கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
விடுமுறை நாளும் அதுவுமா பொழுதே போகாதாம் எதாவது படிக்கலாம் என்ற எண்ணத்தில அலுமாரியிலை இருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன். ஏதோ ஆளரவம் கேட்குதென்று மெல்லத் திரும்பினால் என்னகாணும் கொஞ்சமென்றாலும் பொறுப்பில்லாமல் வாசக்கதவை ஆவென்று திறந்துவிட்டிட்டிருக்கிறீர
-
- 2 replies
- 853 views
-
-
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்......................... யாரது காலமை ஒன்பது மணிக்கு அருமையான என்ரை தூக்கத்தைக் கெடுக்கிறது என்ற யோசனையோட மெதுவா எழும்பிப்போய் வாசல்கதவைத் திறந்தன். வணக்கம் அண்ணா! நம்பமுடியாமலுக்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
பென்னாம் பெரிய டிரக் வண்டி, மெதுவாக வந்து ‘Cul-de-sac’இல் நின்றது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ‘பெரிசை’க் கணம் பண்ணும் பவ்வியத்தில் நடைபாதையில் ஏறிக்கொண்டார்கள். ஆஸ்திரேய குடியிருப்புக்களின் உள்வீதிகள் சில ‘Cul-de-sac’ எனப்படும் முட்டுச் சந்தாக முடிவடையும். அது அரிசி மூட்டையொன்றின் அடிப்பாகம் போல வளைந்தும் பெருத்தும் காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தகைய வீதிகளின் அந்தலையில் வாகன நடமாட்டம் குறைவு. இதனால் அப்பகுதியில் வாழும் சிறார்கள், அதனை விளையாட்டு மைதான மாகப் பாவிப்பார்கள். சாரதியின் இருக்கைப் பகுதிக்கும் பின் பெட்டிக்குமிடையில் செங்குத்தாக, வானை எட்டிப்பார்த்து நிமிர்ந்து நிற்கும் இரும்புக் குழாய், புகையை வளையங்களாகக் கக்கிக் கொண்டிருந்தது…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒத்தக் கம்மல் காது - அல்லிநகரம் தாமோதரன் ‘‘ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்! காத அறுத்துட்டுப் போனவனக் கண்டுபுடிச்சு கசாப்பு போட்ற கொல வெறில அவெஞ் சொந்தக்காரய்ங்க மீசைய முறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். அறுத்தது யாருன்னுட்டு இன்னும் கண்டுபுடிக்க முடியலையாம்...’’ சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்களாகியும்கூட ஊர்க்காரர்கள் வாய் முழுக்க இந்த வார்த்தைகளையே முணு முணுத்துக் கொண்டிருந்தன. கடைவீதி, சலூன்கடை, கிராமத்துக்குப் பொதுவான சாவடி என எல்லா இடங்களிலும் இதே அரட்டைக் கச்சேரிதான் மிரட்டிக் கொண்டிருந்தது. சிவகாமிக்கும் இந்தச் சம்பவம் ஆச்சரியத்திற…
-
- 0 replies
- 768 views
-
-
ஒன்பதாவது முடிச்சு! ( சிறுகதை) "என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல" ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது. ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள். இத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒன்ராறியோவிற்குள் பயணித்தல் இளங்கோ-டிசே பயணம் செய்தல் என்றவுடன் பலருக்குத் தொலைதூரங்களுக்குப் பயணிப்பதைப் பற்றிய ஒரு விம்பமே எழும். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிப்போகும் எந்தப் பாதையுமே அது இதமான ஒரு மனோநிலையைத் தருமென்பதைப் பலர் மறந்துவிடுகின்றார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில் வசிக்கும் நமக்கு இன்னொரு நாட்டிற்கோ அல்லது இன்னொரு மாகாணத்திற்கோ சென்றால் மட்டுந்தான் நிறையப் புது இடங்களைப் பார்க்கலாம் என்கின்ற ஓர் எண்ணமுண்டு. அதில் ஒரளவு உண்மை இருந்தாலும் ஒன்ராறியோவிற்குள்ளே ஒரு நாளுக்குள்ளேயே பார்ப்பதற்கு நமக்கு நிறைய இடங்கள் உண்டென்பதைப் பலர் மறந்துவிடுகின்றோம். எல்லோருக்குந் தெரிந்த நயாகரா நீர்வீழ்ச்சி, சிஎன் ரவர் போன்ற சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களை …
-
- 1 reply
- 960 views
-
-
அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும் அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார். சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டத…
-
- 26 replies
- 2.8k views
-
-
ஒன்றே ஒன்று ........தாங்கோவன் அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். .வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் . என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது . ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளந…
-
- 8 replies
- 1.8k views
-
-
கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள். "அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார். ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில…
-
- 13 replies
- 2.7k views
-
-
அழகான வயல் வெளிகளும் உயர்ந்த மரங்களும் நிழல் பரப்பி நிற்க ,சிறு நீரோடைகளும் , விவசாயத்தை நம்பி வாழும் மக்களும் கொண்ட அந்தக்குக் கிராமம். சொக்கனும் அவன் மனைவியும் ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான். அவ்வூர் மக்கள் மிகுந்த முயற்சி உள்ளவர்கள். ஆடு மாடுகள் மேய்ப்பதும் , தென்னையின் ஓலைகள் பின்னி வியாபாரத்துக்கு அனுப்புவதும் , சிலர் குளங்குட்டை களில் மீன் பிடிப்பதையும் கொண்டவர்கள். சொக்கனும் நெற்பயிர்ச்செய்கையில் மிகுந்த அனுபவமும் ஆர்வமும் உள்ளவன். ஓலையால் வேயப்படட ஒரு வீடும் , சில மாடு கன்றுகளும் தான் அவனுக்கு சொந்தம். அவ்வூரில் சற்று வசதிபடைத்த ஒரு நிலச்சொந்தக் காரரிடம் நாலு வயல் காணிகளை குத்தகைக்கு எடுத்து அவனும் மனைவியும் நெற்பயிர…
-
- 2 replies
- 769 views
-
-
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது! இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்.. ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்கும…
-
- 0 replies
- 812 views
-
-
இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக் கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும் தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை. இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்…
-
- 13 replies
- 1.4k views
-
-
இணைய களம்: ஒரு அப்பா, ஒரு பிள்ளை, ஒரு மீனு கதை! இரவில் பாய் விரித்துப் படுத்தவுடன், “அப்பா மீனு கதெ...” என்று ஆரம்பிப்பான் சந்துரு. பிறகு எங்கள் உரையாடல் இப்படிப்போகும். “ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய காடு இருந்துச்சாம்.” “உம்..” “அந்த காட்டுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கொளம் இருந்துச்சாம்.” “உம்..” “அந்தக் கொளத்துல என்ன இருந்துச்சி?” “மீனு.” “என்ன கலர் மீனு?” “வெள்ளை, ஒயிட்டு, கருப்பு, ஆரஞ்சு, புளு.” “அப்ப அந்தக் கொளத்துக்கு யாரு வந்தா?” “ஆனை.” “யானை என்ன செஞ்சுது?” (துதிக்கை போல கையை உயர்த்தியபடி) “தண்ணி குச்ச…
-
- 0 replies
- 993 views
-
-
வளாகம் போன புதிது. புதிய இடம். புதிய போதனை மொழி-ஆங்கிலம். புதிய பாவனை மொழி-சிங்களம்.( கடை கண்ணிக்கு போறதெண்டால் சிங்களம் வேணும்). சிங்களவர்களாக ஆமிக்காறனை மாத்திரம் தெரிந்த எங்களுக்கு சிங்கள ஊரில் சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அனுபவம். புதிய நண்பர்கள் நண்பிகள் என்று எல்லாமே புதிது. ஒரு மாதகாலத்தில் எல்லாம் ஓரளவு பழக்கத்தில் வரத் தொடங்கியிருந்தது. அன்றும் வழமை போல விரிவுரை சென்ற எமக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வேறுபாடு தெரிந்தது. நட்புடன் சிரிக்கும் எமது சிங்கள நண்பர்களின் முகம் இருண்டிருந்தது. வழக்கமான புன்னகை தொலைந்திருந்தது. பிறகுதான் தெரிந்தது காரணம். ஆனையிறவை புலிகள் பிடித்துவிட்டார்களாம். ஆயிரக்கணக்கில் ஆமி பலியாகிவிட்டதாம். எங்களுக்கு உள்ளுக்குள் …
-
- 7 replies
- 1.7k views
-
-
ஒரு இனிய உதயம்! – சிறுகதை ''அம்மா.... நான் கேட்க, கேட்க ஏம்மா பதிலே சொல்ல மாட்டேன்ங்கிறீங்க?'' ''சுஜி... உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்.'' ''நான் என்ன கேட்கிறேன்? நீங்க அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன?'' ''புரியுது.... புரியுது... சுஜி. நீ சின்ன பெண். உனக்கு எதுக்கு இப்போ இதைப்பற்றின கவலை. சாப்பிட்டதும் போய் படி. பரீட்சை வருதுதில்லே.... இப்போ டென்த்துங்கிறதை மனசிலே வச்சுக்கிட்டு படி.'' ''படிக்க புத்தகத்தை எடுத்து விரிச்சாலே அதிலே அப்பா முகம்தான் தெரியுது. படிக்க முடியல...'' ''இதுல உன்னை சொல்ல குத்தமில்லே. இனிமேல் ஸ்கூல்ல வந்து உன்னை பார்க்க வேண்டாம்னு கொஞ்சம…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்: மாக்சிம் கார்க்கி: மொழிபெயர்ப்பு: சுரா மூலம்: லேகா புத்தகங்கள் http://www.lekhabooks.com/short-stories/322-oru-ilam-pennum-irupattharu-aangalum.html நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது. …
-
- 4 replies
- 34.2k views
-
-
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - சிறுகதை பொள்ளாச்சி அபி, ஓவியங்கள்: ஸ்யாம் ''ஏய் சரசு... மின்னல் வெட்டுது பாரு. மழை வரும்போல இருக்கு. கொடியில காயப்போட்ட துணியெல்லாம் எடு!'' - சிவகாமி இரைந்தாள். அதிர்ந்து நிமிர்ந்த சரசு அத்தை, கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, ''தள்ளுங்க... தள்ளுங்க... கொஞ்சம் இருங்க வர்றேன்...'' என்றபடி அவசரமாகக் கைகளால் விலக்கிவிட்டு எழுந்து ஓடினாள். சரசு அத்தைக்கு ஏறக்குறைய 35 வயது இருக்கும். வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருப்பதால், உருவிவிட்டாற்போல கிண்ணென இருந்தாள். படக்கென உட்கார்வதும், நிமிர்வதும்... அப்படியே அம்மாவுக்கு நேர் எதிர். என்ன... நிறத்தில் அம்மாவைவிட கொஞ்சம் கம்மி. அவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம் திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு. இரவு எட்டு மணி ‘அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூமில்’ ஒரு பெண் தனியாகச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஓர் ஆங்கில வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது. பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த ஜம்பு, வெயிட்டிங் ரூமிலிருக்கும் அந்தப் பெண் யாரென்பதை வாசலுக்கு எதிரே நின்று கொண்டு சிகரெட் பற்ற வைப்பது போல் ஓரக் கண்ணால் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் மெதுவாக நகர்ந்தான். ‘டிக்கெட் வாங்கிட்டேன் பாப்பா…..வா, போகலாம்’ என்…
-
- 0 replies
- 579 views
-
-
ஒரு எலிய காதல் கதை கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள் தரையும், லிஃப்ட்டும், கனவான்களும், கனவான்கள் பெற்ற கண்கவர் கன்னிகளும்கொண்ட அபார்ட்மென்ட் அல்ல. தண்ணீர் லாரிக்காக யுத்தம் செய்கிற வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. ஒரே அறைதான். ஓரத்தில் பாத்ரூம், டாய்லெட். பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் பொங்கித் தின்ன ஏற்பட்ட சமையல் மேடை. ஒட்டியிருக்கும் சின்ன பால்கனி. அந்த வீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பார்த்து வந்த வேலை போய்விட, ராமச்சந்திரனுக்கு இது ராசி இல்லாத வீடு என்று பட்டது. ஆனால், இந்த வீட்டை விட்டால், நேரே மெரினா பீச…
-
- 0 replies
- 3.3k views
-
-
நான் ரசித்த ஒரு அருமையான பதிவு..விண்வெளியின் அதிசயங்களை ஒரு எழுத்தாளனின் பார்வையில் எங்கள் கண்முன் கொண்டுவந்துதந்திருக்கிறார் இந்தக்கட்டுரையாளர்..எல்லைகளற்ற வானம்போலவே மனிதனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் ஏது...பிரபஞசத்தை பற்றி நான் கேட்டு வாசித்து படித்து அறிந்து கொண்டவைகளால் ஏற்பட்ட பிரமிப்பால் வானவியல் சம்பந்தமான பல அறிவியல் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன்..ஆனாலும் தமிழ்ச்சுவையோடு தீட்டப்பட்டுள்ள இந்தக்கட்டுரையை வாசித்து முடித்தபொழுது ஒரு தனி சுகம் இருந்தது... வாசித்து முடித்த பொழுது விண்வெளிக்கு ஒரு இலக்கியப் பயணம் போய் வந்தது போன்றதெரு உணர்வு...இதோ உங்களுக்கும் அவரின் அனுமதியுடன் அந்த அநுபவம் கிடைக்கட்டும்... ஒரு எல்லைகளற்ற பயணம்-கை.அறிவழகன் …
-
- 0 replies
- 1.7k views
-
-
வருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது. ஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டால…
-
- 41 replies
- 5.4k views
-
-
ஒரு கணத்துக்கு அப்பால் - ஜெயமோகன் வயது வந்தவர்களுக்கானது! அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி செந்நிற அடுக்குகளாக விரிந்திருந்தது. இளநீலநிற நகச்சாயம் பூசப்பட்ட விரல்களால் அவ்விதழ்களின் மேல்நுனியை அகற்றியிருந்தாள். இன்னொரு கையில் கரியநிறமான செயற்கை ஆண்குறி. கீழே ஒரு கணத்துக்கு அப்பால் என்ற வரிகள் மின்னி மின்னி அணைந்தன அப்பா சுட்டுவிரலால் அந்தப்படத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் பார்வையை திருப்பும்பொருட்…
-
- 1 reply
- 910 views
-
-
-
சிறு வயதிலிருந்தே திருமாறனிற்கு போராட்டம் பற்றிய அக்கறை இருந்தது. விபரம் தெரியாவிட்டாலும் இங்கு நடக்கின்ற அனைத்து ஊர்வலங்களிலும் கலந்துகொள்வான். இப்படியான நிகழ்ச்சிகள் அவனிற்கு நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க ஒரு சந்தர்ப்பமாகவே தெரிந்தது. காலப்போக்கில் போராட்டம் பற்றிய அறிவும் தேடலும் அதிகரித்தது. கடமைக்காக பங்குபற்றிய காலம் போய் உணர்வுடன் பங்குபற்றிய காலம் வந்தது. திருமாறனும் நண்பர்களும் பங்குபற்றாத நிகழ்ச்சிகள், போராட்டங்கள் என்று எதுமே இல்லையெனலாம். தமிழ் பாடசாலை முதல் கோயில் வரை விடுதலைப்போராட்டம் கிளைகளாய் பரந்திருந்த காலம் அது. எங்கும் தமிழன் எதிலும் தமிழன் என்பது அந்த காலகட்டத்திற்கு பொருந்தும். நாம் பலமாக இருந்த காலம் அது. இந்த நிலை 2009ஆம் ஆண்டு மெதுவாக…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஒரு கனவு ஒரு கனவு இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா கண்டபடி பேசி திட்டுவாங்கலாம். சார் இவங்க எண்ணம் எல்லாம் நம்மளை நம்பி இருக்கறவங்கதானே, கூப்பிட்டா வரணும், அப்படீங்கற எண்ணம். கிடக்கட்டும் சார், ஏதோ கூலியா கொடுக்கறாங்க, கொடுக்கறாங்க என்ன போடறாங்க, இந்தா பிழைச்சு போ அப்படீங்கற மாதிரி, நாங்களும் வெட்கமில்லாம அதை ஏத்துக்க வேண்டியிருக்குதே. என்னுடைய அனுபவத்துல சொல்றேன் சார் எப்பவும் ஒரு இடத்துல இருந்துட்டே இருந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க சார், இடம் விட்டு இடம் மாறிகிட்டே இருக்கணும். ஆனா பயமா இருக்கே சார், வேற இடத்துக்கு போயி செட்டிலாகலாமுன்னா அங்கிருக்கறவங்க, நம்மளை எதிரியா ப…
-
- 0 replies
- 669 views
-