விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை ! டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் ஜப்பானின் மிகப்பெரிய நகரமும் மின்சார நகரம் என்றும் வர்ணிக்கப்படும் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற்றுவந்த 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்மாண்ட நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது. 206 நாடுகளை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளையாட்டில் 339 போட்டிப்பிரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்பட்டி 8 மணியளவில் ஆரம்பமானது. வெற்று மைத…
-
- 5 replies
- 794 views
-
-
பார்சிலோனாவின் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார். பார்சிலோனாவை விட்டு வெளியேறுவது தனது வாழ்க்கையில் கடினமான தருணம் என்று 34 வயதான மெஸ்ஸி விவரித்தார். லியோனல் மெஸ்ஸி தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீரை எதிர்த்துப் போராடினார், அதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் விளையாடிய கால்பந்து கிளப்பான பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார். அவர் ஒரு தொடக்க அறிக்கையை கூறுவதற்கு முன்பு அவர் உணர்ச்சிவசப்பட்டார். "இந்த சமீபத்திய நாட்களில், நான் என்ன…
-
- 0 replies
- 274 views
-
-
பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை பிரதீப் குமார் பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2021, 03:42 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIPIN KUMAR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES) இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சில …
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம் 7 ஆகஸ்ட் 2021, 12:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர். அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திர…
-
- 4 replies
- 748 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள்... நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கத்திக்குத்து: 10பேர் காயம்! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் மேற்கில் உள்ள செடகயா வார்டில் ரயிலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. செடாகயா வார்டில் உள்ள சீஜோகாகுன்-மே ஸ்டேஷனுக்கும் சோஷிகாயா-ஒகுரா ஸ்டேஷனுக்கும் இடையே உள்ள ஒடக்யூ லைன் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளம் ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காயமடைந்த 10 பயணிகளில் ஒன்பது …
-
- 0 replies
- 203 views
-
-
முகமது அலி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்தது ஏன்? எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது சுயசரிதைப் புத்தகத்துடன் முகமது அலி சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி. வெள்ளை இனத்தவர்தான் எம்முடைய எதிரிகள், விடுதலையும் சமத்துவமும் கேட்டபோது எம்மை அவர்கள்தான் எதிர்த்தார்கள் என்று நேரிடையாகப் பேசியவர் …
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
Pyrros Dimas: பளுதூக்குதல் விளையாட்டின் டான்ஸிங் ரோஸ், வயது மூப்பு, காயங்களை தாண்டி சரித்திரம் படைத்த சூரன் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒலிம்பிக் ஐவண்ண வலையங்கள் ஒரு ஒலிம்பிக் பதக்கத்துக்கே தசாப்த கால முயற்சியும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பளு தூக்குதல் போட்டியில் கிரேக்க கடவுளாக இருந்து வசீகரித்திருக்கிறார். கிரீஸ் அவரது தாய் நாடு அல்ல. தன் சொந்த நாட்டின் அரசியல் சூழலால் தாய் நாட்டை விட்டு, கிரீஸுல் குடியேறி, அந்நாட…
-
- 0 replies
- 602 views
- 1 follower
-
-
சிஎன்என்) லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதாக ஸ்பானிஷ் கிளப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. "கிளப் மற்றும் பிளேயர் ஒரு உடன்பாட்டை எட்டினாலும், இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்களின் தெளிவான எண்ணம் இருந்தபோதிலும், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக இது நடக்காது" என்று பார்சிலோனா தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 34 வயதான அவர், கடந்த மாதம் அர்ஜென்டினாவுடன் தனது முதல் கோபா அமெரிக்காவை வென்றார், 2020 கோடையில் அவர் "ஆண்டு முழுவதும்" வெளியேற விரும்புவதாக ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தை அவர் இலவசமாக செய்ய முடியும் என்று கூறினார், ஆனால் இறுதியில் பார்சிலோனா உடன்படாததால் மெஸ்ஸி தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப…
-
- 14 replies
- 680 views
- 1 follower
-
-
ஜேர்மனியை தோற்கடித்து வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜேர்மனிக்கு எதிராக இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஓய் ஹாக்கி மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில், சிம்ரஞ்சீத் சிங் இந்தியாவுக்காக இரண்டு கோல்களை அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் ரூபிந்தர் பால் சிங் ஆகியோரும் தமது பங்கிற்கு கோல்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 வருட பதக்க காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர உதவியது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஆக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும். இந்திய தேசிய விளையா…
-
- 19 replies
- 1k views
- 1 follower
-
-
ரவிகுமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதியில் நுழைந்த இந்திய வீரரின் கதை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS டோக்யோ ஒலிம்பிக்கில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் ரவிகுமார் தஹியா. அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவைத் தோற்கடித்து இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். ஆரம்பத்தில் பின்னடைந்திருந்த இவர், தனது அற்புதமான விளையாட்டால் தனது எதிராளியையைத் தோற்கடித்தார். ஒரு கட்டத்தில் ரவிக்கு இரண்டு புள்ளிகளும்…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
Nadia Comaneci: ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார். அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று மொத்த உலகையும் வ…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணியைத் தோற்கடித்த அந்த இரு நிமிடங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் வலிமையான பெல்ஜியம் அணியிடம் இந்திய ஆண்கள் அணி போராடி தோல்வியடைந்தது. முதலில் இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் ஆட்ட நேர இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. முதல் மூன்று கால்பகுதி நேர ஆட்டங்களில் பெல்ஜியத்தின் தாக்குதலை மிகச் சிறப்பாக தடுத்து ஆடிய இந்திய அணிக்கு 48-ஆவது நிமிடத்தில் இருந்து பின்னடைவு ஏற்பட்டது. பெல்ஜியம் அணி முன்னிலை பெற்ற மூன்று கோல்களும் அதன் பிறகே அடிக்கப்பட்டன. இந்திய அணிக்கு வெண…
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை சிமானுஸ்காயாவுக்கு போலாந்தின் மனிதாபிமான விசா பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை கிரிஸ்டினா சிமானுஸ்காயாவுக்கு போலாந்து அரசாங்கத்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் திங்களன்று உறுதிபடுத்தினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான சிமானுஸ்காயா ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். பெலருஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அவர் பின்னர் ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பை ந…
-
- 2 replies
- 605 views
- 1 follower
-
-
உ.ஸ்ரீ Mutaz Essa Barshim- Gianmarco Tamberi ( Christian Petersen ) பல நாடுகளும் பல வீரர்களும் யுகம்யுகமாக தவம்கிடந்து வெல்ல முயன்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் பதக்கத்தை, பங்கு போட்டுக்கொள்ள டம்பேரிக்கும், பார்ஷிமுக்கும் ஒரே ஒரு நொடியும், ஒரே ஒரு கண் சிமிட்டலுமே போதுமானதாக இருந்தது. ஆகஸ்ட் 1 நண்பர்கள் தினம். பொதுவாக நண்பர்கள் தினத்தில் 90's கிட்ஸ் 'முஸ்தபா முஸ்தபா' பாடலையும், 2கே கிட்ஸ் ஹிப்ஹாப் தமிழா பாடல்களையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்து கம்பிகட்டுவார்கள். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக வேறொரு நிகழ்வை ஸ்டேட்டஸில் வைத்து நிறைய பேர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த நிகழ்வில் இடம்பெற்றிருந்தவர்கள் ஜன்மார்க்கோ டம…
-
- 0 replies
- 379 views
-
-
ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 22 - ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரேச்சலை ஏமாற்றி கோல் அடித்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. …
-
- 1 reply
- 574 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக்: அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் 'எக்ஸ்' வடிவில் கைகளை உயர்த்திக் காட்டியது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரேவன் சாண்டர்ஸ், அமெரிக்க வீராங்கனை டோக்யோ ஒலிம்பிக்கில் குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் தான் வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தைப் பெறும்போது கைகளை எக்ஸ் வடிவில் காட்டினார். இந்தக் குறியீட்டுக்கு என்ன பொருள்? அதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? 25 வயதான ரேவன் சாண்டர்ஸ் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். ஓரினைச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தவர். மனநலம் சார்ந்த பிரச்னைகள…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக்: பதக்கங்களை குவிக்கும் சீனா, அதற்காக ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்? - விரிவான அலசல் பட மூலாதாரம்,FANG DONGXU/VCG VIA GETTY IMAGES இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரண்டுமே அளவில் பெரியவை மற்றும் பெரிய மக்கள் தொகை கொண்டவை. இரண்டு நாடுகளுமே வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் ஒலிம்பிக் போட்டி என்று வரும்போது, சீனாவுடன் ஒப்பிடுவது இந்தியர்களுக்கு தலைகுனிவான விஷயமாக உள்ளது. டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை காணப்படும் போக்கு முந்தைய ஒலிம்பிக்கைப் போலவே இருக்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் அதேநேரம் இந்தியா , பட்டியலி…
-
- 4 replies
- 726 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கின் அதிவேக வீரரானார் இத்தாலியின் ஜேக்கப்ஸ் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அதிகேவ வீரர் யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தார். இதில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவெனில் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் கோளோச்சிய தற்போதும் அதிவேக வீரராக உள்ள ஜமைக்காவின் உசைன் போல்ட் இல்லாத 100 மீற்றர் ஓட்டமாக இது அமைந்ததோடு ஜமைக்கா நாட்டின் எந்தவொரு வீரரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற வில்லை என்பதும் அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமன்றி தடகள ரசிகர்கள் அனைவக்கும் க…
-
- 0 replies
- 283 views
-
-
டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PEDRO PARDO/AFP VIA GETTY IMAGES டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து. டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜிய…
-
- 2 replies
- 609 views
- 1 follower
-
-
எம்மா மெக்கியோன்: ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மனிதர் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதே பெரும் சாதனைதான். ஆனால் இந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஒரு வீராங்கனை மட்டும் ஏழு பதக்கங்களை வென்று மொத்த உலகை மலைக்க வைத்திருக்கிறார். அவர் பெயர் எம்மா மெக்கியோன். ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான இவர், டோக்யோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் ஏழு பதக்கங்களைக் குவித்திருக்கிறார். ஏழு பதக்கங்கள் வென்ற எம்மாவின் சாதனை பற்றிய ஏழு முக்கிய தகவல்கள் இதோ. 1. 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ …
-
- 3 replies
- 472 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக் 2020: கஞ்சா பயன்படுத்தும் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்? ராபின் லெவின்சன்-கிங் பிபிசி நியூஸ் 29 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கஞ்சா பயன்படுத்தியதால் அமெரிக்க வீராங்கனா ஷாகாரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார் கஞ்சா உற்பத்தி செய்வதும், அதைப் பயன்படுத்துவது, பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. வேறு பல நாடுகள் அதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றன. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு அனுமதியுள்ளது. ஆயினும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கஞ்சா பயன்ப…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1968 ஒலிம்பிக் போட்டிகள் மெக்சிகோவில் நடந்தது. அதோ பாப் பீமன், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார். முதல் இரு முயற்சிகளும் ஃபவுலாகிவிட்டன. தன் மூன்றாவது முயற்சியை சரியாக மேற்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் அந்த அமெரிக்க வீரர். பீமனோடு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சக அமெரிக்க வீரரான ரால்ஃப் பாஸ்டன், அவரை சமாதானப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார்…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
Nike Vaporfly ஷூவில் என்ன பிரச்னை? விளையாட்டில் உலக சாதனைகளை உடைக்க இந்த ஷூ பயன்படுத்தப்பட்டதா? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NIKE.COM நைக் நிறுவனத்தின் வேபர்ஃப்லை (Nike Vaporfly) ஷூவைக் குறித்து பார்ப்பதற்கு முன், சில அடிப்படை விஷயங்களை அலசிவிடுவோம். 1896ஆம் ஆண்டில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக்கில், 42.2 கிலோமீட்டர் மாரத்தன் பந்தயத்தை 2 மணி 58 நிமிடம் 50 நொடிகளில் ஓடி முடித்தது மனித இனம். அப்போது அதுவே மிக பிரும்மாண்டமான சாதனையாக கருதப்பட்டது. சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதிக நாகரீகமடைந்த, தொழில்நுட்பங்களால் ச…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
ஆஸ்கர் ஃபிகாரோ: தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஒலிம்பிக் நாயகனின் கதை கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 29 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES 2008 பீய்ஜிங் ஒலிம்பிக்கில் படுதோல்வி, ஒரு முறை கூட எடையை தூக்க முடியாமல் மிக மோசமான செயல்பாடுகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றம். கடுமையான விமர்சனங்கள், முதுகுத் தண்டில் வலி, மெல்ல செயலிழக்கும் வலது கை, உடல் மீது போர் தொடுக்கும் வயது என தன்னையும், தன் சூழலையும் வென்ற ஒலிம்பிக் நாயகன் ஆஸ்கர் ஃபிகாரோ (Oscar Figueroa) குறித்து பார்க்கப் போகிறோம். நானும் இவர்களோடு சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறேன் என சிறுவனாக இருந்த ஆஸ்கர் க…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக்: லவ்லீனா போர்ஹோகெய்னின் சார்பட்டா வெற்றி சாத்தியமானது எப்படி? வந்தனா பிபிசி இந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லவ்லீனா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா போர்ஹோகெய்ன். 69 கிலோ வெல்டர்வெயிட் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை சென்-நீன் சென்னை அவர் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக்கிற்குச் சென்ற முதல் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீரர் அவர். லவ்லீனா தோற்…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-