கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
"சித்தப்பா பூங்கா" தர்ஷன் அருளானந்தன் சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும்.கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே. விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்க…
-
- 0 replies
- 999 views
-
-
கம்பமதயானை* ‘எத்தனையளவு உள்ளே போகிறேனோ அத்தனை பசுமை மலைகள்.’ டானடா சண்டூகா (ஜென் கவிதைகள்) – தமிழில்: ஷங்கரராமசுப்பிரமணியன் கண்ணுக்கெட்டிய உயரம் வரை மலையை இருள் சூழ்ந்திருந்தது. பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தைக் குடித்துக்கிறங்கிப்போயிருந்த மந்தமான இருள். வண்டாரி, பழையூ, செம்பட்டி, அத்திபட்டி ஊர்களிலிருந்து துணைக்கு வந்திருந்த ஆள்களுடன் செல்வராஜும் ஜோதியும் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். மஹாலிங்கத்தின் தரிசனத்துக்காகச் சாரை சாரையாக மக்கள் தாணிப்பாறை வழியாய் வந்துகொண்டிருந்தாலும் சாப்டூர் சுற்றின கிராமத்து மக்களுக்கு இன்னும் இதுதான் குறுக்குப் பாதை. தாணிப்பாறையிலிருந்து செல்வதைவிடவும் தூரம் குறைவுதான். ஆனால், ஏறி இறங்கக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
பெத்த அம்மா...வளர்த்த அம்மா... கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி பெற்ற குஷியுடன் மட்டையைச் சுழற்றியபடி வீட்டில் நுழைந்தான் கார்த்திக். சமையலறையில் எண்ணெய்யில் பொரியும் பூரியின் மணம் வாசலிலேயே வரவேற்றது. "ஹை... பூரி ...'' மட்டையை ஒரு பக்கம் வீசி எறிந்தான்... கை கால் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேஜையின் முன் உட்கார்ந்து கொண்டு தாளம் போட்டபடி கத்தினான்... " அம்மா டிபன்'' "மல்லிகா கார்த்திக் வந்துட்டான் பாரு.இந்தா அவனுக்கு கொண்டுபோய் கொடு''...ஒரு தட்டில் நாலைந்து பூரிகளை வைத்து குருமாவையும் ஊற்றி நீட்டினாள் வனஜா. "வேண்டாண்டியம்மா உன் பிள்ளைக்கு நீயே பரிமாறு. சொல்லிட்டேன்...'' "உனக்கும்தான…
-
- 1 reply
- 5.3k views
-
-
ஒளி வளர் விளக்கு - சிறுகதை காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம் அனு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இ…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஜான்ஸி மலையகம் வாசகத்திற்கு ஏற்பவே சூழவும் மலைகளைக் கொண்டு விளங்கியது. அதிலும் சிறப்பு என்னவென்றால் அம்மலைகள் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இன்ப மகிழ்ச்சியையும் அள்ளித்தெளிக்கும் பச்சைப்பசேல என்ற தேயிலைச் செடிகளால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டு இருந்ததுதான். இதனைத் தவிர மரக்கறித் தோட்டங்கள், மெய்சிலிக்கும் நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டங்கள் என பல வகைப் பண்புகளையும் சிறப்புக்களையும் கொண்ட பண்டாரவளையில் அம்பிட்டிய என்பது ஒரு சிறிய தோட்டக் கிராமம். அதில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அதிலும் பெண்கள் தான் பெரும்பான்மையாக இருந்தது. அவர்களின் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
தண்டனை! ''அந்தப் புள்ளைங்க ஏதாவது செய்துகிட்டா, நீங்கதான் பொறுப்பேத்துக்கணும்; என்னையெல்லாம் இதுல சம்பந்தப்படுத்தக் கூடாது...'' என்றார், கடுமையாக, தலைமை ஆசிரியை. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அது; அன்று மாதாந்திர தேர்வு, நடந்து கொண்டிருந்தது. யாஸ்மினுக்கு வகுப்பு இல்லை என்பதால், ஆசிரியர் ஓய்வு அறையில் உட்கார்ந்து, தன் குறிப்பேட்டில், எழுதிக் கொண்டிருந்தாள். அப்போது, உதவி தலைமை ஆசிரியையும், அறிவியல் ஆசிரியையும், யாஸ்மினை தேடி வந்தனர். 'இந்த அநியாயத்தக் கேளுங்க மிஸ்...' என்றபடி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தேவதையைத் தரிசித்த மனிதன் ஜீ.முருகன், ஓவியங்கள்: செந்தில் “அவரின் இறுதித் திரைப்படமாக ‘ரயில்’ இருந்திருக்கலாம்” என அவன் சொன்னான். இத்தகவல் எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி ஒரு படத்தைக் குறித்து அவருடைய பேட்டிகளிலோ, அவரோடு பணியாற்றிய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளிலோ, கட்டுரைகளிலோ, வேறு வகைகளிலோகூட, படித்ததாகவோ கேள்விப்பட்டதாகவோ ஞாபகம் இல்லை. ஜெர்மன் கலைஞரான இ.டி.எ.ஆஃமேனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘ஆஃப்மேனியானா’ என்ற படத்துக்குத் திரைக்கதை எழுதியும் அவரால் இயக்க முடியாமல் போனது தெரியும். ஆனால் இது? முழு அளவு இஞ்சித் தேநீர் நிரம்பிய கோப்பையை, காலி கோப்பை ஒன்றால் தாங்கிப் பிடித்துச் சுவைத்தபடி, அவன் அந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
புதுப் பெண்சாதி - அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... புதுப் பெண்சாதி கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்குத் தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும், வ…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஒருபிடி சோறு!…. இரசிகமணி கனக.செந்திநாதன். சிறப்புச் சிறுகதைகள் (10) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கனக.செந்திநாதன் எழுதிய ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை. இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்திருந்தனர். இப்…
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழ்த் துரோகி — பூ அரசு கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவனுக்கு வயது வட்டுக்குள்ளே போன பிறகும் கலியாணம் நடக்கவில்லை. எந்தப் பெட்டையும் அவனை ஏறெடுத்து பார்த்ததில்லை. "தும்பிக்கையான் துணை" திருமண சேவை நடத்தும் சுந்தரம் சித்தப்பா காட்டும் பெட்டைகளின் படங்களை இவனுக்கு பிடிக்கவில்லை. அவனின்ரை தாய் தான் எங்கடை பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி விடாமல் தொடர்ந்து பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள். சலரோகம், ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச் சொத்து. இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யா…
-
- 8 replies
- 2k views
-
-
ஐரோப்பா-1, அழியா ஊற்று - ஜெயமோகன் 2016 வரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய’ உலகங்கள். இன்றைய நாகரீகம் உருவாகத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் குடியேறி சமைத்துக்கொண்டவை. நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா. 2001 செப்டெம்பரில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றேன். முதல்வெளிநாடு என்பது எவருக்கும் எண்ண எண்ணக் கிளர்ச்சியூட்டும் நினைவு. இன்றும் நயாகராவும், மேப்பிள்காடும், டிம் ஹார்ட்டன் டீக்கடையில் அமர்ந்து பேசிய இலக்கியமும் நினைவில் இனிக்கின்றன. அதன்பின்னர் 2006 ல் சித்ரா ரமேஷ் முயற்சியால் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கும் சென்றேன். 2009 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு நோயல் நடேசன் அவர்களின் அழைப்பால் …
-
- 13 replies
- 5k views
-
-
நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…
-
- 0 replies
- 1.7k views
-
-
மாற்றமா ? தடுமாற்றமா? அ. முத்துலிங்கம் பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். “நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்” என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். ‘என்ன தான் என்று பார்ப்போமோ?’ என்று வந்திருந்தேன். குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பா…
-
- 0 replies
- 739 views
-
-
நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? பரிமளா டீச்சரின் மனது "திக்திக்' கென அடித்துக் கொண்டது. இன்று பள்ளிக்கூடத்தில் ரிசல்ட். தன்னிடம் ஒன்பதாவது படிக்கும் முத்துப்பிரியா பாஸ் பண்ணியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே இருந்தாள். கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் பரிமளாவிற்கு ஞாபகம் வந்து திகிலூட்டின. கடந்த மாதம் நடந்த ரிசல்ட் கமிட்டி கூட்டத்திலேயே முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்பிற்கு பாஸ் போடக் கூடாது என்று தலைமையாசிரியரிடம் சொல்லி இருந்தாள் பரிமளா. ""சார் முத்துப்பிரியாவுக்கு எழுதப் படிக்கக் கூட வரல சார், உருப்படியா ஒரு பாரா படிக்கத் தெரியாது சார். இவளை பத்தாம் வகுப்புக்கு பாஸ் போடறது நமக்குத் தா…
-
- 0 replies
- 1.1k views
-
-
எகேலுவின் கதை - சிறுகதை ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம். ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த ந…
-
- 0 replies
- 4.8k views
-
-
பதினோராவது பொருத்தம் இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம். ” ‘மகிள ரத்னா’ என்கிற பெயரில் ஒரு விருது இருப்பதும், அது சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சிறப்பான பெண்களைத் தேர்ந்தெடுத் துக் கொடுக்கப்படுகிறது என்கிற விஷயமும் இன்னிக்குக் காலையில்தான் எனக்குத் தெரியும். பொதுவாக, எனக்கு விருதுகளில் விருப்பம் இல்லை. இது எல்லாம் ஒரு நாள் சந்தோஷம்!” மூத்த நிருபர் ஒருவர் கேட்டார்… ”இந்தச் சின்ன வயதிலேயே சமூக சேவையில் இறங்கிட்டீங்க. அதுல சிறப்பா சேவை செஞ்ச த…
-
- 0 replies
- 1.1k views
-
-
சித்திரத்தையல் பிரிவு - சிறுகதை எஸ்.எஸ்.முருகராசு, ஓவியங்கள்: ஸ்யாம் பகல் ஷிஃப்ட் தொடங்கியது. இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது ஷிஃப்ட் ஆட்கள் யாரும் வரவில்லை. கண்ணாடி ஃபிரேம்களால் சூழப்பட்ட மெஷின் அறையை நோக்கி நடந்தேன். ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரவு ஷிஃப்ட் ஃபிரேமர், ஹெல்ப்பர்கள் காலை வணக்கம் வைத்தனர். சிரித்தபடி கை அசைத்துவிட்டு, கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு மெஷின் அறைக்குள் புகுந்தேன். ஜில்லென்று இருந்தது ஏசி. ''வாங்க பாஸு'' என்றான் தினகரன். நட்போடு தலை அசைத்துவிட்டு, என்ன டிசைன் ஓடுகிறது என்று பார்த்தேன். மஞ்சள் நிற ப…
-
- 0 replies
- 2.2k views
-
-
கௌரியின் சிநேகிதன் உடல் முழுவதும் வியர்வையில் ஊறித் திளைக்க, தன்னை கடந்துச் செல்லும் பேருந்துகளை எதையும் கவனியாதவனாய் பதற்றத்துடன் நின்றிருந்தான் நாராயணன். அவனது கால்கள் ஓரிடமென்றில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அலையோடியபடியே இருந்தன. கண்கள் தொலைவில் பேருந்து நிலையத்தின் மைய வாயிலில் நிலை கொண்டிருந்தது. தனது செல்பேசியை எடுத்து நேரத்தை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டான். கௌரி வருவதாக சொல்லியிருந்த நேரத்திற்கு இன்னும் கால்மணி நேரம் மீதமிருந்தது. நாராயணன் வகுப்பில் பயின்றவள்தான் கௌரி. வயதில் நாராயணனுக்கு இரண்டு ஆண்டுகள் மூத்தவள் என்றாலும் சிறுவயதில் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டவள் என்பதால் அவளும் நாராயணனின் வகுப்பில் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை ஆனந்த விகடன் 9.10.1988 இங்கிலாந்து. 1795-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் -ஆம்; அந்த மாதம் முழுவதுமே வேல்ஸ் இளவரசனின் மாளிகை விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. பல வண்ணக் கண்ணாடி விளக்குகளின் தகத்தகாய ஒளியில், தங்க இழை நிறைந்த பட்டுத் திரைகள் பளபளத்துக்கொண்டிருந்தன. தாழ்வாரங்கள், கைப்பிடிச் சுவர்கள் அனைத்திலும் நிறத்துக்கொன்றாக. மலர்க்கொத்துகள் அழகுகாட்டிக் கொண்டிருந்தன. வெண்பட்டு ஆடைகள் அணிந்த சேடியர், கரங்களில் ஏதாவது ஒரு பொன்னாலான பொருளைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் பரபரத்துக்கொண்டிருந்தனர். ஆயுதமேந்திய காவலர்களின் முரட்டுக் காலணிகளின் ஒலி, ஒருவிதத் தாள ஓசைபோல ஓரத்துத் தாழ்வாரங்களில் கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
படிக்கப்படாத கடிதம் அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று கிடைத்தது. ""ரெண்டு ரூபாய் சில்லறையாகக் கொடுங்க'' என்றபடி கண்டக்டர் எச்சில் தொட்டு டிக்கெட்டுகளைக் கிழித்துக் கொடுத்தபடி வந்தார். முப்பது செகண்டு முன்னால் பஸ்ûஸக் கிளப்பி விட்டால் முதலாளியின் சொத்து திவால் ஆகிவிடும் என்ற ரேஞ்சில் சண்டையிட்டுக் கொள்ளும் தனியார் நிறுவன பஸ் கம்பெனி டிரைவர்களின் கூச்சலைக் கடந்து பேருந்து மெதுவாக நிலையத்தை விட்டு வெளியேறியது. கூட்ட நெரிசலை விலக்கி ஹென்றி வுல்சி சிக்னலை அடைவதற்குப் பத்து நிமிடம் ஆனத…
-
- 0 replies
- 828 views
-
-
மறுபடியும் ஒருதடவை! ராஜேஷ்குமார் ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்த பளபளப்பான பிளாஸ்டிக் ரோட்டில் பயணம் செய்து பாங்காக்கின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ஹனி ட்யூனில் இறங்கியபோது என் மனதுக்குள் கலர் ஃபவுண்டன்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பீறிட்டன. ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபர், “பொக்கே’யோடு மெல்லிய குரலில் கேட்டார். “மிஸ்டர் சிவசீலன்’ “எஸ்’ என்றேன். “ஐயாம் ஜெர்ரி ஹாப்ஸ். தொழில்துறை மாநாட்டின் அமைப்பாளர்களில் நானும் ஒருவன். வெல்கம் டூ பாங்காக் மிஸ்டர் சிவசீலன்’ நான் பொக்கேயை வாங்கிக் கொண்டு “தேங்க்யூ’ சொல்லி புன்னகையொன்றை உதிர்த்தேன். தன் கையில் வைத்திருந்த வெள்ளை நிற சாவியொன்றை நீட்டினார். “உங்களுடைய…
-
- 0 replies
- 792 views
-
-
ஒரு கிராமம் ஒரு தெய்வம் ................................................................................................................................................................................................ என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்திலிருந்து பேருந்து போகும். ஊரில் பாதி வீடுகளுக்கு …
-
- 0 replies
- 1.6k views
-
-
திசை மாறிய பறவை! அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?' 'வீட்டை வித்துட்டீங்களா?' 'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர். தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை. பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை. குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தன் நகரம் தன் நகரம் இரா.முருகன் ‘‘இ ன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’ சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். படுக்கையை அசுத்தம் செய்திருந்தாள். இருட்டில் சூழ்ந்து நின்ற ஈரமும், சிறுநீருமாக வாடை மூக்கைக் குத்தியது. நாள் முழுக்கத் துர்வாடைக்கு நடுவே …
-
- 0 replies
- 2.1k views
-
-
கடவுள் எழுதிய கவிதை! கடவுள் எழுதிய கவிதை! ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அ வள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச் சுருக்கியபடி... தன் சிவந்த விரல்களால் வண்ணத்துப் பூச்சியை மெள்ள மெள்ளப் பிடிக்க முயன்றபோது, எனக்குத் தெரிந்துவிட்டது... அவ…
-
- 0 replies
- 3.1k views
-