அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
-
- 1 reply
- 656 views
-
-
ஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்! - நா.யோகேந்திரநாதன்.! பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் மாதுறு ஓயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரதேசத்தின் அமைவிடம் காரணமாக பல சிங்கள மக்கள் அங்கு குடியேறத் தயங்கினர். அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன நாம் எல்லைகளை நோக்கி நகர மறுத்தால் எல்லைகள் எங்களை நோக்கி நகர்ந்து வந்துவிடும் எனப் பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அறைகூவல் ஏராளமான சிங்கள மக்களை அங்கு குடியேற வைத்ததுடன் காலப்போக்கில் பிரதேசத்தின் தற்போது மேய்ச்சல் தரவைகளை ஆக்கிரமிக்கும் நிலையும் உருவாகி விட்டது. அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன விடுத்த எல்லைகள் நகரும் பிரச்சினையை தமிழ் மக்கள் கவனத்தில்…
-
- 0 replies
- 371 views
-
-
கூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள் -மொஹமட் பாதுஷா உலக சரித்திரத்தில் நிலம் சார்ந்த போராட்டங்களுக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. நில ஆக்கிரமிப்புக்கான இராணுவ, இராஜதந்திர நகர்வுகளும் நிலமீட்புக்கான போராட்டங்களும், யுத்தங்களில் முடிந்ததை நாம் அறிவோம். இலங்கையில், சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறுபட்ட காணிப் பிரச்சினைகளை, நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றன. இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனத்தவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்சக் காணிகளையும் கையகப்படுத்துவதற்கும் ஆக்கிரமிப்பதற்கும், பல்வேறு சூட்சும திட்டங்கள் நடைமுறையில் இருப்பதையும் காணமுடிகிறது. இதனால், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் கூர்மையடைகின்றன. வட…
-
- 0 replies
- 412 views
-
-
நினைவேந்தல் உரிமையும் சட்டரீதியான போராட்டமும் -பி.மாணிக்கவாசகம் 41 Views மாவீரர் தின நினைவேந்தலைத் தடுக்க கொரோனா வைரஸ் தடுப்புச் சட்ட நெறிமுறைகள் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது ஓர் அபத்தமான முயற்சி. இறந்தவர்களை நினைவேந்துவது ஓர் அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகும். இதில் கொரோனா தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த ஓர் அரசு முற்பட்டிருப்பதன் மூலம் அதன் இயலாத் தன்மையும், அதன் இனவாதப் போக்கும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பயங்கரமாக உருவெடுத்துள்ளது. சுகாதாரம் சார்ந்த இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள வேண்டியது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும். அதேவேளை, அந்த வைரஸ் தொற்றிப்…
-
- 0 replies
- 427 views
-
-
உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. N 76 Views உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. அமெரிக்கா அந்த சந்தையில் கட்டாயம் இணையவேண்டும் அல்லது பின்னால் நிற்கவேண்டும். ட்ரோன் போர்முறை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அல்கெய்தா (al Qaeda)போன்ற அரசல்லாத தரப்புகள் முதல் கடந்த தைமாத்தில் ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சொலைமானியை (Qasem Soleimani) கொலை செய்ததுவரை ஆயிரக்கணக்கான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. குர்திஸ்தானிய த…
-
- 0 replies
- 516 views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். “பனிப்ப…
-
- 14 replies
- 2.3k views
-
-
தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலு…
-
- 0 replies
- 745 views
-
-
முக்கியமான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா Bharati உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கும் ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை’ உடன்படிக்கை சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தைச் சேர்ந்த 10 நாடுகளும் சேர்ந்து 15 நாடுகளைக் கொண்ட ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership –RCEP trade deal) உடன்படிக்கையொன்று நவம்பர் 15 கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்று தோற்றம் பெற்றிருக்கிறது. இதில் இந்தியா பங்கேற்காதமை பெரும் கவனத்தை ஈர…
-
- 0 replies
- 928 views
-
-
நினைவேந்தலும் சட்டப்பொறியும் -கபில் *01 ‘அரசதரப்பும், படைத்தரப்பும் சுகாதார விதிமுறைகளை புறக்கணித்து செயற்படும் போது, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது? *02 “அரசாங்கத்தில்உள்ள அமைச்சர்களை விடவும், ஒரு படி மேலே, உள்ளவர் இராணுவத் தளபதி.பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு போல, மிகவும் வசதியானஇடத்தில் அதிகாரங்களுடன் இருப்பவருடன் சட்டரீதியாக முரண்படத் தொடங்கி விட்டார்சுமந்திரன்” கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி, நினைவேந்தலை தடுக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கக் கூடாது என்று பாராளுமன்றத்தில் கோரியிருந்தார் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.…
-
- 0 replies
- 574 views
-
-
தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலுகைகளைப் பெற்…
-
- 0 replies
- 321 views
-
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு…
-
-
- 588 replies
- 82.1k views
- 1 follower
-
-
-
ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும் 77 Views அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார். டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார். இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ்த் தேசியப் பேரவை ? நிலாந்தன்… November 22, 2020 கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களோடு பேசுவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பதே அந்த செய்தியின் சாராம்சம் ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவராலும் செய்தியின் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. இணையத்தில் கண்டெடுத்தது என்று கூறினார்கள்.அதாவ…
-
- 1 reply
- 747 views
-
-
நசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமைகள் தயாரா.? ஒரு இனத்தின் மீது இன்னொரு ஆதிக்க இனம் ஒடுக்கு முறையை மேற்கொள்ளுகின்ற போது சட்டங்கள் மேலாதிக்கம் கொண்டவர்களின் அதிகாரமாகவே துலங்குகிறது. இது இலங்கையில் மாத்திரமல்ல, இலங்கை போன்ற இன மேலாதிக்க நாடுகள் பலவற்றிலும் இருக்கின்ற நடைமுறை. ஆனாலும் தேச விடுதலை, சமூக விடுதலை என சிந்திக்கும் மக்கள் தரப்பினரும் அவர்களின் ஆளுமை மிக்க தலைவர்களும் அதனைக் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்மையிலே சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த எண்ணப்பாங்கில்தான் நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. மக்களிடம் அதிகாரம் இருக்கவும் அவர்கள் அதனை பாதுகாக்கும…
-
- 0 replies
- 1.2k views
-
-
காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா? – நிலாந்தன் November 21, 2020 நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக் கொண்டு லீசிங் கொம்பெனிகளில் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். எல்லாரும் ஒரேயடியாக ஒ…
-
- 0 replies
- 618 views
-
-
உலகின் மகா கூட்டு ! (அமெரிக்கா + இந்தியா OUT) அ. நிக்ஸன்
-
- 0 replies
- 751 views
-
-
தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான். 61 Views கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நிழல் யுத்தம் ஒன்றை தமிழினம் எதிர்கொண்டுள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர்கள் எந்த விடயங்களை பாதுகாத்தார்களோ, அந்த விடயங்களை அவர்களிடம் இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மிகவும் திட்ட…
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன? “புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.” இப்படி வலியுறுத்தியிருக்கின்றார் “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி. இலங்கை அரசியலரங்கில் எது நடைபெறப்போவதில்லையோ அது நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், அவர் சொல்லியிருப்பதுதான் நாட்டுக்கு அவசியமானது. இல்லையெனில் மாறிமாறி ஆட்சிக்க…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழர் ஆதரவுக் கட்டமைப்பு பற்றிய மாவையின் ஆர்வம் -புருஜோத்தமன் தங்கமயில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள, தமிழர் நலன்சார் சக்திகளை ஓரணியில் திரட்டி, பரந்துபட்ட கட்டமைப்பொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டுவந்த அவர், தற்போது வெளிநாடுகளிலுள்ள தமிழர் ஆதரவுச் சக்திகளை இணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். குறிப்பாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா உள்ளிட்டவர்க…
-
- 0 replies
- 622 views
-
-
யுத்தத்திற்குப் பின்னான நிகழ்ச்சி நிரல் என்ன?
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்குமாகாண மக்கள் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்கள் - சீவகன் பூபாலரட்ணம்
-
- 0 replies
- 586 views
-
-
அரசியல் தகனம் -எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 நோயால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான விவாதம், மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், முதன் முறையாக இந்த விவாதம் ஆரம்பித்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸின் தொற்று, படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, மரணங்களும் குறைந்தன. இதனால், தகனம் தொடர்பான விவாதமும் தணிந்துவிட்டது. கொரோனா வைரஸின் தொற்றுப் பரவல், மீண்டும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் போது, பொது மக்களைப் போலவே அரசாங்கமும் அதிகாரிகளும் கொவிட்-19 நோய், இனி நாட்டைத் தாக்காது என்பதைப் போன்றதோர் அலட்சியப் போக்கில் தான், செயற்பட்டு வந்தனர். ஆளும் கட்சி அரசியல்வாதிகள், கொவிட்-19 நோயைக் கட்டுப்பட…
-
- 0 replies
- 674 views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
எண்ணெய் ஊற்றும் இனவாத அரசியல் மொஹமட் பாதுஷா சமூகங்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும், பொதுவாகவே நிரந்தரமான தீர்வு காண்பதை விடுத்து, மய்யப் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத விடயங்களுடன் முடிச்சுப்போட்டு, பூதாகரமாக்கி, காலத்தைக் கடத்துகின்ற போக்குகளையே, இலங்கையின் அரசியல் சூழலில் கண்டு வருகின்றோம். குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களின் இன, மத ரீதியான அபிலாஷைகள், கோரிக்கைகள் என்று வருகின்ற போது, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி, அதில் யாகம் வளர்க்கின்ற வேலையைத்தான், பெருந்தேசிய அரசியல்வாதிகள் சிலரும் அவர்களை ஆட்டுவிக்கின்ற இனவாத சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒன்றாக, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) எரிப்பு விவகாரமும்…
-
- 1 reply
- 955 views
-