விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
அனல் பறக்கும் இந்தியா-ஆஸி., தொடர் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம்,'' என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார். அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும். அதேநேரம், இப்போது முதலிடத்திலுள்ள தென் ஆப்ரிக்க அணி (124), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தால், தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின், "நம்பர்-1' இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கலாம்.…
-
- 0 replies
- 347 views
-
-
ஒரு நிமிடத்தில் 20 இரும்புக் கம்பிகள் வளைந்தன; புதிய உலக சாதனை இலங்கையில் (வீடியோ) ஒரு நிமிடத்தில் 20 இரும்புக் கம்பிகளை வாயினால் வளைத்து, கொழும்புத் துறைமுகக் கொள்கலன் தளத்தின் தொழில் புரியும் ஜனக காஞ்சன எனும் 24 வயதுடைய இளைஞன், இன்று வியாழக்கிழமை (06) உலக சாதனை படைத்துள்ளார். விளையாட்டுத்துறை வைத்தியர்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் முன்னிலையில் மோதரை - முகத்துவாரத் துறைமுகப் பயிற்சி நிலையத்தில் வைத்து இவர் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷ்யா நாட்டு விளையாட்டு வீரர் ஒருவர், ஒரு நிமிடத்தில் 12 இரும்புக் கம்பிகளை வாயினால் உடைத்திருந்தமையே இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்ததை கு…
-
- 0 replies
- 377 views
-
-
ஊடகவியலாளரின் வாயை மூடச் செய்த கோலியின் பதில்! (காணொளி இணைப்பு) இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இ-20 போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நிருபர் ஒருவரது கேள்விக்கு அதிரடி பதிலளித்து அவரது வாயை மூடச் செய்தார் கோலி! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் இ-20 ஆகிய மூன்று தொடர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியது. மூன்று போட்டித் தொடர்களுக்கும் விராட் கோலியே தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான இ-20 போட்டியில் இந்தியா 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஒரு நிருபர், ‘ஆரம்பத்…
-
- 0 replies
- 298 views
-
-
ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!? சர்வே முடிவு Chennai: சீரியஸான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்த ‘கூல் கேப்டன்’ தோனிமீது இப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘தோனி டி-20-யிலிருந்து ஓய்வுபெற வேண்டும்’ என அகார்கரில் இருந்து வி.வி.எஸ்.லட்சுமண் வரை பலரும் கருத்துச்சொல்ல, ‘மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என ஒதுங்கிக்கொண்டார் தோனி. விமர்சகர்கள் சொல்வதுபோல, நிஜமாகவே தோனியின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிட்டதா? தோனியின் ஓய்வு குறித்து வாசகர்களிடம் சர்வே நடத்தினோம். ரசிகர்களின் கருத்து என்ன? தோனி இல்லனா டீமே இல்ல... தோனி ஓய்வு பெற வேண்டுமா என்ற க…
-
- 0 replies
- 512 views
-
-
ஜெர்மனி கேப்டன் ஓய்வு ஜூலை 18, 2014. பெர்லின்: ஜெர்மனி கால்பந்து அணி கேப்டன் பிலிப் லாம், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில், ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தொடரில் ஜெர்மனி அணியின் கேப்டனாக பிலிப் லாம், 30, செயல்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக, இவரது ஏஜென்ட் ரோமன் கிரில் தெரிவித்தார். சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான இவர், ஜெர்மனிக்காக இதுவரை 113 போட்டிகளில் பங்கேற்று 5 கோல் அடித்துள்ளார். பேயர்ன் முனிக் அணியுடனான இவரது ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு வரை உள்ளதால்…
-
- 1 reply
- 541 views
-
-
ஸ்டீவ் ஸ்மித் 10,000 ரன்கள்; எல்கரிடம் அவுட்டான அசிரத்தை: ட்விட்டர்வாசிகளின் ‘கமெண்ட்’ ஸ்டீவ் ஸ்மித் எல்.பி. ஆன பந்து. - படம். | ட்விட்டர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தனது 10,000 சர்வதேச கிரிக்கெட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதனைக் கொண்டாடும் ட்விட்டர்வாசிகள், டீன் எல்கர் என்ற பகுதி நேர பவுலரிடம் எல்.பி.ஆகி 2வது இன்னிங்சில் வெளியேறியது பற்றி கேலியும் கிண்டலுமடித்து வருகின்றனர். நடபெற்று வரும் டர்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் இடது கை ஸ்பின்னர் மஹராஜ் பந்தை கட் செய்ய முயல டிகாக் கிளவ்வில் பட்டு டிவில்லியர்ஸிட…
-
- 1 reply
- 244 views
-
-
2015 உ.கோப்பை இறுதியில் 150/3-லிருந்து சரிந்தோம், பால் டேம்பரிங்?: நியூஸி.வீரர் கிராண்ட் எலியட் ஐயம் 2015 உ.கோப்பை அரையிறுதியில் சிக்ஸ் அடித்து வென்ற கிராண்ட் எலியட். - படம். | ராய்ட்டர்ஸ். 2015 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா பால் டேம்பரிங் செய்துதான் வெற்றி பெற்றதோ என்று நியூஸிலாந்து அதிரடி வீரர் கிராண்ட் எலியட் சந்தேகம் எழுப்பியுள்ளார். மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது, அந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 150/3 என்ற நிலையிலிருந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 39/3 என்ற நிலையிலிருந்து கிராண்ட் எலியட் , ராஸ் டெ…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
மெஸ்ஸிக்கு சிறை...? வரி ஏய்ப்பு வழக்கில் ஆர்ஜன்டீனா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு குறைந்த ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் முன்னணி வீரரான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் பார்சிலோனா மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 2007-2009ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக லியோனல் மெஸ்ஸி மீதும், அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் இருவரும் பெலிஸ், உருகுவே போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமையை விற்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் ஸ்பெயினில் 4 மில்லியன் யூரோவிற…
-
- 5 replies
- 754 views
-
-
யாழ். இளைஞர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்! இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ப்பு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ் மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள். குறித்த இரண்டு வீரர்களும் வடமாகாண அணி சார்பில் பிரகாசித்த நிலையில், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 845 views
-
-
முரளிக்காக உலக கிண்ணம்! ஆனால் முரளி அணியில் இல்லை! ஜனாதிபதி இந்தியா செல்கிறார் ஜ வியாழக்கிழமைஇ 31 மார்ச் 2011இ 11:51.14 யுஆ புஆவு ஸ இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இந்த போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கு வழங்கும் கௌரவமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரியவருகிறது. முத்தையா முரளிதரனும் அஞ்சலோ மெத்தியூஸம் காயம் அடைந்துள்ளமையால் அவர்களுக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை அணிக்கு உதவ ஜெரெமி ஸ்னேப் நியமிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக ளில் விளையாடவுள்ள இலங்கை அணியினரை ஊக்குவிக்கும் பொருட்டு உளவியல் ஆலோசகராக ஜெரெமி ஸ்னேப் நியமிக்கப் பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவ னம் அறிவித்துள்ளது. இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போதும் இலங்கையின் உளவியல் ஆலோசகராக ஜெரெமி செயற்பட்டிருந்ததுடன் அந்தத் தொடரை இலங்கை கைப்பற்றியிருந்தது. ஜெரெமி ஸ்னேப் இம் மாதம் 24ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு இலங்கை அணியினருடன் இணைந்து செயற்படவுள்ளார். உலகக் கிண்ணத்தை மனத்தில் நிறுத்தி இலங்கை வீர…
-
- 0 replies
- 322 views
-
-
சென்றலைட்ஸ் அணிக்குக் கிண்ணம்!! யாழ்ப்பாணம் கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம் நடாத்திய விக்ரம், ராஜன், கங்கு ஞாபகர்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக கிண்ணம் வென்றது. கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று இடம் பெற்ற இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி. ஸி விளையாட்டுக் கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கே.ஸி.ஸி. விளையாட்டுக்கழக அணியினர் 40பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 200 ஓட்…
-
- 0 replies
- 571 views
-
-
இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி ஐ.சி.சி.யிடம் இன்று (சனிக்கிழமை) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தியா-அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இராணுவத் தொப்பியுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்தது. இதன்படி வீரர்கள் இராணுவத் தொப்பியுடன் விளையாடினர். இந்நிலையில், இராணுவ தொப்ப…
-
- 1 reply
- 717 views
-
-
ஒரு கையில் ஐஸ்கிரீம், இன்னொரு கையில் கேட்ச்: கிளென் மேக்ஸ்வெல் அசத்தல் கிளென் மேக்ஸ்வெல். | ட்விட்டர் படம். இங்கிலாந்தில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் ஒரு கையில் ஐஸ்கீரீமை வைத்துக் கொண்டே மற்றொரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: இங்கிலிஷ் கிளப் அணியான யார்க் ஷயர் அணிக்கும், பார்ட்ஸே என்ற கிராமப்புற கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் யார்க்ஷயர் அணிக்கு ஆடிய கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டருகே 'கார்னெட்டோ' ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பார்ட்ஸே அணி பேட்ஸ்மென் எட் கிளேய்ட்டன் ஒரு பந்தை எல்லைக்…
-
- 1 reply
- 231 views
-
-
குட்டி சனத் ஜயசூரியவின் துடுப்பாட்டம்! (Video) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் துட்ப்பாட்ட திறமையை இந்த உலகமே அறிந்தது. இவரது துடுப்பாட்டத்தை “மாஸ்டர் பிளாஸ்டர்” என அழைப்பர். அந்த வகையில் தற்போது அவரது குட்டி மகன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சனத் ஜயசூரிய போன்று இவரும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து தனது திறமையை வெளிக்காட்டுவாரா ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…. http://tamil.adaderana.lk/kisukisu/?p=4405&utm_source=rss&utm_medium=rss
-
- 0 replies
- 245 views
-
-
பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்! பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. 263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்…
-
- 0 replies
- 405 views
-
-
கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வருந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இன்று 07 காலை ஒன்பது மணிக்க இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம்,போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி இன்றைய முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், …
-
- 11 replies
- 1.4k views
-
-
ஒருநாள் தொடரும் இந்தியா வசம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு - 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. அதன்படி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம் இரவு 7.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்…
-
- 1 reply
- 637 views
- 1 follower
-
-
ரஷ்ய தடகள சம்மேளனம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டை ரஷ்யா தடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற இயலாது ஊக்க ம…
-
- 0 replies
- 180 views
-
-
நான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்: டானிஷ் கனேரியா வேண்டுகோள்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்குப் பிறகு இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் டானிஷ் கனேரியா. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில், ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இவருக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வாழ்நாள் தடை விதித்தது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முழுமையாக ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் கனேரியா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த விவகாரத்தில் தனக்கு உதவி செய்யும்படி டானிஷ், பி.சி.சி.ஐ.யிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில…
-
- 0 replies
- 392 views
-
-
நீச்சல் வீராங்கனைக்கு புற்றுநோய் நெதர்லாந்தை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனை இக்னே டெக்கர். 30 வயதான இக்னே டெக்கர் ஒலிம்பிக்கில் 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் தங்கம் உள்பட மூன்று பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலில் ஆகஸ்டு மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், திடீரென கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது ‘இந்த தகவலை அறிந்ததும் அதிர்ந்து போனேன். கடந்த 3 ஆண்டுகளாக பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் மட்டுமே எனது சிந்தனை இருந்தது. ஒலிம்பிக்கில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று டெக்கர் கூறியுள்ளார். http://tamil.adaderana.l…
-
- 0 replies
- 359 views
-
-
U19 ப்ளேட் சம்பியனாக முடிசூடிய இங்கிலாந்து! By A.Pradhap - ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை இளையோர் அணி ப்ளேட் சம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்டது. தென்னாபிரிக்கா – பெனோனியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பை இங்கிலாந்து இளையோர் அணிக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை …
-
- 0 replies
- 565 views
-
-
[size=4]உலகக்கிண்ணம் எங்களுடையதுதான். இலங்கையர்கள் மன்னிக்க வேண்டும். நாம் இலங்கையை நேசிக்கிறோம். ஆனாலும் இந்த உலகக்கிண்ணத்தை நாங்களே பெற்றுக்கொள்ளப்போகிறோம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்ட வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார். அவுஸ்திரேலிய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ் கெய்ல் பகிரங்கமாக இக்கருத்தினை வெளியிட்டார். "இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. இலங்கை வீரர்கள் வெறுங்கையுடனேயே திரும்புவார்கள்" என அவ…
-
- 24 replies
- 1.7k views
-
-
சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை 44 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் வளர்ந்துவரும் கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். விளையாட்டு என்பது தம்மை மேம்படுத்திக்கொள்ளும் விஷயம் மட்டுமின்றி, ஒருவரின் வாழ்நாள் தேர்வாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அது இருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் இளம் வயதில், கால்பந்தாட்டத்தில் சேர்ந்ததோடு, நாட்டிற்காக பல பதக்கங்களையும் வென்றுள்ளார். ஆரம்பம் என்ன? …
-
- 0 replies
- 545 views
- 1 follower
-