அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் Editorial / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:58 -இலட்சுமணன் தமிழர் அரசியல் வரலாற்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்தபின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தியவர்கள்; அவர்கள் பாதையில் தமிழர்களை நெறிப்படுத்தியவர்கள் என்ற விசுவாசம், தமிழ் மக்களின் இதயங்களில் உணர்வுபூர்வமாகக் கொலுவீற்றிருக்கின்றது எனலாம். இந்தப் பின்புலத்தில், தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, அதன் அடையாளமாக அவர்கள் சந்தித்த தியாகங்கள், இழப்புகள் அதன்வழி அடிநாதமாக மேற்கிளம்புகின்ற அரசியல் பிம்ப உலாவுகைகள், தேசிய, சர்வதேச மட்டங்களில் பேசுபொருளாக அடையாளப்படுத்…
-
- 0 replies
- 606 views
-
-
தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்? நிலாந்தன் August 18, 2019 சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்……… ‘சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி! சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர்.ஒரு சின்னக் கணக்கு. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்-15,992,096. வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்-12,793,676. வெற்றிபெறத் தேவையானது-6,396,839. தனிச்சிங்கள் வாக்காளர்கள்-11,302,393. அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்-9,041,914. இந்த வாக்குகளில் 70.74 வீதம்-6,396,839. ஆக சிங்கள மக்க…
-
- 0 replies
- 606 views
-
-
"எதற்காக பாலஸ்தீனத்திற்காக அழுகிறீர்கள்?""தமிழர்கள் அழ வேண்டியது முள்ளிவாய்காலுக்காக மட்டுமே!" தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சிலர் சமூக வலைத் தளங்களில் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம். வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள், ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கினார்…
-
- 0 replies
- 606 views
-
-
தேர்தல்களுக்கும், தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து:ரகுமான் ஜான் பெப்ருவரி மாதம் 20 ம் திகதி கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் “மே 18 இயக்கம்” ஒழுங்கு செய்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது. அன்பார்ந்த தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இலங்கையில் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும். தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின் தலைப்புமாகும். ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் நாம் நிறைய விடயங்களை…
-
- 1 reply
- 606 views
-
-
மீட்பருக்காகக் காத்திருப்பது - நிலாந்தன் “சிறிய,சிந்தனைத்திறன் மிக்க,அர்ப்பணிப்பு மிக்க பிரஜைகள் உலகை மாற்றமுடியும் என்பதைஎப்பொழுதுமே சந்தேகிக்கக்கூடாது. மெய்யாகவே, அது ஒன்றுதான் உலகில் எப்பொழுதும் நடந்திருக்கிறது” – மார்கரட் மீட் கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில், ”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள் அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் அவர் ஆயுத மோதல்களுக்க…
-
- 3 replies
- 606 views
-
-
[size=4]இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய தமது நிலைப்பாட்டை அல்லது தீர்வுத்திட்டத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் தட்டிக்கழித்து வந்த அரசாங்கத்தின், உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்று இப்போது ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. மாகாணசபைகளை ஒழிப்பது தான் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் என்பதை இப்போது விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அண்மையில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் - மாகாணசபைகளை ஒழிக்க வேண்டும் என்று “பற்ற வைத்த” நெருப்பு இப்போது நன்றாகவே கொளுந்து விட்டெரியத் தொடங்கி விட்டது. அரசாங்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியும், ஜாதிக ஹெல உறுமயவும் கோட்டாபய ராஜபக்ஷ்வின் கருத்தை அடுத்து, மாகாணசபைகளை ஒழித்தேயாக வேண்டும் என்று …
-
- 0 replies
- 606 views
-
-
மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ - ப. தெய்வீகன் புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண…
-
- 0 replies
- 606 views
-
-
திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்… September 30, 2018 1 Min Read கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது. உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். ‘…
-
- 0 replies
- 606 views
-
-
சஜித் வெற்றிக் கோட்டைத் தொடுவாரா? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:24 சஜித் பிரேமதாஸவின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது; தமிழ் மக்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்கிறார்களா?” என்ற கேள்வியை, மேற்கு நாடொன்றின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரியொருவர், சில வாரங்களுக்கு முன்னர், இந்தப் பத்தியாளரிடம் கேட்டார். அரசியல் உரையாடல்களில், அதுவும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், இந்தக் கேள்வி இயல்பானது. ஆனால், கேள்விக்கான பதிலை, ஓரளவுக்கு ஆழமாக நோக்கினால், இம்முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கப்போகும் தரப்புகளையும் காரணிகளையும் இனங்காண முடியும். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், ஒருபோதும் இல்லாத வகையில், தொடர்ச்…
-
- 0 replies
- 606 views
-
-
சிறிலங்காவில் முஸ்லிம்களும் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும் [ ஞாயிற்றுக்கிழமை, 15 செப்ரெம்பர் 2013, 12:40 GMT ] [ நித்தியபாரதி ] "இது சிங்கள-பௌத்த நாடு. நாங்கள் பௌத்த கோட்பாடுகள், கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வு முறைமை போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும்" என சிங்கள ராவயவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு The Diplomat Magazine என்னும் இணைய ஊடகத்தில் Sudha Ramachandran* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவைச் சேர்ந்த சிங்கள-பௌத்த தேசியவாதிகள், சிறுபான்மையினருக்கு எதிரான தமது யுத்தத்தின் புதிய வடிவம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிறிலங்காத் தீவின் சிறுபான்மை மக்…
-
- 1 reply
- 606 views
-
-
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மேற்குறித்த பாடலில் தனது துணையைப் பிரிந்து தேம்பி அழும் தமிழ்ப் பெண்ணின் கண்ணீர் இன்னமும் வற்றிப்போகவில்லை. காலம்தான் உருண்டு கொண்டே செல்கிறது. கண்ணீரும், பிரிவுகளும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ அதே வலியோடு இப்போதும் தொடர்கின்றன. தமிழர் வாழ்வோடு வலிமையும், வலியும் கூடப்பிறந்தவை. அதிலும் போரின் வாழ்வுக்குள் புதையுண்டு போகும் நேரத்தில் மேலெழும் பிரிவின் வலிக்கு இன்னமும் விழவில்லை முற்றுப்புள்ளி. துணையைப் பிரிந்த வலியின் ஆற்றாமையால் அழுது புரண்டு, அலைந்து திரிதல் என்பது எந்தவித விமோசனங்களுமற்ற சாபமாகிவிட்டது தமிழ்ப் பெண்களுக்கு. சாவித்திரியின் கற்புக்கனல் காலனை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. அவள் த…
-
- 0 replies
- 606 views
-
-
தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான். 61 Views கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நிழல் யுத்தம் ஒன்றை தமிழினம் எதிர்கொண்டுள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர்கள் எந்த விடயங்களை பாதுகாத்தார்களோ, அந்த விடயங்களை அவர்களிடம் இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மிகவும் திட்ட…
-
- 0 replies
- 606 views
-
-
சிறிய நாட்டின் பெரிய பிரச்சினைக்கு வயது நூறு கடந்த 08, 09, 10ஆம் திகதி என மூன்று நாட்கள் நடைபெற்ற ‘வடக்கின் பெரும் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் தோன்றியது. ஒரே சனத்திரள்; ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கலகலப்பாக மைதானமும் சுற்றுப்புறமும் காட்சி அளித்தன. ஒரு மர நிழலில் அமர்ந்தவாறு, ஆட்டத்தை ஆர்வத்துடன் ரசித்தேன். அருகில் ஒரு முதியவர், கையில் புதினப் பத்திரிகையை வைத்திருந்து, அதைப் படிப்பதும் ஆட்டத்தைப் பார்ப்பதுமாகக் காணப்பட்டார். “ஐயா, துடுப்பெடுத்தாடும் பையன் …
-
- 0 replies
- 606 views
-
-
எல்லாவற்றிலும் வல்லவர்களின் அரசியல் என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 15 பெரும் இழுபறிகள், தேர்தல் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நீடித்த விசாரணை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பவற்றுக்குப் பிறகு, தேர்தல் ஆணைக்குழு 2020 நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி, புதன்கிழமை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.இந்தத் தேர்தலில், அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் 313 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 பேரும் என, மொத்தமாக 7,452 பேர், 196 ஆசனங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள். ஏறத்தாழ ஒரு நாடாளுமன்ற ஆசனத்துக்கு 38 பேர் போட்டியிடுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் தேசிய அரசிய…
-
- 1 reply
- 606 views
-
-
-
- 0 replies
- 606 views
-
-
சிங்கள மக்களின் விருப்பத்தைப் பிரதிபலித்த கோட்டாபயவின் கொள்கை விளக்கவுரை சிங்கள மக்களும் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் பௌத்த குருமாரும் விரும்புவதையே கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்கவுரையில் எடுத்துரைத்திருக்கிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கோ சம்பந்தன் ஆத்திரமடைவதற்கோ எதுவுமேயில்லை. -அநிக்ஸன்- 2009 இல் இறுதிப் போரை நடத்திய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இனப்பிரச்சனையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சனையாகச் சித்தரித்திருக்கும் நிலையில், தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதம் (ஆவணம்) ஒன்றைக் கையளித்துள்ளத…
-
- 1 reply
- 605 views
- 1 follower
-
-
ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு காரை துர்க்கா / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:36 Comments - 0 அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட…
-
- 0 replies
- 605 views
-
-
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வாழாவிருத்தல் மொஹமட் பாதுஷா ஒற்றுமை பற்றி, முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாகப் பேசி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திலும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில், ‘ஒற்றுமை ஒற்றுமை’ என்று பேசிப்பேசியே, பல அடிப்படைகளில் பிரிக்கப்பட்ட இனக் குழுமங்களுள் ஒன்றாகவே, இலங்கை முஸ்லிம்கள் இன்றிருக்கின்றனர் என்பதை, திரும்பவும் சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், இப்போது புவியியல் அடிப்படையிலும் பல பிரிவுகளாக, முஸ்லிம்கள் பிரித்தாளப்படுவதைக் காணமுடிகின்றது. முக்கியமான தருணங்களில், ஒற்றுமையின் பலத்தை, முஸ்லிம்களால் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. மார்க்க அடிப…
-
- 0 replies
- 605 views
-
-
மலையக அரண் சாய்ந்துவிட்டது க.ஆ.கோகிலவாணி மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார். அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர். அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்…
-
- 0 replies
- 605 views
-
-
கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நாட்டில் சில பிக்குகள் ? நிலாந்தன்! ” இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில நீதிபதிகளும் செயல்படுகிறார்கள். குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத் தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.” இது கடந்த ஜூலை 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஆனால் அவர் அவ்வாறு உரையாற்றிய அதே காலப்பகுதியில்தான் பௌத்தப்பிக்குகள் பெண்களோடு காணப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.…
-
- 0 replies
- 605 views
-
-
தோல்விகளை மறைப்பதற்காக கதவடைப்பு போராட்டமா? புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவருக்காக நீதி கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தினை 20ஆம் திகதி நடத்தத் தீர்மானித்திருக்கின்றன. நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தினை நடத்தின. ஆனால், அந்தப் போராட்டத்தில் சில நூற்றுக்கணக்கானவர்களே கலந்து கொண்ட பின்னணியில், அது தோல்விகரமான போராட்டம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மக்களை போராட்டக்களத்தினை நோக்கி அழைத்து வருவதற்கான திராணியை தமிழ்க் கட்சிகள் இழந்துவிட்டன …
-
- 0 replies
- 605 views
-
-
நம்பிக்கை பிறந்தால் வழி பிறக்கும் காரை துர்க்கா / 2019 நவம்பர் 05 , மு.ப. 02:37 கடந்த வாரம், யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக, நடுத்தர வயதுடைய ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்வி நிலையத்துக்கு மகளைக் சைக்கிளில் கூட்டி வந்து, வகுப்பு முடியும் வரை கா(த்து)வல் இருந்து, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார். மகளின் கல்வி முக்கியம்; ஆனாலும், தனது நேரம் காத்திருத்தலில் வீணடிக்கப்படுவதாகச் சற்று நொந்து கொண்டார். “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், யாருக்கு வாக்கு அளிப்பதாக உத்தேசம்” எனக் கேட்டேன். “நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை; வேலைக்குப் போறதோட ஐந்து நாள்களும் போய் விடுகின்றன. சனி, ஞாயிற்று…
-
- 0 replies
- 605 views
-
-
வடக்கு மாகாணத்தில் காணிகளை மக்களுக்கு மீளவழங்குவதற்கான பொறுப்பு யாரிடம்? [ செவ்வாய்க்கிழமை, 08 ஒக்ரோபர் 2013, 07:23 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணத்தின் பொது நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. இங்குள்ள பெரும்பாலான நிலங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு The Sunday Leader ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் என்.சத்தியமூர்த்தி* குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. வடக்கு மாகாண சபையை நிர்வகிப்பதற்கு முதன் முதலாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரத்தைத் தருமாறு கோரமுடியாத நிலையில் தனது ஆட்சியை அமைக்க வேண்டியுள்ளது. மாக…
-
- 0 replies
- 605 views
-
-
கவனிக்க வேண்டிய கணக்கெடுப்புகள் காரை துர்க்கா / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:01 Comments - 0 தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழு ஆகிய இரண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இப்பணியை மேற்கொள்ள உள்ளன. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கையில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் எனவும் இவ்விரு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. “ஆகக் குறைந்தது, இறந்தவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன…
-
- 0 replies
- 605 views
-
-
‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’ Dec 04, 2014 | 14:14 by நித்தியபாரதி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவ்வாறு ‘சண்டே லீடர்’ ஆங்கில ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேற…
-
- 2 replies
- 605 views
-