விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 66 போட்டிகள், பிரமாண்டமான பரிசுத் தொகை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் 'IBC தமிழ்' நிறுவனத்தினால் நடாத்தப்படும் வடக்கு ,கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மே மாதம் வெகு விமரிசையாக ஆரம்பாமாகி யாழ்ப்பாணத்தில் நடபெற்று வருகின்றது. ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தமாக 12 அணிகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 277 views
-
-
வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்! இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (10) வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தா…
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளை யாட்டு அரங்கில் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச் சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண கிக் பொக் சிங் குத்துச்சண்டை பயிற்று விப்பாளரும் வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவருமான எஸ். நந்தகுமாரினால் பயிற்…
-
- 0 replies
- 305 views
-
-
வடமாகாண தடகளப்போட்டிகளுக்கான ஒத்திகை ஆரம்பம் வடமாகாண தடகள போட்டிக்கான ஒத்திகைப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது இந் நிலையில் யாழ் .துரையப்பா விளையாட்டரங்கில் அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன . 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 284 views
-
-
வடமாகாண பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா வீராங்கனைகள் By T YUWARAJ 05 SEP, 2022 | 04:42 PM K.B.சதீஸ் வடமாகாண ரீதியில் இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (04.09.2022) இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த தி.கோசியா 45 kg எடைப்பிரிவில் 71kg தூக்கி 3ஆம் இடத்தையும், கு.குழவிழி 59kg எடைப்பிரிவில் 83kg தூக்கி 2ஆம் இடத்தையும், பா.செரோண்யா 71kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத…
-
- 3 replies
- 486 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 MAY, 2025 | 07:17 PM 2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது ம…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
யாழ். சென். ஜோன்ஸ் - குருநாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குருநாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறுதியில் நடைபெற்ற பாடசாலை கிரிக்கட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் எவரும் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு பிரகாசிக்காதபோதிலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்களான யதுசன் வசந்தன்இ கானாமிர்தன் அருளானந்தம் ஆகிய இருவரும் ஓர் இன்னிங்ஸில் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தினர். நத்தார் பண்டிகைக்கு முன்னர் கண்டி திரித்துவ கல்லூரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்றி கொண்டிருந்த செய்ன் ஜோன்ஸ…
-
- 46 replies
- 4.6k views
-
-
இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கிக் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களித்தின் மென்பந்து குழுமத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட இரணைமடு வெற்றி கிண்ணத்தினை கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் தமதாக்கி உள்ளனர். குறித்த மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ் நேற்று கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மாலை இடம்பெற்றது. முதலில் களம் இறங்கிய கிளிநொச்சி மாவட்ட நீர்பாசான திணைக்கள அணியினர் பத்து பந்து பறிமாற்றத்தின் இறுதியில் 70ஒட்டங்களை பெற்றனர். தொடர்ந்து களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் பத்து பறிமாற்றத்தின் நிறைவில் 71 ஒட்டங்கள் பெற்றது இரணைமடு வெற்றிகின்னத்தை தமதாக்…
-
- 78 replies
- 9.4k views
-
-
வடமாகாண விளையாட்டு செய்திகள் 2018 யாழ்ப்பாண மத்திய கல்லூரி இன்னிங்ஸால் வெற்றி யாழ்ப்பாண மத்திய கல்லூரி இன்னிங்ஸால் வெற்றி இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச்சங்கம் நடத்தும் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மைதானத்தில் இந்த ஆட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து அக்கு…
-
- 30 replies
- 4.7k views
-
-
வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் வெற்றிபெற்றிருந்தது. வெளிமாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மவுண்டன்லெவினி…
-
- 0 replies
- 451 views
-
-
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா : மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை படைப்பு 23 AUG, 2025 | 02:26 PM 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டுத்திருவிழா 16.08.2025 தொடக்கம் 20.08.2025 வரை ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 05 தங்கப்பதக்கம், 03 வெள்ளிப்பதக்கம், 04 வெண்கலப்பதக்கம், 02 நான்காம் இடம், 03 ஐந்தாம் இடம், 01 ஆறாம் இடத்தினை பெற்று மொத்தமாக 102 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியன் ஆகவும் 14 வயது மற்றும் 20 வயது பிரிவில் வடமாகாண சிறந்த அணி என்னும் விருதையும் தட்ட…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
வட்பேர்ட்டிடம் தோற்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வட்பேர்ட்டின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்ற லிவர்பூல் தோற்றது. இப்போட்டியின் முதலாவது பாதியில் கோல் பெறும் பல வாய்ப்புகளை வட்பேர்ட் கொண்டிருந்தபோதும், அவ்வணியின் அணித்தலைவரும் முன்களவீரருமான ட்ரோய் டீனியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் அபாரமாகத் தடுத்த நிலையில் போட்டியின் முதற்பாதி முடிவில் வட்பேர…
-
- 0 replies
- 476 views
-
-
வட்மோருக்கு ICCஇல் பதவி வியாழக்கிழமை, 08 மே 2014 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அண்மையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பதவியில் இருந்து விலகிய டேவ் வட்மோர், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளின் மேம்படுத்தலில் ஈடுபடுவார் என சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அதி உயர் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான குழுவின் முகாமையாளர் உடன் இணைந்து செயற்ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலககக் கிண்ணத்திற்கு குறிப்பிட்ட நான்கு அணிகளையும் தயார்ப்படுத்தும் நோக்கிலேயே டேவ் வட்மோர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். 14ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் தன…
-
- 0 replies
- 344 views
-
-
வனிந்து பந்து வீச்சில் மிரட்ட இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை இந்திய அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என சமநிலை பெற்றிருந்தன. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி …
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்தை சுவீகரித்தது ஐயனார் விளையாட்டுக்கழகம்.! வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்துக்கான மாபெரும் கடினப்பந்து போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்ததுக் கொண்டது. வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்திற்கான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது, ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நான்காவது வருடமான இடம்பெற்று வருகின்றது. ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் தலைவர் அனுசன் களத்தடுப்பை தெரிவு செய…
-
- 0 replies
- 773 views
-
-
வன்னியின் போரை வென்றது கிளிநொச்சி இன்னிங்ஸ் வெற்றியாகவும் பதிவானது ‘வன்னியின் போர்’ என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் மைதானத்தில் நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. கபிலன் 48 ஓட்டங்களையும், சுஜீபன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில…
-
- 1 reply
- 611 views
-
-
வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம் அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார். இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார். அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் ம…
-
- 3 replies
- 524 views
-
-
வயசானாலும் உன் 'லைனும்... லெங்த்’தும்... வாவ் நெஹ்ரா! நெகிழும் நெட்டிசன்ஸ் #Nehra #AshishNehra தான் செய்யும் தொழிலை நேசிப்பவன், தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அவற்றுக்காக தரத் துணிவான் எனச் சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி தனது நாடி, தசை, நாளம், புத்தி எல்லாவற்றிலும் தனது தொழிலை நேசித்த, அதில் வெற்றியடைய முயற்சித்து கொண்டே இருக்கும் ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. அவரை கிண்டல் செய்யலாம், கேலி பண்ணலாம் ஆனால் புறக்கணிக்கவே முடியாது. ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பும் இருந்தது இல்லை, ரசிகர் பட்டாளமும் இல்லை, விளம்பர வருவாயும் கிடையாது, ஆனாலும் கிரிக்கெட்டை நேசித்த, அணியை நேசித்த, தேசத்தை நேசித்த பிளேயர் நெஹ்ரா…
-
- 0 replies
- 657 views
-
-
உலகில் உள்ள பெரும்பான்மையான உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில், பல ஆண்டுகள் கோலோச்சும் வீரர்கள் கூட 35, 40 வயதில் ஓய்வு அறிவித்துவிடுவார்கள். அந்த வீரர்கள் விளையாடும்போது எவ்வளவு கட்டுமஸ்தாக இருந்திருந்தாலும் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் அதீத விடுப்பினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ருக்மணி தேவி, 64 வயதிலும் தடகளப் போட்டிகளில் கலக்கி வருகிறார். அடுத்ததாக ‘மாஸ்டர்ஸ் வேர்ல்டு மீட்' என்று சொல்லப்படும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாராகி வரும் ருக்மணி தேவியை, பயிற்சி எடுக்கும் இடத்திற்கே சென்று சந்தித்தோம். ஜாவ்லின் த்ரோ, ஹாம்மர் த்ரோ, லா…
-
- 0 replies
- 671 views
-
-
வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள் இத்தாலியின் தேசிய அணிக்கும் ரோமா கால்பந்து அணிக்கும் விளையாடிய ஃபிரான்சிஸ்கோ டோட்டி ஓய்வு பெறுகிறார். 40 வயதாகும் அவர் ரோமா அணிக்காக விளையாடிய 24 ஆண்டுகளில்783 ஆட்டங்களில் பங்கேற்று 307 கோல்களை அடித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு இத்தாலி உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணியில் டோட்டி உறுப்பினராக இருந்தார். அவரைப் போலவே நீண்டகாலம் விளையாடி பிரபலமாக இருந்த சிலர் குறித்து பார்போம். ரோஜர் மில்லா கேமரூன் நாட்டு வீராரான ரோஜர் மில்லா, ஆடுகளத்தில் ஆடும் நடனங்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். படத்தின் காப்புரிமைBONGARTS/GETTY Image captionரோஜர் மில்லா: ஆடுகளத்தில் ஆட்டம…
-
- 2 replies
- 580 views
-
-
-
அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா மெஸ்ஸியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரர் கேரி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகியோர் அர்ஜென்டினா அணியின்போட்டி திறமை பிரேசில் அணியுடன் எப்படி இருக்கிறது என்பது பற்றி விவாதித்தனர். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா கலந்து கொண்டு பேசினார். மரடோனா கணித்தது போல் மெஸ்ஸி உலகக்கிண்ணத்தை வெல்வாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது என் கையில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாய் சே குவேராவை பொறித்துள்ளேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். பின்னர் நாங்கள் மிக உயரமாக கட்டப்பட்ட மூன்று மேடைகள் வைத்துள்ளோம். ஒன்று ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ …
-
- 0 replies
- 838 views
-
-
வரலாறு படைத்த ஓட்டப் பந்தய வீரர் ரோஜர் பேனிஸ்டர் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைCORBIS Image captionவரலாற்றில் முதல் முறையாக நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைலைக் கடந்து இலக்கை எட்டிய ரோஜர் பேனிஸ்டர். ஒரு மைல் தூரத்தை முதல் முதலாக நான்கு நிமிடத்துக்குள் ஓடிக் கடந்து சாதனை படைத்த பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் சர். ரோஜர் பேனிஸ்டர் தமது 88 வது வயதில் உயிரிழந்தார். …
-
- 0 replies
- 589 views
-
-
வரலாறு படைத்தது இந்தியா 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இந்தியா. இந்திய கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். கம்பீர் 97 ரன்கள் எடுத்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜாகீர் கான் முதல் 5 ஓவர்களில் 3-ல் இலங்கை வீரர்கள் ரன் ஏதும் எடுக்…
-
- 6 replies
- 2.4k views
-
-
வரலாறு படைத்தார் பயஸ்: ஆஸி., ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் பயஸ்,39, செக் குடியரசின் ஸ்டெபானெக்,33, ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இப்பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பயஸ். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறியது. இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறியும், ஒரு முறை கோப்பை பயஸ் ஜோடி வென்றதில்லை. இதில் இரு முறை (2006, 2011) அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்களிடம் தோற்றது. நேற்று நடந்த பைனலில் பயஸ் ஜோடி, மீண்டும் "நம்பர்-1' ஜோடி…
-
- 0 replies
- 570 views
-