அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம் லக்ஸ்மன் “எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகையில் இருக்கலாம். ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்க…
-
- 0 replies
- 149 views
-
-
இலங்கையின் வதைமுகாம்கள் April 30, 2020 நர்மி * நாசிகளின் வதைமுகாமில் இருந்து மீண்டு வந்த ரெபெக்கா சி இரண்டாயிரமாவது ஆண்டில் இப்படி சொல்லியிருந்தார். “நான் விடுவிக்கப்பட்டவன், என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. ஆனால் உயிர்பிழைத்ததற்காக முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். ஆனால்இன்னொரு பக்கத்தில் இருந்து யோசிக்கும்போது எல்லோரையும் இழந்து நிற்கும் நான் எப்படிகடவுளுக்கு நன்றி செலுத்த முடியும். இந்நிலையில் நான் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியாகஇப்போது இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?” எப்படிப்பட்ட கொடுமையான மனநிலையிது? இதை அம்மனிதனுக்கு எவ்வகையிலான விடுதலை என்று சொல்ல முடியும்? இது ஒரு வகையில் அம்மனிதன் உயிர் வாழும் கா…
-
- 0 replies
- 731 views
-
-
விக்னேஸ்வரன் அணி சாதிக்குமா ? | C. V. விக்னேஸ்வரன் ( தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி )
-
- 0 replies
- 564 views
-
-
கொரோனாவின் பின்னான புதிய சர்வதேச உறவுகள் ? அதில் ஈழத் தமிழரின் எதிர்காலம் ? July 23, 2020 – மு . திருநாவுக்கரசு உலகளாவிய அரசியல் போக்கிலும் ( process) , சர்வதேச உறவுகளிலும் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டுசெல்வது இயல்பு. உலக அரசியல் போக்கு என்பது பெருவெட்டானது. அது நீண்ட காலத்துக்குரியது. சர்வதேச உறவுகள் என்பது குறுங்காலத்துக்கு உரியது. அது அவ்வப்போது மாறவல்லது. உலகளாவிய நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றுப் பெரும் போக்கின் ஒரு முக்கிய போக்காய் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னான உலகளாவிய அரசியல் போக்கு உதயமானது. இந்த முக்கிய அரசியல் போக்கானது காலத்திற்குக் காலம் பெரும் திருப்பங்களை பெற்றுச் செல்கின்றது. இத்தகைய அரசியல் பெரும் போ…
-
- 0 replies
- 531 views
-
-
இன ரீதியான அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலின் பக்கம் தமிழ் மக்கள் திரும்புகிறார்களா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 23 கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்ற ஆசன எண்ணிக்கையைப் பற்றியும் அது எதைக் காட்டுகிறது, அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பவற்றைப் பற்றி, ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிரதானமாக, தமிழ்க் கட்சிகளின் பிரதான கூட்டணியாகக் கருதப்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைமையைப் பற்றியே, பிரதானமாக ஆராயப்பட்டு இருந்தன. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. இம்முறை அந்த எண்ணிக்கை, 10 ஆகக் குறைந்துள்…
-
- 0 replies
- 362 views
-
-
போரின் பின்னர் தேசியம் எப்படித் தகர்க்கப்படுகிறது ? : சபா நாவலன் 02/06/2017 இனியொரு... வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தமிழர்களின் தேசிய நிலம் வடக்கு என்ற எல்லைக்குள் மட்டும் குறுக்கப்பட்டு அதற்கு விக்னேஸ்வரன் என்பவரை நிர்வாகியாக நியமித்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூர் உற்பத்திகள் அழிக்கப்பட்டு பல் தேசிய வியாபார நிறுவனங்கள் எந்தத் தடங்கலுமின்றி மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்களில் தங்கியிருக்கும் பல் பொருள் அங்காடிகள் ‘மூலைக் கடைகளை’ப் பிரதியீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. விவசாயம், மீன்பிடி, தொழிற் துறை என்ற அனைத்தும் மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களுக்குச் சேவையாற்றக்கூடிய சிற…
-
- 0 replies
- 529 views
-
-
அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியை நிலைநாட்டி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் உளப்பூர்வமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அரசாங்கம் செயற்படத் தவறியிருக்கின்றது. அதன் காரணமாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசு சிக்கல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அங்கு எழுப்பப்படுகின்ற பல்வேறு வினாக்களுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க முடியாமல் தடுமாற நேர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ப…
-
- 0 replies
- 454 views
-
-
ட்ரம்ப்பின் கீழ் வெளிநாட்டுக் கொள்கைகள் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது, ஐ.அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில், பாரியளவு மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளைப் போல், இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ அவர் முயல மாட்டார் என்பது, பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இலங்கையிலும் கூட, அந்த எண்ணம் காணப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றியை வாழ்த்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “ஏனைய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாத போ…
-
- 0 replies
- 574 views
-
-
கட்சியரசியலுக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்த் தேசியம் By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:34 PM சி.அ.யோதிலிங்கம் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லாத நிலையில், இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் சிக்குண்டிருக்கும் காரணியைப் பார்க்கலாம். தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலும் ஒரேநேர்கோட்டில் செல்வது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தே…
-
- 0 replies
- 248 views
-
-
சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதில் தாமதம் வேண்டாம் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெருக்கடி நிலை தொடர்ந்து கொண்டிருப்பது கவலைக்குரியது. அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கின்ற சூழலிலும் இன்னும் மக்கள் அச்சத்துடனேயே இருந்துகொண்டு இருக்கின்றனர். குறிப்பாக திகனையில் ஆரம்பமான இந்த வன்முறை சம்பவங்கள் தெல்தெனிய, பூகொடை, மாத்தளை, கண்டி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பரவியிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் இந்த நிலைமையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்…
-
- 0 replies
- 210 views
-
-
முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி! இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இலட்சியங்கள் இல்லாத திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னதான் தங்கள் சாதனைகள் பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தாலும் கிடைத்துள்ள பெறுமானம் சிறந்தாக அமையவில்லை. முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணக்க அரசியலுக்கே பழக்கப்பட்டுள்ளார்கள். காலத்திற்கு காலம் ஆட்சி அமைத்த பேரினவாதிகளுடன் இணக்க அரசியல் என்ற போர்வையில் அமைச்சர் பதவிகளைப் பெற்று வருவதே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் நிலைத்த முடிவாக இருந்து வந்துள்ளது. ஆ…
-
- 0 replies
- 603 views
-
-
தொடரும் விரிசல்! ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த ஆட்சி, எதிர்பார்த்ததைப் போன்று நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டவில்லை. நாட்டை முன்னேற்றகரமான வழியில் வழிநடத்திச் செல்லவும் இல்லை. மாறாக பொருளாதாரம் நலிவடைந்திருக்கின்றது. முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. ஆட்சியில் குழப்பங்களும், ஆட்சியாளர்களிடையே அரசியல் பனிப்போர் பகைமையுமே ஏற்பட்டிருக்கின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்வதன் மூலம் தனிநபரின் ஆட்சி அதிகார ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப் போவதாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் கொள்கை …
-
- 0 replies
- 515 views
-
-
சுதந்திர வேட்கை என்பதை அடிப்படையாக் கொண்டு ஒவ்வவொரு தேர்தல்களிலும் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் மக்கள் கொள்கை அரசியலை தொடர்ச்சியாக நம்பிச் செயற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்கின்றன. -அ.நிக்ஸன்- தமிழ் மக்கள் கட்சிமாறிச் சென்றவர்களுக்கு ஒருபோதும் வாக்களித்தது கிடையாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை, உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற மன வேட்கையுடன் வாழ்கின்றனர் என்ற முடிவுக்கு வரலாம். கூட்டமைப்பின் பொறுப்பு ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அந்த மாறாத ம…
-
- 0 replies
- 477 views
-
-
Published By: VISHNU 07 NOV, 2023 | 11:26 AM ஆர்.ராம் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகள் பொதுவெளிக்கு வந்துள்ள நிலையில், நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் தமக்கு கீழ்படியாது முரண்டுபிடித்தவர்களை களையெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதை கடந்தவாரம் பார்த்திருந்தோம். களையெடுக்கும் முதலாவது அத்தியாயம் வவுனியாவில் அரங்கேற்றப்பட்டதோடு அதற்கு அடுத்தபடியாக முல்லைத்தீவு, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மா…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் தற்போது இரு வகையான ஜனநாயகத்தை உணர்கிறார்? ஈழத் தமிழர்களின் தன்னாட்சி அதிகாரத்தை இலங்கைத் தேசியத்துடன் கரைக்கும் முயற்சிக்கு கிடைத்த பயன் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் இலங்கையில், கடந்த ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளததாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அறிக்கை வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுமந்திரன். சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரின் கடும் முயற்சியினால் இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால …
-
- 0 replies
- 556 views
-
-
ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? - குமாரவடிவேல் குருபரன் 15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார…
-
- 0 replies
- 685 views
-
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்!" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத…
-
- 0 replies
- 408 views
-
-
பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தேர்தலுக்காகவா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 04:21 Comments - 0 உலகில் வேலைநிறுத்தம் செய்த முதலாவது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகத்தான் இருக்க வேண்டும். ஏனைய வேலைநிறுத்தங்களைப் போலவே, அவரது வேலைநிறுத்தத்தின் மூலமும் பொது மக்களே பாதிக்கப்பட்டனர். ஏனைய வேலை நிறுத்தங்களைப் போலவே, ஜனாதிபதியும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை, இரத்து செய்யவேண்டும்” என்பதே, அவரது கோரிக்கையாகும்.“எனது கோரிக்கையை, சபாநாயகர் நிறைவேற்றாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என…
-
- 0 replies
- 771 views
-
-
தேசிய அளவில் பரிணமித்த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..? "கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தீவிரமடைந்து, மூவின மக்களிடையேயும் மனக் கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துச் செல்கின்ற ஒரு மோசமான நிலைமை உருவாகி இருந்த போதிலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது கவலைக்குரியது." கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமும், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மோசமடைந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இந்த செயலகத்தை முழும…
-
- 0 replies
- 507 views
-
-
பிரச்சாரத்திற்கு செல்லும் வைகோவை கண்டாலே ஓடி வந்து சூழந்துகொள்ளும் மாணவர்கள் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கண்டதும் பள்ளி மாணவர்கள் அவரை சூழந்து கொள்கின்றனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் வீடு, வீடாகச் சென்று ஆதரவு கேட்கிறார். அப்போது தெருக்களில் நடந்து செல்லும் வைகோவை பார்த்ததும் பள்ளி மாண…
-
- 0 replies
- 798 views
-
-
[size=4]தமிழகத்தின் அனைத்து அமைப்புக்களும் தமது அட்டவணைகளுக்கு ஏற்றவாறே காய்களை நகர்த்துகிறார்கள். தமிழின முன்னேற்றத்திற்காக இவ் அமைப்புக்கள் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. சில அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாத்துறையினர் உட்பட பல்வேறு பொது அமைப்புக்கள் போராட்டங்களில் இறங்குவார்கள். பின்னர் அனைத்தும் மறைக்கப்படும் நிகழ்வுகளே அதிகமாக இருக்கிறது.[/size] [size=4]சுய காரணங்களுக்காக தமிழகத்தில் இயங்கும் அமைப்புக்கள் தமிழின அழிவுக்கு வழிவகுத்துக் கொடுத்தால் நிச்சயம் தமிழினத்தை யாரினாலும் காப்பாற்ற முடியாது என்பதனை இனியாவது தமிழகத் தமிழர்கள் உணர்வார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக கலைஞரின் திராவிட முன…
-
- 0 replies
- 618 views
-
-
டெசோ மாநாடு குறித்து எதிர்பார்த்ததைவிட அதிகளவில் எதிர்ப்பு கருத்துகள் வர துவங்கியுள்ள நிலையில், மாநாட்டை எப்படியும் வெற்றிகரமாக நடத்தி காண்பிக்க முழுமூச்சுடன் இறங்கியுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில் மாநாட்டு அரங்கம் அமையவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி, பிரபல பந்தல் கான்ட்ராக்டர் ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கம் பிரமாண்டமாக சினிமா செட்டிங் போல் அமைக்கப்படுகிறது. அரங்கத்தின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை, கருணாநிதி தாமே நேரில் வழங்கியுள்ளார். இந்தியாவுக்கு வெளியே இந்த மாநாடு தோற்றுவித்துள்ள நெகடிவ் கருத்துக்களை உடைப்பதற்காக, சுமாரான அளவில் ப…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல் Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்க…
-
- 0 replies
- 172 views
-
-
மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும் November 17, 2025 — கருணாகரன் — ஈழப்போராட்டம் எதிர்பார்த்த விடுதலையையும் அரசியல் முன்னேற்றத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதுபெருந்துயரமே. ஆனால், அது உண்டாக்கிய நினைவலைகள் ஓயவில்லை. எந்தப்போராட்டத்திலும் இத்தகைய நிலையிருக்கும். அதில் ஒன்று, போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த வீரர்களின் நினைவாகும். அதைத்தமிழ் மக்கள் மாவீரர்நாளாக ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 27 இல் நினைவு கூருகிறார்கள். இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய மரபாகும். இந்த மரபு இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறையில் இல்லாத போதும், உலகங்கும் உள்ள தமிழ் மக்களால் தொடரப்படுகிறது. இது வியப்புக்குரிய ஒன்று. ஏனென்றால், குறித்த இயக்கம் இல்லாத போதும் அந்த இயக்கத்த…
-
- 0 replies
- 220 views
-
-