அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வட-கிழக்கிற்கான ஒரு மக்கள் இயக்கத்தின் தேவைப்பாடு யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தெற்கின் சிங்கள கருத்தியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கொழும்புடெலிகிராப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் – இலங்கையின் சமகால அரசியல் கலந்துரையாடல்கள் பிரதானமாக, இரண்டு கேள்விகளின் அடிப்படையில் இடம்பெற்றுவருகின்றன. ஒன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் போகும் அந்த நபர் யார்? இரண்டு, அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் போகும் அரசியல் அந்த கட்சி எது? இவ்வாறு கூறி செல்லும் உயன்கொட, ஆனால் வரும் ஆண்டுகளில் இலங்கையின் ஜனநாயக நிகழ்நிரலுக்கு என்ன நடக்கும் என்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான கேள்வி என்கிறார். இதனை எதிர்கொள்வதற்கு ஒரு வலுவான…
-
- 0 replies
- 781 views
-
-
ஆட்சியில் மாற்றம் வந்தாலும், தேசிய மனச்சாட்சியில் மாற்றம் வேண்டும்! இலங்கையின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கடந்த புதன் அன்று அரச தரப்பால் கொண்டாடப்பட்டது. ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் அதிகம் இன்றி அமைதியாகவும், எழிமையாகவும் நிறைவேறியிருந்தது. கடந்த வருட கொண்டாட்டங்களோடு ஒப்பிடுகையில், படைத்தரப்புக்கான முக்கியத்துவமும், அணிவகுப்புகளும் மட்டுப்படுத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தமது அரசின் திட்டங்கள், சவாலான விடயங்கள், இனநல்லிணக்கம் என்பவற்றை குறிப்பிட்டு உரையாற்றியிருந்தார். “அதிஉத்தம ஜனாதிபதி” போன்ற சொற்பதங்களை பாவித்து தன்னை உயர்வாக முன்மொழிய வேண்டாமென்றும், தனது மனைவியை “முதல் பெண்மணி” என்று அழைக்க வேண்டாமென்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதா…
-
- 0 replies
- 353 views
-
-
அரசியலமைப்பின் 42(4) பிரிவில் மோதும் ரணில் - மைத்திரி இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு அப்பால் சென்று ஆரயப்பட வேண்டியதொன்றாகியுள்ளது. உலகில் எந்தவொரு நாடு ஜனநாயக கோட்பாடுகளை மதித்து அதன் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்கின்றதோ அந்த நாட்டை நல்லாட்சி என்ற வரையறைக்குள் உட்படுத்தலாம். இதனை ஜனநாயக ஆட்சி முறைமை உடைய நாடுகளுக்கு மாத்திரமல்லாது இலங்கையால் ஒதுக்கப்படுகின்ற சமஷ்டி ஆட்சி முறைமையை கொண்ட நாடுகளையும் கருத்தில் கொள்ள முடியும். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளுமே ஒன்றிணைந்து நல்லாட்சி என்ற சித்தாந்தத்திற்குள் தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஒப்பந்த ரீதியில் முன்வந்தது .…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கையின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா? -(கலைஞன்) இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன. ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `றோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது. …
-
- 0 replies
- 942 views
-
-
இரட்டைத் தந்திரோபாயங்களும் சர்வகட்சி மாநாடும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்த அரசியல் கூட்டு திரும்பத் திரும்பக் கூறி வந்த ஒரு விடயம் நாம் ஆட்சிக்கு வந்தால் யுத்தத்திற்குச் செல்லமாட்டோம் என்பதாகும். இருப்பினும் புதிய அரசாங்கத்திற்கு அவ்வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய இயலுமை இருக்கவில்லை. இது நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, கோட்பாட்டு ரீதியான நம்பிக்கைகள், தெற்கு, மற்றும் குறிப்பாக வடக்கில் இருந்து ஏற்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்டதொரு நிலையாகும். எனவே, தவிர்க்க முடியாதபடி நாடு மீண்டும் ஒரு தடவை யுத்த சூழ்நிலையினுள் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இவ்வாரக் கட்டுரையின் விடயம் அதுவல்ல. …
-
- 0 replies
- 931 views
-
-
கூட்டமைப்பிடம் சில கேள்விகள் நிலாந்தன் 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின், வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு சரியான மதிப்பீடு இருந்தால்தான் அடுத்த …
-
- 0 replies
- 287 views
-
-
EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் June 5, 2024 — கருணாகரன் — சாகஸப்பயணம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளையும் அவற்றின் வேட்பாளர்களையும் விட உச்சப் பரபரப்பில் (கிறுகிறுப்பில்) ஈடுபட்டிருப்பது தமிழ்த்தரப்பேயாகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும்படி தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்து விட்டது. இதற்கான தலைமையில் துண்டுப் பிரசுரங்களை அதனுடைய செயலாளர் செல்வராஜா கஜேந்திரனின் அணி விநியோகிக்கத் தொடங்கி விட்டது. இதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற முன்மொழிவைச் செய்த EPRLF, பசி தூக்கமெல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டுத் தானெடுத்த தடியை எப்படியாவது நட்டு விட வேண்டும் என்று தவித்துக் கொண்…
-
- 0 replies
- 516 views
-
-
முன்னணியால் மட்டும் களத்தில் இறங்க முடிவது எப்படி | EETAMIL சமகால ஈழத்தமிழர் அரசியயோடு தொடர்புடைய கருத்துப் பகிர்வென்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 610 views
-
-
தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல அமெரிக்கா மற்றும் பல மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளதாகிய இலங்கைக்கு எதிரானதென்று கூறப்படும் பிரேரணை மீது 22. 03. 2012 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இலங்கை இரு நாடுகள் தரப்பிலும் மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடந்த பல நாட்களாக சூறாவளிப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். குறித்த பிரேரணையானது வெற்றியை எட்டக் கூடிய அளவுக்கு ஆதரவுள்ளதாக அறிக்கைகள் காணப்படுவதால் ராஜபக்ஷ அரசாங்கம் கவலை அடைந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இலங்கை தரப்பிலும் குறிப்பிடத்தக்களவு ஆதரவு திரட்டப்பட்டு வந்துள்ளதாக அ…
-
- 0 replies
- 631 views
-
-
புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா ஈழத்தமிழ் புலம்பெயர் மக்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் தமது தாய்நாட்டுடன் பேணிக் கொள்ளும் உறவுகளை இவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள பெரும் சமூகத்தினர் எவ்வாறு பார்க்கின்றனர்? இவர்களின் தாயகத் தொடர்பு இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசத்துக்கு இடமளிக்கும் என்பதனால் அதனை முழுமையாக நிராகரிக்கிறார்களா? புலம்பெயர்ந்தோரின் தாயகத் தொடர்பு இவர்கள் வாழும் நாடுகளின் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறதா? புலம்பெயரந்து வாழும் மக்களுக்கும் இவர்கள் வாழும் நாடுகளின் பெரும் சமூகத்துக்குமிடையே சமூக, பண்பாட்டுத் தளங்களில் பாரிய முரண்பாடுகள் எழுகின்றனவா? இவற்றைப் பற்றிய சில விடயங்களை இன்றைய பத்தி தொட்டுச் செல்கிறது…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதியின் கொள்கை உரை: சிறுபான்மையின அரசியல் தீவிரவாதமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 08 சிறிய அரசியல் கட்சிகளினதும் சிறுபான்மை அரசியல் கட்சிகளினதும் இருப்புக்குப் பெரும் சவாலாகக் கூடிய வகையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷ சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயல்கிறார். தேர்தல்களின் போது, அரசியல் கட்சிகள், தாம் போட்டியிடும் மாவட்டங்களில், குறைந்த பட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், அக்கட்சிகளை, அம்மாவட்டப் போட்டியில் இருந்து நீக்கும் வகையில், தாம் சட்ட மூலமொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். தற்போது ஒரு கட்சி, ஒரு மாவட்டத்தில் ஐந்து சதவீதம் பெற்றால் போதுமானது. நாட்டில், 70 அரசியல் …
-
- 0 replies
- 336 views
-
-
இந்த மக்கள் கேரள மக்களைப் போல விசாலமாக வாழ்கின்றார்கள் இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை ஜவான்கள் யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியலை, இந்தியாவின் "கடவுள் தேசமாக' வர்ணிக்கப்படும் மலையாள வாசனைக்குரிய கேரளாவுடன் ஒப்பிட்டு பேசிய தருணங்கள் அவை. புறப்படையான பார்வை நோக்கலின் அடிப்படையில், யாழ்ப்பாணத்து மக்கள் "விசாலமானவர்கள்" என்னும் முடிவுக்கு அந்நியர்கள் வேகமாக வந்து விடுவதற்கான முக்கிய காரணங்கள் எமது "பொருளாதாரமும்', "வாழ்வாதாரமும்', "வாழிடக் கோலமுமே! தனித்தனியான, கிணறுகள், எல்லைப்படுத்தப்பட்ட தனிக் குடும்ப வாழிடங்கள், பிரத்தியேகமான மலசலகூடங்கள், பொறுப்புணர்ச்சியுடன் விளைவிக்கப்படுகின்ற விவசாய நிலங்கள் என்று எமக்க…
-
- 0 replies
- 652 views
-
-
நடந்து முடிந்த மூன்று கூட்டங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் இங்கு பலர் களமாடியிருந்ததைத் காணக்கூடியதாக இருந்தது. இதை மிகவும் ஆழமாக அழகாக ஊடகவியலாளரும் விரிவுரையாளரும் ஆகிய நிக்ஸன் அமிர்தநாயகம் உரையாடுகிறார்.
-
- 0 replies
- 638 views
- 1 follower
-
-
வடக்கில் காலூன்றும் கனவு மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியை இழந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக, வடக்குக்கான பயணத்தை, அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரைத் தவறாக வழிநடத்தி தோல்விக்கு இட்டுச் சென்றவர்கள் என்று, பசில் ராஜபக்ஷ மீதும், கோட்டாபய ராஜபக்ஷ மீதும், பரவலான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதிலும் பசில் ராஜபக்ஷவே, அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு, மோசமாகச் செயற்பட்டாரென, தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தபோத…
-
- 0 replies
- 473 views
-
-
பொய் பொய் பொய் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர. ஆனால் இத்தகைய பொய்களைச் சொன்ன முதல் அமைச்சரும், அரசியல்வாதியும் காஞ்சன அல்ல. அரசியல்வாதி என்றாலே பொய்தான் சொல்லுவான் என்று மக்கள் உறுதியாக நம்பும் அளவுக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்வது ஏன்? அப்படி பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் தொடர்ந்தும் நம்புவத…
-
- 0 replies
- 339 views
-
-
சாணக்கியமா சரணாகதியா? “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை” என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. 2015இல் ஐ.தே.கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டு ஆட்சி அமைத்த போது, தான், இதன் உள்ளார்ந்த அர்த்தம் சரியானதே என்று உணர முடிந்தது. யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதை பார்க்கும் போது, அந்தக் கருத்து முற்றிலும் சரியே என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. வடக்கு, கிழக்கின் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில், எந்தக் கட்சியாலும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது போன சூழலில், இ…
-
- 0 replies
- 396 views
-
-
முதலமைச்சர் சி.வி.யின் அறிவிப்பும் சிந்திக்கவேண்டியதன் அவசியமும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தனித்தோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கான சமிக்ஞையை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் காண்பித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் தனது இந்த முடிவு குறித்து சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்போது, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் முதல…
-
- 0 replies
- 430 views
-
-
பொருளாதார மீட்சிக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சுதந்திர இலங்கை என்பது, இனமுர ண்பாட்டோடுதான் பிறந்தது என்றால் அது பிழையல்ல; சர்வசன வாக்குரிமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாக்காளரில் பெரும்பான்மையைக் கவர, இனரீதியான அரசியல் வசதியானது என்று கருதிய அரசியல்வாதிகளின் எண்ணத்திலிருந்து, இன மத தேசியவாதம், அரசியல் மையநீரோட்டத்தில் மெல்ல மெல்ல கலக்கத் தொடங்கியது. அதுவரை அரசியல் பரப்பின் எல்லைகளில் நின்ற இனமத தேசியவாதம், அரசியல் மைய நீரோட்டத்தை நோக்கிக் கொண்டு வரும் கைங்கரியத்தை தேர்தல் அரசியலுக்காக, இந்நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் செய்யத்துணிந்தனர். இலங்கையின் இனமுரண்பாடானது வரலாறு,…
-
- 0 replies
- 473 views
-
-
பிரெக்ஸிட்; மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, மு.ப. 08:53Comments - 0 வரலாற்றில், தனி மனிதர்களின் பாத்திரம் முக்கியமானது. பல வரலாற்று நிகழ்வுகளைத் தனி மனிதர்களின் செயல்களே தீர்மானித்து இருக்கின்றன. இது, பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அனைத்துக்கும் பொதுவானது. வரலாறெங்கும் தனிமனிதர்கள், தேசங்களின் தலைவிதியைத் தீர்மானித்து இருக்கிறார்கள். அவ்வாறு, ஒரு தேசத்தின் தலைவிதியை, ஒருசிலர் தீர்மானிக்கின்ற நிகழ்வு, இப்போது நடந்தேறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிவருவதைக் குறிக்கும் ‘பிரெக்ஸிட்’, இப்போது பேசுபொருளாகி உள்ளது. இது, பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயகத்தையே ஆட…
-
- 0 replies
- 895 views
-
-
கைகொடுக்கத் தயங்குவது நியாயமா? DEC 14, 2015 சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. அதேவேளை, இன்னும் சிலரின் மனங்களில் உள்ள வக்கிரங்களையும் இந்தப் பெருந்துயர் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவுமில்லை. சில மணிநேரத்துக்குள் கொட்டித் தீர்த்த பெருமழையின் பாதிப்பு இலட்சக்கணக்கான மக்களை சூனிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த மழைக்கான காரணம் என்ன, இந்தப் பேரழிவுக்கான பொறுப்பு யார், ஏனிந்த அழிவை எதிர்கொள்ள நேரிட்டது என்று எல்லா ஊடகங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன, விவாதங்கள் தொடர்கின்றன. அவரவர் அறி…
-
- 0 replies
- 689 views
-
-
தமிழர் அரசியலில் கருத்து உருவாக்கிகளின் வகிபாகம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 08 கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக எழுதி வரும் சிரேஷ்ட அரசியல் பத்தியாளர்கள் சிலர், யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களுக்குள் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, அதை நோக்கிய கருத்துருவாக்கத்தை உருவாக்குவதே, அந்த ஒன்றுகூடலின் அடிப்படையாக இருந்தது. பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அந்த ஒன்றுகூடலின் இறுதியில், ஓர் இணக்கப்பாட்டின் கீழ், அறிக்கையொன்றை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில், அறிக்கையின் ஒரு பகுதி வரையப்பட்ட போதிலும்,…
-
- 0 replies
- 411 views
-
-
" ”இந்த நாடு சிங்களவரது. தேசியகீதம் இனி தமிழல் இல்லை” "SRI LANKA IS ONLY FOR SINHALESE" - 1956, 1958, 1983 AND NOW IN 2020. . . NO TO TAMIL NATIONAL ANTHEM - PRESIDENT (Sri Lanka’s Constitution provides for the singing of the national anthem in both Sinhalese and Tamil. ) ”இந்த நாடு சிங்களவரது.” என 1956ல் பண்டார நாயக்க எங்கள் தந்தையருக்குச் சொன்னார். :இந்த நாடு சிங்களவரது” என 1983ல் ஜே.ஆர் எங்கள் தலைமுறைக்குச் சொன்னார். இப்ப 2020பதில் புதியவர் மீண்டும் ”இந்த நாடு சிங்களவரது” என எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லியிருக்கிறார். சாம்ராட்சியங்களதும் தேசங்களதும் குப்பைமேட்டில் நிமிரும் புத…
-
- 0 replies
- 613 views
-
-
ஓநாய்களிடம் மாட்டிய ஆட்டு குட்டிகளாக தமிழ் மக்கள்.! தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம் பெற்று வரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழு பறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை, மிக மிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். யாழ்ப்பாணத்துக்குள், கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக எழுவார்கள் என்று நம்பப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக…
-
- 0 replies
- 789 views
-
-
துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன். கார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப் போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் கூடிய நிகழ்வுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று தாயகத்தில், கிளிநொச்சியில். மற்றது,கனடாவில்.தாயகத்துக்கு வெளியே அதிகதொகை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடாக கனடா காணப்படுகிறது. எனவே அங்கே ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வாரம் அமைச்சர் சந்திரசேகரன் பேசும்போது அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்த…
-
- 0 replies
- 185 views
-
-
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி? ஆக்கம்: இதயச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உரை, பல அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடி பிடித்ததை சரியென்று நியாயப்படுத்தி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டுமொரு சர்ச்சை அவரது நாடாளுமன்ற உரையால் கிளம்பியுள்ளது. தான் சொல்வது சரியென்பதில், எப்போதும் உறுதியாகவிருக்கும் அரசியல்வாதி அவர். புலிகளைத் திட்டித்தான், சிங்களத்தினதும், வல்லரசாளர்களினதும் ஆதரவினைப் பெறவேண்டுமென நினைத்தால் அதையும் செய்வார் அப்பெருமகன். ஆனால் அவர்களின் சொந்த நலன்கள், எமக்கான பிறப்புரிமையை அங்கீகரிக்காது என்பதுதான் நிஜம். ஆகவே ,இனிமேல்…
-
- 0 replies
- 592 views
-