விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
சுவிஸ் பயிற்சியாளர் ஒற்மார் ஹிற்ஸ்வெல்ட்விடைபெற்றார் சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் ஓய்வு பெற்றார். தனது சகோதரர் வின்பிரெட் (81) இறந்த துக்கத்துக்கு இடையிலும் அர்ஜென்டீனாவுக்கு எதிராக ஆடிய சுவிட்சர்லாந்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஹிட்ஸ்பெல்ட் கனத்த இதயத்துடன் விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அர்ஜென்டீனாவுடனான இந்தத் தோல்வி 1999 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. எனது இதயம் முழுவதும் உணர்ச்சி வசத்தால் நிரம்பியுள்ளது. இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தருணங்கள் கால்பந்து விளையாட்டில் மட்டுமே கிடைக்கும். அதனால்தான் கால்பந்தை விரும்புகிறேன்” என்றார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளை…
-
- 4 replies
- 520 views
-
-
சுவீடன் சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதேநேரம், குறித்த போட்டித் தொடரில் பங்குகொண்ட கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சில் மற்றும் கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவன் சுபான் ஹன்சஜ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர். ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைப…
-
- 7 replies
- 1.2k views
-
-
சுஷந்திகாவுக்கு ஆலோசகர் பதவி! ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை சுஷந்திகா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அடுத்தமாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் ஆலோசனைப்படியே இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=3398
-
- 1 reply
- 715 views
-
-
சூடுபிடிக்கும் ஐ.சி.எல். சூதாட்ட வழக்கு : பிரன்டென் மெக்கல்லம் நீதிமன்றத்தில் சாட்சி! ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் ஐ.சி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொடர், இரு சீசன்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக அழிந்து போனது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் சண்டிகார் லயன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, லலித் மோடி மீது கிறிஸ் கெயிர்ன்ஸ் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2.4 மில்லியன் அமெரிக்க டா…
-
- 0 replies
- 204 views
-
-
சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் புதிய கழகங்களுடனும், புதுமுக வீரர்களுடனும் ஆரம்பமாகியுள்ள 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இப்பருவகாலத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் லாலிகா சுற்றுப்போட்டியை ஆரம்பித்துள்ள கழகங்கள் சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு சவால் விடுப்பதை போட்டியின் முடிவுகளும் லாலிகா புள்ளிப்பட்டியலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 2017/18 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 263 views
-
-
சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பிரவிண் டாம்பேவை, மற்றொரு மும்பை வீரர் ‘பிக்சிங்கில்’ ஈடுபட அணுகியது அம்பலமாகியுள்ளது. ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவியே பறிபோனது. இதனிடையே எட்டாவது பிரிமியர் தொடரின் போது,‘ ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த வீரர் ஒருவரை, இந்த தொடரில் பங்கேற்காத மற்றொரு மும்பை வீரர் அணுகினார்,’ என, செய்திகள்…
-
- 6 replies
- 836 views
-
-
சூதாட்ட வீரர்கள் 10 பேரின் பெயரை வெளியிடும் கிரிக்கெட் வாரியம். ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழு தனது அறிக்கையை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் சமர்பித்து இருந்தது. இதில் நிர்வாகிகள், வீரர்கள் என மொத்தம் 13 பேரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் 3 பேரது பெயர் மட்டுமே வெளியிடப்பட்டன. முத்கல் கமிட்டியின் அறிக்கையில் உள்ள 10 வீரர்களின் பெயர் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டு இதுவரை வெளியிடாமல் இருந்தது. இந்த 10 வீரர்களின் பெயர் விவரத்தை வெளியிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது. லோதா…
-
- 0 replies
- 376 views
-
-
சூதாட்டத்தால் ஆட்டம் கண்ட ஐ.பி.எல். ஏழு வருடங்களுக்கு முன்னர் இண்டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமானபோது இரசிகர்கள் மத்தியில் அதற்கு இருந்த மவுசே வேறு. விறுவிறுப்பையும் பரபரப்பையும் இரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி ஆட்டம் கொண்டாட்டங்களில் மிதக்கவைத்த இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருடத்திற்கு வருடம் வளர்ச்சி அடைந்து முழு உலகையும் தன் பால் ஈர்த்து நின்றது. இதன் பலனாக அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஸிம்பாப்வே ஆகிய நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி பிரபல்யம் அடைந்துள்…
-
- 0 replies
- 335 views
-
-
சூதாட்டத்தில் ஈடுபட்ட மொகமது ஆமீருடன் ஆட முடியாது: ஹபீஸ் திட்டவட்டம் மொகமது ஹபீஸ். | கோப்புப் படம். சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீருடன் சேர்ந்து ஆட முடியாது என்று மொகமது ஹபீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரிமியர் லீகின் சிட்டகாங் வைகிங்ஸ் அணி ஹபீஸுடன் ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தை மொகமது ஹபீஸ் நிராகரித்ததாக செய்திகள் எழுந்தன. காரணம் அந்த அணியில் சூதாட்ட வீரர் ஆமீர் இருந்தார் என்பதே. “நான் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் பேசவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கவுரவம் பற்றிய விவகாரம் இது. நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நாட்டு கிரிக்கெட் அணியின் பெயரைக்…
-
- 0 replies
- 264 views
-
-
கிரிக்கெட் சூதாட்டம்.. கிரிக்கெட்டின் நன்மதிப்பை இல்லாமல் செய்வது புதிதல்ல. ஆனால் இப்போது இந்தியா ரிவி என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியால் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு போட்டியாக நடுவர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு கிளம்பி இருக்கிறது. அதுவும் நடந்து முடிந்த T20 சர்வதேச கிரிக்கெட் கிண்ணப் போட்டியை மையமாக வைத்து இந்த கிரிக்கெட் சூதாட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதில் சிறீலங்கா.. பாகிஸ்தான்.. வங்காளதேசம் நாடுகளைச் சேர்ந்த 6 நடுவர்கள் பங்கெடுத்திருப்பதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. IC…
-
- 7 replies
- 940 views
-
-
சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது) 7 பிப்ரவரி 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது. 2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது. சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. இந்த டி20…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், இரட்டை ஆதாயப் பதவி: கிரிக்கெட் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு ராமச்சந்திர குஹா. | படம்.| கே.முரளிகுமார். உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐக்கான நிர்வாகிகள் கமிட்டியின் உறுப்பினர் ராமசந்திர குஹா தன் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல காரணங்களை கடிதம் மூலம் விளக்கியுள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வரலாற்றறிஞர், கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளரான ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்ததற்கு பிசிசிஐ நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் குழு என்…
-
- 1 reply
- 294 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் இருப்பிடம் கொண்ட டோனி, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார் . டோனியின் வாழ்க்கை வரலாறை சித்தரித்து புனையப்பட்டுள்ள ‘MS Dhoni – The Untold Story’ என்ற திரைப்படம் அடுத்தவாரம் 30 ம் திகதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் விரிவாக்கல் நடவடிக்கைக்காக சென்னை சென்ற டோனி,சென்னை சத்யம் திரையரங்கில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பின்னர் மேடையில் “என் வழி தனி வழி” என்ற ரஜினியின் வசனத்தைப் ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
சூழ்நிலையின் அழுத்தம் காரணமாக நோ-பால்கள் வீசி விடுகிறேன்: இசாந்த் சர்மா இசாந்த் சர்மா. | படம்: ராய்ட்டர்ஸ். கொழும்பு டெஸ்ட் போட்டியில் தொழில்நேர்த்தியான வேகப்பந்து வீச்சில் நேற்று 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இசாந்த் சர்மா, தான் அதிகம் நோ-பால்கள் போடுவது பற்றி கருத்து கூறியுள்ளார். இந்த 5 விக்கெட்டுகள் மூலம் இசாந்த் சர்மா தனது 65-வது டெஸ்ட் போட்டியில் 197-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்நிலையில் தனது பவுலிங் குறித்து இசாந்த் சர்மா கூறும்போது, “நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கலாம் என்பது இலக்காக இருக்கலாம். நான் பந்து வீசும் போது ஒரு பவுலர் மட்டுமே. பந்துவீச்சு வரிசையின் தலைவர் அல்ல. எனக்குத் தெரிந்ததை நான் மற்றவர்களிட…
-
- 0 replies
- 379 views
-
-
செஞ்சுரி அடி, முத்தம் கொடு... தப்பே இல்லை.. கோஹ்லிக்கு கொட்டு வைத்த கபில்! டெல்லி: விராத் கோஹ்லி ஒரு சதம் போட்டு விட்டு, பெவிலியனில் இருக்கும் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தால் அதில் தவறே இல்லை. மாறாக ரன்னே எடுக்காமல் பறக்கும் முத்தம் கொடுத்தால் அது எனக்கு கவலை தரும் என்று கபில்தேவ் அதிரடியாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கபில்தேவுக்கு உண்டு. அதன் பின்னர் டோணி ஒருமுறை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பை வந்து விட்டது. பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கவுள்ளது இந்தியா. இந்த நிலையில், இந்திய அணி குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தனது பாணியில் அதிரடியாக கூறியுள்ளார் கப…
-
- 0 replies
- 554 views
-
-
செஞ்சூரியன் டெஸ்ட் – 223 ஓட்டங்களுக்குள் அட்டமிழந்தது தென் ஆபிரிக்கா! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் முதலாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 223 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் புதன்கிழமை ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா…
-
- 0 replies
- 670 views
-
-
செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் அணி சுருண்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாத தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி சார்பில் இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரில் இமாம்-உல்-ஹக் ஓட்டங்களை பெறாமலும் பகர் சமான் 12 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்தனர். அத்தோடு பக…
-
- 0 replies
- 379 views
-
-
படத்தின் காப்புரிமை Twitter/DolphinsCricket இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர். அவரது பெயர் செனூரன் முத்துசாமி. என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா? ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர். தமிழ் தெரியாது 25 வயதாகும் செனூரனின…
-
- 6 replies
- 1.6k views
-
-
சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது Tamil சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்து தொடரின் பலம் மிக்க அணிகளைக் கொண்ட 20 வயதின் கீழ் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியை வீழ்த்திய பிரபல இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முன்னர் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியினர் மன்னார் முருங்கன் கல்லூரி அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில்…
-
- 0 replies
- 462 views
-
-
சென் தோமஸ் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் By Jegan - சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அகில இலங்கை ரீதியான பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரி அணிக்கு எதிராக யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுரி இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பிரிவு 2 இல் சி குழுவுக்காக இடம்பெற்ற இந்த போட்டியில் மாத்தளை சென் தோமஸ் கல்லூரியும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியும் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின. நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பை தீர்மானித்த சென் ஜோன்ஸ் அணிக்கு கைமேல் பலன் கிடைத்தது. எதிரண…
-
- 0 replies
- 879 views
-
-
இன்று நடந்த விக்வாஸ் T20 விளையாட்டில் சென் வான்னும் மார்லன் சல்முஸ் நேருக்கு நேராக மோதி கொண்டனர் http://www.youtube.com/watch?v=Nt_wlKsRgiU இந்த வீடியோவில் சண்டை பிடிப்பது வடிவாக்க தெரியுது
-
- 2 replies
- 635 views
-
-
சென். ஜோன்ஸ் கல்லூரியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு உதவிய அபினாஷ், தனுஜன் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ்ப்பாணத்தின்மற்றுமொரு பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. சென்.ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த சென்.ஜோன்ஸ் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டனர். அதற்கமைய முதலில் ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்களுக்கு ஆரம்ப வீரரான C.P. தனுஜன் அப…
-
- 1 reply
- 437 views
-
-
சென். ஜோன்ஸ் கல்லூரியில் திறந்துவைக்கப்பட்ட டென்னிஸ் ஆடுகளம் Your browser does not support iframes. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியானது தமது 200ஆவது ஆண்டு பூர்த்தி விழாவினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில், தமது உட்கட்டுமான அபிவிருத்தியில் பாரிய கவனஞ்செலுத்தி வருகின்றது. கடந்த மாதம் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்தாட்ட மைதானம் திறந்துவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காலநிலைக்கு பாதகமில்லாத டென்னிஸ் ஆடுகளமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய ஞானப்பொன்ராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராயர் வணக்கத்துக்குரிய வில்வராஜ் கனகசபை அவர்கள் பிரதமவிருந்தி…
-
- 0 replies
- 306 views
-
-
சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள் FA கிண்ண சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளின்படி யாழ் அணிகளான நாவாந்துறை சென். நிக்கலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் கல்முனை பிறில்லியன்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. நாவாந்துறை சென். நிக்கலஸ் எதிர் வென்னப்புவ அல் ஹிரா நாவாந்துறை சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவா அல் ஹிரா கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. ஆட்டத்தில் ஹிரா வீரர்களின்…
-
- 0 replies
- 301 views
-
-
சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! யாழ்ப்பாண கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது. …
-
- 0 replies
- 452 views
-