Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இந்த சூழலில், இவர் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும், டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டிதான் இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஃபேல் நடால் பேசியதாவது, “நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. அனைவரும் ஒரு நாள் இந்த முட…

  2. பம்பலப்பிட்டி - யாழ். இந்துக் கல்லூரிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகியது கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியது. இன்று காலை ஆரம்பமாகிய இப் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறும். இப் போட்டி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக கணபதி தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் தலைவராக கஜானந்த் செயற்படுகின்றார். இவ் வருடம் 2 ஆவது முறையாக நடைப…

  3. ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி., கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HeroISL #FCGoa #ChennaiyinFC சென்னை: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன. இதற…

  4. இந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திடீரென பயிற்சியாளர் பதவிக்க…

    • 1 reply
    • 567 views
  5. றியல் மட்றிட்டுக்கு 10ஆவது ஐரோப்பிய லீக் பட்டம் 2014-05-25 20:30:54 அத்­லெட்­டிகோ மட்றிட் கழ­கத்தை றியல் மட்றிட் கழகம் 4 : 1 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்டு பத்­தா­வது தட­வை­யாக ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் சம்­பியன் பட்­டத்தை சூடிக்­கொண்­டது. லிஸ்பன், டாலுஸ் விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் 90ஆவது நிமிடம் வரை அத்­லெட்­டிக்கோ மட்றிட் கழகம் முதல் தட­வை­யாக ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் சம்­பியன் பட்­டத்தை சூடு­வ­தற்­கான வாயிலில் நின்­று­கொண்­டி­ருந்­தது. கடு­மை­யா­கவும் சரி­ச­ம­மா­கவும் மோதிக் கொள்­ளப்ட்ட இப் போட்­டியின் 36ஆவது நிமி­டத்தில் ஜுவான்ஃப்ரான் தலையால் தட்டி பரி­மாற்­றிய பந்தை டியகோ கொடின் கோலாக்கி அத்­லெட்­டிக்கோ மட்…

  6. ஐ.பி.எல். பெங்களூரு அணியிலிருந்து கோலி விலகல்? - விஜய் மல்லையா விவகாரத்தால் முடிவு * பெங்களூரு அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா மீது பல புகார்கள் இருப்பது, கோலிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு அணியிலிருந்து அவர் விலக உள்ளதாக தகவல். * இதனை உறுதிபடுத்தும் வகையில், பெங்களூரு அணியின் வீரர்களை தக்க வைத்து கொள்ளும் பட்டியலில் கோலியின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. Thanthi TV

  7. பாக்.டெஸ்ட் தொடர்: வலுவில்லாத ஆஸி. அணியில் 5 புதிய வீரர்கள்; மீண்டும் பழைய வீரர் சிடில் புதிய வேகப்பந்துவீச்சாளர் டாகெட், பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் இல்லாத 5 புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக …

  8. IND Vs BAN இஷாந்த் ஷர்மாவின் பேய் ஆட்டத்தில் வங்கதேசத்தை ‘ஒயிட் வாஷ்’ செய்த இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வந்த வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திற்கு எ…

  9. இங்கிலாந்து சென்றது இலங்கை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, இன்று புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி…

    • 1 reply
    • 638 views
  10. நின்ற இருதயம் மீண்டும் இயங்கியது: பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹனீப் முகமது உயிர் பிழைத்த அதிசயம் பாகிஸ்தான் லெஜண்ட் ஹனீப் முகமது. | படம்: தி இந்து ஆர்கைவ்ஸ். 6 நிமிடங்கள் நின்று போன இருதயம் மீண்டும் மருத்துவர்கள் முயற்சியால் உயிர் பெற்றது, இறந்து பிழைத்த பாக். முன்னாள் கிரிக்கெட் லெஜண்ட் ஹனீப் முகமது. பாகிஸ்தான் கிரிக்கெட் ‘லெஜண்ட்’ ஹனீப் முகமது இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது, ஆனால் சரியாக 6 நிமிட மருத்துவ முயற்சிக்குப் பிறகு இருதயம் செயல்படத் தொடங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு வயது 81. கராச்சியில் உள்ள அகாகான் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு 6 …

  11. சச்சின், சேவக் சாதனையை முறியடித்தார் அஸ்வின்! மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகித்தது.நான்காம் போட்டி வியாழன் அன்று தொடங்கியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தார்கள். முதல் நாள் அரை மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் மழை குறுக்கிட 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யாத போதும் ஆட்டம் நடைபெறவில்லை. மழையால் சேதமடைந்த மைதானத்தை, மீட்டெடுக்க முடியாமல் தொடர்ந்து நான்கு நாட்களும் வெறுமனே கழிந்தது. இறுதியாக , போட்டி டிராவில் முடித்துக்கொள்வதாக அறிவிக்க…

  12. ஊடகங்களை உதைந்தார் மெஸ்ஸி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மோசமான பெறுபேறுகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்திருந்த ஆர்ஜென்டீன அணி, கொலம்பிய அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுவிட்டு, ஊடகங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது. உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் முதற்போட்டியில் வென்ற ஆர்ஜென்டீன அணி, அதன் பின்னர் இடம்பெற்ற 4 போட்டிகளில், வெற்றியைப் பெறத் தவறியிருந்தது. அதில் இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. முன்னதாக, ஜூன் மாதம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது. இதையடுத்து, ஆர்ஜென்டீன அணி மீது, கடுமையான விம…

  13. ஆண்கள் ஒற்றையர் விம்பில்டன் ரெனிஸ் சம்பியன்சிப் 77 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரிட்டனிடம் வந்துள்ளது. கடைசியாக 1936 இல் Fred Perry என்பவரால் இந்த தலைப்பு வெல்லப்பட்டிருந்தது. இன்று வெம்பில்டனில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல் தர வீரரான Novak Djokovic ஐ 6-4 7-5 6-4 என்ற செற்களில் தோற்கடித்து ஆன்டி மொரே (Andy Murray) (இவர் ஒரு ஸ்கொட்லாண்ட் வீரர் ஆவார். ஸ்கொட்லாண்ட் 2014 இல் பிரிட்டனில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கான வாக்களிப்பை நடத்த உள்ளது) 77 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பினை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த வெற்றியை.. பெற்றுக் கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் ஆன்டி மொரே. http://www.bbc.co.uk/sport/0/tennis/23217393 https://www.youtube.com/watch?v=…

    • 1 reply
    • 854 views
  14. டெல்லியில் இனிமேல் போட்டி நடத்துகையில் காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும்: பி.சி.சி.ஐ இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித…

  15. விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்- மனம் திறந்தார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ரஷ்யாவில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன்…

  16. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சினெர் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த…

  17. ஐ.பி.எல். கிரிக்கெட்: இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா உள்பட 7 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்க…

  18. இந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு இருபது போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்தநிலையில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்று சமநிலையில் முடிய, இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வியை சந்தித…

  19. கால்கள் இல்லாமல் சாதிக்கும் மல்யுத்த சுட்டி (வீடியோ) வாழ்க்கையில் ஏதும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்துவிட்ட பின்பும் கூட, நாம் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படிப்பட்ட காரணத்தைக் கண்டுபிடிப்பவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள். அப்படியொரு சாதனையாளன்தான் ஆறு வயதே நிரம்பிய ஐசயா பேர்ட் (isaiah bird). நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஐசயா பேர்ட், தங்குவதற்கு என்று வீடும் இல்லை, நடப்பதற்கு என்று கால்களும் இல்லை. பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்த ஐசயா, தன் குடும்பத்துடன் ஒரு சர்ச்சில் கூடாரம் போன்ற இடத்தில் வசித்து வருகிறான். இப்படியொரு மோசமான சூழ்நிலையில் பிறந்த ஐசயா, இப்பொழுது ஒரு மல்யுத்த வீரன். இந்த சிறுவனை கண்ட ரோட்ரீகஸ் என்ற மல்யுத்த பயிற்சியாளர், இவனை கை…

  20. சேத்தன் கொரடா சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர். இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான சேத்தன், செயற்கைக் கால்களுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கெடுத்தார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கார் பந்தய சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் சேத்தன், “எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விடக்கூடாது. நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது கார் பந்தயங்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன” எனத் தெரிவித்தார். மேலும், பேசிய அவர், “விடா முயற்சி வேண்டும். எது ஒன்றையும் முடிவெடுத்தால் விடக்கூடாது. எந்தவொரு எல்லைகளையும் மனதில் நிர்ணயித்துக் கொ…

  21. மாகாண கூடைப்பந்தில் யாழ்ப்பாணம் சம்பியன் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டம் சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட அணி மோதியது. 42:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது. http://uthayandaily.com/story/2802.html

  22. பணப் பிரச்சினையால் உகாண்டாவில் தவித்து வரும் பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டா கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டி20 கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 20 பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சயீத் அஜ்மல், யாசீர் அகமது, இம்ரான் பர்கத் உள்ளிட்ட 20 வீரர்கள் உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் லீக் தொடரில் பங்கேற்க சென்று இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டாவில் உள்ள கம்பலாவுக்கு சென்றதும், பண வரவு செலவு பிரச்சினை காரணமாக 20 லீக் தொடர் ரத்து செ…

    • 1 reply
    • 369 views
  23. பந்து தாக்கியதில் பாக்., வீரர் மரணம் ஜனவரி 26, 2015. கராச்சி: பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், பந்து மார்பில் தாக்கியதில் இளம் வீரர் ஜீஷான் முகமது மரணமடைந்தார். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், நேற்று நடந்த கிளப் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, இளம் வீரர் ஜீஷான் முகமதுவின், 18, மார்பில் பலமாக தாக்கியது. இதனால் சுருண்டு விழுந்த இவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜீஷான் முகமது மரணமடைந்தார். இதுகுறித்து ஜீஷான் முகமதுவை பரிசோதித்த டாக்டர் சமாத் கூறுகையில், ‘‘ஜீஷான் முகமதுவின் மார்பு பகுதியில் தாக்கிய பந்து, அவரது இதயத்தை பல…

  24. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியக் கப்டன் சர்வான், காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக டேரன் கங்கா புதிய கப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 2 ` ருவென்ரி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹெடிங்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் களத்தடுப்பு செய்துகொண்டிருந்த போது சர்வானுக்கு வலது தோள் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அப்போட்டியின் இரண்டு இனிங்சிலும் துடுப்பெடுத்தாடவில்லை. இதனால் அணி இனிங்ஸ் மற்றும் 283 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவரது காயம் குணமடைய இன்னும் 6 வாரங்களுக்கு மேலாகும் என்பதால், தொடரிலி…

    • 1 reply
    • 967 views
  25. கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக கப்பில விஜேகுணவர்த்தன நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக கப்பில விஜேகுணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். கப்பில விஜேகுணவர்த்தன இலங்கை அணி சார்பாக 2 டெஸ்ட் போட்டிகளிலும்,26 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.