விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட…
-
- 0 replies
- 423 views
-
-
2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன் By Mohammed Rishad - ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச்சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார். சொப்பின் வீஏ (Chopin VA) என்ற பெயரைக்கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச்சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச்சவாரி சம்மேளனம்…
-
- 0 replies
- 546 views
-
-
எந்த நகர் வெற்றி பெறும்? இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடக்கும் என்பது இன்று முடிவாகிறது. போட்டியில் மூன்று நகரங்கள் உள்ளன. இதற்கான வாக்கெடுப்பு அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் போனஸ் ஏரிஸ் நகரில் லண்டன் நேரம் இரவு 7.45 க்கு நடைபெற்று முடிவுகள் ஒன்பது மணிக்கு அறிவிக்கப்படும்.துருக்கி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாட்டு தலைநகரங்களான இஸ்தான்புல், டோக்யோ மற்றும் மட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்று நகரங்களும் தங்களது தரப்பு வாதங்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றை படக்காட்சியாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் முன்னர் காட்டி வருகின்றன. கடும் போட்டி துருக்கியில் இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதில்லை 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்தும…
-
- 5 replies
- 1.4k views
-
-
2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட 2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யூரோ என அழைக்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான யு.இ.எஃப்.ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அதன்படி 31 நாட்களில் 51 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பிரிவுக்கு 4 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. குழு ஏ: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து குழு பி: டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து குழு சி: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா குழு டி: இ…
-
- 9 replies
- 1k views
-
-
2020-க்குப் பிறகு ஐ.பி.எல். தொடரின்போது சர்வதேச போட்டிகளில் கிடையாது: பிசிசிஐ முயற்சி ஐ.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த லீக்கிற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல். கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் பேராதரவோடு வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் 11 சீசன் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். …
-
- 0 replies
- 259 views
-
-
2021 - டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் - சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களால் கலந்து கொள்ள முடியும் என்ற மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகத்தின் தலைவர் தோமஸ் பாக் தெரிவித்துள்ளார். போட்டிகளை காண ரசிகர்கள் வருவதற்கு முன்பு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதில் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் பெரும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் தோமஸ் பாக் கூறினார். அடுத்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிளை எவ்வாறு நடத்த முடியும் என்பது குறித்து விவாதிக்க அவர் தற்போது ஜப்பானில் உள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ விளையாட்டுக்கள் முதலில் கடந்த ஜூலை மாதம் தொடங்கவிருந்தன, ஆனால…
-
- 0 replies
- 569 views
-
-
2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7 ஆவது இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. அதைத் தொடர்ந்து 8 ஆவது இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்த ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இந்த தகுதி சுற்றின் ஒரு பகுதி போட்டிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடக்க இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து உயர்வடைந்து செல்கின்றமையினால் தகுதி சுற்ற…
-
- 0 replies
- 618 views
-
-
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை அறிவிப்பு 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும். இதில் சூப்பர் 12 சுற்றின் குழு 2 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் துபாயில் ஒக்டோபர் 24 ஆம் திகதி அரங்கேறவுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இறுதியாக இவ்விரு அணிகளும் 2019 இல் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ஒன்றையொன்று எதிர்த்து ஆடியது. ஐ.சி.சி. செவ்வாய்க்கிழமை 2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணையை அறிவித்ததால் போ…
-
- 0 replies
- 431 views
-
-
-
2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ. 2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் களியாட்டம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த சீசன் 2021 ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகும். உலகின் மிப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பிளேஆஃப்களையும் 2021 மே 30 ஆம் திகதி இறுதிப் போட்டியையும் நடத்த…
-
- 13 replies
- 964 views
-
-
2021 டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் - ஐ.சி.சி. 2021 ஆண்கள் டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார். 7 ஆவது டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதிய நோயாளர்களின் அன்றாட அடையாளம் ஒரு இலட்சத்தை கடந்துள்ளமையினால் டி-20 உலக கிண்ண போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி புதன்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது, டி-20 உலக க…
-
- 0 replies
- 466 views
-
-
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. அதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் திகதி நிறைவடைகிறது. பராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 23 தொடக்கம் செப்டெம்பர் 2 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/237591/2021-டோக்கியோ-ஒலிம்பிக்-போட்டிகள்-ஜூலை-23-ஆரம்பம்
-
- 0 replies
- 539 views
-
-
2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை By Mohammed Rishad - 14/11/2019 எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை (SAG) இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை விளையாட்டுத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார். தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த வாரம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குமாறும், அதற்காக மாலைத…
-
- 0 replies
- 522 views
-
-
2021 பிரெஞ்சு ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் கிரெஜிகோவா 2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா, ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ரோலண்ட் கரோஸில் அரங்கேறிய இந்த ஆட்டத்தின் இறுதியில் 25 வயதான கிரெஜிகோவா 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பவ்லியுசென்கோவாவை தோற்கடித்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையை கிரெஜிகோவா இதன்மூலம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1981 இல் செக் குடியரசின் ஹனா மாண்ட்லிகோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். https://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 320 views
-
-
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும்- ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு துபாய்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி தள்ளிவைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. ஏனெனில், 2022-ம் ஆண்டில் 2…
-
- 0 replies
- 481 views
-
-
2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி 2021 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆஷ்லீ பார்டி, கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர். ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி 6-3 6-7 (4-7) 6-3 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார…
-
- 0 replies
- 521 views
-
-
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்புகளை ரஷ்ய ஜனாதிபதி புதின் கட்டார் ஜனாதிபதியிடம் இன்று ஒப்படைத்தார். உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியுடன் ரஷ்யாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடையும் நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு கட்டார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், …
-
- 5 replies
- 2.2k views
-
-
2022 இருபது - 20 உலகக் கிண்ணத்திலும் இலங்கைக்கு போராட்டமே ! (துபாயிலிருந்து நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடியிலும் இலங்கை முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 9ஆம் இடத்திலுள்ளதாலேயே அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்த வருடத்தைப் போன்று முதல் சுற்றிலிருந்து விளையாட நேரிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பின்னர் சுப்பர் 12 சுற்றில் பங…
-
- 0 replies
- 368 views
-
-
2022 உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் 5 புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
-
- 2 replies
- 1k views
-
-
2022 கட்டார் உதைப்பந்தாட்ட குழுக்கள் Group A: Qatar (hosts), Netherlands, Senegal, Ecuador. Group B: England, United States, Iran, Wales/Scotland/Ukraine. Group 😄 Argentina, Mexico, Poland, Saudi Arabia. Group 😧 ... Group E: Spain, Germany, Japan, Costa Rica/New Zealand. Group F: Belgium, Croatia, Morocco, Canada.
-
- 7 replies
- 1.2k views
-
-
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான அரங்கொன்று வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாரின் அல் வக்காரா நகரிலுள்ள இந்த கால்பந்தாட்ட அரங்கின் வடிவமைப்பானது பெண்ணுறுப்பை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நகரங்களில் ஒன்றாக அல் வக்காரா விளங்கவுள்ளது. இந்நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள அரங்கின் கணினி மூலமான தோற்றத்த்தை கட்டார் உலகக்கிண்ண ஏற்பாட்டுக்குழு சில தினங்களுக்குமுன் வெளியிட்டது. 45,000 ஆசனங்களைக் கொண்ட இந்த அரங்கின் மேற்புறக் கூரையின் தோற்றத்தைப் பார்த்த சிலர் இது பெண்ணுறுப்பு வடிவில் உள்ளது எனக் கருத்துத் தெரிவித்த…
-
- 0 replies
- 617 views
-
-
2022 கத்தார் உலகக் கோப்பையில் கூடுதல் அணிகள்- ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் என்ற பிஃபா திட்டத்திற்கு ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஷியாவில் வருகிற ஜூன் மாதம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2022-ல் கத்தாரில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக கத்தார் பிரமாண்ட ஸ்டேடியங்களை கட்டி வருகிறது. 2018 உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கின்றன. 2022-ல் 32 அணியை 48 அணியாக உயர்த்த பிஃபா திட்டமிட்டுள்ளது. 16 அணிகள் கூடு…
-
- 0 replies
- 464 views
-
-
2022 டி-20 உலகக் கிண்ணத்துக்கான விவரங்களை அறிவித்தது ஐ.சி.சி 2021 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் நிறைவடைந்துள்ள நிலையில் 2022 டி-20 உலகக் கிண்ணம் தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கும், இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சமீபத்திய டி-20 சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா, 2022 டி-20 உலகக் கிண்ணத்திலும் சொந்த மண்ணில் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும். போட்டிகள் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 16 முதல் ந…
-
- 0 replies
- 327 views
-
-
2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி நடத்தும் வாய்ப்பு பேர்மிங்காம் நகருக்கு 2022-ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது. டர்பன் நகர் போட்டியை நடத்த முடியாது எனக் தெரிவித்த மையினைத் தொடர்ந்து இந்த வாய்ப்பானது பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது. பிரித்தானிய காலணித்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இடம்பெற்று வருகின்றது. இறுதியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோவில் நடைபெற்றிருந்தது. அதேவேளை 2018-ம் ஆண்டிற்கான …
-
- 0 replies
- 412 views
-
-
2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை: தேதிகளை முடிவு செய்ய கூட்டம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்வதற்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபின் அதிகாரிகள் கத்தாரில் கூடுகிறார்கள். தொடக்கம் முதலே கத்தார் போட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தப் போட்டிகளை குளிர்காலத்தில் நடத்துவதே யதார்த்தமாக இருக்கும் என்று தேதிகளை முடிவு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை எந்தெந்தத் தேதிகளில் நடத்துவது என்பது குறித்து ஃபிஃபாவின் குழு ஆராய்ந்து வருகிறது. கத்தாரில் அப்போட்டியை 2022ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்படு…
-
- 0 replies
- 460 views
-