கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
பளு வீரன் – தீபச்செல்வன் 01 நகரில் மூண்ட சமர் நின்ற வேளையில் கடிகாரமும் நின்றுபோயிருக்க வேண்டும். அதன் முட்கள் பன்னிரண்டைக் காட்டின. தூரத்தில் நடந்து வரும் சத்தியனைப் பார்த்தது நேரத்தின் எண்கள் உடைந்த கடிகாரம். காலம் உடைந்து போனதின் சித்திரமாக உருக்குலைந்த அதன் முட்கள் நெளிந்தழைப்பதைப் போலிருந்தன அவனுக்கு. எறிகணைகள் நுழைந்தும் துப்பாக்கிச் சன்னங்கள் காயமிட்டும் இருந்த மணிக்கூண்டுக் கோபுரத்தின் சுவர்களில் யாழ் நகரின் வெளுத்த முகம் தெரிந்தது. கோபுரத்திற்கு அண்மையாய் நடந்தவன், நிமிர்ந்து அதன் சுவர்களைப் பார்த்தான். போரின் தழும்புகள் அதன் உடல் முழுதும் சித்திரமாயிருந்தன. விதவிதமான முகங்கள். அத்தனையிலும் காயங்களும் தழும்புகளும். பெயர்ந்தலையும் சனங்களும் பதுங்கியிருக்கும் போ…
-
- 0 replies
- 383 views
-
-
கிஷோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், ஆளாளுக்கு பிலுபிலு என்று பிடித்துக் கொண்டனர். “டேய், அங்கேயே நில்லு, குழாய் பக்கத்துல ஹேண்ட் வாஷ் வெச்சிருக்கேன், மொதல்ல அதைத் தடவி கைகளை நல்லாத் தேய்ச்சிக் கழுவிட்டு அப்பறம் உள்ள வா” என்றார் அம்மா. “கைகள் மட்டும் இல்லப்பா , கால்களையும் நல்லா கழுவிகிட்டு வா” என்றார் அப்பா. “உள்ள வந்ததும் மொதல்ல நீ போட்டுட்டு இருக்கற எல்லா துணிகளையும் சோப் தண்ணியில ஊறவை” என்றாள் அக்கா. ‘என்ன கொடுமை கிஷோரு இது’ என்று தனக்குத் தானே கூறி தலையில் அடித்துக் கொண்டே, “டேய், உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்றது தானே?” என்று தம்பியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர். “யார் என்ன சொன்னாலும்…
-
- 0 replies
- 372 views
-
-
நகர்வலம் காலை 5:30 மணிக்கெல்லாம் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பறக்கும் கூட்டத்தைக் கடக்கையில் , வண்டியை நிறுத்தி ஒவ்வொருவரிடமும் , “இந்த நேரத்துலயும் இவ்ளோ அவசரமா எங்கதான் போறீங்க?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. கதிரவனது உறக்கம் கலைவதற்கு முன்னான இருளில் அப்பெருநகரை ரசித்தவாறே தியோசஃபிகல் சொசைட்டியை அடைந்தோம். மரங்களும் செடிகொடிகளுமாய் மலர்களின் சுகந்தத்தைக் காற்றில் குடிகொள்ளச் செய்த அந்த அழகிய வனம் மனதிற்கு அமைதியையும் முற்றிலும் வேறோர் உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வையும் தந்தது. மனோகரன் மாமா நடைப்பயிற்சியைத் துவக்க, அவர்களுக்கு ஈடு கொடுக்க அண்ணன், மதினி, நான் – மூவரும் ஓட வேண்டியிருந்தது. 58 வயதின் நடைவேகத்தை 26 வயதின் ஓட்டம் கூட…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
வைகாசி பிறந்தவுடன் தலைக்கச்சான் தொடங்கிவிடும். தென்மேற்குத் திசையிலிருந்து சீறிக்கொண்டுவரும். சித்திரை வெயில் புழுக்கத்தில் கிடந்தவர்களுக்கு சீதளக்காற்று சுகமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த வாரமே வெம்மை கூடிவிடும். மரங்களைத் தலைவிரித்தாட்டிவிடும். பூவையும் பிஞ்சுகளையும் விழுத்திவிட்டு வாழை இலைகளை நார் நாராகக் கிழித்துவிடும். கானல் பயிர்கள் விளைந்து முற்றி விழுவதும் இந்த நாட்களில்தான். வட்ட விதானையின் மனைவி, அம்பலவி மாமரத்திற்கு கீழ் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இலைகொள்ளாமல் பிடித்திருந்த பிஞ்சுக் காய்களை புரட்டி எடுத்து விழுத்திவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் விழுந்து, மண்ணில் புரண்டு கிடந்ததை நெஞ்சு பதறப் பார்த்தாள்……. பனையாற்றுக்கு மேலே நாணல்…
-
-
- 1 reply
- 355 views
- 1 follower
-
-
"சாதகப் பறவைகள்" அத்தியடி, யாழில் எங்கள் வீட்டுக்கு அருகில் இரு வயது போன தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இருவரும் மாலை நேரத்தில் படலைக்கு அருகில் வீற்றிருந்து வருவோரையும் போவோரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் இருவரும், வாயில் பற்கள் இல்லாத, பொக்கு வாய் என்பதால், பொதுவாக கஞ்சி குடிப்பதே தமது உணவாக கொண்டும் இருந்தார்கள். எனக்கு அவர்களை காணும் போதெல்லாம் 'சாதகப் பறவைகள்' ஞாபகம் தான் வரும். ஏன் என்றால் புராண, இதிகாசங்களில் இந்தப் பறவையை மழை நீரை மட்டுமே அருந்தும் என்றும் [இங்கு கஞ்சி நீர்] மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் [இங்கு மக்களை பார்த்து] என்றும் வர்ணிப்பதை பார்த்து இருக்கிறேன். …
-
- 0 replies
- 354 views
-
-
காவ்யாவின் சிவப்பு நிற ஷூக்கள் தண்டு மாரியம்மன் கோயில். ஆடி வெள்ளிக் கிழமை. பெண்கள் கூட்டம் எழுபது சதவீதமும், ஆண்கள் கூட்டம் முப்பது சதவீதமும் கோயில் முழுக்க பரவியிருந்தார்கள். கோபுர உச்சியில் இருந்த ஒலிப்பெருக்கி கந்தர் சஷ்டியைப் பாடிக் கொண்டிருக்க நான் உள்ளே நுழைந்தேன். என்னுடைய தேய்ந்து போன ஹவாய் செருப்புகளை ‘பாதணி காப்பகம்’ என்று போர்டு எழுதி தொங்க விட்டிருந்த செருப்பு ஸ்டாலில் விட்டு விட்டு தகர டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே போகத் திரும்பினேன். அப்போது தான் அது என் கண்ணில் பட்டது. குழந்தைகள் அணியும் புத்தம் புதிய சிவப்பு வண்ண ஷூக்கள். செருப்பு ஸ்டாலின் மர ஸ்டாண்டில் வைக்கப்பட்ட…
-
- 0 replies
- 354 views
-
-
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார் அந்நியன் மெல்லிய பனித்தூவிக்கொண்டிருக்க ஓர் உருவம் நடந்து போய்க்கொண்டிருக்கின்றது. மனிதர்களின் மனங்களுக்குப் பலவர்ணங்கள் இருப்பதுபோல, பனியிற்கும் பல உருமாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது பெய்யும் பனி, பூக்கள் சொரிவதைப் போன்று மென்மையானது. பனிக்காலம் தாண்டி வசந்தத்தில் பிறழ்வாய் பொழிகின்றதெனினும் இதற்கென்று ஓர் அழகுண்டு. உடலை உறையச் செய்யும் காற்றில்லாது, நிலத்தை முத்தமிடும் எந்தப் பனியும் எவரையும் அலுக்கச் செய்வதுமில்லை. இது காலையா அல்லது மாலையா என்ற தடுமாற்றங்களைத் தருகின்ற வானம், கரும்சாம்பல் போர்வையைப் போர்த்திய ஒரு பொழுது. அந்நியன் தேர்ந்தெடுத்த இந்த இடம், பெரும் கூட்டத்திடையே தனித்து நிற்கும் ஒரு அமைதியான பெண…
-
- 0 replies
- 354 views
-
-
ஒரு நிமிடக் கதை: உண(ர்)வு ‘‘கெஸ்ட்டுக்கு ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் வாங்கி வைக்கச் சொல்லிட்டு, இப்ப ஏதோ அவசர வேலை.. வரமுடியலைன்னு மேனேஜர் சொல்லிட்டார்டி. இப்ப என்ன பண்றது சுமி..? ’’ - ரம்யா அங்கலாய்க்க... ‘‘அடடா, வழக்கமா வீட்ல இருந்து அடைச் சுக் கொண்டு வந்ததை நாமளும் இப்பத்தானே கொட்டிக்கிட்டோம்! ச்சே...வடை போச்சே..!’’ என வடிவேலு குரலில் புலம்பிய சுமி, ‘‘ஹூம்... நம்ம கவுரிக்குதான் கொடுப்பினை! கூப்பிட்டு கொடுத்திடு’’ என்றாள். உடனே கவுரியை அழைத்து விஷயத்தைச் சொன்னாள் ரம்யா. ‘‘அடடா, இப்பதான் சாப்பிட்டேன்மா! வேணா நம்ம வாட்ச்மேனுக்கு கொடுத்திடலாம்மா’’ என கவுரி சொல்ல... ‘‘சர…
-
- 0 replies
- 351 views
-
-
ஓரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்ல…
-
-
- 1 reply
- 349 views
-
-
சிறுகதை சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 25 செப்டம்பர் 2025 * ஓவியம் - AI கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது. “Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்ட…
-
-
- 2 replies
- 346 views
- 1 follower
-
-
"அன்பின் வெகுமதி" இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில் 'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் …
-
- 0 replies
- 329 views
-
-
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் - - இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?' சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி. 'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?' "இன்றைக்குத்தான் விடிய …
-
- 1 reply
- 327 views
-
-
பொப்பி என்பது புனைபெயர் ஷோபாசக்தி பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி. அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டு…
-
-
- 1 reply
- 327 views
-
-
"அறம் பேசுமா?" அறம் பேசுமா? என்று என்னை கேட்டால், கட்டாயம் இல்லை என்று தான் சொல்வேன். கர்ணன் படம் பார்த்து விட்டு, அரங்கிற்கு வெளியே வந்த பொழுது என் மனம் அப்படித்தான் இருந்தது. நான் அப்பொழுது பாடசாலை இளம் மாணவன். விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் என கருதப்படும் கிருஷ்ணர், நிராயுதபாணியாக நிலத்தில் இறங்கி, மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கும் கர்ணனை கொல்ல. யுத்த தர்மத்திற்கு எதிராக, அருஜுனனை அம்பு விட தூண்டுகிறான். ஆனால் அவன் சாகவில்லை. எனவே, பொய் வேடம் போட்டு, அம்பு துளைத்த கர்ணனை ஏமாற்றி புண்ணியங்களை (ஆயுள் முழுக்க தானம் செய்ததால் பெற்ற புண்ணியம் முழுவதையும்) தானமாக கேட்கிறான். அவனோ அந்த நிலையிலும் கொடுக்கிறான். அதன் பின் கர்ணன் இ…
-
-
- 2 replies
- 324 views
-
-
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைத்தொகுப்பு: சமூக நீதி புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் வெள்ளை நிறத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்க விரும்பியதால் அருகே சென்று வாசித்து…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். “தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 14 டிசம்பர் 2025 இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன். சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம்…
-
-
- 1 reply
- 270 views
-
-
வீழ்ச்சி லஷ்மி சரவணகுமார் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தப் பெண் ஒரு வாரமாகத் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கவனித்த மூர்த்தி பதற்றமடையத் துவங்கினான். திருச்சி நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவன் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடையில் ஒதுங்கியபோதுதான் முதல் தடவையாக எதிர்ப்பட்டாள். அவளை அடையாளம் தெரியாததால் அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்தநாள் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் பிஷப் ஹீபர் காலேஜ் சிக்னலில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த இடைவெளியில் தனக்குப் பின்னால் பழைய இரு சக்கரவாகனத்தில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தான். கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொலை ஆயுதம் ஒன்றின் முனையிலிருக்கும் கூர்மைமிக்கப் பார்வையது.…
-
-
- 2 replies
- 266 views
-
-
சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும்…
-
- 0 replies
- 258 views
-
-
கெய்ஷா - ஜெயமோகன் அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒருபெயர்போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் ச…
-
- 1 reply
- 258 views
-
-
இன்னா செய்தாரை ஒருத்தல்! ‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான். “நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-