விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா டோணி(93), திணேஷ் கார்த்திக்(58) அபாரம் டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி அபாரமாக ஆடி 93 ரன்களைக் குவித்தார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று டாக்காவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் அந்த அணியை சந்தித்தது. மழை காரணமாக தலா 47 ஓவர்களைக் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய வங்கதேசம் பின்னர் அடித்து ஆடி விரைவாக ரன்களைக் குவித்தது. 47வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வங்கதேசம் 250 ரன்களைக் குவித்தது. ஜாவேத் ஒமர் 80 ரன்களும், சகீ…
-
- 14 replies
- 2.2k views
-
-
அவுஸ்திரேலியா இந்தியா மோதும் 2வது இறுதியாட்டத்தில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர் கூடுதலாக 91 ஓட்ங்களை பெற்றுள்ளார்.இவர் இத்தடன் 17வது தடவையாக 90 ஓட்டங்களில் அவுட்டாகியுள்ளார். 259 என்று வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலியா இன்னும் சில நிமடங்களில் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் இந்தியா வென்றால் இந்தியா கோப்பையை கைப்பற்றும். அவுஸ்திரேலியா வாழ்வா சாவா என முழு மூச்சுடன் இதை வெல்ல முயலும் அவுஸ்திரேலியா வென்றால் இன்னுமொரு போட்டி இடம் பெறும்.
-
- 9 replies
- 2.2k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ஜொன்டி ரோட்ஸை நியமிப்பதற்கான பேச்சுக்களில் இலங்கை கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான ஜொன்டி ரோட்ஸ் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுநராக பணியாற்றுகிறார். இலங்கை அணியின் பயிற்றுநர்கள் விலகிய நிலையில் வரும் ஜுன் 8 ஆம் திகதி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 2 ருவென்ரி-20 போடடிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கை வருகிறது. இந்நிலையிலேயே இலங்கை அணியினருக்குப் பயிற்சிகளை வழங்க ஜொன்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபை கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. http://www.malarum.com/article/tam/2015/05/12/10033/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%…
-
- 0 replies
- 2.2k views
-
-
இன்று இந்தியாவில் மகளிர்க்கான உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பமானது .முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்டுள்ளது . இந்திய தரப்பில் விளையாடும் இரு தமிழ் வீரர்களும் மிக சிறப்பாக விளையாடினார்கள் . காமினி ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் அடித்தார் ,பந்து வீச்சில் நிரஞ்சனா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன . இங்கிலாந்து ,இந்தியா ,மேற்கிந்திய தீவுகள் ,சிறி லங்கா பிரிவு A அவுஸ்திரேலியா ,நியுசிலாந்து ,பாகிஸ்த்தான் ,தென்னாபிரிக்கா பிரிவு B.
-
- 30 replies
- 2.2k views
-
-
அப்பாடா ஒரு மாதிரி சவுத் ஆபிரிக்கா அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துவிட்டதே. விபரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன் நன்றி
-
- 5 replies
- 2.2k views
-
-
ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள் . சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன. தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார். "தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன்…
-
- 26 replies
- 2.1k views
-
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு அபுதாபியில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராக லஹிரு திரிமான்னே கடமையாற்றவுள்ளார். இவர்கள் தவிர, திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரோஷென் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்சன் சந்தகன், தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு கமகே ஆகியோரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, மேலதிக…
-
- 38 replies
- 2.1k views
-
-
நோர்வே தமிழ் விளையாட்டு கழகத்தினரால் நாடாத்தப்பட்டுக் கொண்டிரிக்கின்ற ஐவருக்கான கரைப்பந்தாட்ட சுற்றுபோட்டில்யில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் சில விளையாட்டு வீரர்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம். எனது நண்பர் ஒருவர் ஈ மைல் மூலம் அனுப்பியுள்ள படங்களைத்தான் இங்கே இணைத்துள்ளேன். படங்களின் ஒளித்தரம் சற்று தெளிவின்றி உள்ளது. வரும்காலங்களில் ஒளித்தரம் கூடிய படங்களை தந்துதவுவார் எனும் நம்பிக்கையுடன். உங்கள் பார்வைக்கு விளையாட்டு வீரர்களின் அபார விளையாட்டில் இருந்து சில படங்கள்.
-
- 4 replies
- 2.1k views
-
-
நான்காவது நாளாகிய இன்று ஆட்டத்தை தொடர்ந்த சேவாக் 319 ஓட்டங்களில் அவுட்டாகினார். ஆதைத்தொடர்ந்து வந்த சச்சின் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்பாதைய நிலவரம் இந்தியா 114 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 483 ஓட்டங்களை பெற்றுள்ளது. தற்போது டிராவிட் 72 ஓட்டங்களுடனும் கங்குலி 2 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்
-
- 8 replies
- 2.1k views
-
-
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்புகளை ரஷ்ய ஜனாதிபதி புதின் கட்டார் ஜனாதிபதியிடம் இன்று ஒப்படைத்தார். உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியுடன் ரஷ்யாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடையும் நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு கட்டார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், …
-
- 5 replies
- 2.1k views
-
-
"அது" தட்டியதால் பறிபோன ஜப்பான் வீரரின் பதக்கம்... ஒலிம்பிக்கில் சோகம்! ரியோ : ஒலிம்பிக் போட்டிகளில் சுவராஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. விபத்துகளில் சிக்கி பலரும் பதக்க வாய்ப்பை இழந்துள்ளனர். உயரம் தாண்டும் போட்டியில் பங்குபெற்ற ஜப்பான் வீரரின் பதக்கக்கனவு அவரது ஆணுறுப்பினால் பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றுவருகின்றனர். இந்த போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு போட்டியிலும் பங்கேற்று வருகின்றனர். ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஒஜிடா எனும் வீரர் போல் வால்ட்…
-
- 16 replies
- 2.1k views
- 1 follower
-
-
ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட் கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். ஐரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் மூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமி…
-
- 9 replies
- 2.1k views
-
-
இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கு 99% தெரிவாகிவிட்டது. இதானால் இவ் அணி பாரததிற்கு எதிரான போட்டியில் அரசியல் செய்து தோல்வியை தழுவும் என்நம்புகிறேன். வேலைக்கு முழுக்கு போட்டு இவ் விளையாட்டை பார்ப்பவர்கள் சிந்திக்கவும். கிரிக்கெட்டில் முழு பைத்தியம்மாக இருக்கும் பாரத அணிக்கும் இலங்கை அணி கை கொடுக்கும் என நம்புகிறேன். இதனால் இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இலங்கை இருக்கும்.
-
- 10 replies
- 2.1k views
-
-
சைமண்ட்சுக்கு மனநல பாதிப்பு? : சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை சர்ச்சை நாயகன் சைமண்ட்ஸ், மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மன நல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவது அவருக்கு உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் மருத்துவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது.…
-
- 4 replies
- 2.1k views
-
-
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் பிரிவில் செல்வி ச. சங்கவி 1ஆம் இடத்தை பெற்றுள்ளார். கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெறும் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 20வது வயது பெண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச்சேர்ந்த செல்வி ப. கிரிஜா 2.85m உயரம் பாய்ந்து 3ஆம் இடத்தை பெற்றுள்ளார். http://www.tamilsguide.com/blog/srilanka-news/13994
-
- 12 replies
- 2.1k views
-
-
இலங்கையில் சிங்களவர்கள் காட்டும் ரவுடித்தனத்தை ஒஸ்ரேலியாவில் சிறிலங்கா கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன காட்டியதால் அவருக்க போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஓஸ்ரேலியா அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்ற ஒஸ்ரேலியாவுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின்போது பர்வீஸ் மஹரூவ் வீசிய பந்தொன்று துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேல் உயர்ந்தால் நடுவர் புரூஸ் ஒக்ஸன்போர்ட், அப்பந்தை நோபோலாக அறிவித்தார். இதனால் நடுவருடன் மஹேல ஜயவர்தன வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவருக்கு அடிக்க கையை ஓங்கினார். கேவலமான வார்த்தைகளால் ஏசினார். இந்நிலையில் மஹேலவின் நடவடிக்கையான ஒழுங்குவிதிகளின் 2.1.3 ஆவது பிரி…
-
- 30 replies
- 2.1k views
-
-
முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில் 2014-10-31 12:26:55 முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது அத்தியாயத்தை இரக்கத்திற்கான சிந்தனை மன்றத்தின் ஸ்தாபகரும் உலக பந்து வீச்சு சாதனையாளருமான முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி அணிக்கும் திருகோணமலை - மட்டக்களப்பு பாடசாலைகள் கூட்டு அணிக்கும் இடையிலான போட்டிக்கான நாணயத்தை சுழற்சியை முத்தையா முரளிதரன் நடத்தி ஆரம்பித்துவைத்தார். முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் (2 மைதானங்கள்), கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுவதுடன் மா…
-
- 8 replies
- 2.1k views
-
-
தற்போதைய பருவகாலத்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரெஸ்ட் சுற்றுப் போட்டிகளின் போது தங்கள் வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் போகும் இடமெங்கும் இனவெறியைக் காட்டியதாக தென்னாபிரிக்க வீரர்களும் நடந்துவரும் ஒரு நாள் போட்டிகளில் போது தங்கள் மீதும் இனவெறித்தாக்குதல் நடந்ததாக சிறீலங்கா வீரர்களும் கவலை தெரிவித்திருப்பதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கான தங்கள் சுற்றுலாவை தாங்கள் பகிஸ்கரிக்கப் போவதாக தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் அவுஸ்திரேலியா சிறீலங்கா தென்னாபிரிக்கா கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் VB தொடரின் போதும் நேற்று (29-1-2006) போட்டி நடந்த வேளையில் கூட சிறீலங்கா வீரர்கள் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளானதாக …
-
- 4 replies
- 2.1k views
-
-
முரளியின் பந்துவீச்சை மீண்டும் குறை கூறுகிறார் பிஷன்சிங்பேடி [09 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிவதாக, பிஷன்சிங் பேடி கடுமையாக தாக்கியிருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 1100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருப்பவர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவ்வப்போது அவரது பந்து வீச்சு, சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. இந்த நிலையில், அவரது பந்து வீச்சை இந்திய அணியின் முன்னாள் கப்டன் பிஷன்சிங் பேடி மீண்டும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். பேடி அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது; "முரளிதரன் பந்து வீசுவது, குண்டு எறிவது போலவும், ஈட்டி எறிவது…
-
- 9 replies
- 2.1k views
-
-
லாலம்பூர்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலாலம்பூரில் இன்று நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தார். இது அவருக்கு 40வது ஒரு நாள் சதமாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை அபாரமாக தோற்கடித்தது. இன்று இந்தியாவுக்கும்,மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிடும், சச்சின் டெண்டுல்கரும் களம் இறங்கினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் களம் இறங்கியதால் ர…
-
- 5 replies
- 2.1k views
-
-
எட்டாவது உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இன்று ஆரம்பம் சர்வதேச றக்பி சபையினால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் எட்டாவது அத்தியாயம் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 20 நாடுகள் நான்கு குழுக்களில் மோதும் உலகக் கிண்ண றக்பி போட்டிகள் இங்கிலாந்துக்கும் ஃபிஜிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. லண்டன், ட்விக்கென்ஹாம் விளையாட்டரங்கில் இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இறுதிப் போட்டி இதே அரங்கில் ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண றக்பி போட்டிகள் முதன் முதலில் அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் 1987இல் கூட்…
-
- 24 replies
- 2.1k views
-
-
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்பாராத விதமாக சமனிலையில் முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் தலா 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி வீரர் ப்லான்கெட் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டம் பெற்று போட்டியை சமநிலை செய்தார். நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. …
-
- 13 replies
- 2.1k views
-
-
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம் நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும். இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்…
-
- 25 replies
- 2.1k views
-
-
பிறந்த நாளில் ஓய்வு அறிவித்த வீரேந்திர சேவாக்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் இன்று ஓய்வு அறிவித்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் தினமான இன்று அவர் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சேவாக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹைதரபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார். இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 8 ஆயிரத்து 586 ரன்களை பெற்றுள்ளார். அதோடு சேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 273 ரன்களை அடித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஆப்ஸ்பின்னும் வீசுவார். அந்த வகையில் 136 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். தற்போது துப…
-
- 9 replies
- 2.1k views
-
-
ஆஸி. – நியூசி நாளை முதல் டெஸ்ட் November 04, 2015 ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் நாளை ஆஸ்திரெலியாவின் பிரிஸ் பெயின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிமித்தின் தலைமையில் அதிகளவான இளம் வீரர்களைக் கொண்டதாக ஆஸ்திரேலிய அணியும், மக்கலத்தின் தலைமையில் அதிகளவான அனுபவ வீரர்களைக் கொண்டதாக நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. ஆள்பலத்தின் அடிப்படையில் நியூசிலாந்து பலம் மிக்கதாகக் காணப்பட்ட போதிலும் சொந்த மண், பழக்கப்பட்ட ஆடுகளம் என்பன ஆஸ்திரேலிய அணிக்குக் சாதகமாக அமையும். இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதியும் மூன்றாவது டெஸ்ட் எதிர்வரும் 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/spor…
-
- 11 replies
- 2.1k views
-