Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. உதிரம் - அனோஜன் பாலகிருஷ்ணன் *** “ஹாய் ஹரி, எல்லாம் நன்றாகச் செல்கிறதா?” “இப்போதைக்கு ஒன்றும் சிக்கலில்லை” என்றேன். கை குலுக்கிவிட்டு அவர் புன்னகைக்குப் புன்னகைத்தேன். முப்பது வயதுக்குள் இருக்கக்கூடிய ஒடிசலான உடல் தோற்றம் கொண்ட பெண்மணி. கோதுமை நிறம் கொண்ட தேகத்தில் மணிக்கட்டு வரை நீள்அங்கி அணிந்திருக்க கைகள் மட்டும் வெளித்தெரிந்தன. அவர் சாய்ந்து பார்த்த விதத்தில் ஒரு மனநல மருத்துவருக்கு உரிய தொழில் நேர்த்தியிருந்தது. பொன்னிறமான முடியை வாரிக் கொண்டையாக முடிந்திருந்தார். வெண்ணிற சட்டகங்கள் இடப்பட்ட மூக்குக்கண்ணாடி விளிம்பில் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து துடித்தது. அந்த அறை நாலடிக்கு குறைவான அகலத்தில் இருந்தது. பழுப்பு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்ட சுவரில், கடற்கர…

    • 2 replies
    • 918 views
  2. நாய்க்கும் நமக்குமான பிணைப்பிற்கும் ஒரு செவிவழி தொன்மம் உண்டு. சிறு வயதின் ஒரு தூக்க வேளையில், என் உம்மா வழியாக எனக்கு கடத்தப்பட்ட செய்தியை உங்களுக்கும் சொல்கின்றேன். முதல் மனிதர் ஆதம் நபியை இறைவன் மண்ணிலிருந்து படைக்கும் சமயத்தில், மலக்குகளில் முதன்மையானவனாக இருந்த இப்லீஸ் அது குறித்து பொறாமைப்பட்டானாம். நெருப்பால் படைக்கப்பட்ட தன்னை விட மண்ணால் படைக்கப்படும் இந்த உயிரினம் மிஞ்சி விடுமே என்ற எரியும் பொறாமையில் ஆதமை நோக்கி உமிழ்ந்திருக்கின்றான். அந்த எச்சில் அவரின் வயிற்றில் போய் விழ, இறைவன் அதை கிள்ளியெறிந்துவிட்டானாம். கிள்ளப்பட்ட இடம் மனிதர்கள் அனைவருக்கும் தொப்புளாகிவிட்டது. கிள்ளியெறியப்பட்ட எச்சிலானது உலகின் முதல் நாயாக பிறப்பெடுத்ததாம். எனவே, நாய் நமக்கு சா…

  3. மீள் வருகை வெகுகாலம் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமாவு மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகு… கண்ணுக்கெட்டாத் தொலைவில் பிரதான வீதியின் எல்லை. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுக்குப் பின்னால் கோபத்தோடு எழுந்து வரும் புழுதி மேகம். அவன் தொலைவில் செல்லச் செல்ல புழுதி மண்டலமும் படிப்படியாக அடங்கிப் போனது என்றாலும், புகை போன்ற மென்மேகங்களால் வெற்று ஆகாயம் மூடப்பட்டிருந்தது. புழுதியைக் குறித்தோ, தான் பயணித்துக் கொண்டிருக்கும் பூமியைக் குறித்தோ எவ்வித உணர்வுமற்று அவன் முன்னே நடந்தான். பெருந்தெரு அவனுக்கெதிராக எழுந்து வருமொரு எதிரியைப் போன்றிருந்தது. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட எதையேனும் காணுவதைக…

    • 1 reply
    • 1.3k views
  4. பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன் ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.” “ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆ…

    • 1 reply
    • 1.9k views
  5. உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய் மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி... | பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 1... (முதல் பாகம்) அத்தியாயம் – 1 விண்மீன்கள் கூரிய குளிரொளியுடன் இன்னும் சுடர்ந்து கொண்டிருந்தன. எனினும் கீழ்த்திசையில் வானம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மரங்கள் இருளிலிருந்து சிறிது சிறிதாகப் புலப்படலாயின. திடீரென அவற்றின் முடிகள் மீது பலத்த குளிர் காற்று வீசியடித்தது. உடனேயே காடு உயிர்த்தெழுந்து முழுக்குரலுடன் கணீரென அரவமிட்டது. தணிந்த சீழ்க்கை ஒலியால் ஒன்றையொன்று கூவி அழைத்தன. நூறாண்டுப் பைன் மரங்கள், பனி அ…

  6. சாத்தானின் கால்கள். - சாதனா தேவனின் முழுப் பெயர் தேவகாந்தன். என்னைக் காட்டிலும் பதினான்கு வருடங்கள் இளையவனான அவனை நான் ஏசு என்ற பெயரிலேயே அழைப்பதுண்டு. நானொரு எழுத்தாளன் என்பதாலும் என்னிடமிருக்கும் புத்தகங்களை இரவல் வாங்கிச் சென்று படிப்பதற்காகவும் வாரத்தில் மூன்று நாட்களாவது என்னைச் சந்திக்க அவன் வருவதுண்டு. ஏசு எப்போதெல்லாம் என் வீட்டுக்கு வருகிறானோ அப்போதெல்லாம் அவன் கையில் ஒரு திராட்சை ரசப் போத்தலிருக்கும். நாமிருவரும் அதை அருந்தியபடியே மணிக்கணக்காக இலக்கியம் பேசுவோம். நான் மௌனமாக ஏசுவையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய உதடுகள் வழக்கத்துக்கு மாறாக இறுகியிருந்தன. உன்னிப்பாக அவதானித்தபோது அவன் உதடுகள் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதையும் …

  7. பழனி மலை பூக்காரி | சிறுகதை | பொன் குலேந்திரன். ஆறு படைகளில் மூன்றாம் படைவீடான பழனி மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரம் உள்ள மலையை 690 படிகள் எறி பக்தர்கள் கடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. அந்த மலையில் பல பூக்கடைகள் இருந்தாலும் பூக்காரி வள்ளியம்மையிடம் பூ வாங்க வரும் பக்தர்கள் அனேகர். அதுக்கு பல காரணங்கள் இருந்தன. அவைகளில் முக்கியம் அவளின்முத்து சிரிப்பழகு. இரண்டாவது தேன் சொட்டும் பேச்சழகு. மூன்றாவது கண் சிமிட்டும் போது அவளின் பார்வையின் அழகு, நான்காவது அவளின் இடையழகு, ஐந்தாவது அவள் மாலை கட்டும் அவளின் விரல்களின் அசைவின் அழகு. ஆறாவது அவளின் நீண்ட கருங் கூந்தல் அ…

  8. ஓடாதே ரிஷபன் ‘வாச்சா மடத்துக்கு தென்கோடில வீடு. அங்கே வந்து சுந்தர்னு கேட்டா யாரும் சொல்வாங்க. மறக்காம வந்துரு’ என் இலையில் இன்னொரு மால்பூவாவை வைத்து விட்டு இந்த வார்த்தைகளைக் கிசுகிசுத்து விட்டு மோர் வாளியுடன் ஓடினான். ஹோசூரில் ஒரு திருமணம். முதல் தடவை நான் ஹோசூர் மண்ணை மிதிக்கிறேன். முகநூலில் நட்பாகி இன்று தன்னுடைய பெண்ணுக்குத் திருமணம் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம்.. இப்போதே மணி ஐந்தரை. பஸ் நிலையம் அருகில் ரூம் போட்டிருந்தார். நாலாவது தளத்தில் ரூம். தகவல் சொன்னதும் நண்பர் நேராகவே வந்து விட்டார். “காபி குடிச்சீங்களா” “ஆச்சு. ரூம் சர்வீஸ். இப்போதான் காலி ப்ளாஸ்க்கும் பணமும் வாங்கிட்டு போறார்” “ப்ச்.. பண…

  9. சப்பாத்து – குமார் மூர்த்தி – என் துரதிர்ஷ்டத்தை மறுபடியும் நிரூபிக்கும் சம்பவமாகிவிட்டிருந்தது அது. பலமுறை யோசித்திருந்தேன். மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்தச் சப்பாத்தை வாங்குவதற்கு நான் பலவழிகளில் கரிசனம் எடுத்திருந்தேன். உண்மையில் இது ஒரு சிறிய விடயம் என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் எனக்கு இது ஒரு பெரிய விடயமாகவே எப்போதும் இருந்து கொண்டிருக்கும். சப்பாத்தோ, செருப்போ மனதுக்குப் பிடித்த மாதிரி பொருந்தி வருவது எனக்கு மிகவும் அபூர்வம். அப்படிப் பொருந்தி வந்தாலும் என்னை அது சீக்கிரமே கழட்டிவிட்டுவிடும். இருந்தும் நீண்ட நாட்களாகவே எனக்…

  10. காலரா காலத்துக் காதல்: ஒரு கரோனா கால வாசிப்பு! கரோனா காலகட்டத்தில் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் புத்தகம் படிக்க கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் பலரும் கொள்ளைநோய்கள் தொடர்பான நூல்கள், குறிப்பாக நாவல்கள் படிப்பதாகத் தெரிகிறது. இவற்றில் முன்னணி இடம் வகிப்பது ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்). இந்தக் கொள்ளைநோய் நாவல்கள் பெரும்பாலும் துயரகரமானவை. ஏற்கெனவே, கரோனாவின் கொடும் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமக்கு இத்தகைய நாவல்கள் மேலும் மன உளைச்சல் தரக்கூடும். கொள்ளைநோய் பின்னணியில் அமைந்த, ஆனால் வாசிப்பதற்கு சுகமான நாவல் என்றால் அது காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘காலரா காலத்துக் காதல்’ (லவ் இன் தி டைம் ஆஃப் காலரா) நாவலாகத்தான் இர…

  11. அனலுக்குமேல் - ஜெயமோகன் ஃப்ரேசரின் ஓவியம். [ 1 ] பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து உறைந்து இருண்டு கிடந்த கடலுக்கு அடியில் பூமி பிளந்தது. ஒரு கண் இமை திறந்து கொண்டதுபோல. அதிலிருந்து லாவா பெருகி எழுந்தது. மாபெரும் தீக்கோபுரம் என அது எழுந்து நின்றது. அதைசூழ்ந்து கடல் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. நீராவி எழுந்து அதன்மேல் வெள்ளிமுடி போல நின்றிருந்தது. பின்னர் குளிர்ந்த லாவாவே அந்த பிளவை மூடியது. அந்தக் கண் மூடிக்கொண்டு துயிலில் ஆழ்ந்தது. அந்த கொப்பளித்த லாவாவின்மேல் நீராவி மழையெனப் பொழிந்து கொண்டே இருந்தது. குளிர்ந்து குளிர்ந்து அது கரியமண்ணாகியது. அதை நாடி பறவைகள் வந்தன. அவை விதைகளையும் சிற்றுயிர்களையும் அங்கே பரப்பின. காடு எழுந்தது. பூச்சிகளும் பறவைக…

    • 1 reply
    • 2.1k views
  12. மலரின் மலரும் கதைகள் வரிசையில் 2 வது கதை. தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம் இது. பெற்றோரும், பேரர்களும் தொலைக்காட்சிகளின் முன்னே தொலைந்துவிட, செல்போன்களில் சிக்கிக்கொண்ட சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. இவ்வாறான நிலையில் புதியகதை சொல்லியாக வருகிறாள் மலர்.

    • 0 replies
    • 533 views
  13. தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம். சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. கொரோனாக் காலத்தில் முகிழ்விட்ட ஒரு புதிய முயற்சிதான் இது. கேட்டுச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கேட்கவும் செய்யுங்கள். உங்கள் ஊக்கத்தின் திறனில் மலர் அடுத்த கதையை வெகு சீக்கிரம் சொல்வாள்.... http://www.4tamilmedia.com/videos/youtube-corner/17878-2020-04-07-21-48-23

    • 1 reply
    • 566 views
  14. கிஷோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், ஆளாளுக்கு பிலுபிலு என்று பிடித்துக் கொண்டனர். “டேய், அங்கேயே நில்லு, குழாய் பக்கத்துல ஹேண்ட் வாஷ் வெச்சிருக்கேன், மொதல்ல அதைத் தடவி கைகளை நல்லாத் தேய்ச்சிக் கழுவிட்டு அப்பறம் உள்ள வா” என்றார் அம்மா. “கைகள் மட்டும் இல்லப்பா , கால்களையும் நல்லா கழுவிகிட்டு வா” என்றார் அப்பா. “உள்ள வந்ததும் மொதல்ல நீ போட்டுட்டு இருக்கற எல்லா துணிகளையும் சோப் தண்ணியில ஊறவை” என்றாள் அக்கா. ‘என்ன கொடுமை கிஷோரு இது’ என்று தனக்குத் தானே கூறி தலையில் அடித்துக் கொண்டே, “டேய், உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்றது தானே?” என்று தம்பியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர். “யார் என்ன சொன்னாலும்…

  15. திரு. முடுலிங்க April 30, 2006 ஷோபாசக்தி சென்ற புதன் கிழமை Le Monde பத்திரிகை இணைப்பாக ஆப்பிரிக்க இலக்கியச்சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த இலக்கியச்சிறப்பிதழின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்த ‘Monsier Mudulinka’ என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி எழுதியிருந்தார் ஹெளஸ மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதையை ஹீரன் வில்பன் பிரஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தக் கதையின் தலைப்புப்பாத்திரமாக வருபவர் ஒரு இலங்கையர் என்பதைக் கதையின் போக்கில் நான் அறிந்து கொண்டதும் மிதமிஞ்சிய ஆர்வத்துடன் கதை யைப் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடனேயே அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கதை எளிய பிரஞ்சு மொழியில் இருந்ததால் தமிழில் மொழிபெயர்ப…

  16. வேட்டு - ஜெயமோகன் எருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” என்றான் பழனியப்பன் ஒரு புதிய பிளாண்ட் திறந்திருந்தமையால் ரெமி மார்ட்டின் பதிமூன்றாம் லூயிஸ் ரேர் காஸ்கின் செலவு அவனுடையது. அவன் மெல்லிய ஏப…

    • 8 replies
    • 981 views
  17. தவளையும் இளவரசனும் - ஜெயமோகன் இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல் உலுக்கியது. ஏனென்றால் நான் அந்தத் தவளையை மணந்த இளவரசனாக என்னை கற்பனை செய்துகொண்டிருந்தேன். மியான்மாரின் மேய்க் ஆர்க்கிபெலகோவுக்கு மேலும் எண்பது கிலோமீட்டர் தொலைவில் தனியார் சுற்றுலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கௌங்கையின் என்னும் இந்தச் சிறிய தீவின் ஆடம்பரக் குடிலின் அறைக்கு வெளியே புலரிவெளிச்சம் கடல் அலைகளின் மேல் அற்புதமாக ததும்பிக்கொண்டிருக்க, சுவர்கள் ஒளியலைகளாக அசைய, திரைச்சீலைகள் மலரிதழ்கள்போல வண்ணம் பொலிந்து…

    • 1 reply
    • 611 views
  18. ஐந்தாவது மருந்து - ஜெயமோகன் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத் தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான். ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூடப் பார்த்தேன். ‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப வரவேண்டிய ஊர்தான்னு படுது ‘என்றேன். ‘தளவாய் கிராக்…

    • 1 reply
    • 715 views
  19. யாழ் சுமந்த சிறுவன் - தீபச்செல்வன். சன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள் வசித்திராத நகரில் தானியங்களுக்காய் அலைந்து தோற்றுப் போன இன்னும் சில புலுனிகள் சிறு கொப்புக்களில் வந்தமர்ந்தன. கிளிநொச்சியின் பேருந்து நிலையம் என்பது பெரிதாக கொப்புகள் இல்லாத ஒரு பாலைமரம்தான். அது காயம்பட்ட பறவையைப் போல நெளிந்து நின்றது. அதன் சிறு நிழலில் பேருந்துகள் வந்து தரிப்பதுவும் போவதுமாய் இருந்தன. தமிழீழப் பேருந்து நிலையத்தின் வெட்டி வீசப்பட்ட மஞ்சள் தகரங்களில் ஒரு பெட்டிக்கடை. மணிக்கூட்டையும் வழியையும் மாறி மாறிப் பார்க்கும் சத்தியனை கவனித்துக் கொண்டே தோள் துண்டினால் தண்ணீர் போத்தல்களை துடைத்துக் கொண்டிரு…

    • 3 replies
    • 1.6k views
  20. சற்றே நீண்ட கதை.. நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஞாயிறு காலை பத்து மணிக்கு கைபேசி சிணுங்கியது. அலாரம் என்று நினைத்து அணைத்து விட்டு திரும்பிப் படுத்தேன். மறுபடியும் அழைப்பு. "யா..ழு" "டேய்.. எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்" கணேசனின் குரல் பயங்கர டெசிபலில் கேட்டது. அவ்வளவுதான். தூக்கம் கலைந்து விட்டது. "டேய்.. வேணாம்டா" என்று சொல்ல முயற்சிப்பதற்குள் கணேசன் மறுபடி அலறினான். "ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" வைத்து விட்டான். போச்சு. ஒரு லீவு நாள் அவுட். அதை விடவும் கொடுமை அவனுடன் பெண் பார்க்கப் போவது. விஷம், துப்பாக்கி, தூக்குக் கயிறு, கணேசனுடன் பெண் பார்க்கப் போவது இதில் எது கொடுமை என்றால் கணேசன்! ஒவ்வொரு தரமும் என்னை ஏ…

  21. பாங்காங்கிலி ருந்து டெல்லி நோக்கி அந்த ஏர் இந்தியா விமானம் பறந்துகொண்டிருந்தது. அதன் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த அவனது கண்கள் கலங்கியிருந்தன. அவன் பாங்காங்கின் மிகப்பெரும் போதைப் பொருள் வியாபாரி. ஆனால் அவன் தாய்லாந்து நாட்டுக்காரன் அல்ல. இந்தியாவின் ஒரு பிரபலமான அரசியல் புள்ளியின் வாரிசு. சில மணி நேரங்களுக்கு முன்பு தொலைபேசியில் வந்த தகவல் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ``அவனுடைய தந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. பிழைப்பது கடினம்"என்ற செய்தி அவனை உலுக்கியது. தந்தை மீது அவனுக்கு அதீத பாசமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், அவன் தனது போதை மருந்து வியாபாரத்தில் இதுவரை சம்பாதித்த பணம் முழுக்க அவனுடைய தந்தையின் பொறுப்பில்தான்…

  22. கர்ப்பப்பை - அனோஜன் பாலகிருஷ்ணன் “இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன். “இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத் தன் சுட்டு விரலால் நீட்டித் தொட்டு கேட்டாள். அவளின் கைகளை தட்டிவிட்டேன். “சொல்லு” “ஓம்” என் கண்களை வெறித்துப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் விறுவிறுவென்று நடந்து சென்று தன் குளிரங்கியை அணிந்துகொண்டு புறப்பட்டாள். அவளைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான சமாதானத்தையும் என்னால் சொல்ல இயலவில்லை. …

  23. நாலு ஆக்கங்கள் படைத்த (?) பின் புத்தகம் வெளிவிடுவது, தமக்குத்தாமே அடைமொழி வைத்து அழைப்பது, முகனூலில் லைக்குகளுக்காக அலைவது, கோஷ்டி சண்டைகள் என்று இன்றைய இலக்கிய (?) கர்த்தாக்களின் போக்கு பற்றி நகைச்சுவையாக எழுதப்பட்ட இந்த சிறுகதையினை அண்மையில் வாசித்தேன்; பகிர்கின்றேன். - நிழலி ---------- ஆத்ம திருப்தி எஸ்.சங்கரநாராயணன் அவனுக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாது. அத்தனைக்கு விரும்பி புத்தகம் வாசித்தவனும் அல்ல. தவிரவும் பரமேஸ்வரனுக்குத் தமிழே தகராறு. தகராறுக்கு எந்த ர முதல், எந்த ற பிந்தி என்பதே தெரியாது. ஆங்கிலத்தில் அவனைப் படிக்க வைத்தார் அப்பா. வாழ்க்கையில் அவரைவிட அவன் ஒரு படியாவது முன்னேற வேண்டும், என்பதை லட்சியமாகக் கொண்ட அப்பா. அ…

  24. கொங்கை – ஜ.காவ்யா செல்போன் அலாரம் அடித்தது. எப்பொழுதும் ஒன்று இரண்டுதடவை ச்நூஸ் அழுத்திய பின்னே எழுந்திருக்கும் மீனுகுட்டி அன்றைக்கு உடனே எழுந்துவிட்டாள். எழுந்தவுடன் படபடப்பு கூடிகொண்டது. இதை இன்று செய்தே ஆக வேண்டுமா என்று யோசித்தாள். மேலும் யோசித்தால் செய்யாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் படுக்கையில் இருந்து எழுந்து கிளம்ப தொடங்கினாள். இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். காலையில் எழ எப்பொழுதும் தாமதமாகி அவசர அவசரமாக கிளம்பி ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்வது வழக்கம். காலையில் எதைப்பற்றியுமே யோசிக்க நேரமிருக்காது மீனுகுட்டிக்கு. மாறாக இன்று யோசிப்பதைத்தவிர எதுவுமே அவள் செய்யவில்லை. மெதுவாக சென்று சு…

    • 1 reply
    • 1.6k views
  25. தெய்வானை-சிறுகதை-கோமகன் February 8, 2020 நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.