Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பொம்பியோவின் வருகையும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் - யதீந்திரா அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கை வரவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. புதுடில்லியில் இடம்பெறும் இருதரப்பு அமைச்சர்கள் சந்திப்பிற்காக (U.S.-India 2+2 Ministerial Dialogue) வரும் மைக் பொம்பியோ, தொடர்ந்து கொழும்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் இருதரப்பு சந்திப்பிற்கென அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பரும் வருகைதரவுள்ளார் ஆனால் அவர் இலங்கைக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எதுவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எஸ்பர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் தெலைபேசியில் உரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க…

  2. கதவைத் திறக்கும் புதுடெல்லி என்.கண்ணன் “தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கானஇந்தியாவின்கதவுதிறப்பதற்குசீனாவும்தமிழகமும்அடிப்படையாகஅமைகின்றன” “13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்குமோ என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கும், சிங்கள, பௌத்ததேசியவாதசக்திகளுக்கும்மேலோங்கி வருவதால், அதற்கு மாற்றான நகர்வாக சீனாவின் பக்கம் சாயமுனைகின்றனர்” செப்ரெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ஷதலைமையிலான குழுவினருடன் நடத்தியதை போன்றதொரு, மெய்நிகர் கலந்துரையாடலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியத் தரப்பில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுகுறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த…

  3. இலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை.! - நா.யோகேந்திரநாதன்.! இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்தியா மீண்டும் அக்கறை காட்டத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. 1980ம் ஆண்டு காலப்பகுதி தொட்டே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான கரிசனையை இந்தியா காட்டி வந்தாலும் கூட அவை பேச்சுகள், அறிக்கைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று விடுவதுண்டு. இதுவரை ஆக்கபூர்வமான எவ்வித பலா பலன்களும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய கடந்த 40 ஆண்டுகளாக இலவு காத்த கிளிகளின் நிலையிலேயே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பரிதாப நிலைமையை எட்டியுள்ளன. இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினைகளில் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் எமது தமிழ்த் தலைமைகள் இந்தியா பற்றிய நம…

  4. சிரிய அகதிகளும் வெளிவிவகார அரசியலும் ஜனகன் முத்துக்குமார் சிரியாவில் மோதலின் தொடக்கத்திலிருந்து சிரிய அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையானது சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் அறிக்கைகள், சிரிய மோதலில் ஈடுபட்டுள்ள வகிபங்குதாரர்களின் நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளில் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் நலன்களுக்காக பொதுமக்கள் பணயமாக வைக்கப்படுதலுக்கு ஒரு மோசமான உதாரணம் கிழக்கு சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் விருப்பத்துடன் இணங்கிச் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் அல்-டான்ஃப் தளத்தை சுற்றி 55 கிலோ மீற்றர் மண்டலத்துக்குள் அமைந்துள்ள ருக்பான் அகதிகள் முகாம் ஆகும். உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 50,000 க்கும் மேற்பட்ட …

  5. அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும் -என்.கே. அஷோக்பரன் அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள், பொது வாதப்பிரதிவாதத்தின் பொருளாக மாறியிருக்கின்றன. முதலாவது, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகள். இரண்டாவது, கட்சித்தாவல்கள். 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகளைப் பற்றி, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனக் கலந்துரையாடல்களும் பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடக வௌியிலும் குவிந்து கிடக்கின்றன. 20ஆம் திருத்தச் சட்…

  6. 20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும் இருபதாவது அரசியல் யாப்பு திருத்தம் யாரை பாதிக்கும். இதன் விளைவு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்? இதனை ஆராய்கிறது இந்தப் பதிவு.

  7. சந்தேகங்களை களைவாரா ‘மாவை’? -புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் செயன்முறையாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று, சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவரை அவசர அவசரமாகச் சந்தித்த மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் தேவையையும் அதன் செயற்பாட்டு நோக்கங்களையும் குறித்து விளக்கமளித்து இருக்கின்றார். தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் மாவை சேனாதிராஜா முன்னெடுத்திருந்த…

  8. இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு Rajeevan Arasaratnam October 26, 2020 இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு2020-10-26T21:38:52+05:30அரசியல் களம் FacebookTwitterMore இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் இலங்கை சீன உறவுகளில் வெளிப்படையாக தலையிட்டுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை தனது வெளிவிவகா…

  9. பெருந்தோட்டப் பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரப் பிரச்சினைகள் Daya Dharshini இலங்கையில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள் கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் இருக்கின் றார்கள். பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சமூக, பொருளா தாரம், அரசியல், கலாசாரம் மற்றும் சுகாதாரம் தொடர் பாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளோ ஏராளம். காலையில் எழுந்து தமது குடும்பத் தேவைகளை செய்து முடித்து தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் முடித்து விட்டு தேயிலை ம…

    • 0 replies
    • 649 views
  10. தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா? Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:25 தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள…

    • 0 replies
    • 462 views
  11. 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றம்: அதிகரித்த நிறைவேற்று அதிகாரங்கள்!- நடக்கப் போகும் விளைவுகள் என்ன? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்ட வரைபு திருத்தங்களுடனும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் 22.10.2020 அன்று நிறைவேறியது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சிறிய தேசிய இனங்களுக்கு அச்சுறுத்தலான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தனிச் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிடுவோம் என ராஜபக்சக்கள் மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. வாக்கெடுப்பு விடுவதற்கு முதல் பேரம் பே…

    • 4 replies
    • 889 views
  12. கிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான் October 25, 2020 Share 53 Views தமிழ் தேசிய போராட்டத்தில் இழப்புகள் என்பது எண்ணிலடங்காது. கடந்த 35வருட காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்டதைவிட இழந்தது அதிகம். வடகிழக்கு இந்த இழப்புகளில் மீள்வதற்கான வழிவகைகள் இன்றி இன்றும் தடுமாறி வருவதை நாங்கள் உணர முடிகின்றது. இந்த இழப்புகளில் அதிகமான இழப்புகளை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், சிங்களவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறையிலும் தமிழர்கள் பல இழப்புகளை எதிர்கொண்டனர். …

  13. அதிருப்தியாளர்களை சமாளிக்க களத்தில் இறங்கிய ஜனாதிபதி.. ரொபட்அன்டனி ஆளும் கட்சிக்குள்ளேயே வலுத்துவந்த இருபதாவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மீதான எதிர்ப்பை இறுதி நேரத்தில் களத்தில் இறங்கிய ஜனாதிபதி சாமர்த்தியமான முறையில் முறியடித்து வெற்றியீட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி மேலும் பலவீனமடைந்துள்ளதுடன் அதன் 8 உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குஆதரவாகவாக்களித்தனர் சர்ச்சைகள் எதிர்ப்புக்கள் விமர்சனங்களுக்கு மத்தியில் இரட்டை குடியுரிமையுடையோர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஏற்பாடும் நிறைவேற்றம் பல்வேறு சர்ச்சைகள் எதிர்ப்புகள், ஆதரவு, சாதக, பாதக, விமர்சனங்களுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்ப…

  14. ஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மொழிச் சமூகச் சவால்கள்! -சுஐப் எம். காசிம்- மூன்றாவது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்திய வடபுல முஸ்லிம்களின் ஒக்டோபர் வெளியேற்றம், இப்போது மூன்று தசாப்த காலத்தை எட்டி நிற்கின்றது. விடுதலைப் போராட்டத்துக்கு வேண்டாதவர்கள் அல்லது வேறு ஒரு காரணத்துக்காகவே இவர்கள் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்தக் காரணங்களானாலும், தமிழர்கள் என்ற அரசியல் அடைமொழிக்குள் இந்த முஸ்லிம்களை உள்வாங்க வடக்கு, கிழக்கு விடுதலைப் போராளிகள் விரும்பியிருக்கவில்லை. ஏன், இந்த விருப்பமின்மை ஏற்பட்டதென்று இன்றுவரைக்கும் தமிழ் மொழி மண்ணில் விவாதங்கள் இடம்பெறவே செய்கின்றன. முட்டை முதல் வந்ததா? அல்லது கோழி முதல் உயிரெடுத்ததா? என்ற பாணியில் அமைந்துள்ள இந்த விவாதங்கள்தான…

  15. கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போதல் அல்ல – நிலாந்தன் August 23, 2020 “மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடக்கப் போவது தேர்தல் அல்ல யாழ் மேலாதிக்கத்திற்கும் கிழக்கின் எழுச்சிக்குமான பலப்பரீட்சை” இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியவர் எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம். கிழக்கில் பிள்ளையானின் ஆலோசகர் அல்லது பிள்ளையானுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ஒருவர். பிரான்சுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாய் நிலத்தின் அரசியலில் அதிகமாக ஈடுபடும் ஒருவர். தேர்தலுக்கு முதல் நாள் மேற்படி குறிப்பை முகநூலில் எழுதினார். இங்கு அவர் யாழ் மேலாதிக்கம் என்று கருதுவது எதனை?கூட்டமைப்பையா? அல்லது மாற்று அணியையா? அல்லது ஒட்டுமொத்த தமிழ் தேசியவாதத்தையா?…

  16. ‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம் October 24, 2020 ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்துள்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவற்றிடமிருந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மை என்பவைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஊடகம் என்பது செய்தி – தகவல் – விமர்சனம் என்பவற்றோடு கருத்துருவாக்கம், கருத்துப் பரிமாற்றம் என்பவற்றை உள்ளடக்கியதால், இதனை ஜனநாயகத்தின் காவல் நாய் (watch dog) என்பர். அதனால், ஊடகம் எப்போதும் காய்தல், உவத்தலின்றி உண்மையை உண்மையாகக் கூறுவதாக (நடுநிலை என ஒன்றில்லை) இருக்க வேண்டும். அதேசமயம், மக்களின் கருத்…

  17. 20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. அது முன்னரும் தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி அல்ல. ஜனாதிபதி தேர்தலின் போதும் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளையும் சேர்த்தே வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுடைய தமிழ் முகவர்கள் இல்லையென்றால் 150 ஆசனங்கள் கிடைத்திருக்காது. எனவே இருபதாவது திருத்தத்துக்கு முன்னரும் அவர்கள் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளால் பெற்ற ஒன்று அல்ல. இப்பொழுது…

  18. விடுதலைப் புலிகள் மீதான தடை; பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணைய தீர்ப்பின் அடுத்த கட்டம் என்ன? Bharati விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீட்டித்த பிரிட்டன் உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் உள்துறைச் செயலாளருக்கு எதிராக ஆறுமுகம் உள்ளிட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் “விடுதலைப்புலிக…

  19. முரளியின் 801 வது விக்கற்-பா.உதயன் முரளியின் முதல் பந்து வீச்சில் விஜய் சேதுபதி வெளியே. 801 வது விக்கற்றை வீழ்த்தி விளையாட்டு அரசியலில் தனியான ஒரு இடம் தனக்காக தேடி விட்டார் முரளி.அரசியல் தெரியாத முரளி என்கிறார்கள் ஆட்டம் தொடங்கி முடியும் வரை அவரே கீரோ.அவர் ஆடி முடித்த ஸ்டயிலே வேற. இவர் நகர்த்திய காய்கள் இவர் விழுத்திய விக்கற்றுகள் போலே. இவரின் இந்த காய் நகர்த்தல்கள் விளையாட்டோடு கூடியதோர் அரசியல் அடையாளம் என்றே கூறலாம். தென் ஆபிரிக்காவின் நிற வெறிக்கொள்கையானது அந்த நாட்டின் கலை, கலாச்சார, விளையாட்டு என்பனவோடு தன்னை அடையாளப் படுத்திக் கொண்டது. இந்த அடிப்படையில் துடுப்பாட்டம் கூடவே இவர்களின் ஓர் நிறவெறி அடையாள சக்தியாக மாறியது.(Sports become a kind of symbolic power …

  20. கம்யூனிஸமா? நாஸிசிசமா? இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று என்னைக் கேட்டால், நான் கம்யூனிசம் என்று தான் சொல்வேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. 1937 ல் சேர்ச்சில் இப்படி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான பிரிட்டனை ஆட்சி செய்திருந்த சேர்ச்சில் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரே காரணத்தோடு தான். கம்யூனிஸம், நாஸிஸம் இரண்டையும் அவர் ஒரே வரிசையில் வைத்து தான் ஒப்பிடுகிறார். சாம்பர்லைன் ஹிட்லரை ஆதரிப்பதை தொடக்கம் முதலே சேர்ச்சில் எதிர்த்து வந்திருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். நாம் இணைய வேண்டியது சோவியத்துடன் என்று 1938 முதலே சேர்ச்சில் சொல்லி வந்திருக்கிறார். ஐரோப்பாவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வந்தது. …

    • 1 reply
    • 734 views
  21. இருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும் Bharati இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்ப்பு என்பது பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்ததைவிட வெளியே சிவில் சமூக அமைப்புக்களிடம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக சில முக்கியமான பௌத்த மத பீடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்திருந்தன. ஆனாலும் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்த பலவீனங்களைக் கொண்டு இருபது நிறைவேற்றப்பட்டுள்ளது எனலாம். அத்தகைய பலவீனத்தை அதிகம் வெளிக்காட்டியவர்களாக சிறு கட்சிகளின் தலைமைகளைக் கூறலாம். ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெர…

    • 0 replies
    • 633 views
  22. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.