அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
ஒரு அரசியல்வாதியின் தகுதியை தீர்மானிப்பது யார்? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்று, அவரது தகுதியை, அவரே பரிகசிப்பதாக அமைந்திருந்தது. தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மகாண முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும் – அவர் தகுதியற்றவர் என்பதால்தான், இரா.சம்பந்தன் தன்னை தெரிவு செய்ததாகவும், விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரனின் மேற்படி அபிப்பிராயம், அவரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக விக…
-
- 0 replies
- 452 views
-
-
திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இந்திய அமைதிப்படையை தோற்கடித்து வெளியேற்றிய காலத்தில் அனிதா பிரதாப் என்ற ஊடகவியலாருக்கு வழங்கிய செவ்வி கேள்வி: எதற்காக இந்தியாவுடன் சண்டைபிடித்தீர்கள்? பதில்: தமிழர்களைக் காப்பாற்றவென்று கூறிக்கொண்டு இந்தியா இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டது. ஆனால் எங்களின் பிரச்சனைகளை சரியானபடி அடையாளம் கண்டு தீர்க்கும்படியான எந்த ஒரு நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடவில்லை. இலங்கையின் இனப்பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே இந்தியா தலைப்பட்டது. இலங்கையை தனது கட்டுப்பாட்டுள்குள் வைத்திருக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, தமிழ் இயக்கங்களை இந்தியா வளர்த்தது. இதில் என்னால் மன்னிக்முடியாத விடயம் என்னவென்றால், தமிழருக்கு உதவவென்று வந்த இந்த…
-
- 0 replies
- 394 views
-
-
சீனாவிற்கு அதிகாரம் வழங்க முடியுமாக இருந்தால், வடக்கு கிழக்கிற்கு ஏன் அதிகாரம் வழங்க முடியாது? – மட்டு. நிலவன் 50 Views இலங்கையில் உள்ள ஒருபகுதியை சீனாவுக்கு வழங்கி, அந்தப் பகுதியில் ஆட்சி செய்வதற்கு சீன அரசாங்கத்தினை இலங்கை சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை வழங்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த நாட்டின் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் வடகிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க முடியாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கடந்த எழுபது வருட காலமாக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தங்களுக்கான அதிகாரங்களை கேட்டுப் போராடிய இந்த நாட்டின் பூர்வீக குடிகளான வடகிழக்கு தமிழர்களை கொன்று குவித்து விட்டு இன்று இந்த நாட்டை…
-
- 0 replies
- 271 views
-
-
அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……? – பி.மாணிக்கவாசகம் 76 Views அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன் பரிந்துரைகளையும் நார் நாராகக் கிழித்துத் தள்ளி இருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் நியமனம் குறித்த சட்டவலுவும் கூட கடுமயான சட்டரீதியான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு நாட…
-
- 0 replies
- 309 views
-
-
மருந்து தேடவேண்டிய இரட்டைத் தலையிடிகள் மொஹமட் பாதுஷா எத்தனை அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், ஆட்சியாளர்களும் நாட்டு மக்களும் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே, தொடர்ச்சியாக இடம்பெறும் நிகழ்வுகள் வெளிக்காட்டி நிற்கின்றன. குறிப்பாக, சிறுபான்மையினச் சமூகங்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில், பெரும்பான்மையின அரசியல் தலைமைகள், அக்கறையாக இருப்பதாகத் தெரியவில்லை. பேரினவாதிகளைத் திருப்திப்படுத்திக் கொண்டு, காலத்தைக் கடத்தவே அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். உரிமைக் கோரிக்கை, ஜனநாயகம், சமத்துவம், இனப்பாகுபாடின்மை, இனநல்லிணக்கம், பாரபட்சமற்ற நீதி நிலைநாட்டல் பற்றிய கேள்வ…
-
- 0 replies
- 402 views
-
-
வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்.கே. அஷோக்பரன் தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது. 2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி, எந்த அரசியல் கட்சியும…
-
- 5 replies
- 839 views
-
-
இந்தியாவின் துயரம் -பா.உதயன் வைத்திய சாலைகள் நிரம்பி வழிகின்றன நாளுக்கு நாள் பெரும் தொற்று அதிகரிக்கிறது .சுவாசிக்க வளி இன்றிஒக்சியன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். எரிப்பதற்காகவும் புதைப்பதற்காகவும்மனித சடலங்கள் அடிக்கி வைக்கப்படுகின்றன. இந்தியா பெரும் துயரோடு பயணிக்கிறது. வழமை போலவேமக்கள் எந்தப் பொறுப்பும் இன்றி சாலைகளில் கூடுகிறார்கள். இந்திய மக்கள் சுகாதார துறை பெரும் சிக்கலைஎதிர் நோக்கியுள்ளது. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. பல நாடுகள் ஓரளவேனும் இந்த பெருநோயில் இருந்து கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையிலே இந்தியாவுக்கு ஏன் திடீரென இவ்வளவுசடுதியான அதிகரிப்பு.ஏன் இவ்வளவு துன்பம். சமூக,குடும்ப,அரசியல்,சமய, கலாச்…
-
- 4 replies
- 808 views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியலில் கால் நூற்றாண்டுகால தந்தையின் தீர்க்கமான பங்கு – அகிலன் 59 Views 26.04.2021 அன்று தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் விதமாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. தனிச் சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது. அதனை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சியாக “இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா என தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அழை…
-
- 0 replies
- 329 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு இன அழிப்புநிலை! காப்பாற்றும் பொறுப்பில் புலம்பதிந்த தமிழர் 134 Views இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களை தேவையேற்படின் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாய இராஜபக்ச ஹிட்லரைப்போல் இன அழிப்புச் செய்வார் என்னும் தகவலைச் சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார். சிறீலங்கா அதிபர் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் அரச அதிபர் கோத்தபாய இராஜபக்சவிற்கு வாக்களித்தார்கள் எனவும், ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாட்டின்மைக்காக மக்கள் அவரைக் குற்றம் சாட்டுகின்றார்கள் எனவும், ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால், எவரும் குறைகூற மாட்டார்…
-
- 0 replies
- 313 views
-
-
‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!! கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு பகுதியில் கடலை பகுதியை மூடி இந்நகரம் உருவாக்கப்பட்டுகிறது. ஏறக்குறைய 216 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்நகரம் உருவாக்கப்படுகிறது. இதில், 116 ஹெக்டேர் நிலப்பரப்பு சீனக் கம்பனிக்கு உரித்தாக இருக்கும். சுமார் 90 ஹெக்டேர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தின் உரித்தாக இருக்கும். சீனக் கம்பனிக்கு உரித்தாகவுள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பு முழுக்கமுழு…
-
- 1 reply
- 427 views
-
-
-
குட்டையைக் குழப்பும் விக்கி -புருஜோத்தமன் தங்கமயில் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. சித்திரை வருடப் பிறப்புக்கு முதல் நாள், சமூக காணொளி ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் பேட்டியளித்தார். வழக்கம் போலவே, அந்தப் பேட்டியும் முன்னதாகவே கேள்வி- பதில்கள் தயார்படுத்தப்பட்டு, அதன் பிரதிகளை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட கேள்விகளை நெறியாளர் கேட்டதும், அதற்குப் பதில்களை பிரதித் தாள்களைப் பார்த்து, விக்னேஸ்வரன் வாசிப்பார். அப்படித்தான் அந்தப் பேட்டி…
-
- 18 replies
- 2.1k views
-
-
அதிகாரத்தின் உரையாடல்: ஆண்டகைக்கும் அழைப்பு வந்ததா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த வார அரசியற்களம் ‘தொலைபேசி அழைப்பு’களால் நிரம்பியிருந்தது. இங்கு இரண்டு நிகழ்வுகள் முக்கியமானவை. ஒன்று, கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில், விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி தெரிவித்த கருத்துகளை அடுத்து, ஜனாதிபதி, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடுந்தொனியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தான் பேசிய கருத்துக்கு முற்றிலும் மாறாக, மறுநாள் கருத்து வெளியிட்டிருந்தார். அதிகாரத்தின் குரலின் வலிமையை, நாம் ஐயப்பட வேண்டியதில்லை. ஆனால், அதை விளங்குவதே இன்று நம்முன்னுள்ள சவால். ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பில், அண்மைக…
-
- 0 replies
- 395 views
-
-
கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் – மட்டு.நகரான் 92 Views தமிழர்களின் ஜனநாயக ரீதியான போராட்டம் இன்று சர்வதேச ரீதியான அங்கீகாரத்தினைப் பெற்றுவருகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது தமிழ் மக்களுக்கு சாதகம், பாதகம் என்பதைவிட சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு வலுவான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வடகிழக்கு இணைந்த தாயகத்தின் கோட்பாட்டை தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து பலமான முறையில் வெளிப்படுத்தி வந்ததன் விளைவே, இன்று சர்வதேசம் தமிழ் மக்களுக்கான சமிக்ஞையை காட்டியுள்ளது. ஆனால் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றும…
-
- 5 replies
- 830 views
-
-
-
- 0 replies
- 855 views
-
-
இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு? மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள – பௌத்த அரசாங்கமாக அடையாளப்படுத்தி மற்றெந்த அரசுகளையும் விட – சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலை, சிங்கள – பௌத்த இலங்கை தேச – அரச கட்டுமானத்தை நோக்கி மிக வேகமாக நகர்த்திச் செல்கின்றது. டொனால்ட் ட்ரம்ப் வீழ்ச்சி கூட இந்த அரசாங்கத்திற்கு பட்டறிவைக் கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகின்றது. நினைவுகூரல் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தை ஒட்டியும், மு…
-
- 0 replies
- 630 views
-
-
உலக சமத்துவமின்மை-பா.உதயன் Rich countries have a moral obligation to help poor countries get COVID-19 vaccines. கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய சமத்துவமின்மையை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளால் அப்பட்டமான தடுப்பூசி கொள்வனவுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்தே வருகின்றன. முதலாளித்துவ நாடுகளின் வரிசையிலே அமெரிக்கா,பெரிய பிரித்தானிய மற்றும் பல ஐரோப்பிய சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளே பெரும் தொகையான கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் காப்புரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் இது தடுப்பூசிகளை மேலும் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. …
-
- 0 replies
- 424 views
-
-
சிங்கள பௌத்த தேசியத்தைப் பிளவுபடச் செய்துள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – பி.மாணிக்கவாசகம் April 22, 2021 107 Views இலங்கை ஒரு சிறிய நாடு. சின்னஞ்சிறிய தீவு. இதனை ஒரேயொரு தேசமாகப் பேண வேண்டும். இங்கு பிரிவினைக்கு – நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப்பது முறையல்ல என்பது சிறீலங்காவின் பொதுவான நிலைப்பாடு. இது இந்த நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்தப் பொதுக் கொள்கையை, பொது நிலைப்பாட்டை, பொதுத் தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சொந்தமானது. அவர்கள் தங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களுட…
-
- 0 replies
- 361 views
-
-
முதலமைச்சர் வேட்பாளர் யார்? – அகிலன் April 21, 2021 மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத போதிலும், வடக்கு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் நிலையில், நடைபெறக்கூடிய மாகாணசபைத் தேர்தல் ஒன்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் வடக்கிலோ கிழக்கிலோ அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்ற நிலைமை காணப்படுகின்ற போதிலும், தமிழ் கட்சிகளிடையே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. …
-
- 0 replies
- 559 views
-
-
ராஜபக்ஷர்களை ஆதரிப்பார்களா தமிழ்த் தேசியவாதிகள்? -என்.கே. அஷோக்பரன் அபயராம விகாரையின் விகாராதிபதி முறுதெட்டுவே ஆனந்த தேரர், “இலங்கை, சீனாவின் கொலனியாவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று, ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகச் சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருந்தார். எந்தப் பௌத்த தேரர்கள், ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகக் குரல் கொடுத்தார்களோ, இன்று அவர்களே ராஜபக்ஷர்களுக்கு எதிராகக் கருத்துவௌியிட்டுவரும் காலச்சூழல் உருவாகியிருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றியும் அதைத் தொடர்ந்து, 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் பெற்றுக்கொண்ட ப…
-
- 0 replies
- 574 views
-
-
-
- 3 replies
- 879 views
-
-
மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்! April 17, 2021 மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக உண்டு. தமிழ்த்தரப்போடு ஒப்ப…
-
- 0 replies
- 586 views
-
-
-
- 0 replies
- 746 views
-
-
-
தமிழர் அரசியல் எதை நோக்கி? - யதீந்திரா திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? நிச்சயம் இருக்கின்றது. ஜெனிவா திருவிழா முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக தமிழர் அரசியலானது, களத்திலும் புலத்திலும் கடும் பரபரப்பாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெனிவா பற்றிய பேச்சுக்கள்தான். முதலில் பூச்சிய வரைபு சரியா – தவறா என்பதில் ஆரம்பித்த ஜெனிவா திருவிழா, இறுதியில் இந்தியா முதுகில் குத்திவிட்டது – தமிழர்கள் மீளவும் ஏமாற்றப்பட்டுவிட்டனர் – என்றவாறான விவாதங்களுடன் முற்றுப்பெற்றது. எப்போது மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதோ, அப்போதே தமிழ் …
-
- 0 replies
- 449 views
-