அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர் பி.ஏ.காதர் – 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாடு செய்ய…
-
- 0 replies
- 1.7k views
-
-
அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில் காணும்போது இதயம் சுக்குநூறாக வெடிப்பது போலவே இருக்கிறது. கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்தப் புகைப்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிக நீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால்… இப்படி நிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்தப் புகைப்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மன உறுதியை உடைத்தெறிந்து தூளாக்கிவிடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 948 views
-
-
அது இப்பொழுதுதான் நடந்தது போல இருக்கின்றது. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனையின் பொழுது திரு.பரராஜசிங்கம் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டபொழுது மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் நானும் இருந்தேன். திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களிடம் பலிப்பீடத்தில் தேவநற்கருனையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய பொழுதுதான் அவர் மீதான துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு வீழ்ந்தார். ஒன்பது துப்பாக்கி வேட்டுக்கள் அவர் மீது பாய்ந்திருந்தன. அவரது துணைவியாரான திருமதி சுகுணம் ஜோசப் அவர்கள் மீது நான்கு துப்பாக்கி வேட்டுக்கள் பாய்ந்திருந்தன. இரத்த வெள்ளத்தில் க…
-
- 0 replies
- 830 views
-
-
வடக்கின் முதலமைச்சர்; முடிவில்லாப் பிரச்சினை வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்ற நிலையில், வடக்கின் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதலாவது வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளுக்கும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறது. தேர்தல் முறை தொடர்பாக கட்சிகளுக்கிடையில் இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், தேர்தலை எப்படி – எப்போது நடத்துவது என்று இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இதனால் இழுபறி நிலை நீடிக்கும் சூ…
-
- 0 replies
- 501 views
-
-
கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே. சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மய்யவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது. அரசியலில், கூட்டுகளும் கூட்டணிகளும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, இலாபம் உ…
-
- 0 replies
- 475 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுகள் இலண்டன் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் வீரதீரம் நிறைந்த நிருபர் மேரிகொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டது தெரிந்ததே. அதேசமயம் அங்கு காயமுற்ற அப்பத்திரிகையின் படப்பிடிப்பாளர் போல் கொன்றோய் [ Paul Conroy ] தப்பி வந்துள்ளார். இலண்டன் மருத்துவமனையிலிருந்து அவர் வழங்கியநேர்காணலின் சிலபகுதிகள் கீழே தரப்படுகின்றன. அவை முள்ளிவாய்க்கால் நினைவை நமக்குக் கொண்டுவருவது இயல்பானதே. "அங்கு இராணுவஇலக்கு எதுவும் கிடையாது. அவை முற்றுமுழுதாகத் திட்டமிட்ட பொதுமக்கள் படுகொலையாகும். எறிகணைகள் அங்கு செலுத்தப்படுவதன் ஒரேயொருநோக்கம் அங்குள்ள மக்களையும் கட்டிடங்களையும் அழித்து ஒழிப்பதே." "கொம்ஸ் [Homs] பகுதி பேரழிவுக்குட்பட்டுள்ளது. குண்டுவீச்ச…
-
- 0 replies
- 662 views
-
-
சர்வதேச பழங்குடிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு உயிர் வாழ்வதற்காக போராடும் அவலம்! சர்வதேச பழங்குடிகள் தினம் இன்று (ஓகஸ்ட் 9) உலகில் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 9ஆம் திகதியன்று இத்தினம் அனுஷ்டிக்கப்படுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1994ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இது, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த வருடத்திலிருந்து தொன்மைமிகு பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்தினர் பழங்குடியினர். ஆனால், மொத்த ஏழைகளில் இவர்கள் 15சதவீதம் அளவில் உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இந்த மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். இவ…
-
- 0 replies
- 945 views
-
-
சலீல் திருப்பதி ஜூலை நடுப்பகுதியில் ஒரு நாள் பெல்பாஃஸ்டில் இருந்து டப்ளினுக்கு பஸ்ஸில் பயணம் செய்தேன். பெல்பாஃஸ்ட் வட அயர்லாந்தில் இருக்கிறது ; மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தினால் பளவுபடுத்தப்பட்ட தீவின் ஒரு பகுதியான அயர்லாந்து குடியரசில் டப்ளின் இருக்கிறது.ஆனால், சோதனை நிலையம் எதுவும் இருக்கவில்லை ; வீதி அறிவிப்புகளில் மைல்கள் கிலோமீட்டர்களாக மாறியபோது, விளம்பர பதாகைகளில் விலைகள் பவுண்களில் இருந்து யூரோவாக மாறியபோது, எழுத்துக்களில் அசையழுத்தக்குறியைக் கண்டபோது எல்லையைக் கடந்துவிட்டேன் என்பதை புயிந்துகொண்டேன். இன்னொரு நாட்டில் நான் இருப்பதை எனது கையடக்க தொலைபேசி காட்டியது. பயணம் எந்த தடையும் இடையூறும் இல்லாததாக இருந்தது. 1998 பெரிய வெள்ளி உடன்படிக…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்திருக்கும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்த கருத்து, உலகளாவிய விவாதப் பொருளாகியிருக்கிறது. சீன ஆதரவு ராஜபட்ச சகோதரர்கள், சீனாவுக்குப் பிடிக்காத செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதிபர் கோத்தபய இந்திய ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்த இந்தக் கருத்து, சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்துக்கு எழுந்துள்ள மற்றோர் இடையூறாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றதும் கோத்தபய அளித்த பேட்டியில், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இலங்கை ஒரு…
-
- 0 replies
- 1k views
-
-
நீண்ட இழுபறிக்கு மத்தியில் வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையா? தாண்டிக்குளமா? இழுபறி நிலைக்கு சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடமாகாண பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களின் தனித்தனியான கருத்துகளின் படி ஓமந்தையில் அமைய வேண்டும் என 21 பேரும் தாண்டிக்குளத்துக்கு 05 பேரும், 13 பேர் வாக்களிப்பில் பயத்தில் ஒதுங்கிக்கொண்டதும் ஒருவர் நடுநிலை வகித்ததோடு சம்பந்தனின் கூற்றுப்படி ஜனநாயக ரீதியான தீர்ப்பே இறுதி முடிவாகும் என்பதற்கு அமைவாக ஓமந்தை தீர்மானிக்கப்பட்டது. வடமாகாணசபையின் அமர்வு நேற்று 12.07.2016 நடைபெற்ற போது இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தாண்டிக்குளத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் சீறிப்பாய்…
-
- 0 replies
- 422 views
-
-
அமெரிக்காவை மிரட்டும் சீனா ட்ராகன்.! அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது. வர்த்தகப் போரில் தொடங்கிய பிரச்சனை, இப்போது வார்த்தைப் போர் வரை வந்து இருக்கிறது. எப்போது பார்த்தாலும், சர்வதேச அரங்கில். இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அமெரிக்கா எகிறும் போதெல்லாம், ஓரளவுக்காவது மெளனம் காக்கும் சீனா, இந்த முறை "திருப்பி அடிப்பேன் பாத்துக்க" என்கிற ரேஞ்சில் தெனாவெட்டாக பேசி இருக்கிறது. அப்படி என்ன பிரச்சனை..? உய்கர் (Uighur) இஸ்லாமியர்கள் சிங் ஜியாங் (Xinjiang) என்கிற பகுதியில் தான் இந்த உய்கர் இஸ்மாலிமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 1949-ம் ஆண்டு சீனா தன்னை சுதந்திர நா…
-
- 0 replies
- 708 views
-
-
எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒரு செய்தியைச் சொல்வதற்கான வழிகள் பல. சில நேரடியானவை; சில மறைமுகமானவை; இன்னும் சில செயல்களாலானவை. மொத்தத்தில் அனைத்தும் ஏதோவொரு வழியில் செய்தியைச் சொல்லவே விளைகின்றன. ஒடுக்கப்படுவோரை விட ஒடுக்குவோரின் குரல் நீண்ட தூரங்களை எட்டுவதுண்டு. அவர்களின் வலிமையும் அதற்குத் துணைபோவோரும் இக்குரல்களை உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். ஒடுக்கப்படுவோரின் நிலை மோசமானது. அவர்களுக்கான குரல் மெல்லியது. ஆனால் வலிமையற்றோரின் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தங்கள் குரல்களை உரத்து ஒலிப்பதற்கு மிகப் பொருத்தமான தருணங்களைத் தெரிவு செய்கிறார்கள். அவை மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக மாறிவிடும். அவ…
-
- 0 replies
- 611 views
-
-
பல்வேறு தளங்களிலும் பல்வேறு முனைப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் நிலவி வரும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையில் நீதித்துறை, ஊடகத்துறை என்பவற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்பாகவும், பிரதான கவனம் செலுத்தப்படும் எனக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, அக்கூட்டத்தொடரிலும் அடுத்த காலப்பகுதியிலும் இலங்கை பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றக் கூடும். ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்று…
-
- 0 replies
- 588 views
-
-
இலங்கையின் சாபக்கேடு இனவாதமா? இலங்கையில் இனவாதம் என்பது தொடர்கதையாகி உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னராயினும் சரி அல்லது சுதந்திரத்திற்கு பின்னராயினும் சரி நாட்டில் இனவாதம் என்பது தாராளமாகவே தலைவிரித்தாடுகின்றது. இனவாத முன்னெடுப்புகளால் இலங்கை மாதாவின் தேகத்தில் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மாறவில்லை. எனினும் இனவாதமும் இன்னும் ஓயவில்லை. இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்கு வாழும் அனைவரும் இலங்கை மாதாவின் புதல்வர்களாவர். எனவே இலங்கையர் என்ற பொது வரையறைக்குள் இவர்கள் நோக்கப்படுதல் வேண்டும். இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களும் வலுப்ப…
-
- 0 replies
- 387 views
-
-
மூன்றாவது தொற்றலையை அரசாங்கம் முறியடிக்குமா? நிலாந்தன்! டெல்டா திரிபு வைரஸ் அண்மை நாட்களாக நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்களை பலியெடுக்கத் தொடங்கிவிட்டது.இது இப்படியே போனால் வரும் ஒக்டோபர் மாத தொடக்கமளவில் நாளொன்றுக்கு 220 பேர்களாவது இறக்கும் ஒரு நிலைமை வரலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சுயாதீன நிபுணர் குழுவின் அவதானிப்பில் தெரிவிக்கப்பட்டிருருக்கிறது. நாளொன்றுக்கு 100க்கும் குறைவானவர்களை கொல்லக் கொடுப்பது என்பது இச்சிறிய தீவுக்கு ஒரு புதிய அனுபவம் அல்ல. 2009ஆம் ஆண்டு ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100 – 150 உயிர்களை கொல்லக்கொடுத்த ஒரு நாடு இது.யுத்த வெற்றிக்காக எத்தனை உயிர்களையும் கொல்லக் கொடுக்கலாம் என்ற ஒரு கெட்…
-
- 0 replies
- 441 views
-
-
காணி விடுவிப்பு; பொருத்து வீடு; காடழிப்பு முல்லைத்தீவு, கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் 613 ஏக்கர் காணிகளையும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதியிருக்கின்றார். இந்தக் காணிகளை நான்கு கட்டங்களாக விடுவிப்பதற்கான இணக்கம் ஜனாதிபதி, இராணுவத் தளபதி(கள்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில் கடந்த மே மாதத்தில் காணப்பட்டிருந்தது. அதில், ஒரு சில பகுதிகளைக் கூட இதுவரை விடுவிக்காத நிலையில், மக்களின் போராட்டம் இன்று 143 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. …
-
- 0 replies
- 469 views
-
-
வடக்கு முதலமைச்சரை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னேஸ்வரனை ஆதரித்தவர்கள் ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கின்றனர். எதிர்பார்ப்புகளுடனேயே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மைத்திரி – ரணில் (சு.க – ஐ.தே.க) கூட்டு முன்னணிக்குக்கு ஆதரவளித்திருந்தனர். ஆனால் இந்த மக்களிடத்திலே பாதுகாப்பற்ற மனநிலையும் பதற்றங்களுமே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கே முடியாத நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது. பொதுவாகவே சிறுபான்மைத் தேசிய இனங்கள் குறித்த உயர்வான – சரியான எண்ணம் இந்த அரசாங்தத்தின் மனதிலும் உருவாகவில்லை. …
-
- 0 replies
- 546 views
-
-
சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’ எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த அறிவித்தலை வௌியிட்டார். 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எ…
-
- 0 replies
- 904 views
-
-
தென் சூடான்: தனிநாடு பரிசளித்த பட்டினி மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டங்களாக விருத்தி பெற்றுள்ளதைக் காணலாம். தேசிய இனங்கள் மீதான, பெருந் தேசிய இன அகங்கார ஒடுக்குமுறையை, ஆளும் வர்க்கப் பெரும் தேசியவாதிகள் கட்டவிழ்த்து வந்துள்ளார்கள். அதை எதிர்த்துப் போராடும் தரப்புகள், சுயாட்சிக் கோரிக்கைகளையும் அதற்கும் அப்பாலாகப் பிரிவினைக் கோரிக்கைகளையும் முன்வைத்து வந்துள்ளன. இத்தகைய, இன மதத் தேசிய முரண்பாடுகளையும் ஒடுக்குமுறைச் சூழலையும் தத்தமது நோக்கங்களுக்குத் தக்கதாக ஏகாதிபத்திய வல்லாதிக்கச் சக்திகள் பயன்படுத்தி வந்துள்ள…
-
- 0 replies
- 666 views
-
-
முஸ்லிம் மக்களின் நம்பிக்கை புதிய கலப்புத் தேர்தல் முறைமையினூடாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏறக்குறைய 40 வருடங்களின் பின்னர் கட்சிக்கு மாத்திரம் வாக்களிக்கும் முதல் சந்தர்ப்பம் வாக்களிக்கத் தகைமை பெற்றுள்ள 15.8 மில்லியன் வாக்காளர்களுக்கு இத்தேர்தலினூடாகக் கிடைக்கவுள்ளது. 25 நிர்வாக மாவட்டங்களிலுமுள்ள 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் அடங்கலாக மொத்தம் 341 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து இத்தேர்தல் மூலம் 8,293 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இத்தேர்தல் முறைமை இருமடங்கு உறுப்…
-
- 0 replies
- 419 views
-
-
ஊடக அறம் - ரஜினியும் எம்.ஜி.ஆரும்: ஓர் ஒப்பீடு ஊழிமுதல்வன் ரஜினிக்காகச் சலம்பும் அடிப்பொடிகள் வருவேன் வருவேன் என்று இருபத்தோரு ஆண்டுகளாகப் போக்குக்காட்டி வந்த ரஜினிகாந்த் என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டு கடைசியில் தமிழக அரசியலில் குதித்தே விட்டார்; "நேரடியாக இருநூத்தி முப்பத்துநாலு தொகுதிகளிலும் போட்டி போடுறோம்; ஜெயிக்கிறோம்; ஆட்சி அமைக்கிறோம்", என்று அறிவித்தும் விட்டார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாக் காணும் இக்காலகட்டத்தில், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும், கவிஞர்களும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரஜினி என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டை எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதருடன் ஒப்பிட்டு, இல்லை, இல்லை, எம்.ஜி.ஆரைவிட ரஜினி மிக உயர்ந்தவர் என்று தலைமேல…
-
- 0 replies
- 757 views
-
-
வலைத்தளங்கள் ஊடாக மெல்ல ஆரம்பித்து ஊரடங்கில் அடக்கப்பட்ட கலவரம் : கண்டி கலவரமும் பின்னணியும் இலங்கைத் திருநாட்டின் தனி அழகே அதன் பல்லின பரம்பலும் அது சார்ந்த கலாசார விழுமியங்களும் என்றால் யாரும் மறுக்க முடியாது. எனினும் தற்போதைய சூழலில் அந்த அழகுதான் ஆபத்தாக உருவாகியுள்ளது. ஆம், தற்போதைய சூழலில் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்களின் பால் அவதானம் செலுத்தும் போது இந்த பல்லின பரம்பல் நாட்டின் சாபக்கேடா என எண்ணத் தோன்றுமளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் இவ் வாரம் பதிவான வன்முறைகளே இவ்வாறான எண்ணத்துக்குக் காரணமாக அமைகின்றன. கடந்த வாரத்தின் இறுதி வரை அமைதியாக எந்த பதற…
-
- 0 replies
- 362 views
-
-
தமிழ் புத்திஜீவிகள் தளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஜெரா படம் | Channel4 தமிழ் பரப்பில் இயங்கும் புத்திஜீவிகள் தளம் எப்படியானது? அது தன் பெயரில் முன்னொட்டாகக் கொண்டிருக்கும் புத்தி அதாவது, அறிவுக்கும் அதன் ஜீவித நிலைத்திருப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கடந்த 30 வருடங்களாக இயங்கும் இந்தப் புத்திஜீவிகள் தளத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்தச் சந்தேகங்கள் எழுவது சாதாரணமான விடயம்தான். புத்திஜீவிகள் யார்? குறித்த ஒரு சமூகத்தின் ஒருவகைப் பிரதிநிதிகள். அதாவது, அரசியல் தலைவர்களுக்கும் அந்த சமூகத்துக்கும் இடையில் நிற்கும் இடையீட்டாளர்கள். அதற்குள் நின்று தொடர்ச்சியாகத் தொழிற்படுபவர்கள். ஒட்டுமொத்த சமூகத்தினதும் அறிவுப் பெட்டகமாகக் கொள்ளத்தக்கவர்கள். அவர்கள் நடம…
-
- 0 replies
- 437 views
-
-
மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன், கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தச் சந்திப்புகளில், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை, நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், இந்தக் கலந்…
-
- 0 replies
- 498 views
-