விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
மக்கள் அபிமான வீரராக மீண்டும் சங்கக்கார, அதிசிறந்த வீரராக மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வருடத்தின் அதி சிறந்த வீரர் விருதை ஏஞ்சலோ மெத்தியூஸ் வென்றெடுத்த அதேவேளை மக்கள் அபிமான வீரர் விருதை குமார் சங்கக்கார மூன்றாவது தடவையாக வென்றெடுத்தார். டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்று இரவு கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் மெத்தியூஸ் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீரர் விருதையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான விருதையும் வென்றெடுத்தார். லசித் மாலிங்க அதிசிறந்த சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் பந்துவீச…
-
- 1 reply
- 482 views
-
-
ஆதிக்கம் செலுத்தி அரையிறுதி வாய்ப்புப் பெற்ற நான்கு அணிகள்: உலகக்கிண்ணம் 2015 மூன்றே மூன்று போட்டிகள் மீதமாக இருக்க, 11ஆவது உலகக்கிண்ணத்தின் வெற்றியாளர் யார் என்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். பரபரப்பான முதற்சுற்று போட்டிகள் - 42. முதற்சுற்றுப் போட்டிகளில் இருந்த பரபரப்பு, போட்டித் தன்மை ஆகியன முற்றுமுழுதாக வடிந்தது போல, வென்ற அணிகள் மிக இலகுவாக வென்றதாக அமைந்து ரசிகர்களை ஓரளவு ஏமாற்றியிருந்தன நான்கு காலிறுதிப் போட்டிகளும். முன்னைய கட்டுரையில் நான் எதிர்வு கூறியதைப் போல, கிரிக்கெட் விற்பன்னர்கள் பலரும் எதிர்பார்த்ததைப் போல, தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தலில் முதல் நான்கு இடத்திலும் உள்ள நான்கு அ…
-
- 1 reply
- 640 views
-
-
விடைபெறும் வேளையில் எதிரணியை களங்கடித்த மெக்கல்லம் (வீடியோ) February 8, 2016 12:09 pm நியூஸிலாந்து - அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இது நியூஸிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி சர்வதேச ஒரு நாள் தொடராகும். இதன்பிறகு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி மெக்கல்லத்துக்கு சிறப்பான முறையில் பிரியா விடைகொடுக்க நியூஸிலாந்து அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு …
-
- 1 reply
- 517 views
-
-
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் : தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை ஆரம்பம் 11 ஆவது மகளிர் ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை 7ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளன. 2017 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதி காண் சுற்றுப் போட்டிகளே இலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இம் முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 8 நாடுகளின் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன. இதில் பங்கேற்கவுள்ள ம…
-
- 1 reply
- 485 views
-
-
சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம் September 1, 2015 09:03 pm தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, 10-வது விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார். இதன்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இசாந்த் சர்மாவிற்கு தொடர்ந்து பவுன்சராக வீசினார். இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…
-
- 1 reply
- 250 views
-
-
ரி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் Published By: Vishnu 03 Nov, 2025 | 12:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அஸாம் துடுப்பாட்ட சாதனை ஒன்றை நிலைநாட்டியதுடன் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கைப்பற்றியது. அப் போட்டியில் 68 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம், சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக மொத்த ஓட்ட…
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை 12 MAR, 2024 | 11:47 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று …
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
2016 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது யார்? ஆசியா உட்பட உலக நாடுகளிடையே போட்டி [07 - June - 2008] 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஆசியா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கடும்போட்டி நிலவுகிறது. சீனாவில் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டில் (824) நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டி, 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டியை நடத்துவதற்கு உலக நாடுகள் பல போட்டியிட்டு வருகின்றன. இருந்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளிடையில்தான் கடும் போட்டி இருக்குமெனத் தெரிகிறது. இதற்கிடையே போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள், தங்களது சாதகமான அம்சங்களைத் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத…
-
- 1 reply
- 1.3k views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 ஆவது தடைவையாகவும் பெலென்டோ விருதினை சுவீகரி்த்துக் கொண்டார் போர்த்துக்கல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாண்டுக்கான பெலென்டோ விருதுக்கு பாத்திரமானார். இவர் இந்த விருதினை வென்றுள்ள நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பெலென்டோ விருது வழங்கும் விழா ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நேற்று (12) நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பலரது எதிர்பாரப்புகளுக்கு மத்தியில் வருடத்தின் திறமையான கால்பந்தாட்ட வீரருக்கான விருதினை போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்று…
-
- 1 reply
- 594 views
-
-
சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்…
-
- 1 reply
- 975 views
-
-
IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கோப்புப் படம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ: நேற்றைய போட்டியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி எனும் பெருமை…
-
- 1 reply
- 299 views
- 1 follower
-
-
ஒழுங்காகவே விளையாடாத விராத் கோஹ்லிக்கு ஐசிசி விருது கிடைக்குமா.....? துபாய்: சமீப காலமாக பெரிய அளவில் பிரகாசிக்காமல் உள்ள விராத் கோஹ்லி, ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த பிரிவில் கோஹ்லி தவிர மேலும் மூன்று வீரர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள், தென் ஆப்பிரிக்காவின் க்வின்டன் டி காக், அப் டிவில்லியர்ஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆவர். இதற்கான பரிந்துரையை ஐசிசி இன்று அறிவித்தது. ஒரே இந்திய வீரர் ஆடவர் பிரிவில் ஐசிசி அறிவித்துள்ள விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராத் கோஹ்லி மட்டுமே மகளிர் பிரிவில் மித்தாலி ராஜ் மகளிர் பிரிவில், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான பட்டியலி…
-
- 1 reply
- 551 views
-
-
07 AUG, 2023 | 04:36 PM இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தனது ஒய்வை அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். பல வருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு எந்த பெண் வீராங்கனையும் இவ்வளவு காலம் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 உலககிண்ணப்போட்டிகளின் பின்னர் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன்,என அவர்தெரிவித்துள்ளார். இலங்கை அணி நாடு திரும்பினால் கூட நான் அவர்களுடன் இலங்கை வரமாட்டேன், சர்வதேச போட்டிகளில்…
-
- 1 reply
- 402 views
- 1 follower
-
-
இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது. தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, விக்க…
-
- 1 reply
- 444 views
-
-
பழைய பெருச்சாளியை இப்போது ஏன் "பிட்ச்"சுக்கு நடுவே ஓட விடுகிறார் சச்சின்? மும்பை: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த முறை எந்த சாதனைக்காகவும் அவர் பரபரப்பைக் கிளப்பவில்லை. மாறாக பெரும் சர்ச்சை மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். குறிப்பாக கிரேக் சேப்பல் மீது இவர் கூறியுள்ள சரமாரியான புகார்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் பொய் என்று சேப்பல் கூறியுள்ளார். ஆனால் முன்னாள் வீரர்கள் பலரும் சச்சின் சொன்னது உண்மை. அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று அடித்துக் கூறி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் ஏன் இப்பப் போய் சொல்கிறார் சச்சின் என்பதுதான் புரியவில்லை. சேப்பல் கதை முடிந்து அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்ட நிலையில் இப்போது பழைய…
-
- 1 reply
- 940 views
-
-
ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி சிவகுருநாதன் கிண்ணத்தை வென்ற யாழ் இந்து By Ravivarman - கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிவகுருநாதன் நினைவுக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தை தமதாக்கினர். வருடாந்தம் இடம்பெறும் இந்த போட்டியின் இவ்வருட மோதல் கடந்த சனிக்கிழமை (14) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. மைதானத்தின் ஈரத்தன்மையின் காரணமாக இருபது ஓவர்களிற்கு மட்டுப்பட்டிருந்த இந்த போட்டியில் ஆனந்தா கல்லூரியினை வெற்றிபெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தினை…
-
- 1 reply
- 949 views
-
-
ஸச்சின் எனும் ஆச்சரியம் சித்தார்த்தா வைத்தியநாதன் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். பின், அங்கு சுழன்று கொண்டிருக்கும் மங்கலான எண்ணங்கள், பிம்பங்கள், தொடர்சித்திரங்கள் இவற்றிலிருந்து உங்கள் நினைவாற்றலின் முழு முனைப்புடன் ஸச்சின் ஒரு டெஸ்ட் மாச்சில் பங்குபெற்ற ஒரு தினத்தின் ஞாபகங்களைத் தேர்வு செய்யுங்கள். அது மெல்போர்னில் ஆடிய ஒரு பந்தயமாய் இருக்கலாம். அல்லது போர்ட் ஆஃப் ஸ்பெயினில். ஹராரே அல்லது சென்னையின் ஒரு புழுக்கமான காலையாக இருக்கலாம். இவை எதுவுமேயன்றி ஹெடிங்க்லி மைதானத்தை முறியடிக்க மேகங்கள் அச்சுறுத்திய மாலைப்பொழுதாகவும் இருக்கலாம். எந்த டெஸ்ட், எந்தக் களம் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், அந்த ஆட்டத்தில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்த அந்தத் தருணத்தை நினை…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை வீரர் செனநாயக்கே பந்து வீச தடை சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவின் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது. அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, அவரது பந்து வீச்சு முறைகளை சிறப்பு நிபுணர்கள் மூலம் ஐ.சி.சி. பரிசோதனை செய்தது. இதன் முடிவில் அவரது பவுலிங் விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாகவும், எனவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிப்பதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பந்துவீச்சில் உள்ள சர்ச்சைகளை களைந்து மறுஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர் இனி பந்து வீச முடியும். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=125142
-
- 1 reply
- 470 views
-
-
‘வாட்டே மேட்ச்... வாட்டே கம்பேக்..!’ - பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம் ‘‘Bloody hell!’’ - ஃபுட்பால் குறித்து மான்செஸ்ட் யுனைடெட் கிளப் முன்னாள் பயிற்சியாளரான ஜாம்பவான் சர் அலெக்ஸ் பெர்குசன் சொன்ன வார்த்தைகள் இவை. உச்சபட்ச பாராட்டு கெட்ட வார்த்தையில்தானே முடியும்! இந்தியாவுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு அணிகள் மோதிய, சாம்பியன்ஸ் லீக் மேட்ச்சை நேற்று நள்ளிரவு கண் விழித்து பார்த்தவர்களுக்குப் புரியும், பெர்குசன் ஏன் அப்படி வர்ணித்தார்... கால்பந்து ஏன் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்திருக்கிறது என்று. எஸ்... ஃபுட்பால் இஸ் ஏ பியூட்டிஃபுல் கேம். ஏன், எதனால்? இரண்டு வாரங்களுக்கு முன் பாரிஸில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் -1…
-
- 1 reply
- 825 views
-
-
தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்! டெல்லி வீரர்களைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் டெல்லி - விதர்பா அணிகளுக்கிடையிலான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற விதர்பா, ரஞ்சிக்கோப்பையை வென்றது இதுவே முதல்முறை. Photo Credit: Insta/bleed.dhonism ஏழு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி வென்றது. முதல்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள விதர்பா அணிக்கு, டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அந்த இரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின்போது, பவுன்சர் பந்து தாக்கியதால் வேதனையில் துடித்த விதர்பா…
-
- 1 reply
- 1.5k views
-
-
கோலி பேட்டிங் குறித்த ஆண்டர்சன் விமர்னத்துக்கு இன்சமாம் பதிலடி இன்சமாம். | கோப்புப் படம். கோலி பேட்டிங் குறித்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறிய விமர்சனத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணித் தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி பேட்டிங் பற்றி கூறும்போது, ஸ்விங், பவுன்ஸ் இல்லாத இந்திய பிட்ச்களில் கோலியின் பேட்டிங் உத்திகளில் உள்ள போதாமைகள், குறைபாடுகள் தெரிவதில்லை. உள்நாட்டு பிட்ச்கள் அவரது குறைபாடுகளை மறைத்து விடுகிறது என்றார். “அவர் பேட்டிங் மாறிவிட்டதாக நான் கருதவில்லை. அவரது ஆட்டத்தில் உள்ள கோளாறுகள் இந்தப் பிட்…
-
- 1 reply
- 395 views
-
-
ஷேவாக், கெய்ல், அப்ரிடியின் அதிரடியை மீண்டும் பார்க்கலாம்! #T10Cricke கிரிக்கெட் போட்டிகளை அடுத்த லெவலுக்கு நகர்த்திச் செல்லும் முன்னெடுப்புகளில் ஒன்றாக, பத்து ஓவர்கள் மட்டுமே கொண்ட 'டி-10 கிரிக்கெட்' போட்டித் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ் கெய்ல், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்கரா ஆகியோர் இப்போட்டிகளுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, நால்வருமே களத்திலும் இறங்கி கலக்க இருக்கிறார்கள். ஆசிய நாடுகளைச…
-
- 1 reply
- 683 views
-
-
14 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத தோல்வி: தரவரிசை 55-ல் உள்ள வீரரிடம் முதல் முறை தோல்வி; ரோஜர் பெடரர் அதிர்ச்சி ரோஜர் பெடரர், ஜான் மில்மேன். | ஏ.பி. யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு 4வது சுற்றில் உலகத்தரவரிசை 2ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர், இந்தத் தொடரில் தரவரிசை வழங்கப்படாத ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனிடம் 3-6, 7-5, 7-6, 7-6 என்ற செட்களில் தோற்று அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார். யு.எஸ். ஓபன் டென்னிஸில் ஜான் மில்மேனுக்கு தரவரிசை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ‘அன்சீடட்’ வீரரிடம் பெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 14 ஆண்டுகால யு.எஸ்.ஓபன் டென்னிஸில் இல்லாத அளவுக்கு ரோஜர் பெடரர் மு…
-
- 1 reply
- 505 views
-
-
தோல்வியுறாத அணியாக ஆண்டை பூர்த்தி செய்த லிவர்பூல் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் வெல்வர்ஹம்ப்டன் வொன்டரர்ஸ் அன்பீல்டில் நடைபெற்ற போட்டியில் சர்ச்சைக்குரிய வீடியோ நடுவர் உதவிக்கு (VAR) மத்தியில் வொல்வஸ் அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய லிவர்பூல் அணி 13 புள்ளிகள் முன்னிலையுடன் ப்ரீமியர் லீக்கில் முதலிடத்துடன் இந்த ஆண்டை பூர்த்தி செய்தது. லிவர்பூல் அணிக்காக தனது 150 ஆவது போட்டியில் களமிறங்கிய சாடியோ மானே முதல் பாதி …
-
- 1 reply
- 905 views
-
-
முதல் முறையல்ல, பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித், வார்னர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டனர்: போட்டி நடுவர் பகீர் தகவல் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் : கோப்புப் படம் - படம்: கெட்டி இமேஜஸ் பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரு…
-
- 1 reply
- 232 views
-