அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இந்தோ- பசுபிக்கில் பட்டுப்பாதையும் ஈழத் தமிழரின் எதிர்காலமும். முன்னாள் யாழ் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு.
-
- 0 replies
- 551 views
-
-
ஈழத்தில் மனித உரிமைகள் - தீபச்செல்வன். Posted on December 29, 2019 by செய்தியாளர் பூங்குன்றன் அண்மையில் இலங்கை சனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின மக்கள் கோபப்படும் வகையில் சிறுபான்மையினர் எதையும் கேட்கக்கூடாது என்றொரு புதிய தத்துவத்தை திருவாய் மலர்ந்துள்ளார். இன அழிப்பு போருக்கு மனிதாபிமானப் போர் என்று பெயர் சூட்டியவர்கள் இப்படி எல்லாம் பேசுவது ஆச்சரியமானதல்ல. இந்த உலகப் பந்தில் வரலாறு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒரு தனித்துவமான இனமாக இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள், சிங்கள அரசாலும் அனைத்துலக சமூடூகத்தினாலும் எப்படி நோக்கப்படுகின்றன? ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமை…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 30 தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்திய அமைச்சரவைக் கூட்டம், “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்படும்” என்று, முடிவு எடுத்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் சர்ச்சைகள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மீண்டும் போராட்டக் களத்தை சூடுபடுத்தி இருக்கிறது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது, இந்தியாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே, மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, மக்கள் தொகை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இப்படி, மக்கள் தொகை சேகரிப்புக்காக வெளியிடப்பட்ட கேள்…
-
- 0 replies
- 582 views
-
-
சிங்கள தேசத்தின் ஜனாதிபதி, தமிழ்த் தேசத்தினதும் ஜனாதிபதியாவாரா? பகுதி 1- December 30, 2019 ராஜா பரமேஸ்வரி… யுத்தம், கொலைகள், காணாமல் போதல்கள், வெள்ளைவான் கடத்தல்கள் போர் குற்றம் என பல நூறு குற்றச்சாட்டுக்களை தாண்டி தனிச் சிங்கள வாக்கில் இலங்கையின் முதலாவது ஆட்சியாளராக ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவாகி உள்ளார். அரசியல்வாதியாக, கட்சிப் பிரமுகராக அல்லாத முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற இலங்கையின் அரச அதிகாரி ஒருவர் வரலாற்றில் முதலாவது தேர்தலிலேயே பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வாரிசு, யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் தம்பி என்ற க…
-
- 0 replies
- 689 views
-
-
கோட்டபாயவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் - யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழுத்தம் திருத்தமாக பேசிவருகின்றார். அதாவது, பெரும்பாண்மை (சிங்கள) மக்களின் ஆதரவின்றி அப்படியான ஒன்றை செய்ய முடியாது. இதன் காரணமாகவே கடந்த 70 வருடங்களாக அதனைச் செய்ய முடியவில்லை. அரசியல் தீர்வு என்று கூறி மக்களை அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஏமாற்றியிருக்கின்றனர். தானும் அவ்வாறு கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதற்கு முன்னர் இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரமே, இந்தளவு வெளிப்படையாக அதிகாரப் பகிர்வை நிராகரிக்கவில்லை. அதில் தாங்கள் கரிசனை கொண்டிருக்கின்றோம் – அதனை பரிசீலிப்போம் என்றவாறே பேசி வந்திருக்கின்றனர் ஆனால் அவ்வாற…
-
- 0 replies
- 830 views
-
-
ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐ.நா.தீர்மானத்தை எதிர்த்தல் -நிலாந்தன்.. December 28, 2019 நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அதாவது அது 19 ஆவது திருத்தத்தின் விளைவு தான். 19வது திருத்தம் இருக்கும் வரை ராஜபக்சக்கள் முழு வெற்றி பெற…
-
- 0 replies
- 700 views
-
-
2009இற்குப் பின்னரான காலத்தில் அறிவாலும் சிந்தனையாலும் நமது உரிமைகளை வெல்ல வேண்டிய ஒரு சூழலுக்குள் ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. மௌனிக்கப்பட்ட வலுவான ஒரு ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அறிவால் மாத்திரமே எடுத்துக் கூறும் சூழலும் ஈழத் தமிழர்களின்பால் சூழப்பட்டது எனலாம். எனினும் 2009இற்குப் பின்னரான காலத்தின் அரசியலில் அறிவையும் தெளிந்த சிந்தனையையும் பயன்படுத்துவதைத்தான் காண முடியவில்லை. சிங்கள தேசத்தின் பிரதான ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, பல்வேறு அரசியல்வாதிகளும் பேரினவாத நோக்கம் கொண்ட போலியான வரலாற்றாசிரியர்களும் இலங்கையின் வரலாறு குறித்து பொய்யான தகவல்களை பரப்பியபோது, அதனை வரலாற்று ரீதியாக பேச எமது பேராசிரியர்கள் எவரும் முன்வரவில்லை. காரணம் தமது பதவி…
-
- 1 reply
- 716 views
-
-
இந்தியாவில் இலங்கை அகதிகள் இரட்டைக் குடியுரிமை விவாதங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன். இலங்கையில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றிய விவாதங்கள் பரவலாக இடம்பெறுகிறது. தந்தி தொலைக்காட்ச்சி எனது கருத்தையும் பதிவு செய்தது. பதிவின் சுறு பகுதி ஒலிபரப்பானது. யாழ் இணைய தோழ தோழியர்களுக்காக. .
-
- 0 replies
- 667 views
-
-
கழன்று போகும் கடிவாளம் கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 27 மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது. இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள். 19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து விட்டது தான், 19…
-
- 0 replies
- 908 views
-
-
ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள் ஈழத் தமிழருக்கான விடிவு, சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நீண்ட காலமாக கட்டி எழுப்பப்பட்ட ஒன்று. இன்றும் இந்தியா ஈழத்தமிழர்களைக் கைவிடாது என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். சர்வதேசம் இலங்கையை சீனாவிடம் இருந்து மீட்டெடுக்க, தமிழ் மக்களின் பக்கமே நிற்கிறது என்று நம்பச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவ்விரண்டு பற்றியும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்கள் மத்தியில் மலிந்து போய் கிடக்கிறார்கள். இவர்களிடம் இரண்டு அடிப்படையான கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதலாவது, இவர்கள் சொல்லும் சர்வதேசம் என்பதும் இந்தியா என்பதும் …
-
- 7 replies
- 1.2k views
-
-
2019: காலம் கலைத்த கனவு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 26 காலம் கனவுகளையும் கற்பனைகளையும் சாத்தியங்களையும் எதிர்பார்ப்புகளையும் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. காலத்தின் விந்தையும் அதுவே. கடந்தகாலத்தின் மீதான ஏமாற்றங்களும் நிகழ்காலத்தின் மீதான நிச்சயமின்மைகளும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுகிறது. இது புதிதன்று. ஆனால் மனித மனம் நம்பிக்கையென்னும் பிடியை இறுகப் பற்றியபடி நூலில் நடக்கும் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விடுகிறது. இதன் பலன்கள் நாமறிந்ததே. இதையே கடந்து போகும் இவ்வாண்டும் சொல்லிச் செல்கிறது. கடந்து போகும் இவ்வாண்டு, வாலறுந்த பட்டம் போல் அனைத்துத் திசைகளிலும் அலைக்கழிந்து அலைக்கழித்து தனது முடிவை எட்டுகிறது. கன…
-
- 0 replies
- 903 views
-
-
கேட்பதற்குத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் -இலட்சுமணன் தமிழர் அரசியல் வரலாற்றில், உரிமைப் போராட்டம் அஹிம்சையில் தொடங்கி, ஆயுதப் போராட்டமாகப் பரிணமிப்பதற்கு அடிப்படைக் காரணங்களில் முதன்மையாக, தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்றவை காணப்பட்டன. இவை இளைஞர்களிடையே பலத்த விவாதங்களுக்கு உட்பட்டிருந்தன. இவற்றில், சம உரிமை, அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்துதல் என்பவையும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்த வகையில், பல்கலைக்கழகத் தரப்படுத்தல் என்பது, அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை, மட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், மறுபுறத்தில், பின்தங்கிய பிரதேச மாணவர்களு…
-
- 0 replies
- 833 views
-
-
கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லுகின்ற மரபு ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பல்வேறு பின்னடைவுகளும் பலவீனங்களும் பூசி மெழுக முடியாதளவில் தென்படுகின்றன. இதற்கு மாற்றுக் கட்சிகளும் அவைகளால் முன்வைக்கப்படும் சரியான விமர்சனங்களும் இல்லாமையும் காரணமாகும். அத்துடன் இது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கின்றது. 2009இற்குப் பின்னரான காலத்தில் ஒற்றுமைக்காகவும் போராளிகளினால் கைகாட்டப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றது. அதனால் எதை செய்தாலும் மக்கள் இப்படியே வாக்களிப்பார்கள் என்ற அக் கட்சியின் பொறுப்பின்…
-
- 0 replies
- 519 views
-
-
1949 முழுமையாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்துக்கு வருகிறார் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க. அரச மரம் ஒன்றை நாட்டி வைத்த பின்பு திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் பேசுகிறார் அவர், “இந்த மரம் வளர்ந்து பெருவிருட்சம் ஆகும்போது நீங்கள் (சிங்களவர்) மட்டும்தான் இந்தப் பகுதியில் இருக்க வேண்டும்”, என்கிறார். தமிழர் தாயகத்துக்குள் அத்துமீறி நுழைந்த முதல் குடியேற்றத்திட்டம் இதுதான். சிறுபான்மை இனத்தவராக கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்களவர்கள்தான் இன்று பெரும்பான்மையினர். பெரும்பான்மையினராக இருந்த தமிழினம் வீழ்ச்சியை சந்தித்து மூன்றாவது சிறபான்மை இனமாக மாறிவிட்டது. சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் கைகளில் ஆட்சிப் பீடம் சென்றதுமே சிறுபான்…
-
- 2 replies
- 932 views
-
-
மனோவின் முடிவு என்ன? கொழும்பில் களமிறங்குமா கூட்டமைப்பு? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 டிசெம்பர் 25 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் மாத்திரம் போட்டியிடாமல், கொழும்புத் தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை, ஒன்றும் புதிதானது இல்லை. கடந்த பொதுத் தேர்தலிலும், அதற்கு முன்னருங்கூட எழுந்த கோரிக்கைதான். ஆனால், இம்முறை கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஆரம்பக் கட்டப் பேச்சுகளை நடத்துமளவுக்குச் சென்றிருக்கின்றன. இதனை, மனோ கணேசன் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில், வடக்கு - கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் …
-
- 1 reply
- 757 views
-
-
சுனாமி: கைநழுவிச் சென்ற அரிய சந்தர்ப்பம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 டிசெம்பர் 25 மொத்தமாக 14 நாடுகளைச் சேர்ந்த 225,000க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பலி கொண்ட சுனாமி அனர்த்தத்துக்கு, நாளையுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு, டிசெம்பர் 26ஆம் திகதி, இடம்பெற்ற இந்த அனர்த்தம், உலக வரலாற்றிலேயே மிகவும் மோசமான கடல் கொந்தளிப்பாகக் கருதப்படுகிறது. இந்த 14 நாடுகளில் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் 130,000 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 30,000 பேர் காணாமற்போயுள்ளதாகவும் 500,000 பேர் வீடுகளை இழந்ததாகவும் கணக்கிடப்பட்டது. இலங்கையில் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 5,000…
-
- 4 replies
- 968 views
-
-
- கார்வண்ணன் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வீசா உதவி அதிகாரியாகப் பணியாற்றும் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண், கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, இலங்கை அரசாங்கம் கையாளுகின்ற விதம் கடுமையான சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்று ஒரு வாரத்தில் அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு சுவிஸ் தூதுவர், கொண்டு சென்றிருந்தார். நியூயோர்க் ரைம்ஸ் மூலம், ஊடகங்களிலும் அந்தச் செய்தி பரவத் தொடங்கியது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச…
-
- 0 replies
- 629 views
-
-
அமைச்சு ஊடாக வெல்லப்பட உள்ள அகங்கள்? காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 24 தமிழர்களின் மனங்களை வெல்ல, விசேட அமைச்சு விரைவில் உருவாக்கப்படல் அவசியம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இதற்காகத் தனியான அமைச்சொன்றை உருவாக்க வேண்டும்; தமிழ் பேசும் அரசியல்வாதிகளை அன்றி, மக்களை இணைத்துக் கொண்டு, இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; அந்தப் பொறுப்பை என்னிடம் வழங்கினால், அதை நான் சிறப்பாக வழி நடத்தி, வடக்கையும் தெற்கையும் இணைப்பேன்” என்றும் அவர் தெரிவித்து உள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் உணர்வு என்ன, தமிழ் மக்களின் அபிமானத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது? போன்ற விடயங்…
-
- 0 replies
- 817 views
-
-
நாணயக் கயிற்றின் தேவை -க. அகரன் அதிகாரத்தரப்புடன் தேசிய இனமாகத் தன்னைப் பிரகடனப்படுத்தும் சிறுபான்மையினமொன்று, உரிமைகளைப் போராடிப் பெற வேண்டுமாக இருந்தால், அங்கு அடக்குமுறையொன்று பிரயோகிக்கப்படுவதாகவே கொள்ள வேண்டும். அந்தவகையில், தெற்காசிய நாடுகளில் மாத்திரமின்றி, பல்வேறு நாடுகளிலும், அடக்குமுறைக்கான கட்டமைப்புகள் காணப்படுகின்றமை, ஓங்கி ஒலிக்கும் சிறுபான்மையினரின் உரிமைக்கான குரல்களின் மூலம், அறிந்துகொள்ள முடிகின்றது. எனினும், இவ்வாறான உரிமைக் குரல்களுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் அதனுடைய ஆதரவுத்தளமும் அதிகளவாகக் காணப்பட்ட தருணங்கள் பதிவில் உள்ளன. இதன் காரணமாகவே, கொசோவா உட்பட, பல்வேறு நாடுகள், சுதந்திர தேசங்களாகத் தம்மை நிலைப்படுத்திக் கொண்டன. …
-
- 0 replies
- 883 views
-
-
தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்? - யதீந்திரா கடந்த 17ஆம் திகதி, இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு, அந்தக் கட்சியினரால் நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சிக்கு ஒரு நீண்ட வரலாற்றுண்டு. 1949இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி 1970கள் வரையில் தீர்மானகரமான ஒரு கட்சியாக இருந்தது உண்மைதான். இந்தக் காலத்தில் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்கவல்ல பிரதான கட்சியாக தமிழரசு கட்சியே இருந்தது. ஆனால் 70களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை தனித்து எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. இதன் காரணமாகவே கட்சியை நிறுவிய, செல்வநாகமே தமிழரசு கட்சிக்கு பதிலாக புதிய கட்சி ஒன்றை நோக்கிச் செல்ல முற…
-
- 1 reply
- 724 views
-
-
இருண்ட யுகம் திரும்புகிறதா? கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 22 ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னர், அரசியல் பழிவாங்கல்கள் நிகழ்வது, இலங்கை போன்ற அரைகுறை ஜனநாயக நாடுகளில் வழக்கமான ஒன்றுதான். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போவதாக, வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தற்போதைய அரசாங்கமும் கூட, அரசியல் பழிவாங்கல், இராணுவ மயமாக்கல் கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை. இதனையே, அதன் ஒரு மாதகால ஆட்சி உறுதிப்படுத்தி இருக்கிறது. 2010இல் மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய அரசியல் பழிவாங்கல் சம்பவமாக, ஜனாதிபதி தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா, சிறையில் அடைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அப்போது, அவருக்கு…
-
- 0 replies
- 913 views
-
-
சிறப்புக் கட்டுரை: அமித் ஷா குழுவின் ஆர்கெஸ்ட்ரா பொய்! மின்னம்பலம் எஸ்.வி.ராஜதுரை பல இசைக்கருவிகளை இசைத்து ஒரே இசையை இசைப்பதை நாம் ‘ஆர்கெஸ்ட்ரா இசை’ என்கிறோம். ஓர் இசைப்படைப்பை உருவாக்கியவரை இசையமைப்பாளர் என்றும், அந்த இசைப்படைப்புக்கு உகந்த இசைக்கருவிகளைக் கூடுதலாகவோ குறைவாகவோ பயன்படுத்தி அதை நிகழ்த்துபவரை ‘நடத்துநர்’ (Conductor) என்றும் அழைக்கிறோம். இந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற அபஸ்வரங்கள் நிறைந்த இசையின் மூலகர்த்தா வி.டி.சாவர்க்கர் என்றால், அதில் சில சுரபேதங்களைச் சேர்த்து புதிய ராகம் போல ஒலிக்கச் செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் அவர்களது பரிவாரத்தினர்தான் பல்வேறு இசைக்கரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள் – நிலாந்தன் December 21, 2019 ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடமாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் ஆகிய எனது நண்பர் கைபேசியில் என்னை அழைத்தார். யாழ். புகையிரத நிலையத்தில் ஒரு சுவிட்சலாந்து பெண் ஓவியம் வரைகிறார் வருகிறீர்களா போய் பாப்போம் என்று கேட்டார்.இருவரும் புகையிரத நிலையத்திற்கு போனோம். அங்கே இரண்டாவது மேடையை நோக்கிச் செல்லும் நிலக்கீழ் வழியில் அந்த வெளிநாட்டுப் பெண் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியங்களில் பென்குயின்கள் இருந்தன. கடலைப் போல அலையைப் போல வடிவங்கள் இருந்தன. ஆனால் யாழ்ப்பாணம் இருக்கவில்லை. நாங்களிருவரும் அவரோடு கதைத…
-
- 3 replies
- 1.5k views
-
-
"வீச்சு" : The Reach !!! அதிகாரப்பகிர்வை நிராகரித்த கோட்டாபய ராஜபக்சவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70 ஆம் ஆண்டும். கருத்தாளர்கள் : பொன் பாலராஜன் நிக்ஸன் அமிர்தநாயகம் நெறியாளர் : உதயன் S. பிள்ளை
-
- 0 replies
- 399 views
-
-
இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச காலத்தில் எதைக் கூறினாரோ–தேர்தல் பிரச்சாரங்களின் போதுஎதைக் கூறினாரோ–அதையே இப்போது ஜனாதிபதியாகிய பின்னரும் கூறிவருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்திருந்த கோட்டபாய, அதிகாரப்பகிர்விற்கான எந்தவொரு தேவையும் இல்லை என்று தெரிவித்திருக்கின்றார். அதிகாரப்பகிர்வு என்று கூறி, 70 வருடங்களாக அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியிருக்கின்றனர். பெரும்பாண்மை மக்களின் (சிங்களமக்களின்) ஆதரவின்றி அவ்வாறான ஒரு விடயத்தை செய்யமுடியாது. எனவே அதனை தன்னால் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருக்கின்றார். கோட்டபாயவை பொறுத்தவரையில…
-
- 0 replies
- 1.1k views
-