விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி By A.Pradhap - ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 362 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி, மதியபோசன இடைவேளைக்கு முன்னர் 406 ஓட்டங்களை குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணி சார்பாக சேன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 107 ஓட்டங்களை…
-
- 2 replies
- 463 views
-
-
அவிஷ்க மற்றும் திமுத்தின் வலுவான ஆரம்பம் மற்றும் ஹசரங்கவின் பொறுப்பான துடுப்பாட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது. மேற்கி…
-
- 0 replies
- 378 views
-
-
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க ஆகிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் 255 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடி வரும் தென்னாப்பிரிக்க அணி சற்று முன்னர் வரையில் 30 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுள்ளது. http://www.hirunews.lk/tamil/sports/236030/தென்னாப்பிரிக்கா-அணியின்-அதிரடி-ஆட்டம்
-
- 0 replies
- 340 views
-
-
மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் குக் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார். அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 31ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆன குக், இதுவரை சச்சின் டெண்டூல்கரின் பெயரில் இருந்த சாதனையை முறியடித்துள்ளார். டெண்டூல்கர் 31 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள் எனும் வயதில் இருந்த ந…
-
- 5 replies
- 714 views
-
-
ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து ; ஒருவர் பலி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து ஷகிப் அல் ஹசன் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷகிப் அல் ஹசன் தா…
-
- 0 replies
- 453 views
-
-
கிரிக்கெட் உலகில் யாருமே அணியாத ஜேர்சியுடன் களமிறங்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி.. சுதேசிய ஜேர்சி தொடர்பான முழு விபரம் ! விளையாட்டு இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணி புதியதொரு மேலங்கியுடன் (ஜேர்சி) களமிறங்குகிறது. அதாவது அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய ஜேர்சியுடன் களமிறங்குகிறது. சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய குறித்த ஜேர்சியானது புகழ்பெற்ற 1868 பழங்குடி கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் கதையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது தேசிய மகளிர் அணியினை முன்னிலைப்படுத்தி…
-
- 2 replies
- 762 views
-
-
ஆறாவது ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா கோலாகல கொண்டாட்டத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் சீன இசை வாசிக்கப்பட உள்ளது. ரசிகர்களைக் கவரும் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட உள்ளன. தொடக்க நிகழ்ச்சி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறுகையில், "இதுபோன்ற தொடக்க நிகழ்ச்சிகளை இதுவரை இந்தியாவில் எங்கும் கண்டிருக்க முடியாது. அந்த அளவு சிறப்பாக இருக்கும்' என்றார். இப்போட்டியில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பி…
-
- 1 reply
- 601 views
-
-
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் கலந்துரையாட விரும்பும் ஜோ ரூட் சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் அமர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது விருப்பத்தை கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 351 ரன்கள் என்ற இமாலய சேஸிங்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்தியா 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து ம…
-
- 0 replies
- 385 views
-
-
2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்: டோனி நம்பிக்கை 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி மாதம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதையடுத்து மூன்று வடிவிலான கிரிக…
-
- 0 replies
- 352 views
-
-
கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச் நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும் போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன். புல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல. களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச். மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் …
-
- 0 replies
- 328 views
-
-
புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ் மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார். கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்ன…
-
- 2 replies
- 366 views
-
-
தனது இரட்டைக் குழந்தைகளை வரவேற்றார் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகளாக இரு மகன்மார் பிறந்துள்ளனர். இரட்டைக் குழந்தைகளுக்கு போல்ட் தண்டர் மற்றும் செயிண்ட் லியோ என பெயர் வைத்து அவர்களை வரவேற்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை மகன்களின் பிறப்பை புகைப்படத்துடன் அறிவித்தார் போல்ட். அதில், உசைன் போல்ட் அவரது மனைவி காசி பென்னட், அவர்களின் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் ஆகியோர் தற்போது பிறந்த இரட்டையர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். மூத்த மகளான ஒலிம்பியா லைட்னிங் போ…
-
- 1 reply
- 670 views
-
-
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான அரங்கொன்று வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாரின் அல் வக்காரா நகரிலுள்ள இந்த கால்பந்தாட்ட அரங்கின் வடிவமைப்பானது பெண்ணுறுப்பை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நகரங்களில் ஒன்றாக அல் வக்காரா விளங்கவுள்ளது. இந்நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள அரங்கின் கணினி மூலமான தோற்றத்த்தை கட்டார் உலகக்கிண்ண ஏற்பாட்டுக்குழு சில தினங்களுக்குமுன் வெளியிட்டது. 45,000 ஆசனங்களைக் கொண்ட இந்த அரங்கின் மேற்புறக் கூரையின் தோற்றத்தைப் பார்த்த சிலர் இது பெண்ணுறுப்பு வடிவில் உள்ளது எனக் கருத்துத் தெரிவித்த…
-
- 0 replies
- 617 views
-
-
பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி வெற்றியைக் கொண்டாடும் மெக்சிகோ வீரர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் பனாமா அணியை 1-0 என்று வீழ்த்தி மெக்சிகோ அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் பிரேசில், ஜப்பான், இரான், போட்டியை நடத்தும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் 2018 உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற 5-வது அணியானது மெக்சிகோ. மெக்சிகோ சிட்டியில் உள்ள ஆஸ்டெக்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹிர்விங் லோசானோ 53-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல…
-
- 0 replies
- 313 views
-
-
ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் பெருமுதலாளிகளும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு அணிகளை ஏலம் …
-
- 0 replies
- 637 views
-
-
கவர் ட்ரைவ் கில்லி... ஃப்ளிக் ஷாட் புலி... கோலியின் பேட்டிங் ப்ளூ ப்ரின்ட்! #VikatanExclusive Chennai: "இந்திய அணியை 20 ஆண்டுகாலம் சுமந்திருந்தார். இது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய தருணம்" - 2011 உலகக்கோப்பையை வென்றதும், சச்சினைத் தன் தோள்களில் மைதானம் முழுதும் சுமந்து சென்ற விராட் கோலி கூறிய வார்த்தைகள். லிட்டில் மாஸ்டரை அன்று சுமந்த தோள்கள்தான், இன்று அவர் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டிருக்கிறது. டி-20யில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 2, டெஸ்டில் ஆறாம் இடம்... அனைத்து ஃபார்மட்களிலும் டாப் 10-ல் இருக்கும் மூன்று வீரர்களுள் முதன்மையானவர் விராட். போட்டிகளின்போது இவரோடு சேர்ந்தே களம் காண்கின்றன சாதனைகள். இந்த வாரமும் தன் சாதனைப் …
-
- 0 replies
- 526 views
-
-
என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?: ரசிகர் கேள்விக்கு மரியா ஷரபோவாவின் ரியாக்சன் துருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் என்னை திருமணம் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு அவரது ரியாக்சனைப் பார்ப்போம். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகளவில கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டென்னிஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதா…
-
- 0 replies
- 432 views
-
-
தற்போதைய பருவகாலத்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரெஸ்ட் சுற்றுப் போட்டிகளின் போது தங்கள் வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் போகும் இடமெங்கும் இனவெறியைக் காட்டியதாக தென்னாபிரிக்க வீரர்களும் நடந்துவரும் ஒரு நாள் போட்டிகளில் போது தங்கள் மீதும் இனவெறித்தாக்குதல் நடந்ததாக சிறீலங்கா வீரர்களும் கவலை தெரிவித்திருப்பதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கான தங்கள் சுற்றுலாவை தாங்கள் பகிஸ்கரிக்கப் போவதாக தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் அவுஸ்திரேலியா சிறீலங்கா தென்னாபிரிக்கா கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் VB தொடரின் போதும் நேற்று (29-1-2006) போட்டி நடந்த வேளையில் கூட சிறீலங்கா வீரர்கள் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளானதாக …
-
- 4 replies
- 2.1k views
-
-
இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராகுல் திராவிட் போன்ற பயிற்சியாளர் தேவை; ரமீஸ் ராஜா வலியுறுத்தல் ராகுல் திராவிட் போல் ஒருவர் தேவை: ரமீஸ் ராஜா. - படம். | ராய்ட்டர்ஸ். நியூஸிலாந்தில் நடைபெறும் யு-19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய இளம் வீரர்களிடம் பாக். இளம் வீரர்கள் 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தனது பார்வைகளை வெளியிட்டுள்ளார். இளம் இந்திய வீரர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் திராவிடின் பங்கை விதந்தோதிய ரமீஸ் ராஜா, பாகிஸ்தானுக்கும் திராவிட் போல் ஒரு பயிற்சியாளர் தேவை என்பதை வலியுறுத்தினார். தோல்வியின் இடைவெளி அதிர்ச்சிகரமாக உள்ளது என்றார் ரமீஸ் ராஜா. “…
-
- 0 replies
- 171 views
-
-
இலங்கையை வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்தது நேபாளம் By VISHNU 13 SEP, 2022 | 01:08 PM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றுவரும் 6 நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்ட தெற்காசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நேபாளமும் இந்தியாவும் தகுதிபெற்றன. இலங்கையை 2ஆவது அரை இறுதியில் 6 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நேபாளமும் பங்களாதேஷை முதலாவது அரை இறுதியில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றிகொண்டு புதன்கிழமை (14) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக நேபாளம் இறுதிப் போட்டிக…
-
- 3 replies
- 372 views
- 1 follower
-
-
8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் By VISHNU 06 OCT, 2022 | 11:16 AM (என்.வீ.ஏ.) மலேசியாவின் லங்காவி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குழுநிலைப் பிரிவில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கை சார்பாக முன்னாள் உலக சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீத் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை வென்றனர். பங்களாதேஷ் அணியினரை எதிர்த்தாடிய இலங்கை அணி 2 - 1 ப்ரேம்கள் கணக்கில வெற்றிபெற்று 3 ஆம் இடத்தைப் பெற்றது. கடந்த திங்கட்கிழமை (03) ஆரம்பமான 8 ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை (07) நிறைவடையவுள்ளது. …
-
- 0 replies
- 227 views
- 2 followers
-
-
பள்ளி நாட்களில் நன்றாக விளையாடியதற்காக புறக்கணிக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மென் கிளென் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடியதன் காரணமாகவே அவர் படித்த பள்ளி அவரைப் புறக்கணித்தது. இன்று ரிவர்ஸ் ஷாட்டில் பெரிய அளவுக்கு பவுலர்களை மிரட்டி வரும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் அவரது பள்ளியினால் ஒதுக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வலது கை பேட்ஸ்மெனாக தொடக்கப் பள்ளி காலத்திலேயே பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்த கிளென் மேக்ஸ்வெலை அழைத்து இனி இடது கையில் விளையாடினால்தான் அணியில் இருக்கப்போகிறாய் என்று பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் இவரை ஒடுக்கியுள்ளனர். அதன் பிறகு இடது கையில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார் மேக்ஸ்வெல்.…
-
- 0 replies
- 467 views
-
-
‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’ அரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஒருவருடத்திற்குள் மாத்திரம் இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்…
-
- 3 replies
- 687 views
-
-
வெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்! #MerciWenger ஓர் அணியின் வரலாறு... அடையாளம்... தனி மனிதன் ஒருவரின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த நாட்டில் வேறு எந்த அணிக்கும் இல்லாத சிறப்பு அது. அதை அப்படி எந்த அணியும் எளிதில் ஒரு தனி நபருக்குக் கொடுத்துவிடாது. ஆனால், அர்செனல் கொடுத்திருக்கிறது. பிரீமியர் லீகில் எந்த அணியும் கொண்டிருக்காத 'invincibles' கோப்பையை அர்சென் வெங்கர் கைகளில் கொடுத்துவிட்டது அர்செனல். ஏன்..? அதை அவர்தான் வென்று கொடுத்தார் என்பதற்காக அல்ல. உலகின் ஒவ்வொரு மூளையிலும் இந்த லண்டன் கிளப்பின் லோகோவில் இருக்கும் பீரங்கியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்தான். அந்த அணிக்கு அவர் அடையாள…
-
- 0 replies
- 581 views
-
-
கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்… - பரவசமூட்டிய தருணங்கள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். நம் நாட்டு ரசிகர்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்றால் சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம். போட்டிகள் முடியும்வரை ஒட்டுமொத்த நினைப்பும் மட்டையையும் பந்தையும் சுற்றியே இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் நினைவலைகள் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும். நினைவுகளின் வண்ணத்துப் பூச்சிகளைப் பின் தொடர்வோமா? இதோ இன்றிலிருந்து தொடங்கிவிட்டது உலகக் கோப்பைக்கான முன்னோட்டம். மறக்கவே முடியாத தருணங்கள் 10 உலகக் கோப்பைப் போட்டிகள். பதினாயிரம் நினைவுகள். கிரிக்கெட்டின் ஆகப்பெரிய சவால…
-
- 0 replies
- 291 views
-