அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? December 26, 2024 1:27 pm தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உர…
-
- 0 replies
- 229 views
-
-
கலாநிதி க.சர்வேஸ்வரன் 1.தேசிய மக்கள் சக்தியையும் (ஜே.வி.பி.)யையும் தமிழ் மக்களின் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்களையும் ஒரே நோக்கம் கொண்டவையாக பார்க்க முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்கள் யாவும் தமிழ் மக்களின் விடுதலைக்காக மட்டுமே போராடின. அது ஓரினம் சார்ந்த விடுதலைப் போராட்டம். எமது இயக்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் செயற்பாட்டை கொண்டது. 2.”வர்க்கப் போராட்டம் என்பது இந்த நாட்டின் அல்லலுற்று- துன்பப்பட்டு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் போராட்டமாகும். இந்த மக்கள் கூட்டத்தையே நாம் வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம். இந்த வர்க்கத்தில் பல இனங்கள், பல சமயங்கள், பல மொழிகள் இருக்கலாம்.” 3.” இரண்டு தரப…
-
- 0 replies
- 492 views
- 1 follower
-
-
அநுரகுமார முன்னிலையில் 13 வது திருத்தம் பற்றி பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி? December 23, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் கடந்த வருடம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயத்தில் இருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? இலங்கையின் ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு தங்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக புதுடில்லிக்கு செல்வது ஒரு சம்பிரதாயமாக இருந்துவருகிறது. அதன் பிரகாரம் திசாநாயக்கவும் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார். மூன்றாவது தடைவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான உ…
-
- 0 replies
- 257 views
-
-
யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன? December 22, 2024 — கருணாகரன் — இலங்கையில் நான்கு தேசிய வைத்தியசாலைகளும் பதின்மூன்று போதனா மருத்துவமனைகளும் உண்டு. இதை விட மாவட்ட மருத்துவமனைகள், பிரதேச மருத்துவமனைகள், கண்மருத்துவமனைகள், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள், புற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், கிராமிய வைத்தியசாலைகள் எனப் பல உள்ளன. ஆனால், யாழ்ப்பாண மருத்துவமனையில்தான் அதிகரித்த உயிரிழப்புகளும் மருத்துவக் கொலைகளும், மருத்துவத் தவறுகளும் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்யப்படுகிறது. இந்தப் பரப்புரையில் படித்தவர்கள், பொறுப்பான பதவிகளில் இருப்போர் தொடக்கம் பொழுதுபோக்காக எழுதுவோரும் ஈடுபடுகிறார்கள். இவற்றோடு இப்பொழுது மருத்துவரும் பாராளு…
-
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னரான தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு விவகாரம் நடராஜ ஜனகன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயம் வெற்றிகரமான முறையில் அமைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உடன்பாடுகள் பலமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இவை தொடர்பாக முன்னை நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுமளவுக்கு விடயங்கள் மேல்நிலை பெற்று காணப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் கீழ் சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் மூலதன வருகைக்காக மாற்றங்களுக்கு தயாராகும் நிலை என அனைத்து தளங்களிலும் நெகிழ்வுத் தன்மையுடன் பயணிக்க தேசிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. இன்றைய உலகமயமாக்கல் போக்கு பல்தேசிய நிறுவனங்களின் எதிர்…
-
- 0 replies
- 503 views
-
-
தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன் adminDecember 22, 2024 தமிழரசுக் கட்சிக்கு 75 வயது. கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழரசுக் கட்சி சாதித்தவை எவை? சாதிக்காதவை எவை ? இப்பொழுதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளில் பெரிய கட்சி அது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கும் கட்சியும் அது. ஒரு விதத்தில் தாங்களே தலைமை சக்தி என்ற பொருள்பட சுமந்திரன் கூறிக்கொள்வார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் பொறு…
-
- 0 replies
- 257 views
-
-
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது. வழமைபோல குழப்பம். தேர்தல் முடிவுகளில் இருந்து அந்த கட்சி கற்றுக்கொள்ளவில்லை என்பதனை அந்த செயற்குழு கூட்டம் நிரூபித்தது. இது ஒரு புறமிருக்க, அந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் நடந்தவைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். “கடந்த காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு…. அதனைத் தொடர்ந்து கோத…
-
- 0 replies
- 260 views
-
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணம…
-
- 0 replies
- 306 views
-
-
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்? December 21, 2024 12:56 pm இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் உள்ள போதிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியுற்றே வருகின்றன. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு …
-
- 0 replies
- 301 views
-
-
தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும் கலாநிதி.க.சர்வேஸ்வரன் தமிழ்த் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்; ஒன்றுபட்டு வந்தால் வாக்களிப்போம் என மக்கள் கூறுகின்றனர்.ஒற்றுமை ஏன் தேவை என்றால், வேகமாக தமிழர் தாயகத்திலேயே அவர்களது அடையாளங்களும் இருப்பும் பறிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. 1. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 2. நிரந்தர தீர்வு நோக்கி ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவ்விடயங்களை ஒன்றுபட்ட கொள்கையின் அடிப்படையில் ஓர் அணியாக செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும்.பலவாறாக பிரிந்து நின்று தீர்வு தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளை தமிழ் க…
-
- 0 replies
- 536 views
-
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இ…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழ் தேசிய இனப்பிரச்சினை பிடிகொடாத முறையில் நகரும் ஆட்சித்தளம் நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகின்றது. இவர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கிய பல்வேறுபட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலை தொடர்கின்றன என்ற விமர்சனம் தற்போது அதிகம் பேசப்படும் நிலை காணப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை செவ்வனே நிறைவு செய்யும் போக்கும் தற்போது மேல்நிலை பெற்று வருகிறது. இதனுடன் இலங்கை மின்சார சபை தொழிலாளர்களுக்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை, 13 லட்சம் அரச ஊழியர்களில் 7 லட்சம் பேர் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலையும் தற்போது மேல் வந்துள்ளது. எ…
-
- 0 replies
- 314 views
-
-
மாற்றத்துக்கான காலம் December 16, 2024 கருணாகரன் – தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததோடு கலங்கிப்போயிருக்கின்றன தமிழ்த்தேசியவாத சக்திகள். இனப்பிரச்சினைக்கு அது எத்தகைய தீர்வை முன்வைக்கப்போகிறது? மாகாணசபையின் எதிர்காலம் என்ன? என்பது தொடக்கம் வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலின் (பிராந்திய அரசியலின்) எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி சபை, மாகாணசபைகளுக்கான தேர்தல்களை எதிர்கொள்வது எப்படி? அதில் NPP யை முறியடிப்பதற்கான வியூகத்தை எவ்வாறு வகுக்கலாம்? என்பது வரையில் தலையைப் பிய்க்கும் அளவு நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளன. அரசியலில் இந்த மாதிரி நெருக்கடிகள் ஏற்படுவதொன்றும் புதிதல்ல. பொதுவாக இரண்டு வகையான நெரு…
-
- 0 replies
- 214 views
-
-
"முடிந்தால் குடுமியை பிடி முடியாவிட்டால் காலை பிடித்துக் கொள்" இது கடந்த 2500 ஆண்டுகளாக இலங்கை ராஜதந்திரத்தின் பாரம்பரியம். அதுவும் குறிப்பாக பௌத்த சிங்கள ராஜதந்திர அணுகுமுறை என்று சொல்வதே பொருந்தும். அத்தகைய ஒரு தொடர்ச்சி குன்றாத ராஜதந்திரப் பின்னணியைக் கொண்ட இலங்கை அரசு இயந்திரம் எப்போதும் எதிரிகளின் முன்னே தன்னை திடமாகவும், நம்பிக்கையாகவும் நின்று கொண்டுதான் அரசியல் காய்களை நகர்த்தும். இந்த அடிப்படையில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் தனது ராஜதந்திர யூகத்தால் முரண்பட்ட சக்திகளான இந்தியாவையும், சீனாவையும், மேற்குலகத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி கடந்த காலத்தில் வெற்றி கொண்டார்கள் எதிர்காலத்தில் எப்படி வெற்றி கொள்வர் என்பதனை சற்று வி…
-
- 0 replies
- 295 views
-
-
எது தமிழ்த் தரப்பு? நிலாந்தன். என்பிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் வெளிவிவகார இணை அமைச்சரமாகிய அருண் ஹேமச்சந்திர வீரகேசரி யூரியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில்,ஓரிடத்தில் தமிழ்த் தரப்பு என்ற வார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அவர் அங்கே என்ன கூற வருகிறார் என்றால், இப்பொழுது வடக்கு கிழக்கில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உண்டு. வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்பது இப்பொழுது தமிழ் தேசியத் தரப்புமட்டும் அல்ல என்பதுதான். அரசாங்கத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜேவிபியின் நீண்ட கால உறுப்…
-
- 0 replies
- 269 views
-
-
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த …
-
- 0 replies
- 314 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இதன்படி, அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 17-ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் குடியரசுத்…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகாரப் பரவலாக்கத்தில் அதன் நிலைப்பாடும் Veeragathy Thanabalasingham on December 9, 2024 Photo, SOUTH ASIAN VOICES தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாளடைவில் வரக்கூடிய சவால்கள் பிரதானமாக இனவாத அரசியல் சக்திகளிடமிருந்தே வரக்கூடும் என்று அதன் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும். புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நவம்பர் 21 சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்தார். தேசிய ஐக்கி…
-
- 0 replies
- 262 views
-
-
கிழக்கில் அருணின் அரசியல் முக்கியத்துவம்……! December 11, 2024 — அழகு குணசீலன் — “நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு தேவை. அந்த அரசியல் அமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்……. புதிய அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தம் மட்டும் அல்ல பழைய அரசியல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள இருபத்தியிரண்டு திருத்தங்களும் இல்லாமல் போகும்….” . இது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தர்க்க ரீதியான குழப்பங்களை தவிர்த்த கருத்து. அண்மையில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வாவினால் கூறப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்ட/திருத்தப்பட்ட தெளிவற்ற கருத…
-
- 0 replies
- 341 views
-
-
நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம்; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி! December 9, 2024 — கலாநிதி ஜெகான்பெரேரா — செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலையும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் நிலைமாறுதல் “பாகுபாடு காட்டுகின்ற போக்கின் விளைவாக தோன்றிய ஆழமான பிரச்சினைகளை” கையாளுவதற்கு ஒரு திருப்புமுனை வாய்ப்பை தருகிறது. பத்தாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க இலங்கையில் இனவாதத்தையும் மதத் தீவிரவாதத்தையும் தடுப்பதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அழுத்திக் கூறினார். இனவாத அரசியலும் மதத…
-
- 0 replies
- 417 views
-
-
கஜனின் அழைப்பு ? - நிலாந்தன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரக்குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது ஏதோ ஒரு அடிப்படையில் தமிழ் ஐக்கியத்துக்கான முயற்சிதான். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது. என்பிபி அரசாங்கம் ஒரு யாப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு யா…
-
- 0 replies
- 439 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அநுரகுமார அரசின் தடுமாற்றம் – அகிலன் December 8, 2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னா் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்று தடவைகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்துத் தரப்பி னராலும் வெறுக்கப்படும் அந்த சட்டம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட, இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவா்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களுக்குள் அதிகரித்துள்ளது. எதிா்க்கட்சியாக இருந்து எதிா்ப்பு அரசிய லைச் செய்யும் போது சொல்பவை அனைத்தையும் அதிகாரத்துக்கு வந்தால் செய்ய முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பயங்கரவாதத் தடைச் சட்…
-
- 0 replies
- 262 views
-
-
தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்ளாததும் – நிலாந்தன்! நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கிய ஒரு தண்டனைதான். அதே சமயம் அர்ஜுனாவைத் தெரிவு செய்தமை என்பது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே வழங்கிய ஒரு தண்டனைதான்.அதன் விளைவுகளை அவர்கள் பின்னாளில் அனுபவிக்க வேண்டியிருக்கும் . தேர்தலுக்கு முன்பாக கட்சிகள் தங்களுக்கு இடையே அடிபட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு மூத்த அரசு அதிகாரி என்னிடம் சொன்னார்,” போகிற போக்கைப் பார்த்தால் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்று தமிழ்ச் சனம் முடிவெடுக்கும் ஒரு நிலைமை வரலாம்” என்று. ஆம் அதுதான் நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது. அதுபோல கொழும்பில் வசிக்கும் ஓய்வு…
-
- 0 replies
- 199 views
-
-
தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால் கலாநிதி ஏ.எம். நவரட்ண பண்டார கடந்த 40 ஆண்டுகளில், உலகம் தேசியவாதம் மற்றும் உலகமயமாக்கலுடன் தொடர்புடைய பெறுமான முறைமை களுக்கு இடையே ஒரு பிளவுபட்ட உறவை அனுபவித்துள்ளது, அதனை சமூக விஞ்ஞானிகள் நவீன சகாப்தத்தின் இரண்டு வரையறுக்கும் அம்சங்களாக அடையாளம் கண்டுள்ளனர், இது கடந்த காலத்தில் முழுமையாக்கும் செயல்முறைகளை உருவாக்குகிறது. இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் – 2022 ஆம் ஆண்டு அரகலய (மக்கள் எழுச்சி) மற்றும் அரச அதிகாரத்தை வைத்திருப்பவராக தேசிய மக்கள் சக்தியின் (என் பி பின் ) எழுச்சி – இந்த உலகளாவிய வளர்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது. மேலே குறிப்பிடப்பட்ட மாறிவரும் உலகளாவி…
-
- 1 reply
- 281 views
-
-
மாவீரர் நாள் ஆட்சியாளர்களுக்கு சொல்லியிருக்கும் செய்தி என்ன? நடராஜ ஜனகன் இயற்கை அனர்த்தத்தால் நாடு வழமை நிலையை தொலைத்துவிட்ட நிலை காணப்படுகிறது. கிட்டத்தட்ட நாட்டின் 21 மாவட்டங்கள் வெள்ள அழிவுக்கு உள்ளாகியுள்ளது. வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அங்குள்ள அனைத்து மாவட்டங்களும் தற்போதைய சீரற்ற கால நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2008 ல் அழிவை ஏற்படுத்திய லீசா புயலின் பின்னர் இத்தகைய அனர்த்தம் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுள்ளது.மறுபுறத்தில் வடக்கு, கிழக்கு முழுவதும் மாவீரர்கள் நினைவு தினம் உணர்ச்சிபூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கில் கொட்டும் மழையையும் வெள்ள அபாயத்தையும் பொருட்படுத்தாம…
-
- 0 replies
- 294 views
-