அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தமிழர்கள் தமது கதைகளை தூர நோக்கோடு கூறவேண்டும் Prof- John Galtung தமிழில்… வி . சிவலிங்கம் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மூன்று தடவைகள் ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகள் இத் தீர்மானத்தைப் பலமாக ஆதரிக்கின்றன. இறுதி தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது. ரஷ்யா, சீனா போன்றன எதிராக வாக்களித்துள்ளன. இப் பிரச்சனையில் பாரிய நாடுகளின் கவனம் திரும்பவதற்குக் காரணம் என்ன? உலகில் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் உள்ள நிலையில் சுமார் 200 அரசுகள் மட்டுமே உள்ளன. அவ்வாறானால் அரசுகள் இல்லாத தேசியங்கள் மிகப் பெரும் தொகையாக உள்ள நிலையில் இரண்டு பெரும் தேசியங்கள் உள்ள இலங்கையில் எவ்வகையான தீர்வை நோக்கிச் செல்வது? இவ்வாறான…
-
- 4 replies
- 599 views
-
-
தமிழ் தேசியவாதம் மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாரா? - யதீந்திரா அரசியல் என்பது இயங்குநிலையாகும். அந்த இயங்குநிலை வெற்றியையும் தரலாம். தோல்வியையும் தரலாம். தோல்விகள் ஏற்படுகின்ற போது, அது அனுபவமாகின்றது. இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவுமே வெற்றியில் முடியவில்லை. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியின் காலம் தோல்வி. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம் தோல்வி, ஜந்து இயக்கங்களின் காலம் தோல்வி. விடுதலைப் புலிகளின் காலம் தோல்வி. இது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலம். இதுவரையில் சம்பந்தனால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் த…
-
- 0 replies
- 776 views
-
-
சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள் February 14, 2023 — கருணாகரன் — தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் உடைந்து பல துண்டுகளாகச் சிதறிக் கிடப்பதையிட்டு போராளி ஒருவர் கவலையோடு சில விடயங்களைப் பேசினார். கூடவே சில கேள்விகளையும் எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் இதுதான். 1. தற்போது மேலும் பல துண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்துள்ளது. அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் பல அணிகள் போட்டியிடுகின்றன. இது தமிழரின் அரசியலை பலவீனப்படுத்தும் நடவடிக்கையல்லவா? 2. இப்படிப் பிரிந்தும் உடைந்தும் பல அணிகளாக நிற்பது தவறானது. இந்த நிலையானது ஒடுக்குகின்ற சிங்கள மேலாதிக…
-
- 0 replies
- 664 views
-
-
ஹிட்லர்- II Sri Lankan Defence Ministry Secretary Gotabaya Rajapaksa (C) rides in a jeep with three forces commanders during a Victory Day parade rehearsal in Colombo on May 17, 2013. சில தென்னிந்தியச் சினிமாப் படங்கள்தான் சிங்கம் I, சிங்கம் II என்ற விதத்தில் தொடர்ச்சியாக வௌிவந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அஸ்கிரிய பீட அனுநாயக்கர் வெந்தறுவ உபாலி தேரர், ஹிட்லர் II என்றதொரு பாத்திரத்தை இலங்கை அரசியலில் உருவாக்க முயல்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. கோத்தபா…
-
- 1 reply
- 1.1k views
-
-
அதிருப்திக்கான காரணம் இன்றைய நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளை உருவாக்கவேண்டும். என்பது எமது முக்கிய நோக்கம். வடக்கு கிழக்கில் தற்போது நிலவும் நிலைமைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்கவேண்டும்.என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்தானது தென்னிலங்கை அரசியல் வாதிகளை கொதிதெழ வைத்திருப்பதுடன் இலங்கை பாராளுமன்றை கதிகலங்கவைத்துள்ளது. எதிரணியினரின் அகோர கோஷங்கள் ஒரு புறம் ஐக்கியதேசியக்கட்சியினர் பாராளுமன்றில் கொதித்தெழுந்துள்ளமை மறுபுறம். ஆளும் கட்சியினர் பாராளுமன்றை புரட்டிப்போடுமளவுக்கு கூச்சிலிட்டமை.இன்ன…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள் வர அனுமதித்திருக்கிறார்கள். அவர் வியாபார விசாவில் வந்தபடியால் அதை மத நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனால் குறிப்பிட்ட போதகர் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அந்த மத நிகழ்ச்சியில் பங்குபற்றாமல் நாடு திரும்பிவிட்டார். இத்தனைக்கும் அவர் நேரடியாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை.கொழும்புக்கு வந்து அங்கே நான்கு நாட்கள் தங்கியிருந்த பின்னர்தான் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.தமிழ்நாட்டி…
-
- 0 replies
- 704 views
-
-
விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்… யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியான வாக்கை பெற்றவர். அவரை அவமதிப்பது என்பது அவரைத்…
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷம் இலங்கையில் எரிசக்தி செல்வாக்குக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இது புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாகும். இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் அதன் எரிசக்தி வளங்கள் இந்த அதிகாரப் போராட்டத்துக்குள் சிக்கிவிடும் நிலை உள்ளது... இலங்கையின் எரிசக்தி துறையில் சீன…
-
- 0 replies
- 350 views
-
-
பாரிய அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம் யாழ் குடாவினதும், வடக்கினதும் மக்கள் தமது நலன்களைப் பேணத் தாமாகத் தெருக்களிலும், எங்கும் இறங்கிக் போராடவேண்டிய காலம் வந்துவிட்டது போலிகளையும், ஏமாற்றுக் கும்பல்களையும் தூக்கி எறியவேண்டிய காலம் வந்துவிட்டது. உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து கொண்டு அரசியல் பேசுகின்ற, எழுதுகின்ற பெருந்தகைகளே! இன்று வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகங்களும், முகநூல், twiter போன்றவற்றில் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும், ஏனையவைகள் பற்றியும் எத்தனை ”ஆய்வு”களையும், அறிவுறுத்தல்களையும் நீங்கள் செய்கிறீர்கள்? அபிவிருத்தி பற்றிப் பேசுகிறீர்கள், தமிழரின் உரிமைகள் பற்றிப் பேசுகிறீர்கள், நீங்கள் சிந்தித்து மக்களின் நலன்கள் கருதித் திட்டங்களை வகுத்துச் செய…
-
- 5 replies
- 3.4k views
-
-
நீதிபதிக்கே கிடைக்காத நீதி? - நிலாந்தன் கடந்த வாரம் திலீபன். இந்த வாரம் ஒரு நீதிபதி. முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை ஒரு கூட்டு உளவியலின் வெளிப்பாடுகள். கடந்த பல தசாப்தங்களாக சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் எனப்படுவது வெறுப்பு பேச்சுக்களைக் கக்கும் ஓரிடமாகத்தான் காணப்படுகிறது. இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணத்துவக் கூற்று ஒன்று உண்டு. ” யூத இனப்படுகொலை எனப்படுவது காஸ் சேம்பர்களில் இருந்து-நச்சு வாயுக் கொலைக்கூடங்களில் இருந்து தொடங்கவில்லை. வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் தொடங்கிய…
-
- 1 reply
- 626 views
-
-
மொழியோடு புரிந்த போர்! January 10, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றத…
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 04:35 AM நடாஷா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய இருப்பு வெறுமையாக உள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு இருப்புக்களும் அவ்வாறே உள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்கள் இதுபற்றி தட்டிக் கேட்டன. அ) நிதி உறுதியற்ற தன்மை அல்லது ஆ) பணம் செலுத்துவதில் உள்ள இயல்புநிலை இ) மேற்குறித்த இரண்டு விடயங்களாலும் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தனிப்பட்ட கலந்துரையாடல்களில், அரசாங்கங்களின் அட…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
நல்லவரா, கெட்டவரா? - முகாபே ஒரு சகாப்தம் 'நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரம். அவரிடம் சிறுவயது மகள் கேட்பாள்' அப்பா, நீங்க நல்லவரா, கெட்டவரா?' அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் 'தெரியலையே அம்மா!' சிம்பாப்வேயின் நீண்ட நாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயும் அதே மாதிரி தான். மக்களின் நேசத்தையும், வெறுப்பையும் சம்பாதித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலைவரா, மோசமானவரா என்று சிம்பாப்வே மக்களைக் கேட்டால், தெரியலையே என்று தான் பதில் கூறுவார்கள். காலணித்துவ ஆட்சியின் அடிமைத் தளைகளில் இருந்து தமது தேசத்திற்கு விடுதலை தேடித்தந்த தைரியமானதொரு தலைவன். அந்தத் தலைவன், தனது 95 வயதில் இறு…
-
- 0 replies
- 739 views
-
-
முஸ்லிம் சமூகத்தின் அடுத்த நகர்வு? மொஹமட் பாதுஷா / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:48 - 0 - 42 அதன்பின்னர், புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உடனடியாக நாட்டின் எல்லா விதமான ஆளுகைக் கட்டமைப்பிலும் ‘மொட்டு’வின் ஆட்சியை உருவாக்குவதே, நீண்டகாலம் ஆட்சியில் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி, துணிந்து தேர்தல்களை நடத்த, புதிய அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது. அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ர…
-
- 0 replies
- 1k views
-
-
07 APR, 2025 | 04:14 PM டி.பி.எஸ். ஜெயராஜ் பாகம் 1 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார இறுதி இலங்கை விஜயம் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததாக பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது ஏப்ரில் 4 வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரில் 6 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அவரின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாக இரு நாடுகளினதும் தேசிய பாதுகாப்புக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை அங்கீகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ' விருது ஆகியவை அமைந்தன. இணக்கபூர்வமான ஒரு சூழ்நிலையில் முரண்பாட்டுக்குரியதாக அமைந்தது வடபகுதி…
-
- 1 reply
- 522 views
- 1 follower
-
-
யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 19 தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது. அவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும். விட…
-
- 0 replies
- 904 views
-
-
அறிக்கை: அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் | காலச்சுவடு | தேசிய ஐக்கியம், சமாதான சகவாழ்வு, மதச் சகிப்புத்தன்மை, சமூக ஒருமைப்பாடு என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் குழுவான கண்டி மன்ற (Kandy Forum) உறுப்பினர்களான நாங்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பை வரவேற்கின்றோம். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், இன நல்லுறவு, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கும், இலங்கையை ஒன்றிணைந்த ஒரு பன்மைத்துவ சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் மோதல்களும் யுத்தமும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இதன்மூலம் நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். யாப்புச் சீர்திருத்தத்தின் குறிக…
-
- 0 replies
- 338 views
-
-
இரண்டு வருடம் கடந்த போராட்டம் லக்ஸ்மன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை, மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். சிறிது சிறிதாக அத்துமீறிய செயற்பாடுகள் தணிக்கப்பட்டன. இருந்தாலும், இப்போதும் ஒருசிலர் அப்பிரதேசத்தில் தங்களது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். அதற்கெதிரான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியானது, இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படுத்தப்படாதிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்பது கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாடு. இருந்தாலும் …
-
- 0 replies
- 172 views
-
-
போர்நிறுத்த ஒப்பந்தம் 2025 sudumanal image: Aljazeera காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போத…
-
- 0 replies
- 156 views
-
-
உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும் முருகானந்தம் தவம் பொருளாதார நெருக்கடிகள், எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களினால் அனுரகுமார அரசு ‘ஆயுசு நூறு நித்தம் கண்டம்’ என்ற வகையில் ஆட்சியை நகர்த்துகின்ற நிலையில், இயற்கையும் தன் பங்கிற்கு ‘டிட்வா’ புயலாக இலங்கையர்களை மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் புரட்டிப்போட்டு மரண அடி கொடுத்துள்ளது. ‘டிட்வா’ புயலும் அதன் விளைவான பெரு மழையும் இலங்கையில் ஆடிய கோரத் தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளிலிருந்து நாடும் மக்கள் மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசும் தற்போதைக்கு மீண்டெழக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. இலங்கையில் பதிவான வானிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்த…
-
- 0 replies
- 104 views
-
-
இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! sudumanal வெனிசுவேலாவை சூழும் போர் மேகம் Thanks for image: deutschlandfunk. de இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்…
-
- 0 replies
- 209 views
-
-
முன்னாள் போராளிகளை மலினப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பு ஆதரவுப் ”புலிகள்” தாயகன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் மாவீரர்,போராளிகள் குடும்பங்களையும் கடும் விசனமடைய வைத்துள்ளதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சார்பான கட்சிகள் மீது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தால் கூட அது வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,அதன்…
-
- 0 replies
- 472 views
-
-
‘அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது’ ஏ.எச்.ஏ. ஹுஸைன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றுமுள்ள பல கட்சிகளும் பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டவில்லை. இது பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும் என்று, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் இலக்கம் 6இல் களமிறங்கியுள்ள கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார். தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழ…
-
- 0 replies
- 649 views
-
-
“இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும், அவ்வாறு மாற்றினால் தான், இலங்கையின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று, கடந்த திங்கட்கிழமை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். எட்டாவது இந்திய - இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த திங்கட்கிழமை, புதுடெல்லிக்குப் புறப்பட்ட சமயத்தில் தான், இந்தப் பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. மிக முக்கியமான தருணமொன்றில் தான், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்தக் கருத்து வெளியானது. பிரதமநீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னணி, அதுபற்றி இந…
-
- 0 replies
- 750 views
-
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது. 53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க…
-
- 0 replies
- 585 views
-