விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இன்று இந்தியாவில் மகளிர்க்கான உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பமானது .முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்டுள்ளது . இந்திய தரப்பில் விளையாடும் இரு தமிழ் வீரர்களும் மிக சிறப்பாக விளையாடினார்கள் . காமினி ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் அடித்தார் ,பந்து வீச்சில் நிரஞ்சனா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன . இங்கிலாந்து ,இந்தியா ,மேற்கிந்திய தீவுகள் ,சிறி லங்கா பிரிவு A அவுஸ்திரேலியா ,நியுசிலாந்து ,பாகிஸ்த்தான் ,தென்னாபிரிக்கா பிரிவு B.
-
- 30 replies
- 2.2k views
-
-
35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடைபோடும் ரியல் மாட்ரிட் ஷினேடின் ஷிடேன் தலைமையில் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி ரியல் மாட்ரிட். பார்சிலோனா அணிக்கு இணையாக தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பதவி ஏற்றபின் ரியல் மாட்ரிட் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, கரேத் பேலே மற்றும் கேப்டன் ரமோஸ் ஆகியோர் அந்த அணிக்கு வெற்றிமேல் வெற்றியை தேடிக்கொடுத்து வருகிறார…
-
- 0 replies
- 368 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) ஐந்து தசாப்த கால சர்வதச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு தசாப்தத்துக்குமான அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக ஐவரின் பெயர்களை உலக புகழ்பெற்ற விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் அடங்குகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டார். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெ…
-
- 0 replies
- 374 views
-
-
பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர் (காணொளி இணைப்பு) மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான மார்லன் சாமியல்ஸ் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புவதாக இணையத்தளத்தில் காணொளி வழியாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.சி.சி. மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்வது அவசியம். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்புகின்றனர். பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும். நான் சாகும்வரை இதற்கான தொடர்ந்து ஊக்குவிக்கும் பணியில் ஈடுப…
-
- 0 replies
- 354 views
-
-
ஃபார்முக்குத் திரும்பிய தோனி... ஹர்ஷ் கோயங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்! ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய புனே அணி, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், புனே அணி வெற்றி பெற தோனி முக்கிய பங்காற்றினார். சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe கம்பேக்னா சும்மா நாப்பது அம்பது ரன் அடிச்சு பிச்சை எடுக்குறதில்ல, அம்புட்டு பேருக்கும் மரண பயத்த காட்டிட்டுப் போறதுதான் #தலைவண்டா 5:49 PM - 16 Apr 2017 …
-
- 0 replies
- 206 views
-
-
நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை ! டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் ஜப்பானின் மிகப்பெரிய நகரமும் மின்சார நகரம் என்றும் வர்ணிக்கப்படும் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற்றுவந்த 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்மாண்ட நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது. 206 நாடுகளை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளையாட்டில் 339 போட்டிப்பிரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்பட்டி 8 மணியளவில் ஆரம்பமானது. வெற்று மைத…
-
- 5 replies
- 797 views
-
-
கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை: மீறினால் 1000 டாலர் அபராதம் கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் அமெரிக்காவின் டைகர் உட்ஸ் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். உலக பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழந்தார். ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்ட…
-
- 0 replies
- 494 views
-
-
ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்! ரோஹித் சர்மா, பார்த்திவ் படேல். - கோப்புப் படம். | கே.ஆர்.தீபக். துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது. மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப…
-
- 3 replies
- 526 views
-
-
நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற இந்திய அணி! ஜூனியர் உலகக் கோப்பையில் அசத்தல் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றது. Photo: Twitter/BCCI நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் தேர்வுசெய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள், 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடிகொடுத்தனர். இதையடுத்து, 4-வது …
-
- 2 replies
- 657 views
-
-
16 வருடங்களின் பின் மாலைதீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி 10 SEP, 2022 | 06:33 AM (நெவில் அன்தனி) கால்பந்தாட்டப் போட்டியின் முழு நேரத்தில் 16 வருடங்களின் பின்னர் மாலைதீவுகளை முதல் தடவையாக வீழ்த்திய இலங்கை 17 வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலைதீவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (9) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலமே இலங்கை அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. …
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
சச்சினை கவுரவிக்கும் தருணங்கள் என் தந்தையை மகிழ்விக்கும்: பிராட்மேன் மகன் நெகிழ்ச்சி டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி, சச்சின் தனது தந்தையை சந்தித்து உரையாடிய தருணத்தை ’டான்’ மகன் ஜான் பிராட்மேன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான மறைந்த டான் பிராட்மமேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி சிட்னி சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இன்று, சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டான் பிராட்மேனின் வாரிசான ஜான் பிராட்மேன் 1998-ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 520 views
-
-
நாளை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் இலங்கை அணி, நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துமா நியூஸீலாந்து என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. காரணம் 1. இலங்கை தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. 2. லீக் சுற்றில் நியூஸீலாந்து இலங்கையிடம் தோல்விதழுவியுள்ளது. 3. இலங்கையின் துவக்க வீரர்கள் அபாயகரமாக ஆடி வருகிறார்கள். 4. நியூஸீலாந்தின் பேட்டிங் வரிசை பலவீனமாக்வும் நம்பத்தகுந்த விதத்திலும் விளையாடவில்லை. 5. நியூஸீலாந்து அணியின் சுழற்பந்து வீச்சிற்கு எதிரான கடுமையான பலவீனம். இந்த 5 காரணங்களும் …
-
- 1 reply
- 1k views
-
-
சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளன தலைவர் செப் பிளட்டர் இலங்கை வருகிறார் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத் (ஃபீஃபா) தலைவர் செப் பிளட்டர், அடுத்த மாதம் முதலாம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவர் இலங்கைக்கு வருகை தரும் மூன்றாவது விஜயம் இதுவாகும். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய கால்பந்தாட்ட இல்லத்தைத் திறந்து வைக்கவென 2002 இல் இங்கு வருகை தந்த பிளட் டர், 2007 இல் சுனாமி நிதியத் திட்டங்களையும் பார்வையிட வருகை தந்திருந்தார். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 75 வருட பூர்த்தி விழா கொண்டாட்டங்களில் கலந்து சிறப்பிக்கும் வகையில் அவர் வருகை தருகின்றார். தனது 36 மணித்தியால இலங்கை விஜயத்தின்போத…
-
- 2 replies
- 528 views
-
-
அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை- முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றமை அம்பலமாகியதை தொடர்ந்து ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையிலேயே இந்த சர்ச்சையின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். மக்குயர் ஸ்போர்ட்ஸ் ரேடியோவிற்கு அவர் இ…
-
- 0 replies
- 326 views
-
-
டி20 கிரிக்கெட்: கிறிஸ் கெய்ல் சிக்சர் மழையில் மூழ்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டவுனில் நேற்று இரவு நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா-மே.இ.தீவுகளுகு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியில் மே.இ.தீவுகள் வெற்றி பெற்றது. ஆம்லா, டிவிலியர்ஸ், டேல் ஸ்டெய்ன், மோர்கெல் என்று முன்னிலை வீரர்கள் இல்லாத அணியை டு பிளேசி வழிநடத்தினார். மே.இ.தீவுகளுக்கு டேரன் சமி கேப்டன். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. டுபிளேசி 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அவுட் ஆனார். புதிய அதிரடி வீரர் ரூஸோ 40 பந்துகளில் 51 ரன்களை எடுக்க பிஹார்டீன் 18 ரன்களையும் டேவிட் மில்லர் 24 ரன்…
-
- 7 replies
- 759 views
-
-
சச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன? - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல் அணியின் நன்மைக்காக சச்சின் டெண்டுல்கர் பின்னால் களமிறங்க விரும்பினோம், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை என்கிறார் கிரெக் சாப்பல். 2007-உலகக்கோப்பை போட்டிகளின் போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸி.-யின் கிரெக் சாப்பல் தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் பிளவு ஏற்படக் காரணம் என்ன என்பதை விவரித்தார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சானல் ஒளிபரப்பிய 'கிரிக்கெட் லெஜண்ட்ஸ்’ நிகழ்ச்சியில் சாப்பல் அப்போது நடந்ததை விவரிக்கும் போது, சச்சின் டெண்டுல்கர் தொடக்கத்தில் இறங்காமல் அதன் பிறகு களமிறங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் சச்சின் அதனை விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். "அணிக்கு…
-
- 1 reply
- 846 views
-
-
இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் வெல்லக் கூடியவர்கள் என்று எதிர்வுகூறப்பட்ட இரு அணிகளே இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டதால் போட்டி தொடங்குமுன்னரே எந்த சஸ்பென்சுகளும் இல்லாமலேயே எனது இறுதிப் போட்டி தொடங்கியது. இல்லாத ஒரு எதிர்பார்ப்பை இருப்பதாக நினைத்து நானே சில விடயங்களைப் பலவந்தமாக எதிர்பார்த்திருந்தேன். அதாவது மக்கலம் அடித்து நொறுக்குவார், போல்ட்டும் சவுத்தியும் புடுங்கி எறிவார்கள்...அதேபோல பதிலுக்கு வோர்னரும் பிஞ்சும் பிரித்து மேய மக்ஸ்வெலும், வாட்சனும் இறுதியில் வந்து கமறுவார்கள்...இப்படிப் பலவந்தமாக என்னால் எனக்குள் திணிக்கப்பட்ட செயற்கைத்தனமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு நண்பர் ஒருவரும், "மச்சான், ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வேலை ஒண்டும…
-
- 9 replies
- 1.1k views
-
-
களத்தில் நிலைத்து நிற்கும் இலங்கை: விக்கெட்டுகளை தகர்த்தெறிவதில் நியூசிலாந்து தடுமாற்றம் இலங்கை மற்றும் நியூசிலாந்;து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் சுரங்க லக்மால் 16 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். கிறிஸ்ட்சேர்ச்சில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை வே…
-
- 0 replies
- 480 views
-
-
சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய டெனிஸ் அணியில் ஷரபோவா இல்லை? [25 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் டெனிஸ் அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று மரியா ஷரபோவா கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால், ரஷ்ய டெனிஸ் அணித் தலைவர் ஷமீல் தர்பிஷசேவ் விடுத்துள்ள எச்சரிக்கையைப் பார்க்கும்போது அது சாத்தியம் இல்லையென்ற சந்தேகம் ஏற்படுகிறது. இத்தாலியை எதிர்த்து செப்டெம்பர் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் விளையாடவுள்ள பெடரேஷன் கிண்ண டெனிஸ் அணியில் மரியா ஷரபோவா இடம்பெறுவது சந்தேகமே என்று கூறிவிட்டார் அணித் தலைவர் தர்பிஷசேவ். கடந்தவாரம் அமெரிக்காவுக்கு எதிராக அரையிறுதி டெனிஸ் போட்டி தொடங்குவதற்கு ம…
-
- 0 replies
- 851 views
-
-
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாமல் ஓய்வு பெற மாட்டேன்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சூளுரை யூனிஸ் கான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வரையில் ஓய்வுபெற மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது 100-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் 37 வயதான யூனிஸ்கான். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவிக்க, அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில்…
-
- 0 replies
- 298 views
-
-
24 மணி நேரம்.. 2 நாடுகள்... 10 விக்கெட்டுகள்: மலிங்காவின் அயராதப் பந்து வீச்சு Published : 04 Apr 2019 18:36 IST Updated : 04 Apr 2019 18:36 IST ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு அனுப்புங்கள் என்ற பிசிசிஐ கோரிக்கைக்கு அடிபணிந்து மலிங்காவை மும்பை இந்தியன்சுக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் ரிலீஸ் செய்தது. மலிங்கா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் உடனடியாக இலங்கை புறப்பட்டார். ஏனெனில் அங்கு உலகக்கோப்பை இலங்கை அணியைத் தேர்வு செய்வதற்கான முன்னோட்ட சூப்பர் ஃபோர் புராவன்ஷியல் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது, இது முடிந்துதான் அவர் ஐபிஎ…
-
- 1 reply
- 532 views
- 1 follower
-
-
பார்சிலோனா கேப்டனாக ஆன்ட்ரஸ் இனியஸ்டா தேர்வு பார்சிலோனா அணியின் கேப்டனாக ஆன்டரஸ் இனியஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணி வீரர்கள் அனைவரும் வாக்களித்து புதிய கேப்டனை தேர்வு செய்தனர். பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்த சேவி, அந்த அணியில் இருந்து விலகி துபாயை சேர்ந்த அல்சாத் அணியில் அண்மையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் மற்றொரு நடுக்கள வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லயனல் மெஸ்சி இரண்டாவது கேப்டனாக செயல்பட தேர்வாகியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக ஆன்ட்ரஸ் இனியஸ்டா விளையாடி வருகிறார். தற்போது உலகிலுள்ள சிறந்த மி…
-
- 0 replies
- 211 views
-
-
Published By: VISHNU 16 AUG, 2024 | 06:45 PM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்டில் நடைபெற்றுவரும் முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதை நெருங்கும் பருவமங்கை விஷ்மி குணரட்ன, கன்னிச் சதம் குவித்து வரலாறு படைத்தார். இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார். எதிர்வரும் வியாழக்கிழமை 22ஆம் திகதி தனது 19ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள விஷ்மி குணரட்ன, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் நேரஞ்செல்ல செல்ல திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதத்…
-
-
- 13 replies
- 870 views
- 1 follower
-
-
வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாணவி சாதனை Published By: VISHNU 06 SEP, 2024 | 06:27 PM வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார்.…
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ச்சியாக 2வது இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் அதிகபட்சமாக 144 ரன் விளாசினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. ஜோ பர்ன்ஸ் 133, கேப்டன் ஜோ ரூட் 57, பென் ஸ்டோக்ஸ் 50, பிராடு 29, வோக்ஸ் 37* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 90 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பேங்க்ராப்ட் 7, வார்னர் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். உஸ்மான் க…
-
- 1 reply
- 461 views
-