Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம் -எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது. இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தின…

  2. தமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியல் போட்டியை கையாளும் தவறான அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீங்கள் இதை செய்கிறீர்களோ அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்க்ள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்று நீஙக்ள் இனவாதத்தை கைவிட்டு, நீஙக்ள் நாட்டின் தென்பகுதியில் நீங்கள் கொண்டிருக்கும் உரித்துகளை போலவே தமிழ் மக்களும் வடக்கு கிழக்கில் அனைத்து உரித்துகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுகொண்டு இணைந்து செய்ற்பட முன்வருகிறீர்களோ, அன்றுதான் , இல…

  3. எமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல் - கவிஞர் தீபச்செல்வன் வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப் போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்துவிட முடியாது. உலகின் எந்தக் கவிஞனாலும் பிரபாகரன் பற்றிய காவியத்தை எழுதி விட முடியாது என்பதுதான் உண்மையானது. பிரபாகரன் என்ற பெயரே கவியம்தான். ஆனாலும் அந்தப் பெயரின் முழுமையை உணர்ந்தெழுத முடியாது. நாம் தலைவர் பற்றி அறிந்துகொண்டது எல்லாமே அவர் புறவயமான வரலாறே. அவர் அகமும் புறமுமாய் இருந்த ஈழ விடுதலைப் பயணத்தை அவரால் மாத்திரமே எழுதி விட முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் அதில் போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்களின் பங்களிப்…

    • 1 reply
    • 1.2k views
  4. விக்கியின் ‘தலைவர்’ முன்மொழிவு தமிழ்த் தேசிய அரசியலில் சாண், ஏற முழம் சறுக்கும் நிலைமைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல், தமிழ்த் தேசியப் பரப்பில் ஐக்கிய அணியொன்றை உருவாக்குவதற்கான கற்பிதத்தினை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஐக்கியத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுவதால், தான் தலைமை தாங்கும் தமிழரசுக்கட்சி மற்றும் தனது கட்சி பிரதான அங்கத்துவம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றினுள் இரட்டை அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளார் மாவை.சோ.சேனாதிராஜா. சேனாதிராஜாவுக்கான அழுத்தங்களும் அவருடைய செயற்பாடுகளும் பற்றி ஏற்கனவே பார்த்தாகிவிட்ட நிலையில் அந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ‘பி…

  5. இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். “பனிப்ப…

  6. ஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்! - நா.யோகேந்திரநாதன்.! பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் மாதுறு ஓயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரதேசத்தின் அமைவிடம் காரணமாக பல சிங்கள மக்கள் அங்கு குடியேறத் தயங்கினர். அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன நாம் எல்லைகளை நோக்கி நகர மறுத்தால் எல்லைகள் எங்களை நோக்கி நகர்ந்து வந்துவிடும் எனப் பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அறைகூவல் ஏராளமான சிங்கள மக்களை அங்கு குடியேற வைத்ததுடன் காலப்போக்கில் பிரதேசத்தின் தற்போது மேய்ச்சல் தரவைகளை ஆக்கிரமிக்கும் நிலையும் உருவாகி விட்டது. அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன விடுத்த எல்லைகள் நகரும் பிரச்சினையை தமிழ் மக்கள் கவனத்தில்…

  7. கூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள் -மொஹமட் பாதுஷா உலக சரித்திரத்தில் நிலம் சார்ந்த போராட்டங்களுக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. நில ஆக்கிரமிப்புக்கான இராணுவ, இராஜதந்திர நகர்வுகளும் நிலமீட்புக்கான போராட்டங்களும், யுத்தங்களில் முடிந்ததை நாம் அறிவோம். இலங்கையில், சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறுபட்ட காணிப் பிரச்சினைகளை, நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றன. இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனத்தவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்சக் காணிகளையும் கையகப்படுத்துவதற்கும் ஆக்கிரமிப்பதற்கும், பல்வேறு சூட்சும திட்டங்கள் நடைமுறையில் இருப்பதையும் காணமுடிகிறது. இதனால், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் கூர்மையடைகின்றன. வட…

  8. நினைவேந்தல் உரிமையும் சட்டரீதியான போராட்டமும் -பி.மாணிக்கவாசகம் 41 Views மாவீரர் தின நினைவேந்தலைத் தடுக்க கொரோனா வைரஸ் தடுப்புச் சட்ட நெறிமுறைகள் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது ஓர் அபத்தமான முயற்சி. இறந்தவர்களை நினைவேந்துவது ஓர் அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகும். இதில் கொரோனா தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த ஓர் அரசு முற்பட்டிருப்பதன் மூலம் அதன் இயலாத் தன்மையும், அதன் இனவாதப் போக்கும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பயங்கரமாக உருவெடுத்துள்ளது. சுகாதாரம் சார்ந்த இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள வேண்டியது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும். அதேவேளை, அந்த வைரஸ் தொற்றிப்…

  9. உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. N 76 Views உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. அமெரிக்கா அந்த சந்தையில் கட்டாயம் இணையவேண்டும் அல்லது பின்னால் நிற்கவேண்டும். ட்ரோன் போர்முறை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அல்கெய்தா (al Qaeda)போன்ற அரசல்லாத தரப்புகள் முதல் கடந்த தைமாத்தில் ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சொலைமானியை (Qasem Soleimani) கொலை செய்ததுவரை ஆயிரக்கணக்கான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. குர்திஸ்தானிய த…

  10. இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும் -என்.கே. அஷோக்பரன் முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு அண்மையில் அனுப்பிவைத்த கேள்வி பதில்களில், தமிழ்த் தேசிய கட்சிகள் நிறுவன ரீதியாக ஒன்றுபடுதல் பற்றியும், அதற்கான அடிப்படைகளாகத் தலைமைத்துவம், கொள்கைகள், நிறுவன செயற்பாடுகள் என்பனவற்றையும் அடையாளம் கண்டிருந்தார். நிறுவன ரீதியாக ஒன்றுபடுவதற்குத் தடையாக இருக்கின்ற விடயங்களாக, சுயநலத்தையும் அகந்தையையும் குறிப்பிடுகிறார். ‘நாம் ஒவ்வொருவரும், எமது கட்சிகளை மட்டும் மேம்படுத்த, சுயநலத்துடனும் அகந்தையுடனும் உளங் கொண்டிருந்தால், ஒற்றுமை சாத்தியப்படாது. அதனால், எமது மக்கள் பாதிக்கப்படக்கூடும்…

  11. தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலு…

  12. முக்கியமான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா Bharati உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கும் ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை’ உடன்படிக்கை சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தைச் சேர்ந்த 10 நாடுகளும் சேர்ந்து 15 நாடுகளைக் கொண்ட ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership –RCEP trade deal) உடன்படிக்கையொன்று நவம்பர் 15 கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்று தோற்றம் பெற்றிருக்கிறது. இதில் இந்தியா பங்கேற்காதமை பெரும் கவனத்தை ஈர…

  13. நினைவேந்தலும் சட்டப்பொறியும் -கபில் *01 ‘அரசதரப்பும், படைத்தரப்பும் சுகாதார விதிமுறைகளை புறக்கணித்து செயற்படும் போது, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது? *02 “அரசாங்கத்தில்உள்ள அமைச்சர்களை விடவும், ஒரு படி மேலே, உள்ளவர் இராணுவத் தளபதி.பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு போல, மிகவும் வசதியானஇடத்தில் அதிகாரங்களுடன் இருப்பவருடன் சட்டரீதியாக முரண்படத் தொடங்கி விட்டார்சுமந்திரன்” கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி, நினைவேந்தலை தடுக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கக் கூடாது என்று பாராளுமன்றத்தில் கோரியிருந்தார் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.…

  14. தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலுகைகளைப் பெற்…

  15. ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும் 77 Views அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார். டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார். இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப…

  16. தமிழ்த் தேசியப் பேரவை ? நிலாந்தன்… November 22, 2020 கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களோடு பேசுவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பதே அந்த செய்தியின் சாராம்சம் ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவராலும் செய்தியின் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. இணையத்தில் கண்டெடுத்தது என்று கூறினார்கள்.அதாவ…

  17. சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம் Bharati November 16, 2020 சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்2020-11-16T08:07:19+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore அ.நிக்ஸன் அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள…

  18. நசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமைகள் தயாரா.? ஒரு இனத்தின் மீது இன்னொரு ஆதிக்க இனம் ஒடுக்கு முறையை மேற்கொள்ளுகின்ற போது சட்டங்கள் மேலாதிக்கம் கொண்டவர்களின் அதிகாரமாகவே துலங்குகிறது. இது இலங்கையில் மாத்திரமல்ல, இலங்கை போன்ற இன மேலாதிக்க நாடுகள் பலவற்றிலும் இருக்கின்ற நடைமுறை. ஆனாலும் தேச விடுதலை, சமூக விடுதலை என சிந்திக்கும் மக்கள் தரப்பினரும் அவர்களின் ஆளுமை மிக்க தலைவர்களும் அதனைக் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்மையிலே சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த எண்ணப்பாங்கில்தான் நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. மக்களிடம் அதிகாரம் இருக்கவும் அவர்கள் அதனை பாதுகாக்கும…

  19. காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா? – நிலாந்தன் November 21, 2020 நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக் கொண்டு லீசிங் கொம்பெனிகளில் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். எல்லாரும் ஒரேயடியாக ஒ…

  20. உலகின் மகா கூட்டு ! (அமெரிக்கா + இந்தியா OUT) அ. நிக்ஸன்

  21. யுத்தத்திற்குப் பின்னான நிகழ்ச்சி நிரல் என்ன?

  22. தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான். 61 Views கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நிழல் யுத்தம் ஒன்றை தமிழினம் எதிர்கொண்டுள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர்கள் எந்த விடயங்களை பாதுகாத்தார்களோ, அந்த விடயங்களை அவர்களிடம் இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மிகவும் திட்ட…

  23. இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன? “புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.” இப்படி வலியுறுத்தியிருக்கின்றார் “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி. இலங்கை அரசியலரங்கில் எது நடைபெறப்போவதில்லையோ அது நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், அவர் சொல்லியிருப்பதுதான் நாட்டுக்கு அவசியமானது. இல்லையெனில் மாறிமாறி ஆட்சிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.