அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இலங்கையை பொறுத்தமட்டில் 2012ஆம் ஆண்டு பொருளாதார நிலை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தது. 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக அமைந்திருக்கும் என பல தரப்பினரின் மூலம் எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், வருட நிறைவில் 6.8 வீத வளர்ச்சியே எய்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நாட்டில் நிலவிய வெவ்வேறான சூழ்நிலைகள், காலநிலை மாற்றம், அரசியல் சூழல், பங்குச்சந்தை நிலைவரம், நாணய மாற்றுக் கொள்கை போன்றவற்றுடன், சர்வதேச நாடுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அமையதியற்ற சூழ்நிலை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்களிப்பு செலுத்தும் துறைகளாக …
-
- 1 reply
- 759 views
-
-
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமும் தமிழ் மக்களும் முத்துக்குமார் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை இலங்கை ஜனாதிபதி நவம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்பான பெரிய ஒதுக்கீடுகள் ஏதும் இருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் சிறப்பு ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசாங்கம் இதுபற்றி அக்கறை எதையும் செலுத்தவில்லை. வழக்கம் போலவே பாதுகாப்பு அமைச்சிற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கினை பொறுத்தவரை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை உருவாக்கவேண்டிய தேவை இருந்தது. குறிப்பாக வீடுகளை கட்டுதல், தொழில்களை உருவாக்குதல், பாடசாலைகள் போன்ற பொது நிறுவ…
-
- 1 reply
- 589 views
-
-
தமிழீழ விடுதலையையும், தமிழகத்தின் வாழ்வுரிமையையும் மக்கள் மன்றத்தில் முன்னெடுப்போம்! தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிக முக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது. தேர்தல் காலங்களில், மக்களிடம் எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், எழுப்பபடாமல் இருக்கும் கேள்விகளை முன்வைப்பதும் அத்தகைய கடமைகளில் ஒன்றாகிறது. 2009க்குப் பின்பான தமிழகத்தின் அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியே எழுந்து வருகிறது. தம…
-
- 0 replies
- 635 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான மாவட்ட ரீதியான தரவுகளுடனும் எதிர்வுகூறலுடனும் இந்தத் தலைப்பினூடாக உங்களைச் சந்திக்க விழைகிறேன். அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டம் தொடர்பிலான எனது கணிப்புடன் விரைவில் சந்திக்கிறேன்.
-
- 7 replies
- 800 views
-
-
2015ம் ஆண்டுத் தேர்தல் தொடர்பிலான போட்டிக்காக பின்வரும் கேள்விகளைத் தயாரித்துள்ளேன். பலரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தென்னிலங்கை தொடர்பில் அதிகமான கேள்விகளை இணைத்துக் கொள்வதைத் தவிர்த்துள்ளேன். ஒவ்வொரு கேள்விக்குமான புள்ளிகளை கேள்வியைத் தொடர்ந்து பதிந்துள்ளேன். கேள்விகள் தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் ஒதுக்கியுள்ளேன். தவறுகள் ஏதுமிருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அத்துடன் புதிய கேள்விகளள் தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். உங்களது ஆலோசனைகளின் படி கேள்விகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என்பதால் இப்போதைக்கு பதில்களை இணைத்துக் கொள்ள வேண்டாம். 30ம் திகதி முதல் பதில்களை இணைத்துக் கொள்வோம். கருத்துக்களை எதிர்ப…
-
- 38 replies
- 3.1k views
-
-
மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டிற்கு முதிசமாகக் கிடைத்துள்ளன. ஆனாலும் ஓர் ஒளிக் கீற்றாக குறைவடைந்த எரிபொருள் விலை தோன்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தப் போகின்றது. 2015-ம் ஆண்டு பல நாடுகள் குடிவரவிற்கு எதிரான கடுமை…
-
- 0 replies
- 1.2k views
-
-
2015 சிறிலங்காவின் வரலாற்றுத் திருப்பம்மிக்க ஆண்டு – அனைத்துலக ஊடகம் Dec 22, 2015 அரசியல் உறுதிப்பாடு மற்றும் நல்லாட்சி போன்றன கடைப்பிடிக்கப்பட்டால், கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பின் நலன்களைப் பெறத்தக்க நல்லதொரு இடத்தை சிறிலங்கா தக்கவைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு east asia forum ஊடகத்தில், David Brewster* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மாற்றங்களை நோக்கும் போது , 2015ஆம் ஆண்டானது ஒரு வரலாற்று திருப்புமுனை ஆண்டாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ச…
-
- 0 replies
- 623 views
-
-
2015 பொதுத் தேர்தல்களின் பின்னர் உருவாகும் அரசு எதிர்நோக்கும் சவால்கள் by Lionel Guruge - on July 8, 2015 படம் | BUDDHIKA WEERASINGHE Photo, Getty Images மீண்டும் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்களுக்கான திகதி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போட்டி போடுகின்றனர். அரசியல் அதிகாரத்திற்காக தேர்தல் இயக்கத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பதே அவர்களுக்கிடையிலான போட்டியாகும். யார் எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தாலும் புதிய அரசும் ஜனாதிபதியும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் கீழ் செயற்பட வேண்டும். தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு எவ்வாறு புத…
-
- 0 replies
- 284 views
-
-
2015ஐ விட மிகப்பெரிய புரட்சி Gopikrishna Kanagalingam / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 12:57 இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை, “புரட்சி” என்று வர்ணிப்போர் மிக அதிகளவில் உள்ளோர். அவர்களின் எண்ணங்கள் தவறானவையல்ல. அந்த மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட முடியாமல் போயிருக்கலாம். ஆனாலும் கூட, அந்த மாற்றங்கள் எல்லாம், அரசியலோடு சம்பந்தப்பட்டவை என்பதால், மக்களின் மாற்றங்களாக அவை கருதப்பட முடியாத நிலை காணப்பட்டது. குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடத்தைகள், ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தயக்க…
-
- 1 reply
- 850 views
-
-
2016 - தீர்வா அல்லது சவாலா? - யதீந்திரா 2016 - சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஆண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சம்பந்தன் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கூறிவந்தார். அதாவது, 2016 இல் ஒரு நல்ல அரசியல் தீர்வு கிடைக்கும், ஆனால் அது என்ன மாதிரியான அரசியல் தீர்வு என்பது தொடர்பில் சம்பந்தன் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் இப்பத்தியாளரிடம் பேசும்போது சம்பந்தன் ஒரு விடயத்தை கூறியிருந்தார். அதாவது, நான் சில்லறைத் தீர்வு எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். ஆனால் தமிழ் மக்களின் சார்பில் வைக்கவேண்டிய வரைபை வைத்தால் அல்லவா அரசாங்கம் முன்வைக்கும் தீர்வாலோசனை பெறுமதியானதா அல்லது சில்லறையானதா என்பதை புரிந்துகொள்ள முடியும். இப்படி க…
-
- 0 replies
- 727 views
-
-
2016 இல் வரவில்லை 2017 இல் வருமா தீர்வு
-
- 1 reply
- 417 views
- 1 follower
-
-
2016 ன் சிறப்பு அம்சங்கள் (சாமி அப்பாத்துரை)
-
- 0 replies
- 384 views
-
-
2017 சமாதானத்துக்கான நொபேல் பரிசு: பரிசின் தவறும் தவறின் பரிசும் பரிசுகள் மீதான மதிப்பு தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளது. ஆனால், பரிசின் மீதான அவாவும் அது யாருக்கும் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இன்னமும் பரிசுகளைக் கவனிப்புக்குரியவையாக வைத்திருக்கின்றன. இன்னொரு வகையில், ஊடகங்கள் கட்டமைக்கிற பொதுவெளியில் பரிசுகளுக்கான அங்கிகாரத்தின் சமூகப் பெறுமானமும் பரிசுகளை வழங்கவும், பெறவும் வாய்ப்பளித்திருக்கிறது. பரிசுகளின் தன்மையும் அதைப் பெறுபவர்களின் செயல்களும் பரிசைத் தனக்கு அளித்து அவமதிப்பார்களோ என்ற அச்சத்தை சிலருக்கு உருவாக்கியும் இருக்கிறது. இதைப் பரிசின் தவறென்பதா? அல்லது தவறின் பரிசென்பதா? நா…
-
- 0 replies
- 466 views
-
-
2017 தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் என்ன?
-
- 0 replies
- 377 views
-
-
2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள் December 18, 2017 இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை வழங்கும் நிகழ்வாக மாறியதற்கு அபோதைய மகிந்த அரசு வழங்கிய அதிகார பூர்வ அங்கீகாரம் முக்கிய காரணம். மகிந்த அதிகாரத்தின் நிழலில் மேலதிக பலமடைந்த சிங்கள பௌத்த இனவாதாம் இலங்கை வரலாறு காணாத அளவு பலத்துடன் இயங்கி வருகிறத…
-
- 2 replies
- 897 views
-
-
2017: காத்திருக்கும் கதைகள் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எதிர்வுகூறல் எளிதல்ல; நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்.... உலக அரசியல் சட்டென்று ஓரிரவில் மாறாது. எனவே, கடந்த 201…
-
- 0 replies
- 413 views
-
-
2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்? யதீந்திரா வரலாற்றிலிருந்து நாம் எதனை கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதனையுமே அல்ல – என்று ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் இது எந்ததெந்த சமூகங்களுக்கெல்லாம் பொருந்துமென்று நாம் அறியாது விட்டாலும் கூட, நிச்சயமாக தமிழர்களுக்கு பொருந்துமென்று, அழுத்தம் திருத்தமாக குறிப்பிடலாம். அந்தளவிற்கு தமிழர்கள் எதனையுமே அவர்களின் கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளவதில்லை. நான் இங்கு தமிழர்கள் என்று குறிப்பிடுவது சாமானிய தமிழ் மக்களை அல்ல, மாறாக, அந்த சாமானிய மக்களுக்காக இயங்குவதாகவும் சிந்திப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் புத்திஜீவிகளையும்தான். 2015இல் பெருமெடுப்பில் ஆரம்பித்த ஜனநாயகத்திற்கான பயணம் அதன…
-
- 0 replies
- 661 views
-
-
2018 : தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி? ஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும் அமைச்சரவை மாற்றங்களின் போதும், தலைமைத்துவ மாற்றங்களின் போதும், படைத்துறை வெற்றிகளின் போதும் நிலமைகள் மாறுவதுண்டு. எனினும் ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருக்கக் கூடிய திருப்பகரமான மாற்றங்களின் அடிப்படையில் ஓர் அரசியலாண்டைக் குறித்து மதிப்பீடு செய்யலாம். இப்பொழுது புத்தாண்டை மதிப்பீடு செய்வதென்று சொன்னால் அதை கடந்த ஆண்டிலிருந்தே செய்யத் தொடங்க வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை எவை? இழந்தவை எவை? என்பவற்றைத் த…
-
- 0 replies
- 457 views
-
-
2018 இல் ஸ்ரீலங்கா சு. கட்சி எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் அரசியல் பாதையில் முக்கியமான திருப்பு முனையில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவில்லாப் பிரச்சினை இலங்கையின் ஜனநாயகத்திலும் தாக்கத்தை செலுத்துகிறது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தவறுகள் மற்றும் தோல்விகளுக்கு மத்தியில் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிறுவியதுடன் நாட்டில் அரசியல் கட்சி முறையையும் வலுப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆயுட்கால பிரச்சினையை எதிர்கொள்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அண்மைய நம்பிக்கையில்லா தீர்மான முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதன் உள்ளார்ந்த பிரச…
-
- 0 replies
- 450 views
-
-
2018 நொபெல் பரிசுகள்: காலம் கடந்த வாழ்வு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 04 வியாழக்கிழமை, பரிசுகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஆனால், அது என்னென்றைக்குமானதல்ல. அது சாகித்திய விருது முதல் நொபெல் பரிசு வரை அனைத்துக்கும் பொருந்தும். நம்பகத்தன்மையைத் தக்கவைக்கும் விருதுகள், காலங்கடந்தும் நிலைக்கின்றன. நம்பகத்தன்மையை இழந்த விருதுகள், காலங்கடந்தும் வாழும் போதும், அதன் நிலை அவலமானது. நாடகத் தன்மையுடனும் சடங்காசாரங்களுடனும் அது தன்னைத் தக்க வைக்க முனைகிறது. காலங்கடந்த வாழ்வு, மனிதர்களுக்கு மட்டுமல்ல, பரிசுகளுக்கும் துன்பமானது. இக்கட்டுரையை, நீங்கள் வாசிக்கும்போது, சமாதானத்துக்கான பரிசும் இலக்கியத்துக்கான பரிசும் தவிர்த்து, ஏனைய துறைசார் நொபெல் பர…
-
- 0 replies
- 423 views
-
-
2019 இந்திய தேர்தலில் காவியா ?- தமிழா? இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது. தென் இந்திய தேர்தல் அரசியலில் குறிப்பாக தமிழ் நாட்டு கட்சிகளும் தமது கூட்டுகளை அமைத்து வருகின்றன. கடந்த காலங்களைப் போல் அல்லாது இம்முறை ஒரு புறத்தில் மதவாத, சாதீயவாத கட்சிகளும் மறு புறத்தில் சமய சார்பற்ற, திராவிடவாத கட்சிகளும் தமது கூட்டுகளை அணி திரட்டும் அதேவேளை, மேலும் அதிகமாக தமிழ் தேசிய வாதம் என்னும் ஒரு அலகு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கி இருப்பதால் மும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்… January 5, 2020 கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தரப்புக்களை வகைப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பிரதான தரப்புக்கள் உண்டு. முதலாவது கூட்டமைப்பு. இரண்டாவது கூட்டமைப்புக்கு எதிரான அணி மூன்றாவது சிவில் சமூகங்கள் இவைதவிர தென்னிலங்கை மையக் கட்சிகளோடு இணங்கிச் செயற்படும் கட்சிகளும் உண்டு. முதலில் கூட்டமைப்பு கடந்த ஆண்டு பெற்றவை எவை பெறாதவை எவையெவை என்று பார்ப்போம். கடந்த ஆண்டு கூட்டமைப்பைப் பொறுத்தவரை கம்பெரலிய ஆண்டுதான். தனது யாப்புருவாக்க முயற்சிகள் பிசகி விட்ட காரணத்தால…
-
- 0 replies
- 442 views
-
-
2019 இல் மற்றுமொரு ஜெனிவா பிரேரணை வருமா? எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது 40 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக என்ன நடக்கப்போகின்றது என்பதே தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வியாக கருதப்படுகின்றது. அதாவது 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 2015ஆம் ஆண்டு பிரேரணையைத் தவிர ஏனைய அனைத்துப் பிரேரணைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு பிரேரணைக்…
-
- 0 replies
- 515 views
-
-
2019 குண்டு வெடிப்புக்களை கோட்டா திட்டமிட்டு இருக்கலாமா? எம்.எஸ்.எம். ஐயூப் பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து கடந்த வாரம் வெளியிட்ட விவரணத் திரைப்படம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆண்டு ஜனவரி மாதம் தாம் பிள்ளையானின் ஆலோசனையின் படி அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேக்கும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில பல இடங்களில் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்து 269 பேரை படுகொலை செய்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ச…
-
- 2 replies
- 463 views
-
-
2019 நாடாளுமன்றத் தேர்தல்: மோடி கணக்கும் சோனியா கணக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நான்காவது நிதி நிலை அறிக்கை என்றாலும்- இதுதான் இந்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் முழு நிதிநிலை அறிக்கை. 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருப்பதால், அடுத்த வருடம் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த நிதிநிலை அறிக்கை தேர்தலைச் சந்திப்பதற்கான களத்தைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை, அவர் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றே கூற வேண்டும். ‘சூட் பூட் சர்க்கார்’ என்று பிரதம…
-
- 0 replies
- 412 views
-