Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வார்த்தை ஜாலங்களால் ஒரு அரசியல் விளையாட்டு! இன்னும் எத்தினை காலத்துக்கு இந்த சித்து விளையாட்டை அனுமதிப்பார் தமிழர்? [Tuesday, 2014-03-18 20:04:34] மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி அடுத்த மாதம் 12ம் திகதி (12.03.2014 அன்று) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த 12.02.2014 அன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார். ஏன்? எதற்கு? மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி விவகாரம், உள்நாட்டு யுத்தத்தினால் உயிர…

  2. மைத்திரி - மகிந்த இணைவு சாத்தியமா? சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர். அதாவது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்பது முதலாவது நிபந்தனையாகும். அத்துடன் சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் மஹிந்த தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தலைமையில் மிகவும் பரபரப்பாக அந்தக் கூட்டம் கொழும்பில் நடந்து கொண்டிருந்தது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்வரும் உ…

  3. நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிர…

  4. நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் சங்க காலத்து இலக்கியங்களில் ஒளவையார் அருளிய பாடல்கள், படைப்புகள் தமிழ் கூறும் நல் உலகத்துக்கு ஆழம் பொதிந்த பல கருத்துகளை நிறைவாக அள்ளி வழங்கியுள்ளன. ஒளவையார் இயற்றிய உலக நீதியில் வருகின்ற, ‘நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்ற பாடலின் நான்காவது அடியாக அமைந்ததே ‘நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்’ என்பது ஆகும். தற்போதைய ஆட்சியாளர்கள், இந்நாட்களில் நடத்தி வருகின்ற நல்லிணக்க வகுப்பை, மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஒளவையார் தமிழ் மக்களுக்குத் தெளிவாக நடாத்தி முடித்து விட்டார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ‘தீயினால் சுட்ட புண்’ (நீண…

  5. புலம்பெயர் இலங்கையர்களா, புலம்பெயர் தமிழர்களா? ரணில் ஜனாதிபதியான பின்னர் ஏற்படும் மாற்றங்கள் — ஈழத்தமிழர்கள் என்று நேரடியாகவே விழித்துத் தமிழில் கூறி வரும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எவரும் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது Eelam Tamils என்று சொல்வதில்லை– -அ.நிக்ஸன்- புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் புலம்பெயர் பிரதிநிதிகளைச் சந்தித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனாலும் தமிழ் அமை…

  6. மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா? ‘‘ஐ. தே. கட்­சி­யின் புன­ர­மைப்பு ஏப்­ரல் 30ஆம் திக­திக்­குப் பிற்­போ­டப்­பட்­டுள் ளது’’ எனத் தெரி­விக்­கின்­றன அச்சு ஊட­கங்­கள். ‘‘சுதந்­தி­ரக் கட்சி, இந்­தக் கூட்டு அர­சில் இருந்து வெளி­யே­றி­விட வேண்­டும். அது குறித்த இறுதி முடிவு மேற்­கொள்ள கட்­சி­யின் மத்­திய செயற்­குழு மீண்­டும் கூட­வுள்­ளது.’’ என்­பது ஒரு சில பத்­தி­ரி­கை­க­ளது தலைப்­புச் செய்தி. இவற்­றை­விட, ‘ சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிப்­பர்.’ என்ற தலைப்­புச் செய்­தி­யும் சில பத்­தி­ரி­கை­க­ளில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்தது. …

  7. அச்­ச­மூட்­டும் அமெரிக்கா– சீனா வர்த்­த­கப் போர்!! அமெ­ரிக்கா – சீனா இடை­யில் வர­லாற்­றில் என்­று­மில்­லாத அள­வுக்­குத் தீவி­ரம் பெற்­றுள்­ளது வர்த்­த­கப் போர். அடுத்து என்ன நடக்­குமோ என்­கிற வகை­யில் பதற்­றத்­தில் உறைந்­துள்­ளன உலக நாடு­கள். ஐக்­கிய நாடு­கள் சபை­கூட இதற்கு விதி­வி­லக்­கில்லை. நேர­டித் தாக்­கு­தல்­கள் கடந்த சில மாதங்­க­ளா­கக் காப்பு வரி­யைப் பரஸ்­ப­ரத் தாக்­கு­த­லுக்­கான ஆயு­த­மாக வைத்து எச்­ச­ரித்­துக்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்­கா­வும் சீனா­வும், தற்­போது வர்த்­த­கப் போரில் நேர­டி­யாக இறங்­கி­யி­ருக்­கின்­றன. இரு ந…

  8. வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள் நிலாந்தன் மகிந்த ராஜபக்ச இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க மறுத்து படைத்தரப்பின் உதவியைப் பெறக் கூடும் என்றவாறான ஊகங்கள் ஏற்கெனவே மேற்கத்தேய தூதரகங்கள் மத்தியில் காணப்பட்டன. சக்திமிக்க நாடொன்றின் தூதுவர் இது தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரோடு உரையாடியிருக்கிறார். ஆனாலும் கத்தியின்றி இரத்தமின்றி ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அது மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான பிடியை அவர் அமைதி…

  9. கிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்? -அதிரன் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில், ஒரு பெண்ணுடன், பல பெண்களுடன் பழகுவோம். அந்தப்பெண்களைத்தான் வாழ்நாள் துணையாக தொடருவோம் என்றில்லை. இதேபோலத்தான், இன்றைய கால அரசியல் கட்சிகளின் இணைவும் தேர்தல் கூட்டுகளும் ஆட்சிக் கூட்டுகளுமா என்ற கேள்விக்குப் பதில் தேடத்தான் வேண்டும். வாக்குறுதிகளை நம்பி, போராட்டங்களை நடத்துவதும் கைவிடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் வருவதற்கு முன்னர், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டதா என்ற கேள்வி எல்லோருடைய மனங்களிலும் வரத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தான் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித்…

  10. சமஸ்டிக்காகப் போராடுவது யார்? நிலாந்தன். August 13, 2023 தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்டிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்தியிருக்கிறது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கட்சிகள் தமது தரப்பு யோசனைகளைத் தருமாறு ஜனாதிபதி அண்மையில் கேட்டிருந்தார். அதற்கமைய முன்னணியானது 13ஆவது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேசமயம் கடந்த நான்காம் தேதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த விக்னேஸ்வரன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றினதும் இறுதி இலக்கு கூட்டாட்சிதான் என்ற போதில…

  11. நேட்டோ படையினரை குறிவைத்து தாக்கிய ரஸ்யா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு | ILC

    • 0 replies
    • 715 views
  12. அமெரிக்காவின் விரல் நுனியில் இலங்கை: கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் திருப்பங்களுக்கு வழி வகுக்குமா…………..? “……………………………………..தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் தான் அவர்களை அமெரிக்க அரசு வரைக்கும் கொண்டு சென்று பேசும் அங்கீகார உரிமையை வழங்கியுள்ளது. தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக இருந்து எத்தனையோ பேச்சுக்களை நடத்திய புலிகளுக்குக் கூட சர்வதேசம் இப்படியொரு வாய்ப்பை கொடுக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதால் தான், கூட்டமைப்பின் வலிமை சர்வதேச சமூகத்தினால் உணரப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு சர்வதேச அரங்கில் தெளிவான நிலைப்பாட்டை வலுயுறுத்…

  13. ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்! மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் சீடர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே. .. இத்தகையவர்களில் ஒருவர் கவுதம் புத்தர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள் அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடுத்தினர்.புத்தரின் போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாக புத்தரைக் குறிப்பிட்டனர். இதெபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக …

  14. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் - யதீந்திரா Apr 26, 20190 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, கூட்டமைப்பிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுகிறது. டக்களஸ் தேவானந்தா 1990இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நிறுவினார். 1994இல் முதல் முதலாக ஒரு சுயோற்சைக் குழுவாக போட்டியிட்டு, ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டக்களஸ் தனது பாராளுமன்ற அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதுதான் டக்களசின் நிலைப்பாடு. இன்றுவரை டக்களசின் நிலைப்பாட்டி…

  15. இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை Editorial / 2019 மே 30 வியாழக்கிழமை, மு.ப. 09:57 Comments - 0 எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப் புறப்பட்டிருக்கும் இன்னொரு குழுதான் இலங்கை சிவசேனை. இலங்கையில் மக்களை மதரீதியாகப் பிரித்து, தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேலையையே இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆபத்துகளை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுவித்ததைப் பாராட்டி, அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை ச…

  16. 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க தயாராக இருப்பதாக மகிந்த கூறியதின் பின்னணி என்ன? - ஆய்வாளர்கள் விளக்கம் ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவும் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததாக தெரிய வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்த…

  17. முதலில் இன்றைய தமிழ் மக்களின் அரசியல் நிலையில் அவர்கள் தாம் எந்த தமிழ் தலைமையை ஏற்றுக்கொள்வது என்ற குழப்பநிலையிலேயே உள்ளனர். தமக்கு முற்றுமுழுதான நிம்மதியான வாழ்வையும், தாம் இதுவரை பட்ட துன்பங்களுக்கு ஈடான அரசியல் சுதந்திர அபிலாசைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் பெற்றுக்கொடுக்கும் என்று அவர்கள் நம்பவில்லை. இது அவர்கள் கடந்த 30 வருடமாக நம்பி ஏமாந்து தாம் நம்பிய தலைமைகள் தமக்கு விட்டுச் சென்ற சுமைகளின் வெளிப்பாடாகவே கருத இடமுண்டு. இதை மறுதலிக்கவும் முடியாது. சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் சிறிலங்கா என்ற நாட்டிலே வாழும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமது அரசியல் தலைமையாக முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கும் நன்கு தெரிய…

  18. பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்? Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வகைப்பட்ட பிரிவினையையும் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படைவாதிகளும் ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற பொதுத்தளத்தில் ஒன்றுசேர்கிறார்கள். அவர்கள், தமிழ் மக்களையும…

  19. காலம் உண்மையைக் காட்டும் கண்ணாடி அரசியல் பின்னணி எதுவுமின்றி, 1972 ஆம் ஆண்டின் அரசமைப் பின்கீழ் பிரதமர் பதவிக்கும், 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின்கீழ் ஜனாதிபதிப் பதவிக்கும் நாட்டு மக்களது வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் ஆர்.பிரேமதாச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரே. பிரேமதாசவின் தந்தையார் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லாத, மத்திய கொழும்புப் பகுதியின் சாதாரணமானதொரு மனிதர். மைத்திரிபால சிறிசேனவின் தந்தையார் ஒரு விவசாயி. மைத்திரிபாலவின் இரத்த உருத்துள்ள உறவினர்கள் எவரும்கூட அரசியலில் ஈடுபட்டதில்லை. டட்லி சேனநாயக்கவுக்கு விசுவாசமாக உழைத்ததன் மூலமே பிரேமதாசவால் தமது சொந்த இடமான வாழைத்தோட்டத்திலிருந்து அந்தவேளையில் கொள்ளுப் பிட்டியிலிருந்த …

  20. ‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதுரம் மொஹமட் பாதுஷா / 2019 ஜூலை 29 திங்கட்கிழமை, மு.ப. 11:54 Comments - 0 வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது. பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நி…

  21. மிகவும் மோசமான ஊழல் நிறுவனம்.....! வீ.தனபாலசிங்கம் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் (1965 -- 70 ) கம்பஹா தொகுதி எம்.பி.யாக இருந்த எஸ்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றுகையில் ' இந்த பாராளுமன்றம் ஒரு கள்வர் குகை ' ( A den of thieves) என்று கூறியதற்காக சபைக்குள் இருந்து கதிரையோடு தூக்கிவெளியே போடப்பட்டதுடன் ஒரு வார காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்கமுடியாதவாறு அன்றைய சபாநாயகரால் தடைசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும், சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளில் பண்டாரநாயக்க தன்னை ஈடுபடுத்தியிருந்த க…

  22. தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019 தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவதுஎன்றால் என்ன? தமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படை…

  23. தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினருக்கு பங்கில்லையா? மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 22 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியைப் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போல, துக்கம் கொண்டாடுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இத்தருணத்தில், சிறுபான்மைச் சமூகங்கள், தம்மீது தாமே கழிவிரக்கம் கொண்டவர்களாக, காலத்தை வீணே கழிக்காமல், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. உலகில் பிரபலமானதும் பலமொழிகளிலும் கூறப்படும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற முதுமொழிக்குப் பின்னால், நூற்றாண்டுகள் பழை…

  24. திசைவழிகளை திசைகாட்டல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 02 இன்னோர் ஆண்டு, எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கிறது. கடந்தாண்டு போலவே, இவ்வாண்டும் ஏராளமான பெரும் மாற்றங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தருவதற்காய் இவ்வாண்டு காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புதிய ஆண்டு புதிதாய்ப் பிறந்தாலும், கடந்த காலத்தின் தொடர்ச்சியும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பும் இந்த நிகழ்காலத்தில் நிரம்பி இருக்கிறது. கடந்த காலத்தின் சுமைகளையும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளையும் தன்னகத்தே உள்வாங்கிச் சிரித்து, விருட்சமாய் வளர்வதற்காகப் புதிய காலங்களையும் புதிய கோலங்களையும் உருவாக்கிச் செல்ல 2020 காத்திருக்கிறது. …

  25. உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன். நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்தார்கள். சன நெரிசலில் சிக்கி ஓர் இருதய நோயாளி இறக்க நேரிட்டது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளுக்காக நின்ற மிக நீண்ட வரிசைகளுக்குப் பின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் வந்தார்கள். எதிர்பாராத இந்த ஜனத்தொகையினால் கண்டி மாநகரம் குப்பை மேடாகியது. நகரத்துக்குள் புதிதாக நுழையும் ஜாத்திரிகர்களை வரவேண்டாம் என்று கூறித் தடுத்து நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கண்டி மாநகரின் புவியியல் கொள்ளளவை மீறி யாத்திரிகர்கள் குவிந்தார்கள். அவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.