Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1.  இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் பதவியில் ஜெரோம் ஜயரத்ன இலங்கை உள்ளூர் தொடர்களில் பங்குபற்றிய முன்னாள் சகலதுறை வீரரான ஜெரோம் ஜயரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நடவடிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம், உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் சபையில் பல்வேறு பதவிகளை வகித்த ஜெரோம் ஜயரத்ன, இறுதியாக செப்டெம்பர் 2015இல், அப்போதைய பயிற்றுநரான மார்வன் அத்தப்பத்து, தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, தற்காலியப் பயிற்றுநராகச் செயற்பட்டு, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இலங்கையில் இடம்பெற்ற தொடருக்கும் நியூசிலாந்துக்கெதிராக நியூசிலாந்தில் வைத்து இடம்பெற்ற தொ…

  2.  இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக திலங்க தெரிவு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக, நாடாளுன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திலங்க சுமதிபால 88 வாக்குகளை பெற்றுள்ளதுடன் நிஷாந்த ரணதுங்க 56 வாக்குகளைப் பெற்றுள்ளார். உதவித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில், 102 வாக்குகளைப் பெற்ற ஜயந்த தர்மதாசவும் 90 வாக்குகளைப் பெற்ற கே. மதிவாணனும் வெற்றிபெற்றனர். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும், 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான அர்ஜுன ரணதுங்க, 80 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். செயலாளராக மொ…

  3. இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தம். இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்த இடைக்கால குழுவில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ. இமாம், ரோஹினி மாரசிங்க, ஐரங்கனி பெரேரா, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, பட்டய கண…

  4. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமை…

  5. இலங்கை கிரிக்கெட் சபையை சாடுகிறார் முரளிதரன் வீரர்களுக்கு மே 20 ஆம் திகதிவரை  ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது என நான் எண்ணுகிறேன். திடீரென இடையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர் லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர்லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இலங்கைக் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளதை முத்தையா முரளிதரன் குறைகூறியுள்ளார். தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட முரளிதரனும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது…

    • 1 reply
    • 1.3k views
  6. இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் உறுப்பினர்களும் இராஜினாமா இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் குழுவின் உறுப்பினர்களும் தமது பொறுப்புக்களை இராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் இன்று பிற்பகல் தமக்கு கிடைத்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் ரஞ்ஜித் மதுரசிங்க, அசங்க குருசிங்க, ரொமேஸ் களுவித்தரன , எரிக் உபசாந்த ஆகியோர் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களது ஒன்றிணைந்த இராஜினமாக் கடிதங்களின் பிரகாரம் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் அவர்களின் பதவிகள் முடிவுக்கு வருகின்றன. h…

  7. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்ற முடியாது : தற்போதைய நிலைமைக்கு நான் என்ன செய்ய முடியும்? : தயாசிறி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றுவது என்பது அடிப்படையற்றது. கடந்த எட்டு வருடங்களாக இலங்கையில் இடைக்கால நிர்வாக சபையே காணப்பட்டது. நான்வந்த பின்னர் தான் தேர்தல் நடத்தி ஒருவரை தெரிவு செய்தேன். அந்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்க போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியடைந்துவிட்டார். இனி மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு எம்மால் செல்ல முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் நிர்வாக மற்றும் தொழிற்பாட்டு பதவிகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட தரப்…

  8. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியிலிருந்து மதிவாணன் திடீர் இராஜினாமா.! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியிலிருந்து விலகிய கே. மதிவாணனின் இடத்திற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜயந்த தர்மதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் உப தலைவர் மதிவாணன் தனது பதவியை இன்று (29) இராஜினாமா செய்ததோடு, அது தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மோகன் டி சில்வாவிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், கே. மதிவானனின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவன சட்டத்தின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்ப, துணைத் தலைவரை நியமிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு இன்…

  9. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. அஜந்த டி மெல் தலைமையில் குறித்த புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிக்கையொன்றினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தெரிவுக்குழுவின் தலைவராக அஜந்த டி மெல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமிந்த மெண்டீஸ், ஹேமந்த விக்ரமரத்ன, சண்டிக ஹத்துரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-கிரிக்கெட்-நிறுவ-3/

  10. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் சைமன் வில்லிஸ் கிரிக்கெட் வீரர், (விக்கெட் காப்பாளர்) சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைந்து கொண்டுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=80057

  11. இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது- மகேல கவலை hare இலங்கையில் கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது என முன்னாள் அணித்தலைவர் மகேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தற்போது இருக்குமிடத்திலிருந்து பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ள மகேல ஜயவர்த்தன நாங்கள் தற்போது மிகவும் கீழே உள்ளோம் தரவரிசைப்பட்டில் இதனை தெளிவாக புலப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதி குறித்து இலங்கை இன்னமும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை இந்த விடயத்தில் இலங்கை ஒத்துழைக்க மறுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த நிலை எதனை…

    • 0 replies
    • 345 views
  12. இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முரளீதரன் பெயர் நீக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI/AFP/GETTY IMAGES Image captionமுத்தையா முரளீதரன் (வலது) இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் அகற்றப்பட்டுள்ளதாக…

  13. இலங்கை கிரிக்கெட் மோசடி குறித்து புதிய தகவல்கள் January 23, 2019 இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக முறையிடுவதற்கு இம்மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மன்னிப்புக் காலத்தை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த 15 நாள் மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தகவல்வழங்க முன்வந்துள்ளமை தொடர்பில் தான் ஊக்கமடை…

  14. இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் பெருமிதம் ; ஏனைய மக்களுக்கும் எடுத்துக்காட்டு ! இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் செயல்கள் ஏனைய மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் கொழும்பு, ஆர்.பிரேமதாஸா விளையாட்டாரங்களில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி மெத்தியூஸின் அதிரடியினாலும் அகில தனஞ்சயவின் அசத்தலான பந்து வீச்சின் காரணத்தினாலும் 178 ஓட்டங்களினால் தென்னாபிரிக்காவை மண்டியிட வைத்தது. இதனையடுத்து போட்டியை காணவந்த இலங்கை அணியின் ரசிகர்கள் போட்டியின் நிறைவி…

  15. இலங்கை கிரிக்கெட்? தென்னாபிரிக்காவுடன் முதல் ரெஸ்டில் படுதோல்வி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்துள்ளது. இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 180 ஓட்டங்களைப் பெற்றது. அதன் பின் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 411 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இலங்கை அணியைவிட தென்னாபிரிக்கா 231 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. இந்த நிலை…

  16. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் கன்டுபிடிப்பாக கருதப்படும் 20 வயதான குஷால் மெண்டிஸ், அண்மைய நாட்களில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அறிமுகமான போட்டி முதல்கொண்டு அனைத்திலும் தனது திறமைகளை சிறப்பாக நிரூபித்துவரும் குஷால் மெண்டிஸ், தனது துல்லியமான துடுப்பாட்டம் மூலமாக அணியின் வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்கிறார். நேற்று இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 வது ஒருநாள் போட்டியின் போதும் ஆரம்பத்திலேயே இலங்கை அணி இரு விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், அசராமல் நின்று அடித்தாடி அரைச்சதம்…

  17. படத்தின் காப்புரிமை Getty Images சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் (2 பில்லியனுக்கும் அதிக தொகை) நிதியுதவியை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகம் அமைந்துள்ள துபாயில் இன்று இடம்பெற்ற சிறப்பு சந்திப்பின்போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்ததாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அற…

  18. இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை October 4, 2018 இலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு இலங்கையில் நடத்தி வருகின்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் சில காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் எதிர்வரும் …

  19. இலங்கை கிரிக்கெட்டில் இரவோடிரவாக நடந்த மாற்றங்கள் 2016-03-09 09:35:53 இந்­தி­யாவில் நடை­பெறும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் முதல் சுற்று ஆரம்ப­ மா­வ­தற்கு சுமார் 15 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் இலங்கை கிரிக்­கெட்டில் இர­வோ­டி­ர­வாக மாற்­றங்கள் செய்­யப்­பட்­டன. திங்­க­ளன்று இரவு அவ­ச­ர­மாகக் கூடிய ஸ்ரீலங்கா கிரிக் கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தலை­மை­யி­லான நிறை­வேற்றுக் குழு­வினர் அர­விந்த டி சில்வா தலை­மையில் ஐவ­ர­டங்­கிய புதிய தெரிவுக் குழுவை நிய­மித்­தது. அத்­துடன் தெரிவுக் குழு­வுடன் இணைந்து இலங்­கையின் சர்­வ­தேச இரு­பது 20 அணித் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்­யூஸை நிய­மித்­…

  20. இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர் அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல் நிபுணர் Dr. பில் ஜோன்சி, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு அவர்களுக்கு உதவி ஆலோசனைகள் வழங்க இலங்கை வந்திருக்கின்றார். அந்த வகையில் ஜோன்சி அவர்களின் முதல் ஆலோசனை முகாம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்றது. “நாங்கள் எமது புதிய பயிற்றுவிப்பளார் சந்திக்க ஹதுருசிங்கவின் வேண்டுகோளின் நிமித்தம் ஜோன்சியினை எங்களுக்காக வேலை செய்ய அழைத்திருக்கின்றோம். ஹதுருசிங்கவுக்கு எங்களது வீரர்களுடன் ஜோன்சி இருந்து வேலை செய்வது தேவையாக இருந்தது“ என இலங்கை கிரிக்கெட் வாரிய…

  21. இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிப்போருக்கு எதிராக கூச்சலிடுங்கள் : அர்ஜுன இந்திய ரசிகர்கள் போல் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுவதை இலங்கை அணி ரசிகர்கள் நிறுத்தி விட்டு இலங்கை கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலடித்து அடித்து வசைபாடுமாறு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள பெற்றறோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அணிக்கு எதிராக…

  22. இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி…

  23. இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்நோக்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழ…

  24. இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா? சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். கேள்வி – …

  25. இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு! இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை துடுப்பாட்ட சபையால் யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சங்கத்திலிருந்து ஒருவர் தரநிலை 3 இற்கு உள்வாங்கப்பட்டுள்ளார். வடமராட்சி பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மூத்த வீரரும், சிறந்த தடகள வீரருமான ரி. கிருபாகரன் யாழ் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சபையின் முன்னிலை மத்தியஸ்தரே இவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளார் வடக்கு கிழக்கு மாகணத்திருந்து முதன் முறையாக இலங்கை துடுப்பாட்ட மத்தியஸ்தர் சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது கிரிக்கெற் மத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.