விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7850 topics in this forum
-
நடிகை படத்தைக் காட்டி அமெரிக்க வாலிபரிடம் பணம் கறந்த சிங்கப்பூர் இந்தியப் பெண் கைது இன்டர்நெட்டில் நடிகையின் படத்தைப் போட்டு, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அமெரிக்காவில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜீனியரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியப் பெண் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் வசித்து வருபவர் மல்லிகா ராமு (36). திருமணமான இவர், இன்டர்நெட்டில் நடிகை காயத்ரி ஜோஷி என்பவரின் புகைப்படத்தைப் போட்டு, சஞ்சனா பரேக் என்ற பெயரில் தனது புரொஃபைலை உலவ விட்டிருந்தார். அதைப் பார்த்து விட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றும் பரணிஇந்திரன் (32) என்ற வாலிபர் மல்லிகாவுடன் தொடர்பு ஏற்படுத்தினார். பரணியுடன் நெருக்கமான நட்பு ஏற்படுத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
சொந்த நாட்டையே தலைகுனிய வைத்த துரோகிகளாகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.நேற்று நடந்த பயிற்சியாளர் பாப் உல்மரின் பிரேத பரிசோதனைகளின் பின் பலத்த சந்தேகங்களும் ஊகங்களும் வெளியாகியுள்ளன. அவரது உணவில் விசம் கலக்கப்பட்டுள்ளது,முகத்தில் அடித்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது,கண்ணிலிருந்து
-
- 3 replies
- 1.6k views
-
-
COPY AND PASTE THE LINK IN WINDOW MEDIA PLAYER mms://lankanewspapers.com/vid2007
-
- 2 replies
- 1.9k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post.html இங்கே யாழ் மணிக்கூட்டு அருகிலுள்ள மைதானத்தில். சத்தமா அது வெறும் சத்தமா என்று சொல்ல முடியாத சத்தம். போட்டி உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கு போலை. சென்றல் வீரர் நகுலேஸ்வரன் பந்து போட்டு கொண்டிருக்கிறார். போடு மச்சான் போடு பொல்லு பறக்க. என்ற கோசம் வானை பிளந்து கொண்டிருக்கின்றன
-
- 0 replies
- 1.8k views
-
-
சென்னையில் நடைபெறும் மகளீர் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நான்கு நாடுகளின் மகளீரணி பங்குபற்றுகின்றன. 1) அவுஸ்திரேலியா 2) நியூசிலாந்து 3) இந்தியா 4) இங்கிலாந்து இப் போட்டிகள் 21ம் திகதி ஆரம்பமாகின. அடுத்த மாதம் 5ம் திகதி வரை மோதல்கள் இடம் பெறும். நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியா - இங்கிலாந்துடன் மோதி வெற்றி பெற்றது. இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது. 232 ஓட்டங்கள் இலக்காகக் கொண்ட இங்கிலாந்து 40 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்து 18 ஓட்டங்களால் தோல்வியுற்றது. மற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா …
-
- 24 replies
- 3.7k views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட வேண்டும் கப்டன் வோகன் கூறுகிறார் ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கும் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணிக் கப்டன் மைக்கேல் வோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். சாம்பியன் கிண்ணப் போட்டிக்கு முன் ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கி முறையே 2 மற்றும் ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட இருவருக்கும் மேன்முறையீட்டின் மூலம் தடை நீக்கப்பட்டது. ஆனால், இருவரும் உலகக் கிண்ணப் போட்டியில் ஊக்க மருந்து சோதன…
-
- 0 replies
- 765 views
-
-
முழங்கால் காயம் : மருத்துவமனையில் சானியா அனுமதி! சனி, 3 மார்ச் 2007 இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்! டோஹாவில் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்றில் இத்தாலி வீராங்கனையை வென்ற சானியா மிர்சாவிற்கு வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதனால் இரண்டாவது சுற்றில் இருந்து அவர் விலகிக் கொண்டார். நாடு திரும்பிய அவருக்கு நேற்று எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது, முட்டியில் முழங்கால் எலும்பையும், தொடை எலும்பையும் இணைக்கும் குறுத்தெலும்பில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அ…
-
- 0 replies
- 973 views
-
-
கப்டன் பொண்டிங் கூறுகிறார் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என்பதை மேற்கிந்தியாவில் நாங்கள் ஆடத் தொடங்கியதும் நீங்களே சொல்வீர்கள் என்று அந்த அணியின் கப்டன் பொண்டிங் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய 5 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது.இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை அடுத்தடுத்து இழந்தது. இதனால் லேசான தடுமாற்றமடைந்துள்ள அவுஸ்திரேலிய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலிய அணி நேற்று முன்தினம் புறப்பட்டது. அப்போது அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங்கிடம் அவுஸ்திரேல…
-
- 0 replies
- 910 views
-
-
உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் 21 போட்டிகளில் இந்தியா - அவுஸ்திரேலியா மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகும் இந்தியா தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவுடன் மட்டும் 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட 21 போட்டிகளில் மோதவுள்ளது. இரு அணிக்குமிடையே முதல் ஒருநாள் போட்டி ஜூன் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டி அயர்லாந்தில் நடைபெறும். அங்கு இரு அணிக்குமிடையே 3 போட்டிகள் நடைபெறும். அதன் பின் அவுஸ்திரேலிய அணி அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. அப்போது இரு அணிக்குமிடையே 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இதை தொடர்ந்து இந்திய அணி அவுஸ்திரேலியா செல்கிறது. அங்கு இரு அணிகளுக்குமிடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். அடுத…
-
- 0 replies
- 865 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களில் கப்டன் தவிர வேறு எவரும் பேட்டியளிக்கக்கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியாவில் அடுத்த மாதம் 13 ஆம் திகதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் சபை அதிரடியாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியின் போது கப்டன் இன்சமாம், பயிற்சியாளர் பொப் வூல்மர், முகாமையாளர் மிர் ஆகியோர் தவிர எவரும் பேட்டியளிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலகக் கிண்ணப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஊடக முகாமையாளர் மிர் கூறியதாவது; உலகக் கிண்ணப் போட்டிக்காக அணியை தயார் செய்ய…
-
- 1 reply
- 1k views
-
-
மேற்கிந்திய முன்னாள் வீரர்களுக்கு உலகக் கிண்ண போட்டியில் கௌரவம் மேற்கிந்திய அணி இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்றதற்காக அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இந்த உலகக் கிண்ணத்தின் போது கௌரவப்படுத்தப்படுகிறார்கள். 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு நடந்த முதல் இரண்டு உலகக் கிண்ணத்தை கிளைவ் லொயிட் தலைமையிலான மேற்கிந்திய அணி வென்று மகத்தான சாதனை படைத்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த மேற்கிந்திய கிரிக்கெட் சபையும் ஐ.சி.சி.யும் இணைந்து முடிவு செய்துள்ளன. 9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதன் முறையாக மேற்கிந்தியாவில் நடைபெறுகிறது. மார்ச் 13 ஆம் திகதி முதல் போட்டி நடக்கிறது. தொடக்கப் போட்டிக்கு முன்பாக, முன்னாள் மேற்கிந்திய வீரர்…
-
- 0 replies
- 828 views
-
-
வவுனியாவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாகப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமது அலுவலகத்தை மூடிவிட்டுக் கொழும்புக்குப் புறப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும்இ தமது உறுப்பினர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு வரவில்லையெனத் தெரிவித்திருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினர் ஒமர்சன்இ வவுனியாவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகக் கூறினார். உரிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இன்னமும் ஓரிரு தினங்களில் அவர்கள் வவுனியா அலுவலகத்துக்குத் திரும்பி விடுவார்கள் எனவும் தொபினுர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். செய்தி: சங்கதி.கொம்
-
- 0 replies
- 900 views
-
-
அவுஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளரான பிரட் லீ கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் தகுதியை இழந்துள்ளார். இவரது காயம் காரணமாக இவரது வைத்தியர் குறைந்தது இரு மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுன்னார். இவருக்குப் பதிலாக ஸ்ரூவேட் கிளார்க் அணியிலிணைக்கப்பட்டுள்ளார். இதே வேளை தாம் ஓய்வின்றி தொடர்ந்து விளையாடியமையே தமது அணியின் தோல்விக்குக் காரணமென அணித் துணைத்தலைவர் அடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார். வரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இனி தமது அணி நாணய சூழற்சியில் வெற்றி பெற்றால் இரண்டாவதா துடுப்பெடுத்தாட அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முடிவெடுத்துள்ளார். அதற்காக அவர் கூறும் காரணம் : எதிரணியின் சேஸிங் சாதனையை தட…
-
- 2 replies
- 1.2k views
-
-
வீரர்களின் காயத்தால் சிக்கலில் தவிக்கும் அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அண்மித்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள முன்னணி வீரர்களின் காயம் காரணமாக பல அணிகளும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. அதிலும் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலிய அணி பல சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகிறது. 9 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சைமன்ட்ஸுக்கு கொமன்வெல்த் முக்கோணத்தொடரின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தசைநார் கிழிந்து விட்டதால் அவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உலகக் கிண்ண தொடக்க போட…
-
- 0 replies
- 1k views
-
-
இன்றைய தரவரிசைப்படி துடுப்பெடுத்தாட்டத்தில் முதலாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசியும் இரண்டாம் இடத்தில் இந்தியாவின் டோனியும் உள்ளார்கள். சிரிலங்காவை :P அண்மையில் மண் கவ்வ வைத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் டோனியின் அதிரடி ஓட்டக் குவிப்பு அவரை இரண்டாம் இடத்திற்கு ஏற்றி விட்டது. ஜானா
-
- 0 replies
- 976 views
-
-
இன்றைய ஒரு நாள் தொடர் ஆட்டத்திலும் நியூசிலாந்திடம் நடப்பு உலக சம்பியன்கள் மண் கவ்வியுள்ளார்கள். இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 347 ஓட்டங்கள் குவித்திருந்தது. மனம் தளராத நியூசிலாந்து அணி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 49.3 ஓவர்களினல் 350 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஜானா
-
- 8 replies
- 1.6k views
-
-
முப்பரிமாண மின் பொம்மலாட்ட கிரிக்கெட் வலைதளஒளிபரப்பு www.cricinfo.com வலைதளத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பின் வர்ணனையாளரின் வர்ணனையினை உடனடியாக அதற்கேற்ற அசைவுகளுடன் முப்பரிமாண மின் பொம்மலாட்டமாக மாற்றி படியடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ( simulated Players) நேரடியாக ஒளிபரப்பில் பார்ப்பது போல் மின்பொம்மலாட்ட கிரிக்கெட்டியினை 30-4-0 வினாடிகள் காலதாமதத்தில் வலைதள பொம்மலாட்ட ஒளிபரப்பில் காட்ட ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற இந்திய –இலங்கை கிரிக்கெட் போட்டி வலைதள பொம்மலாட்டமாக வலைதள ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் விளையாட்டு அரங்கின் எந்த பக்கத்திலிருந்து நாம் பார்க்க விரும்புகிறோமோ அந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
* முதலிடத்தை இழந்துவிடும் அபாயம் அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து அணிகளிடையே நியூஸிலாந்தின் வெலிங்டனின் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி பத்து விக்கெட்டுகளால் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிவடைந்த முக்கோண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து இங்கிலாந்திடம் வெற்றிக் கிண்ணத்தை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி நேற்று நியூஸிலாந்துடன் தோல்வியுற்றதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டித் தரவரிசையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்திலிருந்து வரும் நிலையில் நேற்றைய தோல்வியின் மூலம் அவு…
-
- 3 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலிய கப்டன் கூறுகிறார் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலாவது ஒரு நாள் போட்டியில் நேற்று மோதியது. சப்பல் - ஹாட்லி தொடருக்காக அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி விளையாடுகிறது. உலக கிண்ணத்தை கருத்தில் கொண்டு அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கிபொண்டிங், துணை கப்டன் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சைமண்ட்ஸும் அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்தத் தொடருக்கான கப்டனாக மைக்கேல் ஹஸி நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை வெலிங்டனில் நடந்தது. சமீபத…
-
- 3 replies
- 959 views
-
-
உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் சகல துறை வீரர் ரஸல் ஆர்னோல்டும் மிதவேகப் பந்துவீச்சாளர் நுவான் குலசேகரவும் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேரைக் கொண்ட இறுதி அணியை தெரிவு செய்யும் இறுதிநாள் நேற்று திங்கட்கிழமையாகும். இந்த நிலையில் உலகக் கிண்ணத்துக்கான இறுதி அணியை தேர்வுக் குழு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்தது. இதற்கமைய இந்த அணியில் எட்டு துடுப்பாட்ட வீரர்கள், இரு சுழற்பந்து வீச்சாளர்கள், ஐந்து நடுத்தர வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்குவர். இதற்காக, கடந்த பல மாதங்களாகக் அணியில் இடம்பெறாத ரஸல் ஆர்னோல்டும் நுவான் குலசேகரவும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தவும், பந்துவீச்சு பலத்தை அதிகர…
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெற் போட்டிகள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடையேயான முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அவுஸ்ரேலியா மெல்போன் கிரிக்கெற் மைதானத்தில் மதியம் 2-15 க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன. உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக Ashes Test போட்டிகளில் பங்குபற்றாத இங்கிலாந்து அணித்தலைவர் Michael Vaughan இந்த முத்தரப்பு போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Australia v England - Melbourne - 12 Jan Australia v New Zealand - Hobart - 14 Jan En…
-
- 13 replies
- 2.2k views
-
-
செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழன் -ஏ.தேவராஜா- "இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சர்வதேச ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகத் திகழ்வதினால், எதிர்வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை இலங்கை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளர் கே.மதிவாணன் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் முதலில் தன்னைப் பற்றி தெரிவிக்கையில்; எனது சொந்த இடம் பருத்தித்துறை. நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். கல்லூரியின் கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடியதினால் யாழ். மாவட்ட…
-
- 0 replies
- 880 views
-
-
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையான ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான நான்கு ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளை உள்ளடக்கிய போட்டித் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இன்று Nagpur துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். Sourav Ganguly 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், Gautam Gambhir 69 ஓட்டங்களையும், Dhoni 62 ஓட்டங்களையும், Rahul Dravid 54 ஓட்டங்களையும் பெற்றன…
-
- 1 reply
- 886 views
-
-
புதிய சாதனைக்கு காத்திருக்கும் சச்சின் [27 - January - 2007] [Font Size - A - A - A] ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திவரும் சச்சின் டெண்டுல்கர் விரைவில் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனை தான் அதுவாகும். 376 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். (ஓட்டம் ஏதும் எடுக்காமல்) இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஷ்ரீநாத் 19 முறையும், கும்பிளே 18 முறையும் `டக் அவுட்' ஆகியுள்ளனர். தற்போது சச்சின் 3 ஆம் இடத்தில் உள்ளார். டக் அவுட் சாதனை படைப்பாரா அல்லது சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சதம் அடிப்பாரா என்று பொறுத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் - தென் ஆபிரிக்கா இடையே நடைபெற்ற முதலாவது Test போட்டியில் தென் ஆபிரிக்கா 7 விக்கெற்றுக்களால் வெற்றி. தென் ஆபிரிக்காவின் Centurion துடுப்பாட்ட மைதானத்தில் பாகிஸ்தான் - தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது Test போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 7 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது பந்துத் தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தென் ஆபிரிக்கா அணி வீரர் Herschelle Gibbs களத்தில் துடுப்பாடிக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி வீரர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்த காரணத்துக்காக Herschelle Gibbs க்கு அடுத்து நடைபெறும் இரண்டு Test போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்கெற்றில் பொருத…
-
- 0 replies
- 958 views
-