விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
தோல்விகளின் பின்னரும் இலங்கை வீர்களின் பொறுப்பற்ற செயல் - விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாமில் சுற்றித் திரியும் ஒரு காணொளி தற்சமயம் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இலங்கை இழந்துள்ள நிலையிலும், இவர்களது இந்த பொறுப்பற்ற செயற்பாடு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் குறித்த காணொளியின் நம்பகத் தன்மையை சரிபார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட், அணி முகாமையாளரிடம் அறிக்கையை கோரியுள்ளது. இந்த காணொளி பதிவனை சமூக ஊடகங்களில்…
-
- 1 reply
- 540 views
- 1 follower
-
-
இலங்கையில் கிரிக்கெட் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=146588
-
- 0 replies
- 811 views
-
-
இரண்டாவது போட்டியிலும் வீழ்ந்தது இலங்கை ; தொடர் இங்கிலாந்து வசம் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெறும் டி-20 தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து 8 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்டது. அதன் பின்னர் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்றிரிவு கார்டீப், சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறை…
-
- 0 replies
- 219 views
-
-
இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியனாகி வரலாற்று சாதனை படைத்தது நியூசிலாந்து ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளினால் இந்தியாவை வீழ்த்தி சாம்பியனாகியுதுடன், வரலாற்று சாதனையையும் பதிவுசெய்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. இதனிடையே முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களையும் எடுத்தன. 32 ஓ…
-
- 6 replies
- 779 views
- 1 follower
-
-
பலம் பொருந்திய இங்கிலாந்துடனான முதல் டி-20 ஆட்டம் இன்று இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இங்கிலாந்துடன் மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந் நிலையிலேயே முதலில் ஆரம்பமாகியுள்ள டி-20 தொடரின் முதல் போட்டி கார்டிஃப், சோபியா கார்டீன்ஸ் மைதனாத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் அந் நாட்டு நிலைமைகளின் கீழ் விளையாடுவது இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் ஈயோன் மோர்கன் தலைமையிலான இங…
-
- 1 reply
- 557 views
-
-
தனது இரட்டைக் குழந்தைகளை வரவேற்றார் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகளாக இரு மகன்மார் பிறந்துள்ளனர். இரட்டைக் குழந்தைகளுக்கு போல்ட் தண்டர் மற்றும் செயிண்ட் லியோ என பெயர் வைத்து அவர்களை வரவேற்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை மகன்களின் பிறப்பை புகைப்படத்துடன் அறிவித்தார் போல்ட். அதில், உசைன் போல்ட் அவரது மனைவி காசி பென்னட், அவர்களின் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் ஆகியோர் தற்போது பிறந்த இரட்டையர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். மூத்த மகளான ஒலிம்பியா லைட்னிங் போ…
-
- 1 reply
- 658 views
-
-
கொவிட் தொற்றால் இந்திய நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் மரணம் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் 91ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பறக்கும் சிக்’ என புகழ்பெற்ற மில்கா சிங், ஆசிய விளையாட்டு விழாவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். டோக்கியோ 1958 ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் ஜகார்த்தா 1962 ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் மற்றும் 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் மில்கா சிங் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். ரோம் 1960 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீற்றர் இறுதிப் போட்டி…
-
- 0 replies
- 303 views
-
-
கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச் நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும் போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன். புல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல. களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச். மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் …
-
- 0 replies
- 325 views
-
-
2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட 2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யூரோ என அழைக்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான யு.இ.எஃப்.ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அதன்படி 31 நாட்களில் 51 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பிரிவுக்கு 4 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. குழு ஏ: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து குழு பி: டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து குழு சி: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா குழு டி: இ…
-
- 9 replies
- 997 views
-
-
2021 பிரெஞ்சு ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் கிரெஜிகோவா 2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா, ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ரோலண்ட் கரோஸில் அரங்கேறிய இந்த ஆட்டத்தின் இறுதியில் 25 வயதான கிரெஜிகோவா 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பவ்லியுசென்கோவாவை தோற்கடித்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையை கிரெஜிகோவா இதன்மூலம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1981 இல் செக் குடியரசின் ஹனா மாண்ட்லிகோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். https://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 318 views
-
-
பெண்களுக்கான 10.000 மீற்றர் போட்டியில் எத்தியோப்பிய வீராங்கனை கிடே உலக சாதனை எதியோப்பியாவைச் சேர்ந்த 23 வயதுடைய வீராங்கனை லெட்டிசென்பெட் கிடே பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சாதனையை முறியடித்தார். நெதர்லாந்தின் ஹெஞ்சிலோ விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற எதியோப்பிய வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட அவர், 29 நிமிடங்கள் 01.03 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து இந்த சாதனையை நிலைநாட்டினார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றுமொரு தகுதிகாண் போட்டியில் பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சாதனையை நெதர்லாந்…
-
- 1 reply
- 473 views
-
-
ராபட்ஸ், ஹோல்டிங், க்ராஃப்ட், கார்னர் : பேட்ஸ்மேன்களைப் பம்மி, பதுங்கவைத்த Four Horsemenகளின் கதை! அய்யப்பன் Andy Roberts, Michael Holding, Colin Croft and Joel Garner ( Facebook ) பவுன்சர்கள், யார்க்கர்கள், ஸ்விங்குகள் என்னும் அணுகுண்டுகள் நிரப்பப்பட்ட நான்கு ஏவுகணைகள், எதிரணியின் கூடாரத்தைத் தரைமட்டமாக்கிய கதைதான் இது. கிரிக்கெட்டின் அரிச்சுவடியை எழுதிய, சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முதல், அசந்தால் கதைமுடிக்கும் ஆஸ்திரேலியா வரை, அனைவரையும், இரு தலைமுறைகளாக, அஞ்சி நடுங்கவைத்து, கட்டி ஆண்டது மேற்கிந்தியத் தீவுகள். அதற்கு முப்படைகள் தேவைப்படவில்லை. நான்கு சாமுராய்களே போதுமானவர்களாய் இருந்த…
-
- 0 replies
- 380 views
-
-
சமநிலையில் குரோஷியா – ஆர்மேனியா போட்டி ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான முன்னோட்டமான, குரோஷியாவில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்மேனியாவுக்கும் இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் பெரிசிச் பெற்றதோடு, ஆர்மேனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை வெபேமர் அங்குலோ பெற்றிருந்தார். இதேவேளை, போலந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ரஷ்யாவுக்குமிடையிலான சிநேகபூர்வ போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜகுப் ஸ்வியெர்ஸ்ஸொக் பெற்றதோடு, ரஷ்யா …
-
- 0 replies
- 464 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடைபெறுவது 100 சதவீதம் உறுதி ஒலிம்பிக் போட்டிகள் திட்டபடி முன்னோக்கி செல்லும் என்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர் சீகோ ஹாஷிமோடோ 100 சதவீதம் உறுதியாக கூறியுள்ளார். எனினும் கொவிட்-19 நிலைமகள் மேலும் மோசமானால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் போட்டிகளை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றுகள் ஜப்பான் அதிகரித்து வருகிவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதி அவசரகால நிலையில் உள்ளது. அதேநேரம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 23 அன்று திட்டமிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஒரு வருடம் தாமதமான பின்னர் விளையாட்டுக்கள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மீண்டும் தள்ளி …
-
- 0 replies
- 387 views
-
-
பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார் ஒசாகா உலக நம்பர் டூ வீராங்கனையான நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை அறிவிக்கும் ஒரு டுவிட்டர் பதிவில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, 2018 ஆம் ஆண்டில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதிலிருந்து தான் நீண்டகால மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறினார். இந்த மன அழுத்தம் காரணாக ஒசாகா போட்டிக்கு பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்புக்களை புறக்கணித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோலண்ட் கரோஸ் போட்டியின்போது தனது முதல் சுற்று வெற்றியின் பின்னர் இடம்பெற்ற செய்தி மாநாட்டைத் தவிர்த்ததற்காக ஒசாக்காவிற்கு 15,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேர் நான்கு கிராண…
-
- 0 replies
- 427 views
-
-
மிஸ்பா உல் ஹக்: பாகிஸ்தானின் மீட்பர்... சவால்களை எதிர்கொண்டு சரித்திரம் படைத்தவர்! அய்யப்பன் மிஸ்பா உல் ஹக் ( icc-cricket.com ) சாதிக்க வேண்டுமென்ற துடிப்பிருப்பவனுக்கு, வெற்றிக்கு வயதில்லை, வரம்புமில்லை என்பதை, ஓய்வறிக்க வேண்டிய நேரத்தில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, வாழாத வாழ்வின் இன்னொரு அத்தியாயத்தை வரைந்தவர்தான் மிஸ்பா உல் ஹக். பேட்ஸ்மேன்களையும், பௌலர்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாய் பாகிஸ்தான் உருவெடுத்தாலும், இம்ரான் கானுக்குப் பிறகு, ஒரு நிலையான கேப்டன்கூட அங்கே தலைமையேற்கவில்லை, அவர்களது கிரிக்கெட் போர்டு அதற்கு இடமளிக்கவுமில்லை. வருடத்திற்கு ஒரு கேப்டன் என பந்தாடிக் கொண்டிருந்…
-
- 0 replies
- 552 views
-
-
என் கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்குண்டு: பும்ரா! தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் முன்னாள் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்கிருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஷேன் பாண்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் தரப்பு சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் பும்ரா, “நான் இங்கு இல்லையென்றாலும், இந்திய அணியுடன் விளையாடும்போது ஷேன் பாண்டோடு பேச முயல்வேன். இது ஒரு நல்ல பயணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவதைக் கற்று எனது பந்துவீச்…
-
- 1 reply
- 702 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு கிட்டியுள்ள மில்கா டி சில்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கிரிஸ்புரோ இலங்கையின் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பளர்களான கிரிஸ்புரோ குழுமம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ள வீராங்கனை மில்கா டி சில்வாவிற்கு தமது அனலான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான உடற்தகுதியை அவர் அடைந்துள்ளதால், சர்வதேச ஜிம்னாஸ்டிக் மாநாட்டினால் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தும். இதனால், ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது இலங்கை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக மில்கா டி சில்வா உள்ளார். 18 வயதான மில்கா…
-
- 0 replies
- 564 views
-
-
சர்வதேச ஊடகங்களின் விமர்சனத்தால் இதயத்தில் ரத்தம் கசிகிறது; அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தியதால் இந்தியா கடும் நெருக்கடியில் உள்ளது. இதன் விளைவாக, நாடு சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து தினசரி சுமார் 4,000 எனும் அளவில் உள்ளது. இது தான் சமயம் எனக் காத்திருந்ததைப் போல், பல சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும்…
-
- 0 replies
- 655 views
-
-
11 கோடி நிதி திரட்டிய விராட் கோலி! இந்தியாவின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 11.39 கோடி நிதி திரட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.62 லட்சமாக உள்ளது. ஒரேநாளில் 4,120 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்திய அணி தலைவர் விராட் கோலியும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்ட முடிவெடுத்தார்கள். இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோ…
-
- 0 replies
- 617 views
-
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 596 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரும் ஒரு இணையத்தள விருப்பம் கோரல் மனு கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள கோடை ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ளன. டோக்கியோ உலகளாவிய நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் மற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களை கொவிட்-19 இலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகள் இன்னும் உள்ளன. இந் நிலையில் "டோக்கியோ ஒலிம்பிக்கை நிறுத்து" (Stop Tokyo Olympics) என்று இ…
-
- 1 reply
- 683 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா..! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியிலிருந்து இடைநடுவில் விலகியிருந்தார். கொரோனாவிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். மேலும், அஸ்வின் குடும்பத்தில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …
-
- 0 replies
- 793 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்போருக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான “playbooks” என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வருகை தரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஜப்பானில் முதல் மூன்று நாட்களுக்கு தினமும் சோதிக்கப்படுவார்கள். டோக்கியோவை அடைந்த பின்னர் முதல் இரண்டு வாரங்களுக்கு மற்ற விளையாட்டு அதிகாரிகளுடன் சாப்பிட அவர்களுக்கு அனுமதி இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்ட…
-
- 0 replies
- 487 views
-
-
12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 188 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்போது, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். அதன்படி, திமுத் கருணாரத்ன 106 ஓட்டங்களுடன் லஹிரு திரிமான்ன 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! (adaderana.lk)
-
- 0 replies
- 791 views
-