Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஒரு நண்பன் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ். ஹரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!'' அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்! ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்க…

  2. Started by akootha,

    [size=4] [/size] [size=4]புதுவருடம் பிறக்கப் போகிறது. புதுசாக ஏதாவது செய்யவேண்டுமே என்று டாக்டர் யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாத வயதே ஆன நாய்க்குட்டியை வாங்கினார். அகிடா எனப்படும் வகை நாய்க்குட்டி அது. அகிடா வகை நாய்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை. தன் செல்லப் பிராணிக்கு ஹசிகோ என்று பெயரிட்டார் யூனோ.[/size] [size=4]கோல்டன் பிரவுன் நிறம் கொண்ட ஹசிகோ தன்னுடைய எஜமானருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. யூனோவும், ஹசிகோவும் அடுத்த சில மாதங்களில் நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்தார்கள். தினமும் காலை டாக்டர் யூனோ, பல்கலைக்கழகத்துக்கு செல்ல வீட்டிலிருந்து அருகிலிருக்கும் ஷிபுயா ரயில் நிலையத்துக்கு நடந்துச் ச…

  3. கற்கனைக்கதை ஒன்று (ஒன்றா?) சொல்வேன் கேளுங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் இப்பொழுது கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள் .... ....... ...... உங்கள் வீட்டின் அசையாப்பொருள் அனைத்துக்கும் (சுவர் கதவு உட்பட) கண் காது உள்ளது என்று நினைத்துக்கொள்ளுங்கள் .... ...... ..... உங்களது வீட்டில் நடந்தவைகளை அசை போடுங்கள் .... .... ... இப்போ கதை சொல்லி நானல்ல நீங்கள் ... .... யாவும் கற்பனை அல்ல நிஐம் ... ... முற்றும்🤣🙏

  4. சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. “மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக…

  5. ஒரு நிமிடக் கதை பிறந்தநாள் இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்…

  6. ஒரு நிமிடக் கதை: ஐம்பதாயிரம் ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!” அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள். “அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா. சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்ட…

    • 1 reply
    • 3.7k views
  7. ஒரு நிமிட கதை: கண்டிஷன் “மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள். “அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங் களா? சர…

  8. ஒரு நிமிடக் கதை: தடுமாற்றம் சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று இ…

    • 1 reply
    • 1.6k views
  9. ஒரு நிமிட கதை: பிரேஸ்லெட் வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே போகிறது. இரவில் இரண்டாவது காட்சி சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை உருட்டிக்கொண்டு சென்றேன். இரவு 2 மணி ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும். அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்! சில அடிதூரம் ஓட…

    • 1 reply
    • 1.3k views
  10. நடந்தது நடந்துவிட்டது! ‘‘ச ரி... நடந்தது நடந்து போச்சு! இனிமே நடக்கறது நல்ல தாவே நடக்கும். நம்பிக்கை யோடு இரு. ஒண்ணு சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ. எது ஒண்ணும் நிரந்தரமில்லே. வர்றப்ப யார் கூட வந்தே? நினைச்சுப் பார். நம்ம கூடவே யாரும் இருக்கப் போறதில்லே, கடைசி வரைக்கும்! அவங்க அவங்க காரியம் முடிஞ்சதும் புறப்பட்டுப் போயிட்டே இருக் கிறதுதான் உலக நியதி! கீதையிலே சொன்னாப்ல, ‘இருக்கிறது இல்லாமல் போவது கிடையாத…

    • 1 reply
    • 1.1k views
  11. ஒரு நிமிடக் கதை பழக்கம் ‘‘என்னங்க ஆச்சு உங்களுக்கு? ஒரு மாசமா கவனிக்கிறேன்... உங்க பெரியப்பா இறப்புக்கு போயிட்டு வந்ததில் இருந்து ஆளே மாறிட்டீங்க? வழக்கமா வர்ற கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் எதுவுமே இல்ல. யாரையும் கிட்டக்க சேர்க்காதவர், எல்லார்கிட்டயும் அன்பா பழகுறீங்க..?’’ - கணவன் பாண்டியனிடம் சரசு கேட்டாள்.‘‘எங்க பெரியப்பாவோட இறப்புதான்டி என்னை மாத்திடுச்சு. அவர் யார்கிட்டயும் ஒட்ட மாட்டார். உறவுகளை வெறுத்தார். நண்பர்களை சேர்க்க மாட்டார். அவர் இறந்தப்போ மனுஷங்களே வரலை. கிட்டத்தட்ட ஒரு அனாதைப் பிணமாத்தான் போனார். அதைப் பார்த்ததும்தான் இப்படி மாறிட்டேன்!’’‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷங்க!’’ சரசு மகிழ்ந்து போனாள்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை. டூ வீலரில் போகும்போது ஆட்டோ இடித்து…

  12. ஒரு நிமிடக் கதை உளவியல் உளவியல் உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த குருமூர்த்தி குழந்தைகள் கையில் பழங்களைக் கொடுத்தபடி மனைவி வித்யாவை அழைத்தான். “வித்யா! 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல புதிய வேலை கிடைச்சிருக்கு. இனியும் இந்த பாவப்பட்ட ஜனங்க வசிக்கிற இடத்துல இருக்க வேண்டாம்னு தோணுது. கொஞ்சம் வசதியானவங்க இருக்கிற இடத்துக்கு மாறிடலாம்னு தீர்மானிச்சுட்டேன்” – உற்சாகமாய்ச் சொன்னான் குருமூர்த்தி. “10 வருஷமா இங்கதானே இருக்கோம். இப்போ எதுக்கு இடம் மாறணும்?” –வித்யா புருவத்தைச் சுருக்கியபடி கேட்டாள். “அடுத்த வாரமே கார் வாங்கப்போறேன். குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்துக்கு மாத்தணும். அதுக்கெல்லாம் …

  13. செயல்! அந்தக் காட்சி கீதாவின் மனசை உருக்கியது. சின்னஞ்சிறு பிஞ்சு, ஒரு வேளை உணவுக்காக எப்படியெல்லாம் தன் உடலை வில்லைப் போல் வளைக் கிறது. கணவன் விஷாலைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். மனம் முழுதும் சந்தோஷமாக இருந்தது கீதாவுக்கு. திருமணமான ஆறு நாட்களுக்குள்ளே நம்மைப் புரிந்துகொண்டானே. ஆனால், அடுத்து அவன் செய்த செயல் அருவருப் பாக இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளைத் தான் எடுத்துக்கொண்டு, பிரித்த பாக்கெட்டை அந்தச் சிறுமியிடம் கொடுக்கும்படி கீதாவிடம் நீட்டினான். …

  14. தேங்க்ஸ் வாத்தியாரே! ‘‘கதிர் பத்திரிகை நடத்தின ‘சூப்பர் ஹோம் செக்யூரிட்டி டிப்ஸ்’ போட்டியில ஐயாவோட டிப்ஸ் செலக்ட் ஆகி, 250 ரூபா பரிசும் கிடைச்சிருக்கு. இதோ பாரு!’’ என்று பெருமையோடு மனைவியிடம் அந்தப் புத்தகத்தை நீட்டினார் கருப்பையா. ‘‘வீட்டுக்குத் திருட வரும் கொள்ளையர்கள் முதலில் குறி வைப்பது பீரோவைத்தான். எனவே, தங்க நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருள்களை அரிசி டின்னுக்குள் பொட்டலங்களாகக் கட்டிப் போட்டுவிட்டால், பறிகொடுக்காமல் தப்பிக்கலாம். இது, என் சொந்த அனுபவக் குறிப்பாகும்!…

    • 1 reply
    • 1.6k views
  15. நன்றி சுந்தரத்துக்கு நல்ல பசி. காரை விட்டு இறங்கியதுமே, ‘சாந்தி பவன் உயர்தர உணவகம்’ என்ற போர்டைப் பார்த்ததும் ஆறுதலாய் இருந்தது. பசி தீர சாப்பிட்டான். சாப்பாடு மிகவும் அருமை. வீட்டில் சாப்பிடுவதைப் போன்ற உணர்வு. பல ஊர்களில் ஹோட்டலில் சாப்பிட்டவன் என்பதால், இது வயிற்றைக் கெடுக்காத இயல்பான ருசியுள்ள உணவு என்பது அவனுக்கு புரிந்தது. சர்வரைக் கூப்பிட்டான். ‘‘இங்க சாப்பாடு தயார் பண்ற சமையல்காரர் யாரு? அவரோட பேசணும்!’’ ‘‘ஏன் சார்?’’ ‘‘சாப்பாடு ரொம்பப் பிரமாதம். அவரைப் பாராட்டணும்!’’ ‘‘வழக்கமா சமைக்கிறவர் இன்னைக்கு திடீர்னு லீவு. அதனால இன்னிக்கு சமையல் நான்தான் சார்!’’ ‘‘சாப்பாடு ரொம்ப பிரமாதம். எங்க குடும்பத்துக்கு ஒரு சமையல்காரர் தேவை. நல்ல சம்பளம் கொடுப்ப…

    • 1 reply
    • 1.7k views
  16. ஒரு நிமிடக் கதை பொண்டாட்டிதாசன் ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா. அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக! இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா. அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா,…

    • 1 reply
    • 1.6k views
  17. ஒரு நிமிடக் கதை வாய்ப்பு ‘‘ஓவியம் வரையறதை விட்டுட்டு வேற ஏதாவது உருப்படியான வேலையைப் பாரு!’’ என்று அப்பா திட்டியபோதெல்லாம் வராத ஞானோதயம் மகேந்திரனுக்கு இப்போதுதான் வந்தது.வந்து என்ன புண்ணியம்? அவனுக்கு ஓவியம் தவிர வேறு எதுவும் தெரியாது. ‘இதற்கு மேல் பட்டினியைத் தாங்க முடியாது’ என்ற நிலையில் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு ஐம்பது ரூபாய் எப்படித் திரட்டுவது எனத் தீவிரமாக யோசித்தான்.‘எந்த நேரத்திலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’ என்ற அவன் தாத்தாவின் வார்த்தைகள் மனதுக்குள் வந்து போயின. தான் வரைந்த ஓவியத்தை எடுத்து, அதன் கீழ் எதையோ கிறுக்கிக்கொண்டான். இருப்பதிலேயே நல்ல உடையை எடுத்து அணிந்து கொண்டவன், பெரிய பங்களாக்கள் இருந்த ஏரியாவில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினான்…

  18. ஸ்கிரிப்ட் ஆதவனே கூட இதை எதிர்பார்க்கவில்லை. அவனது பேய்ப்பட ஸ்கிரிப்ட், தயாரிப்பாளரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.‘‘சூப்பர் தம்பி, இப்போதைய ட்ரெண்டுக்கு இந்தப் படம் பெரிய ஹிட்டாகும். நாளைக்கே வந்து அட்வான்ஸ் வாங்கிக்கோ. நீ நல்ல வார்த்தைகளா போட்டுப் பேசறே! அதனால டயலாக்கும் நீயே எழுதிடு. படம் தொடர்பான எல்லா வேலைகளையும் உடனே ஆரம்பிச்சிடுவோம்’’ என்று தயாரிப்பாளர் சொல்ல, ஆதவனின் இதயம் பேயைப் போலத் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. மறு நாள்...அட்வான்ஸ் வாங்கிக்கொள்ள தயாரிப்பாளரின் ஆபீஸுக்கு உற்சாகமாகப் போனான் ஆதவன்.ஆபீஸ் பூட்டியிருந்தது.அந்த அலுவலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான். தன்னுடைய படத்தின் பெரும்பாலான காட்சிகளை இந்த ஆபீஸிலும் அதைச் சுத்தியுமே வைத்துக்கொள்ளலா…

  19. ஒரு நிமிடக் கதை - எடை ரயிலுக்காகக் காத்திருந்தார் மாதவன். எடை பார்க்கும் மெஷின் கண்ணில்படவே, ஏறி நின்று ஒரு ரூபாய் காசைப் போட்டார். ஒரு மாற்றமும் இல்லை. மெஷின் அமைதியாக இருந்தது. ‘சே..’ என்று அலுத்தபடி பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். “மெஷின் கொஞ்சநாளா ரிப்பேரா இருக்கு சார்.. யாரும் கவனிக்க மாட்டேங் கறாங்க. போடுற காசெல்லாம் வேஸ்ட் ஆயிடுது” என்றார் கடைக்காரர். அதே சமயம் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார் மாதவன். ஒரு கிராமத்து தம்பதி மெஷின் பக்கம் வந்தார்கள். பக்கத்தில் சென்று அவர்களை எச்சரிப்பதற்குள் அவர்களுடைய சின்ன மகள் மெஷினில் ஏறி காசு போட்டாள். சிறிது நேரம…

    • 1 reply
    • 1.3k views
  20. ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை “நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க யாரோட அவ்வளவு சுவாரஸ்யமா போன்ல பேசிட்டு இருக்கீங்க?!” சுதா கேட்கிறாள். அதைப் பொருட்படுத்தாத அருண் போனில் நிதானமாக “நான் வீட்லதான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...!” என்று பேசிவிட்டு போனைத் துண்டித்தான். “இப்ப சொல்லு. என்ன உன் பிரச்சினை?... எதுக்கு நீ இப்ப இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கே?” அருண், மனைவியிடம் கேட்டான். அதற்கு சுதா, “என்னால இனி இங்க ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. நான் இப்பவே எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போகப்போறேன். நீங்க நாம தனிக்க…

  21. ஒரு நிமிடக் கதை - படிப்பு “இந்தாங்க நம்ம மோகனுக்கு புராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. கையெழுத்துப் போட்டு கொடுங்க!” மனைவி ரேணுகா நீட்டிய ரிப்போர்ட் கார்டை வாங்கிப் பார்த்த கோபாலுக்கு கோபம் தலைக்கேறியது. “எந்தப் பாடத்துலயும் 60 மார்க் தாண்டல! தன்னோட மகன் ஆனந்த் 90 மார்க் வாங்கியிருக்கிறதா பக்கத்து வீட்டு கணேசன் பெருமையா சொல்லிட்டுப் போறார். உன் பிள்ளை மோகன் படிக்கிற லட்சணத்தைப் பார்த்தியா? எங்கே அவன்? உட்கார்ந்து படிக் கிறதை விட்டுட்டு விளையாட போய்ட்டானா? எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்…” கோபத்தில் கத்தினார் கோபால். “நல்லா படிக்கலைன்னா அவன் என் பிள்ளையா? உங்க பிள்ளையும்தானே! அது சரி…

  22. ஒரு நிமிடக் கதை - பயம் அமரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந்தது. அமரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க விரும்பினார். அமரனின் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால் சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உதாசினப்படுத்தினான். இது அமரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்துக் கொள்ளவில்லையே என்று அமரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன்…

  23. அப்பா முகத்தில்... வீடு எப்படி அமைய வேண்டும் என்று அண்ணன், அண்ணி, தம்பிகள், தங்கைகள் எல்லோருடைய கருத்துகளையும் சேர்த்து ஒரு பிளான் வரைந்தார்கள். கடைசியாக அப்பாவிடம் கொண்டு காட்டி, ‘‘அப்பா, இது சரியான்னு பாருங்க. ஏதாவது மாற்றம் இருந்தால் செஞ்சுக்கலாம்’’ என்றார் அண்ணன். அப்பா சிறிது நேரம் பார்த்துவிட்டு, ‘‘எல்லாம் சரிதான். முன் பக்கத்தில் மட்டும் முடிந்தால் கொஞ்சம் கார்டன் போட இடம் விடுங்கள். பூச்செடிகள் வைத்து, சாமிக்குப் பறிச்சுப் போடலாம்’’ என்றார். ‘‘சரிப்பா! அப்படியே பண்ணிடலாம்!’’- அண்ணன். தனிமையில் அண்ணனிடம…

    • 1 reply
    • 940 views
  24. உக்காந்து யோசிப்பாய்ங்களோ! பிரபல டைரக்டர் சந்திரனை மிகுந்த சிரமத்துக்குப் பின் சந்தித்துப் பேசினான் ரகு. ‘‘சார், நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த மாதிரியே அச்சு அசலா நிறைய ஸீன்கள் இப்ப வர்ற படங்கள்ல வருது’’ என்ற வன், தன் ரசனையும் ஐடியாக்களும் சமீபத்திய ரிலீஸ் சினிமாக்களில் இடம்பெற்ற சூப்பர் ஸீன்கள், கிராஃபிக்ஸ் உத்திகள், க்ளைமாக்ஸ் திருப்பம் எனப் பல விஷயங்களில் பொருந்தியிருப்பதை உதாரணங்களோடு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டான். பின்பு, ‘‘சார், என்னை உங்க அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டீங்கன்னா ரொம்ப ‘யூஸ்’புல்லா இருப்பேன்...’’ என்றான். ‘‘ஸாரி பிரதர், எனக்கு …

    • 1 reply
    • 1.1k views
  25. உப்பு மூட்டை க ளைத்து வீட்டுக்கு வந்த கதிரிடம் ஓடி வந்தாள் குழந்தை ஷாலினி. ‘‘அப்பா! உப்புமூட்டை..!’’ என ஆவலோடு அவனை நோக்கிக் கை உயர்த்தினாள். ‘‘அவ கிடக்கிறா விடுங்க! நாள் பூராவும் வேலை செஞ்சு களைப்பா வந்திருக்கீங்க. பாவம், நீங்க ஓய்வு எடுங்க’’ என்ற கமலா, ‘‘ஏய், நீ வாடி இங்கே! அப்பாவைத் தொல்லை பண்ணாதே!’’ என்று ஷாலினியை இழுக்க முயன்றாள். ‘‘பாவம், அதைத் தடுக்காதே கமலா! குழந்தைக்கு என்ன தெரியும்... அங்கே அந்தப் பாரம் பொழப்பு. இந்த பாரம் சுகம்!’’ எ…

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.