விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
பாகிஸ்தான் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமேக்காவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியா மற்றும் அயர்லாந்திடம் அடுத்தடுத்து படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மர்மமான முறையில் இறந்தார். ஜமேக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஹோட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் இரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கிக் கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் …
-
- 1 reply
- 1k views
-
-
இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி இந்த இளம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஓராண்டில் பலமாக எழுச்சியுறும் என்று அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது: ”2-0 என்று தொடரை இழந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டத்திறமைதான். கடந்த காலங்களில் நாம் வீழ்ந்திருக்கிறோம், நெருக்கடியில் எந்த வித சவாலையும் அளிக்காமல் தோற்றிருக்கிறோம். ஆனால் தற்போது எதிரணியினரிடம் தாக்குதல் ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம். இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. ஆனால், இது தோல்விக்கான சாக்குபோக்கு அல்ல. இந்த அணிக்கு நான் முன்னமே கூறியது போல் இன்னும் 12 மாதங்கள் கொடுங்கள்,…
-
- 1 reply
- 1k views
-
-
வர்மக்கலை உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும். "வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி" என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப்பரம்பரையாகவும், தம…
-
- 0 replies
- 1k views
-
-
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்படவில்லை என்றும், அவரது மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்றும் ஜமைக்கா நாட்டின் பொலிஸார் செவ்வாய்கிழமை மாலை அறிவித்தனர். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றபட்ட பிறகு பாப் உல்மர் தமது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து முதலில் ஒரு மருத்துவர் நடத்திய மருத்துவ ஆய்வில், பாப் உல்மர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வு முன்னைய ஆய்வை நிராகரித்தது. உல்மரின் மரணம் தொடர்பான ஒவ்வொரு விடயமும் தொழில் ரீதியாக புலனாய்வு …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை - தென்னாபிரிக்க மோதும் இருபதுக்கு 20 போட்டி இன்று தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொ…
-
- 5 replies
- 1k views
-
-
இங்கிலாந்தில் சில வருடங்கள் வாசித்ததாலோ என்னவோ இடைக்கிடை அங்கிருக்கும் பழைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுப்பது எனது வழக்கம். நான் கனடா வந்து இருபத்தி ஐந்துவருடங்கள் ஆகியும் இங்கிலாந்தில் இருக்கும் நண்பர்கள் போல் கனடாவில் ஏனோ அமையவில்லை. உலக புதினங்கள் தொடங்கி ஊர் புதினங்கள் வரை ஒரே அலைவரிசையில் உரையாட எப்பவும் இங்கிலாந்திற்குத்தான் தொலைபேசி அழைக்க வேண்டிஇருக்கும் .அதுவும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி எனக்கு மிக பிடித்த வர்ணணையாளர்கள் TONY GREIG, GEOFF BOYCOTT லெவலுக்கு புள்ளிவிபரங்களுடன் அலசி ஆராய அங்கிருக்கும் சில நண்பர்களை கேட்டுத்தான். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் எம்மவர் பலர் பிரிட்டிஷ்காரர்களின் அந்த பாரம்பரியம் காக்கும் கடமைகளில் தாமும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள் பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், பங்குபெறவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய 19 வயதின் கீழான இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா மதுஷன் இடம்பிடித்துள்ளார். இதேவேளை, ஆசியக் கிண்ணத் தொடருக்கான மேலதிக இலங்கை வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்திற…
-
- 1 reply
- 1k views
-
-
புஜாராவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இன்று அடிலெய்டில் இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்ப…
-
- 1 reply
- 1k views
-
-
சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் பங்குகொள்ளும் முல்லை யுவதி! பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொள்ளும் முல்லைத்தீவு யுவதிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் நிதி அன்பளிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து, குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி என்பவரே பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார். இவரது குடும்ப நிதி நிலமைகள் காரணமாக போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் இருந்த யுவதி விடுத்த கோரிக்…
-
- 2 replies
- 1k views
-
-
”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான். காரணம் முக்கியமான கட்டத்தில் சீரான இடைவெளியில் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்டது. இலங்கை - இந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட…
-
- 2 replies
- 1k views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 39 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 3,503 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 707 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 1…
-
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், முய் தாய் (Muay Thai) எனும் குத்துச்சண்டைப் போட்டியின் போது மரணமடைந்தமை இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் 32 வயதான பிரதீப் சுப்ரமணியம் கலந்துகொண்டார். இந்நிலையில், குறித்த போட்டியில் 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார். போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற வைத்தியப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, பிரதீப் போட்டியில் கலந…
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனில் விருது பெற்ற சங்கக்கார லண்டனில் இடம்பெற்ற 5 ஆவது ஆசிய விருது வழங்கும் விழாவில் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார விருது பெற்றுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/04/18/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0
-
- 2 replies
- 1k views
-
-
விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்க்கும் டோனி: வார்னர் பாராட்டு விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை ஆஸ்திரேலிய துணை கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தம். இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்த இடைக்கால குழுவில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ. இமாம், ரோஹினி மாரசிங்க, ஐரங்கனி பெரேரா, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, பட்டய கண…
-
- 17 replies
- 1k views
- 1 follower
-
-
இந்திய கோமாளிகளின் பந்துவீச்சை விரட்டி விரட்டி அடித்த தென்னாபிரிக்கா மூன்றாவது இறுதியுமான போட்டியில் தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 365 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான பொஸ்மனும் அம்லாவும் இணைப்பாட்டமாக 113 ஓட்டங்களை 15 ஓவர்களில் பெற்றிருந்தபோது பொஸ்மன் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து அம்லா 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கலீஸும் டிவில்லியர்ஸும் ஆட்டமிழக்கா 173 ஓட்டங்கலை இணைப்பாட்டமாகப் பெற்றுள்ளனர். இருவரும் சதங்களைக் குவித்துள்ளதோடு இறுதி 5 ஓவர்களில் மட்டுமே 78 ஓட்டங்களை விளாசியிருக்கின்றனர். இந்த இனைப்பாட்டத்தில் எல்லா இந்திய கோமாளி பந்து வீச்சாளர்களும் செருப்படி வாங்கியுள்ள…
-
- 10 replies
- 1k views
-
-
திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார். பும்ரா - மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரதும் திருமண நிகழ்வு இன்றையதினம் கோவாவில் இடம்பெற்றது. மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்குமிடையில் திருமணம் இடம்பெற்றதையடுத்து முதலாவது படத்தை பும்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/102169
-
- 4 replies
- 1k views
-
-
சிறந்த விளையாட்டு வீரராக செரினா வில்லியம்ஸ் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸூக்குக் கிடைத்துள்ளது. உலகின் முன்னணி விளையாட்டுச் சஞ்சிகையான ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட், 1954ஆம் ஆண்டுமுதல் இந்த விருதை வழங்கிவருகிறது. உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்கள் கருத்திலெடுக்கப்பட்டு, இந்த விருது வழங்கப்படுகிறது. 34 வயதான செரினா வில்லியம்ஸ், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாகத் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமுமே, முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தப் பருவகாலத்தில் ஆறு …
-
- 1 reply
- 1k views
-
-
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் December 22, 2015 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது. இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இதில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். எமிர…
-
- 14 replies
- 1k views
-
-
Published By: VISHNU 23 FEB, 2024 | 09:56 PM (நெவில் அன்தனி) உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பிறீமியர் லீக்கின் (WPL 2024) இரண்டாவது அத்தியாயம் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகிறது. ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்திவரும் வீராங்கனைகள் பலர் இவ் வருட மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றனர். இன்றைய போட்டிக்கு முன்பதாக சினிமா நட்சத்திரங்களின் பங்கேற்புடன் பிரமாண்டமான ஆரம…
-
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள் Published By: VISHNU 16 JUN, 2025 | 02:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கி…
-
- 33 replies
- 1k views
- 1 follower
-
-
இந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான்? சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4) பாகிஸ்தான் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றதே இல்லை. ஆனால் இம்முறை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை வென்றால் எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பத்து முறை மோதியுள்ளன. பத்திலும் பாகிஸ்தான் தோல்வியடைந்திருக்கிறது. உலகக் கோப்பை என்றாலே இந்தியாவிடம், பாகிஸ்தான் தோற்றுவிடும் என மக்கள் எண்ணுகிறார்கள், இதுவரை ஏற்பட்ட தோல்விகளுக்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக, " இந்த உலகக்கோப்பையில் இந்தியாவையும் வெல்வோம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வென்று சாம்பியனும் ஆவோம்" என சூளுரைத்து இந்…
-
- 0 replies
- 1k views
-
-
உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா ஆட்டம் "டிரா'வில் முடிந்தது [21 - June - 2008] பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா அணிகள் கோல் எதுவும் போடாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இரு அணிகளும் தடுப்பு வியூகத்தை ஊடுருவி முன்னேற முடியாமல் தத்தளித்தன. ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆட்டம் முடியும் தருணத்தில் கோல் அடிக்க கிடைத்த 2 வாய்ப்புக்களையும் தவறவிட்டார். இந்த உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆர்ஜென்ரீனாவும், பிரேசிலும் மோசமாக விளையாடி வருகின்றன. பராகுவே அணியுடன் பிரேசில் 20 என்று அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதேபோல் ஆர்ஜ…
-
- 0 replies
- 1k views
-
-
இருபதுக்கு-20 குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கம் : மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கள் மோதும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இலங்கை குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். குசால் மெண்டிஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றார். எனினும் இவரது இருபதுக்கு-20 சராசரி 9.23 என்ற குறைவான மட்டத்தில் உள்ளது. இதனால் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாமில் இடம்பிடிப்பதுடன், இருபதுக்கு-20 போட்டிகள் குழாமில் சிறிது காலங்களுக்கு விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை திசர பெரேரா, குசல் பெரேரா, டில்ஷான் முனவீர…
-
- 8 replies
- 1k views
-
-
மூத்த வீரர்களை தோனி சீண்டுகிறார் முன்னாள் கப்டன்கள் ஆவேசம் இந்திய அணியில் மூத்தவர்கள், இளையவர்கள் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதை கப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார். இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் மூத்த வீரர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாகக் கூறியுள்ளனர். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த `ருவென்டி - 20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மூத்த வீரர்களான சௌரவ் கங்குலி,…
-
- 0 replies
- 1k views
-