Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை எறிபந்து அணியில் முதல் முறை தமிழ் வீரர்கள் November 25, 2015 இலங்கை எறிபந்து அணியில் 19 வயது ஆண்கள் பிரிவில் ஆர்.பிரவீன், பெண்கள் பிரிவில் பி.கிருத்திகா, கே.சபரி சாமிகா ஆகியோர் டிசெம்பர் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதேபோன்று இன்று புதன்கிழமை மலேசியாவில் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை கலிலியா கிறசன் கழகம் சார்பாக என்.திவ்வியநாத், எஸ். தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எறிபந்துப் போட்டியில் தமிழ் வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். http://www.onlineuthayan.com/sports/?p=3940&cat=3

  2. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #wimbledon2018 லண்டன்: ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் …

  3. மும்பையில் நடந்த கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் அதிரடி முடிவு ; வீரர்களின் ஒப்பந்த முறை ரத்தOdiv> மும்பை: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளைச் சீரமைக்க இந்ததிய கிரிக்கெட் வாரியம் பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரரின் தகுதியும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் முன்பும் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு வீரரும் 3 பொருட்களுக்கு மட்டுமே விளம்பரதாரராக இருக்கவேண்டும். முன்னாள் கேப்டன்களான பட்டாவடி, போர்டே, வெங்கட்ராகவன், கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 19 வயதிற்குட்பட்ட வீரரகளின் அணியின் சுற்றுப்பயண எண்ணிக்க…

  4. 21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். 21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனையை படைத்த இரண்டாவது வீரரானார். கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த டெஸ்ட்டுக்கு முன்னதாக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,2 வது இன்னிங்ஸில் இதுவரை 3 விக்கெட்டுகளையும் கைப…

  5. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் சீனாவுக்கு `காற்று' பெரும் தடையாக இருக்குமா? [04 - February - 2008] [Font Size - A - A - A] ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ள சீனாவுக்கு `காற்று' பெரும் பிரச்சினையாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடத்தும் பொறுப்பு அந்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க ஒலிம்பிக்கை எடுத்து நடத்துவதை ஒவ்வொரு நாடும் மிகப் பெரிய பெருமையாக கருதுகின்றன. இவ்வகையில் வாய்ப்புப் பெற்றுள்ள சீன அரசுக்கு பிரச்சினை காற்று வடிவில் உருவெடுத்து சிக்கல் கொடுத்துள்ளது. சீனாவில் காற்று மாசுபாடு அதிகளவில் உணரப்படுவதால் உலகத் தரத்தில் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை முடுக்கிவிட்ட…

  6. ஆடப்போறான் தமிழன்? - ஜூட் பிரகாஷ் எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் தமிழன் ஒருவன் ஆடப் போகிறான் என்ற ஆதங்கம், இன்றும் தீராமல் நம்மவர் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கிறது. சில வாரங்களிற்கு முன்னரும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை சேர்த்த மதுஷனும் வியாஸ் காந்தனும், இலங்கை U19 கிரிக்கெட் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்ற செய்தி, மீண்டுமொருமுறை எதிர்பார்ப்பை நம்மவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. நம்பி நம்பி ஏமாந்து போன எங்கட சனத்தின் அரசியல் பயணம் போல், இந்த கிரிக்கெட் பயணமும் நம்பி நம்பி ஏமாந்தும் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. பிரித்தானியாவின் ஆதிக்கத…

  7. ஹர்டிக் பண்டியா – கேஎல் ராகுல் ஆகியோருக்கு உடனடி தடை January 13, 2019 இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் பண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உடனடி தடையை விதித்துள்ளது. பெண்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர் எனும் குற்றச்சாட்டுகள தொடர்பிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையி;ல் விசாரணைகள் முடிவடையும் வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை , ஐசிசி, அல்லது மாநில அமைப்பொன்றின் போட்டிகள் அல்லது நிகழ்வுகளில…

  8. ஓய்வு காலத்தை நெருங்கியுள்ளேன் - ரொஜர் பெடரர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக டென்னிஸ் ஜாம்பவானான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக திகழும் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் பட்டங்கள் அடங்கும். டென்னிஸ் தரவரிசையில் 310 வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை அலங்கரித்த சாதனையாளராகவும் திகழ்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெடரர், இவ்வாண்டு எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச…

  9. தெற்காசிய பளுதூக்கல் அணியில் யாழ். தமிழ் வீராங்கனை! தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனை என்ற பெருமையை யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பெற்றுள்ளார். அதன்படி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்கஹராவில் நடைபெறவுள்ள (டிசம்பர் 1 முதல் 10 வரை) 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் அணியில் ஆர்ஷிகா இடம்பிடித்துள்ளார். இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை பளுதூக்கல் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 7 வீர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட…

  10. யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும் ஆரோக்கியமானவர்களையும் சமூகத்தில் சிறந்து விளங்கவும் என்ற உன்னத நோக்கத்துடன் 1960 இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம். கிறாஸ்கொப்பரஸ் பழைய, புதிய வீரர்களையும் மகாஜனன்களையும் ஒன்றிணைத்து சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டி யொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் பதிவு செய்த 19 விளையாட்டு கழகங்களிலிடமிருந்து 2 சகல துறை வீரர்களை தெரிவு செய்து அத்துடன் எமது கிறாஸ்கொப்பர்ஸ் கழகத்தில் இருந்து போகும் 4 பேரை உள்ளடக்கி 42…

  11. நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்துவோம்- மத்தியூஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம் என்று இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நியூசிலாந்தில் நிலைமை வேறு வி…

  12. பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10 கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 1,677 கோடி ரூபாய் கொடுத்தா போதும்! ஷாக் ஆயிடலயே? ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆமாங்க, தோராயமா 1,677 கோடி ரூபாய். துல்லியமா சொல்லணும்னா 222 மில்லியன் யூரோக்கள்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG). கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அது…

  13. ரோஜர் பெடரர் 8-ஆவது விம்பிள்டன் வரலாறு படைக்க வாய்ப்பு 4 படத்தின் காப்புரிமைJULIAN FINNEY/GETTY IMAGES இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றால், விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை இந்த கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவார். மரின் சிலிக்கிற்கு எதிராக இன்று மோதும் ரோஜர் பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில்,வெற்றிபெற்றால் 2000-ஆவது ஆண்டு பீட் சாம்ப்ராஸூம், 1889 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்திருக்கும் சாதனையை முடியடித்து வரலாறு படைக்கலாம். படத்தின் காப்புரிமைGARETH FULLER - POOL/GETTY IMAGES கடந்த ஆண்டு ரோ…

  14. [size=5]பிடிபட்டார் பலநாள் கள்வன் - லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்[/size] [size=1] [size=4]அமெரிக்கரும் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற துவிச்சக்கர வண்டி வீரருமான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தடை செய்யப்பட்ட ஊக்குவிப்பு மருந்துகளை நீண்டகாலமாக பாவித்து வந்திருக்குன்றார். [/size][/size] [size=1] [size=4]இவற்றை பாவித்து புகழ்பூத்த 'டூர் டி பிரான்ஸ்' துவிச்சக்கர வண்டி போட்டியில் அதிகூடிய தடவைகள் வென்று பெரிய சாதனைகளைப்படைத்தவர்.[/size][/size] [size=1] [size=4]இப்பொழுது அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட ஊக்கப்பொருட்களை கண்காணிக்கும் அமைப்பு இவர் எதைப்பாவித்து தடை செய்தாரோ அதை கண்டுபிடித்து இவர் மேல் பழி சுமத்தியுள்ளது. இதனால் இவரின் சகல வெற்றிகளும் நிராகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. [/siz…

    • 0 replies
    • 919 views
  15. இந்திய அணிக்கு பாண்டிங் பாராட்டு . Monday, 28 January, 2008 02:33 PM . அடிலெய்டு, ஜன. 28: இந்திய கிரிக்கெட் அணி உலகின் இரண்டாவது சிறந்த அணியாக விளங்குகிறது என ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். . அடிலெய்டு டெஸ்ட் டிராவில் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிக்கி பாண்டிங் கூறியதாவது: இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் கடுமையான மோதலாக அமைந்தது. இந்த தொடரை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். இந்திய அணி மிகவும் சிறந்த முறையில் விளையாடி உலகின் இரண்டாவது சிறந்த அணி என்னும் அந்தஸ்தை நிரூபித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல ஆஸ்திரேலிய துணை கேப்டன் கில்கிறிஸ்ட் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இ…

  16. தண்டனையிலிருந்து தப்பினார் ஹைடன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் [29 - February - 2008] ஹர்பஜன் சிங்கை விமர்சித்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் மத்யூ ஹைடனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை முறைப்படி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அபராதம் மற்றும் தண்டனையிலிருந்து ஹைடன் தப்பிவிட்டார். இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களிடையே வாக்குவாதம் தொடர்கிறது. சிட்னி டெஸ்டின் போது அவுஸ்திரேலியாவின் சைமண்ட்சை நோக்கி ஹர்பஜன் `குரங்கு' என திட்டியதாக பிரச்சினை வெடித்தது. பின்னர் சிட்னியில் நடந்த முக்கோண ஒரு நாள் போட்டியின் போது இஷாந்த் - சைமன்ட்ஸ் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதேபோட்டியில் ஹர்பஜனைப் பார்த்து `முட்டாள் பையன்' என்று அடிக்கடி திட்டியதாக ஹைடன் மீது இந்திய அணியினர…

  17. India vs West Indies : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை வான்கிடே மைதானத்தில் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வெற்றி பெறும் அணியை தொடரைக் கைப்பற்றும். © AFP இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரோன் பொலார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி, 20 ஓவர் போட்டிகளில் அந்த இடத்திற்கு செல்ல தவறி விட்டது. இந்திய அணி 20 ஓவர் போட்டிகளில் 5-வது இடத்தில் இருக்கிறது. கடைசி 6 20 ஓவர் போட்டிகளில் இந்தியா 2-ல் ம…

  18. அன்று அகதி… இன்று ஃபுட்பால் ஸ்டார்…! ஜேர்மனியில் காம்பியா – ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ஒரு பாவப்பட்ட தேசம். சர்வாதிகாரம் மற்றும் வறுமையின் பிடியில் அகப்பட்டு வாடும் தேசம். எச்.ஐ.வி, டைபாய்டு, ரேபிஸ் போன்ற நோய்களால் அடிக்கடி உயிரிழக்கும் மக்கள் என சராசரி வாழ்க்கை என்பது அங்கு கேள்விக்குறிதான். நல்லதோர் வாழ்க்கையைத் தேடிப் பலரும் பிற தேசங்களுக்கு அகதிகளாய்ப் போய் விடுகின்றனர். அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் அகதியாய் தஞ்சம் அடைந்தவர் தான் ஓஸ்மான் மன்னே. அன்று வாழ்க்கையைத் தேடி ஓடிய மென்னா, அடுத்த இரண்டே ஆண்டுகளில், இன்று ஜெர்மன் கால்பந்து லீக்கில் ஒரு இளம் நட்சத்திரமாய் ஜொலிக்கிறார். ஜெர்மனி மண்ணில் கால்பதிக்கையில் மன்னேவிற்கு வயது 1…

  19. இலங்கை அணியின் தலைவராக இரு வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய மஹேல ஜெயவர்த்தன இரண்டாவதும் இறுதியுமான தடவையாகத் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார். இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னதாக மஹேல தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் தலைமையிலிருந்தும் விலகுவதாக இந்த இரண்டாம் முறை தலைமைப் பதவியை ஏற்கும்போதே மஹேல அறிவித்திருந்தார். தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலிலிருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும்…

    • 8 replies
    • 917 views
  20. முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 219 ரன்னில் சுருண்டது. ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் கோப் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். …

  21. கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடல…

  22. வவுனியாவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாகப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமது அலுவலகத்தை மூடிவிட்டுக் கொழும்புக்குப் புறப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும்இ தமது உறுப்பினர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு வரவில்லையெனத் தெரிவித்திருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினர் ஒமர்சன்இ வவுனியாவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகக் கூறினார். உரிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இன்னமும் ஓரிரு தினங்களில் அவர்கள் வவுனியா அலுவலகத்துக்குத் திரும்பி விடுவார்கள் எனவும் தொபினுர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். செய்தி: சங்கதி.கொம்

  23. `கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்! கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தவர் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். ஸ்பின்னர் என்ற பார்வையில் ஐபிஎல்லில் நுழைந்த ரஷீத் கான் தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதனை உலகுக்குக் காட்ட பல போட்டிகளில் முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து போரடிய அவருக்கு, நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டி கைகொடுத்தது. ந…

    • 3 replies
    • 915 views
  24. பொண்டாட்டி கிட்ட அடி, ஆபீஸ்ல திட்டு.. மறுபடியும் வாங்க முடியாது.. கிரிக்கெட் ரசிகர்கள் அவதி.! உலகக்கோப்பை கிரிக்கெட்டா.. இல்லை மெகா சீரியலா.. என அரையிறுதிப் போட்டியை பார்த்து கடுப்பாகி இருக்கிறார்கள் சாமானிய கிரிக்கெட் ரசிகர்கள். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணி இன்னும் 23 பந்துகள் ஆடி இருந்தால், ஒரு இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்திருக்கும். எனினும், அதற்குள் மழை வந்து போட்டியை நிறுத்தியது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.