சாப்பிட்டுட்டு, ரிசார்ட்டுக்கு ஓடப்பார…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஹங்கிப்* பெண் ஹெலன் ஃபோர்ப்ஸ் தமிழில் : கொற்றவை சமயலறை கடிகாரத்தில் ஐந்து மணி அடித்தது. சிமெண்ட் தரை வேயப்பட்ட சலவையறையில், களைப்பாய் இருந்த அந்த சலவைக்காரப் பெண் தன் தோள்களை வளைத்து, உடம்பை முறுக்கி எழுந்தாள், துணிகள் மீது தண்ணீர் தெளித்து வழக்கமான தனது பணியோடு அன்றைய நாளையும் தொடங்கினாள். கடைசி ஈரத் துணியை மடித்து துணிக் கூடைக்குள் வைத்து அடுக்கி முடித்ததும் ஒரு அகலமான துருக்கித் துண்டால் கூடையை மூடி மேஜையின் கீழ் தள்ளிவிட்டு, மேல்மாடிக்குச் சென்றாள். அன்றைய தினக் கூலியைக் கொடுக்க திருமதி. அட்வுட் காத்திருந்தார்; சிறந்த வீட்டுப் பராமரிப்பாளரான அவர் தான் நியமித்த ஒவ்வொரு பணியாளருக்கும் தன் கையால் கூலி கொடுப்பதை தன் கடமையாகக் கொண்டிருந…
-
- 2 replies
- 2.7k views
-
-
ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைSUNDER SHEKHAR அது 1980 ஆம் ஆண்டின்…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://sinnakuddy1.b...-post_8635.html
-
- 1 reply
- 689 views
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=2DAVIb9yzO0 ஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04.10 அன்று ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர் . சிறீக்குமார் நெறிப்படுத்த நிகழ்ச்சிகள் நடந்தேறியது .காட்லி பழைய மாணவர் குடும்பத்தினர் அரங்கம் நிறைந்த பார்வையாளராக காணப்பட்டனர் . இதில் குறிப்பிட வேண்டி ய அம்சம் எதுவெனில் காட்லி பழைய மாணவர்களின் புதிய தலை முறையினர் அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களின் பாரட்டையும் கரகோசத்தையும் பெற்றது. நானும் இந்த கல்லூரியில் மழைக்கு ஒதுங்கி இருக்கிறேன் ..அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பகுதியினரை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணாலாம்
-
- 22 replies
- 3.7k views
-
-
லண்டனில் ஹாட்லி கல்லூரிபழைய மாணவர்களின் வருடா வருடம் நடைபெறுகின்ற இராப்போசன விருந்தும் வருடாந்த கூட்டமும் போன சனிக்கிழமை நடைபெற்றது. நாமள் இந்த இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு போவதில்லை என்றாலும் இம்முறைதான் முதல் முறை போய் வந்தேன் ..போய் வந்ததுக்கு முக்கிய காரணம் ............. http://sinnakuddy.blogspot.com/2008/11/blog-post.html
-
- 23 replies
- 3.9k views
-
-
ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது. எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
1. ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்! ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றவன். ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று முடிவெடுத்தவன். முதல் உலகப்போர் முடிந்ததும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். உழைக்காமலும், யுத்தத்தில் பங்கேற்காமலும் உட்கார்ந்து தின்று கொழுத்த கூட்டம் என்று யூதர்களை நினைத்தான் ஹிட்லர். அப்போதைய ஜெர்மனி அரசை கைப்பற்றினால் சிதறிய பழைய பிரஷ்யா தேசத்தை அமைத்து, அகண்ட ஜெர்மனியை உருவாக்க முடியும் என்று ஹிட்லர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தான். ஜெர்மன் தேசிய வெறியை ஊட்டுவதில் அவனுடைய பேச்சாற்றலும், அவனைப் பற்றிய போலி பிம்பமும் உதவியாக இருந்தது. அவன…
-
- 3 replies
- 1.6k views
-
-
[size=3] [size=5]ஹெர்டா முல்லருக்கு 2009-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நொபல் பரிசு வழங்கப்பட்டது முற்றிலும் ‘அசாதாரணமான’ ஒரு நிகழ்வு தான். கடந்த நூறு ஆண்டுகளில் நொபல் பரிசு பெறும் 12-ஆவது பெண் அவர் என்பது ஒரு காரணம். அது மட்டுமல்லாமல் சர்வாதிகார அரசுக்கு எதிராக இயங்கிய எழுத்தாளர்களில் சோல்ஷெனீட்ஸனுக்கு (Solzhenitsyn) அடுத்து இந்த விருதை பெறும் எழுத்தாளர் அவர். முல்லர் ரோமனீயாவின் கம்யூனிச சர்வாதிகாரி நிகொலாய் சௌஷெஸ்குவின் (Nicolae Ceausescu) ஆட்சியில் தனிப்பட்ட முறையில் மிகுந்த துன்பங்களை அனுபவித்து, தொடர்ச்சியான அவமானத்துக்கு ஆளாகி, ஒரு கட்டத்தில் தன் உயிருக்குப் பயந்து தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறினார். அவரது எழுத்துக்களில் இந்த அலைக்கழிப்பை, அதன் வலியை தொடர்ந்து பத…
-
- 9 replies
- 1.2k views
-
-
ஹே ராம் காலபைரவன் பேருந்தில் உடன் பயணிக்கும் ஒருவர் தன்னை, “அயோத்தி ராமர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. உடல் முழுவதும் மெல்ல நடுக்கம் பரவியது. அவர் கூறியதிலிருந்து சுலபத்தில் மீள முடியவில்லை. “நீங்கள் கூறுவது உண்மைதானா?” எனும்படி அவரை ஆழ்ந்து பார்த்தேன். தனது காவியேறிய பற்களைக் காட்டிச் சிரித்து, செல்லமாகக் கிள்ளிய போது தான் சுயநினைவுக்கு மீண்டேன். மட்டமான மதுவை அவர் அருந்தி இருக்கக் கூடும் என்பதை அவரிடமிருந்து வந்த நாற்றத்தை வைத்து ஓரளவு யூகிக்க முடிந்தது. பேருந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கோடைகால மாதலால் ஒரே உஷ்ணம். வேர்த்துக் கொட்டியது. உறவினர்களைப் பார்ப்பதன் பொருட்டு கு…
-
- 3 replies
- 2k views
-
-
ஹேமா அக்கா -இளங்கோ 'ஐயோ, ஹேமா அக்கா கிணத்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று கத்திக்கொண்டு நாங்கள் கிணற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். பின்னேரம் நான்கு மணியிருக்கும். வெயிலில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளை குதிப்பதைப் பார்த்தோம். மலைகளும் நதிகளுமில்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி. இந்தியன் ஆமி வந்தகாலத்தில் கூட, இப்படி அள்ள அள்ளக்குறையாத நல்ல தண்ணியும், தாரளமாய் லக்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன சனியனுக்கு நீங்கள் சண்டை பிடிக்கிறியள் என்றொரு ஆமிக்காரன் சனத்தை செக்பொயின்றில் வைத்து பரிசோதித்துப் பார்க்கும்போது கேட்டதாயும் ஒரு கதையிருந்த…
-
- 5 replies
- 4.5k views
-