விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வெளியானது கடிதம்: சிக்கலில் ரெய்னா 2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகமிக்க நடவடிக்கைகள் தொடர்பான இரகசியக் கடிதமொன்று வெளியாகியுள்ளது. இதில், சுரேஷ் ரெய்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடுமெனக் கருதப்படுகிறது. தம்புள்ளையில் இடம்பெற்ற இத்தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால், அந்தத் தொடரில், சுரேஷ் ரெய்னாவின் அறையில் பெண்ணொருவர் தங்கியிருந்ததாக, நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான உத்தியோகபூர்வ கருத்தெதுவும், சர்வதேச கிரிக்கெட் சபையாலோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையாலோ, அல்லது இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக் கோல் நேற்று இரவு அர்ஜென்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ-கிக் கோல் வைரலாகிவிட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த முதல் கோல் இதுதான். இந்த கோலுக்குப் பிறகு, இன்னும் இரண்டு கோல்களுக்கு மெஸ்ஸி உதவ, கொலம்பியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதனால், அர்ஜென்டினா உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அப்படியென்ன ஃப்ரீ - கிக் கோல் என்கிறீர்களா? வீடியோ பாருங்க! http://www.vikatan.com/news/sports/72533-messi-scores-a-stunning-free-kick-goal-and-saves-argentin…
-
- 1 reply
- 392 views
-
-
கொமென்வெல்த் போட்டியில் யாழ் மாணவிக்கு வெண்கலப் பதக்கம் 2016இற்கான இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில், யாழ் சுண்டிக்குளி மகளிர் பாடசாலை மாணவியான வீ.அர்ஸிகா வெண்கலப் பத க்கத்தை வென்றெடுத்துள்ளார். 58 கிலோ எடை தூக்கும் போட்டியிலேயே இச் சாதனையை இவர் புரிந்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பதக்கத்தை வென்ற அர்ஸிகா தரம் - 10 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயின் அனுசரணையுடன் இந்த மாணவிக்கானபாராட்டு விழாவை யாழ் மாவட்ட பாரந்தூக்கும் அமைப்பு , யாழ் வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. http://onlineuthayan.com/news/20633
-
- 1 reply
- 448 views
-
-
'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல்! வரும் 9-ம் தேதி, இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விளையாடப்போகும் 20 ஓவர் கிரிக்கெட் அணியில், அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தொடர்ந்து விளையாடிவந்தார். மோசமான ஃபார்ம், உடலில் ஏற்பட்ட காயங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இடையில் சிறிது காலம் அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று கலக்கினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் தான் மிக ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். என்னதான் 20 ஓவர் போட்டிகளில் கெய்ல் விளையாடினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட…
-
- 1 reply
- 464 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சுற்றுப்போட்டி இன்று காலை மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் உள்ளக அரங்கில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த கராத்தே சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து ஒன்பது விளையாட்டு கழகங்களின் வீரர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஆண்,வீராங்கணைகள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த சுற்றுப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் மாகாண போட்டிக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். இந்த கராத்தே சுற்றுப்போட்டிக்கா…
-
- 1 reply
- 602 views
-
-
பிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப்பு முத்து' பீலே! ' கருப்பு முத்து 'என்ற செல்லப்பெயரும் எடிசன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர் கொண்ட பீலே 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி பிரேசிலில் உள்ள ட்ரஸ் கராகஸ் என்ற சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தை டோன்டின்ஹோ ஒரு தொழில் முறை கால்பந்தாட்டக்காரர். இதனால் பீலேவின் ரத்தத்திலேயே கால்பந்தும் கலந்திருந்தது. கடந்த 1934ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய பிரிட்டோவின் கண்களில் இளம் வயது பீலே தென்பட, அவரை பிரேசில் நாட்டின் தொழில் நகரமான சான்டோசுக்கு அழைத்து வந்தார். சான்டோஸ் எப்.சி என்ற புகழ் பெற்ற கால்பந்து அணி இங்குதான் இயங்கி வந்தது. அந்த அணியின் இயக்குனர்களை சந்தித்த பிரிட்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வர்மங்களில் மறைந்திருக்கும் மர்மங்கள் வர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு “அடவு வர்மம்” என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த …
-
- 1 reply
- 5.7k views
-
-
வேர்ணன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்திய காட்சி ஒளிபரப்பப்படுவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2014-07-22 12:04:55 தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வேர்னன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோ காட்சியை, அச்சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின்பின் ஒளிபரப்பு செய்யப்படுவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 3 ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட காட்சியை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பாளர்களான டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தென் ஆபிரிக்க அணி அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சம்பவம் குறித்து தென் ஆபிரிக்க அணி எவ்வித கருத்தையும் வெளியிட மறுத்துவ…
-
- 1 reply
- 565 views
-
-
-
- 1 reply
- 418 views
-
-
மெஸ்சிக்கு சிறந்த வீரர் விருது ஜூரிச்:ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி தட்டிச் சென்றார்.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் சிறந்த வீரருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். 2015ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, 28, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 30, பிரேசிலின் நெய்மர், 23, இடம் பெற்றனர். இதன் விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடந்தது. ஐந்தாவது முறை : எதிர்பார்த்த படியே சிறந்த வீரருக்கான 'பாலன் டி ஆர்' விருதை மெஸ்சி தட்டிச் சென்றார். கடந்த 2009 …
-
- 1 reply
- 749 views
-
-
வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை நீக்கம் மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வான்கடே மைதானத்திற்குள் நுழைய விதிக்கப் பட்டிருந்த 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று விலக்கியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த காவலாளிகள் தடுத்தனர். இதனால், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் ஷாருக்கான். இதுகுறித்து ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு…
-
- 1 reply
- 320 views
-
-
2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் 30 ம் திகதியான இன்றைய நாள் வரையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கின்ற அணிகள் இதற்கு தேர்வாகியிருக்கின்றன. மேற்கிந்திய தீவுகள் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. Rank Team Points 1 Australia 127 2 India 115 3 South Africa 110 4 New Zealand 109 5 Sri Lanka 103 6 England 100 7 Bangladesh 96 8 Pakistan 90 9 West Indies 88 10 Ireland 49 11 Zimbabwe 45 12 Afghanistan 41 http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017
-
- 1 reply
- 381 views
-
-
ரியோ ஒலிம்பிக் தீபச் சுடர் ஓட்டம் வியாழனன்று ஆரம்பம் ரியோ டி ஜெனெய்ரோவில் 2016 ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 31ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தீபச் சுடர், ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் அமைந்துள்ள ஹேரா பெண் கடவுளரின் கோவில் முன்றலில் வியாழனன்று வைபவரீதியாக ஏற்றப்படவுள்ளது. பண்டைய ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் ஆகியவற்றின் சம்பிராதயங்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வைபவத்தின்போது ஹேரா என்ற பெண் கடவுளரின் பாத்திரத்தை ஏற்கவுள்ள கிரேக்க நடிகை கெத்தரினா லேஹூ தீபச் சுடரை ஏற்றவுள்ளார். இந்தச் சுடர் சூரிய கதிர்களிலிருந்து பரவளைய ஆடியைக் கொண்டு இயற்கையாக பற…
-
- 1 reply
- 566 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரே லிய கிரிக்கெட் விஜயத்தை முன் னிட்டு குறுகியகால அடிப்படையில் அலன் டொனல்டை பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்கப்படாதது எவ்வளவு தவறானது என்பதை அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக நிய மிக்கப்பட்ட பின்னர்…
-
- 1 reply
- 544 views
-
-
இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது. இதுதவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பிரேஸிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா டிசில்வாவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும். தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கேற்ப ஐ.நாவின் செயல்பாடுகள் அமைய வேண்டியது அவசியம். இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜ…
-
- 1 reply
- 1.1k views
-
-
டிஎன்பிஎல் 2018- வலது கையாலும், இடது கையாலும் பந்து வீசி அசத்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தினார். #TNPL2018 #KV தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கா…
-
- 1 reply
- 445 views
-
-
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும…
-
- 1 reply
- 232 views
- 1 follower
-
-
இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். சீனாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடுவதற்கு 2 தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகிய இருவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu.com/இலங்கை-தேசிய-கூடைப்பந்தா/
-
- 1 reply
- 330 views
-
-
பாகிஸ்தானுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியனுக்கான தண்டாயுதம்: ஐசிசி வழங்கியது ஐசிசி தண்டாயுதத்துடன் மிஸ்பா. | படம்: ஏ.பி. முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய மைதானமான லாகூரில் இது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்கிறார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தண்டாயுதத்தை மிஸ்பாவிடம் வழங்கினார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவில்லாமல் முழுக்கவும் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பிடிப்படு சாதாரண விஷயமல்ல. ஸ்டீவ் வா…
-
- 1 reply
- 633 views
-
-
உலக சாதனை படைத்தார் பென்தெக்கி சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை, பெல்ஜியம் அணியின் கிறிஸ்டியான் பென்தெக்கி படைத்துள்ளார். ஜிப்ரால்டர் அணிக்கெதிராக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டியிலேயே, இச்சாதனையை அவர் படைத்தார். உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியாக அமைந்த இப்போட்டியில், போட்டி ஆரம்பித்து 8.1 செக்கன்களில், தனது கோலை, பென்தெக்கி பெற்றுக் கொண்டார். இது, இதற்கு முன்னர் காணப்பட்ட சாதனையான 8.3 செக்கன்களை முறிடித்தது. அந்தச் சாதனையை, 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண் பொட்டியில், இங்கிலாந்து அணிக்கெதிராக சான் மரினோவின் டேவி…
-
- 1 reply
- 320 views
-
-
சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli கோஹ்லி இதுவரை 168 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அவரோடு ஒப்பிடும் போது சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங் ஆகியோர் முதல் 168 இன்னிங்ஸ் வரை எந்தளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறார்கள் என்பதை அலசும் கட்டுரை இது. தலைமுறைகள் கடந்த ஒரு வீரரை, இன்னொரு வீரரின் ஆட்டத்தோடு ஒப்பிடுவது சரியில்ல. பிட்ச், வீரர்கள், காலநிலை, எதிரணியின் நிலை, தான் சார்ந்தஅணியின் சூழ்நிலை, பயம், பதற்றம், மேட்சின் நிலை, விக்கெட் வீழ்ச்சி, எதிரே நிற்கும் வீரர், ஆகியவற்றை பொருத்து ஒரு வீரரின் ஆட்டமுறை வேறுபடும்.தவிர, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆட்டபாணியில் பெரியளவிலான மாற்றங்கள் நடந்து வரு…
-
- 1 reply
- 787 views
-
-
என் துணிகளை விற்று தோனியை வாங்குவேன், ஷாருக் கான் ஆவல் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக தோனியை வாங்க என் உடைகளைகூட விற்கத் தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பொழுதுபோக்கே முதல் குறிக்கோள். இப்பொழுதுபோக்கில் தோனியை ரசிக்காதவர்கள் மிகக் குறைவே! இதில் ஷாருக் கானும் விதிவிலக்கல்ல. காரணம் தனது சமீபத்திய பேட்டியில் தோனியை தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டி அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில்,'தோனி போன்ற ஒரு சிறந்த வீரரை எங்கள் அணிக்காக வாங்குவதற்கு, எனது பைஜாமா உடைகளைக்கூட நான் விற்க தயார். ஆனால் அவர்…
-
- 1 reply
- 624 views
-
-
பிரேசிலில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. இப்போட்டி தொடருக்கான வெற்றிப் பரிசு தொகையை அதிகரித்துள்ளதாக சர்வதேச கால்பந்து சமேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:- கடந்த 2010ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 420 மில்லியன் டொலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த முறை இந்த பரிசுத்தொகையை 61 சதவீதம் அதிகரித்து 576 மில்லியன் டொலர் வழங்கப்பட உள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 35 மில்லியன் டொலர்களும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும். மேலும் பங்கு பெறும் 32 அணிகளுக்கும் தலா 1 மில்லியன் டொலருக்கும் மேலாக கிடைக்கும் …
-
- 1 reply
- 653 views
-
-
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! செய்திகள் விளையாட்டு ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸி. அணியை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இந்திய அணி எதிா்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற ஆஸி. அணி களத்தடுப்பை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 277/7 ஓட்டங்களை குவித்தது. ஆஸி. தரப்பில் டாா்ஸி பிரவுன் 3, அலனா…
-
- 1 reply
- 323 views
-
-
ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன இலங்கை அணியின் இரசிகர்களுக்கு, பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் கிடைத்த த்ரில்லர் வெற்றி உற்சாகத்தையும், அணி மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. இலங்கையின் இந்த வெற்றி மூலம் அனைத்து இரசிகர்களும் களிப்புற்று வரும் இத்தருணத்தில் இலங்கை அணிக்கும், இலங்கையின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிய சுழல்…
-
- 1 reply
- 443 views
-