எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
கணவனையும் தனது மூன்று மகன்களுள் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு பரிதவிக்கும் லலிதா எனும் பெண்ணின் வாழ்க்கை சோகமயமானது. திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரத்தில் சாதாரண வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார் லலிதா என்பவர். கணவனும் மகன்மார்களும் இல்லாத ஏக்கத்தில் தன்னுடைய வாயிற்றுப்பிழைப்புக்காக இடியப்பம், இட்லி அவித்து விற்பதும், கூலி வேலை செய்வதையும் அன்றாடத் தொழிலாகக் கொண்டு தனது 51ஆவது வயதிலும், பிறருடைய உதவியை எதிர்பாராமல் நாட்களை கழிக்கின்றார். 2 008.02.04 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் லிலிதாவின் வீட்டு வாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து இறங்கிவந்த 17 பேர், விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி, வீட்டி…
-
- 5 replies
- 820 views
-
-
கொழும்பு மிரருக்காக ஜெரா 2012 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3 ஆம் திகதி. யேசுதாஸன் குடும்பத்தில் பேரிழப்பு நடந்த நாள். விடுப்புப் பார்க்கும் தீவான நெடுந்தீவை திரும்பிப் பார்க்க வைத்த நாளும் அதுதான். யேசுதாஸன் ஒரு வண்டில்காரன். நெடுந்தீவின் 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கிறார். நெடுந்தீவு படகுத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் பொருள்களை உரியவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதுதான் அவரின் தொழில். அந்தத் தொழில் கிடைக்காத நேரங்களில் (கடலடி காலங்கள் மற்றும் வண்டில் பழுதடைந்த நேரங்கள்) கிடைக்கின்ற கூலிவேலைக்கும் போவார். இந்தத் தொழில்களில் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது. மனைவி பிறிடா கிலாறா யேசுதாஸன் வீட்டுப் பணிதான் செய்கிறார். அவர்களுக்கு மொத்தம் 7 பிள்ளைக…
-
- 0 replies
- 931 views
-
-
இலங்கைக்கான சுற்றுலாத்துறை துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 02 மில்லியனாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் வருமானமீட்டும் துறைகளில் நான்காவது இடத்தையும் வகித்து வருகின்றது. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசதாரண சூழ்நிலைகள் இல்லாமல் செய்யப்பட்டு இன்று சுமூகமான நிலை தோன்றியுள்ளது. சுற்றுலாத்துறையில் பிரசித்தி பெற்ற இடங்களில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றது. இங்கு இயற்கையாகவே அமைந்த குடா மற்றும் கடல் அலை சறுக்கல் சாகச விளையாட்டுக்கு மிகவும் பெயர் போன …
-
- 0 replies
- 1.2k views
-
-
“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?” by Selvaraja Rajasegar - on May 27, 2015 செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும் கடை ஒன்றும் உள்ளன. 2011ஆம் ஆண்டு சொந்த இடத்தில் குடியேற்றுவதாக அறிவித்ததால், இறுதிக் காலத்தில் சொந்த பூமியில் வாழலாம் என்ற கனவுடன் வந்தவருக்கு இலங்கை இராணுவத்தினர் வீடுதர மறுத்தனர். செல்லம்மா உட்பட மக்களின் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் 682 படையணி. “எங்கட இடம் விடுறதா சொன்னதாலதான் இங்க நாங்க வந்தனாங்கள். வந்து பதிவு செய்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்” Selvaraja Rajasegar - on May 26, 2015 “ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது வரை இந்தப் பாடசாலையில் 540 பிள்ளைகளைகள் படித்துவருகிறார்கள். இங்கு படிக்கின்ற அனைவரும் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது அதை நேரடியாக அனுபவித்தவர்களாகவும் கருவில் இருந்து உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். சிரித்து, பேசி அவர்கள் விளையாடுவதை என்னால் பார்க்கமுடிந்தாலும் அவர்களிடம் உளரீதியான பிரச்சினைகள் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். …
-
- 0 replies
- 746 views
-
-
முல்லையில் கொந்தளிக்கும் மீனவர் பிரச்சினை கொழும்பு மிரருக்காக ஜெரா முல்லைத்தீவும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடவுளாக மதிக்கும் கடல், காலணியோடு கால் தடம் பதிக்காத மரியாதையுக்கும் – புனிதத்துக்குமுரிய கடவுள், தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை எதிர்க்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். வடக்கில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள், இந்தப் போராட்டம் தொடங்கியும் ஆறு ஆண்டுகள்தான். இலங்கையில் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்த விழா தெற்கே மிடுக்குடன் கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள் தம் கடல் வளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அடிக்கடி அத்துமீறும் இந்திய மீனவர்களின் அட்டகாசங்கள…
-
- 0 replies
- 728 views
-
-
வித்தியாவிற்காக களத்தில் கிருனிக்கா. பிரியமானவர்களே இது சிறிய விஷயம் இல்லை இறந்தது ஒரு சிங்களம் பெண் அல்லது ஒரு தமிழ்ப் பெண் .. நாம் வல்லுறவுக்கு எதிராக குரல் உயர்த்த வேண்டும் என்றால் அடுத்து பாதிக்கப்பட்ட உள்ள சகோதரி காதலி அல்லது மனைவி கூட பெரும் ஆபத்து வரலாம். பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை மீண்டும் கொண்டு வர எங்கள் facebook இல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அன் நேரம் எங்கள் குரல் உயர்த்தி நீதித்துறை அமைப்பு ஒரு மாற்றம் செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட வித்தியா படங்களை பார்த்தால் இந்த வலி தெரியும். என தனது முக நூலில் பதிவேற்றியுள்ளார். - See more at: http://www.jvpnews.com/srilanka/109980.html#sthash.syQb4FUy.dpuf
-
- 6 replies
- 3.4k views
-
-
-
முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்ட மே 17 தினத்தை நினைவு கூறும் விதமாக எந்த கடலில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்களோ அதே கடல் மண்ணில் நாளை மே 17 இயக்கம் நினைவேந்தலை நடத்துகிறார்கள். https://www.facebook.com/mayseventeenmovement/videos/1095065173844274/?pnref=story https://www.facebook.com/kondal.samy.12/videos/988929677784909/?pnref=story
-
- 21 replies
- 2.3k views
-
-
கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. படையினர்…
-
- 0 replies
- 772 views
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் உச்சக்கட்ட நினைவாக "நிதர்சனம் சயந்தனின் " தயாரிப்பில் உருவான எச்சங்களை நாமும் மற்றையவர்களும் நினைவுகூர்வோமாக Mullivaaikal song with English subtitle song by Sathyapiragash ஆங்கிலப் புரிதலுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பை குறுகிய காலத்தில் அமைத்து தரவேற்றிய "ரவி வெற்றிவேல்" அவர்களுக்கும் எனது நன்றிகள்
-
- 1 reply
- 559 views
-
-
நடமாடும் அவமானம் கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய…
-
- 0 replies
- 904 views
-
-
புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிதருணம்வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்க போராளியாக விளங்குபவர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை உட்பட பல்வேறு விடயங்களைக் குறித்து பேசுகிறார். முள்ளிவாய…
-
- 0 replies
- 562 views
-
-
https://www.youtube.com/watch?v=Xh5hdCTPWto
-
- 0 replies
- 432 views
-
-
சித்திரை – வைகாசி மாதத்தின் உச்சிப்பொழுது. வவுனியா செட்டிக்குளம்பகுதியில் காட்டின் நடுவே...மரங்களை அழித்து, அவலங்களுடன் அலறியபடி வந்த மக்களை இராணுவம் முகாம்களுக்குள் அமுக்கிய காலப்பகுதி... மூத்த தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிய முகாம்களில் ஒன்று அது. நான்குபுறமும் பளபளக்கும் தகரக்கொட்டில். போதாததற்கு மேற்கூரையும் பளபளத்தது..கையில் கொண்டுவந்த சிறிய கைப்பையை வைத்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்தபோது, அவளிடம் உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது. அவள் தன் கையில் கிள்ளிக்கிள்ளிப் பார்த்தாள். கிள்ளும்போது வலித்ததால் தான் உயிருடன் இருப்பதை அவள் உறுதிப்படுத்திக்கொண்டாள்........ “வர விரும்பாத வரக்கூடாத இடத்திற்கு வந்தாயிற்று...இனி எக்கணமும் எதுவும் நடக்கலாம்....” என அவளின்…
-
- 0 replies
- 492 views
-
-
சமீபத்தில் காணக்கிடைத்த தமிழ் மொழி தொடர்பான புத்தகம்......இதற்க்கு மேல் என்ன தேவை
-
- 0 replies
- 826 views
-
-
இலங்கை: தீராத் துயரின் ஆறாம் ஆண்டு புண்உமிழ் குருதி கீதா சுகுமாரன் கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில் அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி பிடி மண்ணுமற்றலையும் என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர் - சுஜந்தன் (அகதிமுகாம்) குருதியோடிய கூந்தலில் வீழ்ந்தொட்டின இலையான்கள் மண்ணுண்டு கிடந்தது கிழித்தெடுத்த முலைகள் கருகி யோனி குகை பிளந்து உளுத்திருந்தது எறும்படுக்க பார்த்தேன் - பா. அகிலன் எரிகணை பட்டுத் தெறிக்க, காயம்பட்ட இரண்டரைவயதுக் குழந்தையின் கைகளை மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன் இக்கணம் கடவுள் நீரற்ற விழிகளுடன் அலறும் தாய் ஒரு பிசாசு - சேரன் பிணக்குவியலில் தடுக்கி விழுந்தெழுந்து இறுகிய வி…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், சிங்…
-
- 0 replies
- 577 views
-
-
படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 30 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏற…
-
- 5 replies
- 1.4k views
-
-
வி. தெட்சணாமூர்த்தி வி. தெட்சணாமூர்த்தி தவில் இசைவித்தகர் ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார். யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக…
-
- 2 replies
- 1k views
-
-
இராணுவத்தால் சூழப்பட்ட கனகாம்பிகை அம்மன் ஆலய கிழக்கு வீதியை மட்டும் விடுவித்தால் போதுமா? வடக்கில் மக்களின் குடிநிலங்களில் மாத்திரமின்றி பொது இடங்கள் பலவற்றிலும் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். அதனால் பொது இடங்களின் செயற்பாடுகளுக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ ஆதிக்கத்தை தளர்த்த முடியாத நிலைமை தொடர்கின்றது. கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் பெரும் படைத்தளங்களை அமைத்து குடியேறியுள்ளனர். இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பின் புறமாகவும் ஆலய வலது புறமாகவும் பாரிய பிரதேசங்கள் இராணுவமுகாமாக காணப்படுகின்றது. இந்த பகுதிகள் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு தேவையானவை. அன்னதான மடங்கள், நிகழ்வு மைதானங்கள் என்பவற்று…
-
- 1 reply
- 574 views
-
-
யாழ் தீவுகள் உருவான வரலாறு 23/11/2014 · by Info · in ஆய்வுகள் யாழ் தீவுகள்-thamil.co.ukயாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம். இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை. ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப…
-
- 10 replies
- 2.3k views
-
-
கொழும்பு மிரருக்காக ஜெரா “மயூரன், 85 ஆம் ஆண்டு, 6 ஆம் மாசம் 21 ஆம் திகதி பிறந்தவன். ஏழாம் ஆண்டோட பள்ளிக்கூடம் போகாமல் விட்டிட்டான். அவனுக்குப் படிக்கப் பிடிக்காமல் போயிற்று,” என்று தன் மகன் பற்றிய அறிமுகத்தைத் தருகின்றார் ரவீந்திரன் றோஸ்மலர் என்கிற 50 வயதுத் தாய். தம் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் அம்மாக்களில் றோஸ்மலர் ரவீந்திரனும் ஒருவர். இந்தப் பதிவுக்கான கதை தொடங்கும்போது அவர் பிரதேச வைத்தியசாலை ஒன்றின் நோயாளர் பிரிவில், நீண்ட வரிசையின் கடைசி நுனியில் இருக்கிறார். எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட இடத்தில்தான் தன் மகன் பற்றிய பேச்சைத் தொடங்கினார். வரிசையும் மெல்ல மெல்ல நகர அவரது மகன் பற்றிய கதையும் நகர்ந்தது. “சரி படிக்காட்டிலும், தொழில் ஏதும் தெரிஞ்சி க…
-
- 0 replies
- 442 views
-
-
TRIBUTE TO SUNTHAR- KI.PI ARAVINDAN சக கவிஞன் கி.பி.அரவிந்தன் நினைவாக. - வ.ஐ.ச.ஜெயபாலன் என் இழமையில் இறந்த தோழர்கள் சான்றோர்கள் ஒருவரைக்கூட மறந்துவிடாமல் முந்திக்கொண்டு அஞ்சலிக் கவிதை எழுதுவதை ஒரு தவம்போல செய்தேன். * முக்கியமான மரணங்களின்போது சிரித்திரன் ஆசிரியர் என்னை தேடுவார். நான் எழுதிய முக்கியமான அஞ்சலிகள் சில சிரித்திரனில் வெளிவந்தது. நான் வன்னிக்குப் போகும்போது அமரரான போராளிகளுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதைகளுக்காக என்னை வாழ்த்துவார்கள். தங்களுக்கு ஆகாதவகள் மரணங்களுக்கு எழுதிய அஞ்சலிகள் பற்றி எல்லாரும் வாசித்தோம் என்று பட்டும் படாமலும் அழுத்தமாகத் தெரிவிப்பார்கள். ஈழத்து போர்க்கள வாழ்வில் அஞ்சலி எப்பவும் எங்களை நிழல்போல தொடர்ந்ததல்லவா? * ஆனால் இப்ப என்னால் அஞ…
-
- 1 reply
- 570 views
-
-
புத்தூர் ஆழ்கிணறுகள் நலத்தடைக் குகை அமைப்பு என்பது இன்று நிறுவப்பட்டுவிட்ட உண்மையாகும். ஆனால் புத்தூர்க் கிணறு வரலாறு முழுவதுமே யாழ்மக்களை ஆச்சரியப்படுதியே வந்துள்ளது. புத்தூர்க் கிணறுகள் சார்ந்த நம்பிக்கைகள் தேடல்களை யாராவது பதிவு செய்யவேண்டும். புத்தூர் குகைக் கிணற்றுக்கும் கீரிமலை கேணிக்கும் தொடர்புள்ளது என்பது மிகப் பழைய நம்பிக்கையாகும். புத்தூர்க் கிணற்ரில் போடப்படும் எலுமிச்சம்பழம் கீரிமலையில் மிதக்கும் என்பார்கள். இது கிணற்றின் நிலத்தடிக் குகை அமைப்புப்பற்றிய தொன்மை விஞ்ஞான பூர்வமானது எனவே கருதுகிறேன். நமது அறிஞர்கள் புத்தகங்களில் இருந்தல்ல நமது தொன்மங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் தமது தேடலை ஆரம்பிக்க வேணும். யாழ்பாண வளற்ச்சிக்கு தனது கைப் பணத்தயு…
-
- 6 replies
- 1.8k views
-