அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
கடற்றொழில் அமைச்சருக்கு வடக்கில் காத்திருக்கும் நெருக்கடிகள் கலாநிதி சூசை ஆனந்தன் இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களின் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் புதிதாக பதவியேற்றிருக்கின்றார். வட பகுதியில் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற பல நெருக்கடிகளுக்கு சுமுகமான தீர்வினை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் யாழில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆயினும் இது அவருக்கு இலகுவாவானதாக இருக்கப் போவதில்லை. இந்திய மீனவர் விவகாரம் இந்தியாவுடன் தொடர்பானது, தென்பகுதி மீனவர் விவகாரம் சிறிலங்கா அரசுடன் தொடர்பானது. அமைச்சரோ தமிழர். கடந்த கால அமைச்சரும் தமிழராகவே இருந்துள்ளார். இருவரும் கடற்றொழிலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்ததில்லை. இரு…
-
- 1 reply
- 378 views
-
-
29 Nov, 2024 | 03:37 PM எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நட்புறவை பேணாவிட்டால் எங்களால் முன்னோக்கி நகரமுடியாது சீனாவின் உதவியும் எங்களிற்கு தேவை என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையிலிருந்;து விலகும் எண்ணம் எதுவுமில்லைஎனவும் தெரிவித்துள்ளார் டெய்லிமிரருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் கேள்வி- பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உங்கள் கட்சிக்கு கிடைத்த ஆணையின் முக்கியத்துவம் குறித்து நீ…
-
-
- 2 replies
- 412 views
-
-
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் December 1, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் என்ன? அண்மைய பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து எழுகின்ற இந்த கேள்வியை வெறுமனே தமிழ்க் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாய்ப்புக்களுடன் இணைத்து நோக்கக் கூடாது. இது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கங்களுடனும் சம்பந்தப்பட்ட கேள்வியாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகள் இந்தத் தடவை ப…
-
- 0 replies
- 374 views
-
-
சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் (ஏ)மாற்றமா…..? November 30, 2024 — அழகு குணசீலன் — அன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இன்றைய தமிழரசுக்கட்சியினதும் ஊடகப்பேச்சாளர் மதியாபரணம் சுமந்திரன் நடந்து முடிந்த பராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கும், விருப்பத்தேர்வில் சுமந்திரனுக்கும் மக்கள் அளித்த வாக்குகள் குறைவானவை. இதனால் 63,327 வாக்குகளை (19.5 %) வாக்குகளை பெற்ற தமிழரசுகட்சிக்கு ஒரு இருக்கையே கிடைத்தது. அது மக்களின் விருப்பத்தேர்வின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட வாய்ப்பளித்துள்ளது. இது சுமந்திரனை சிறிதரன் தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம். முன்னையது தமிழரச…
-
- 0 replies
- 400 views
-
-
நினைவு கூர்தலில் பல்வகைமை – நிலாந்தன். “ஈழ விடுதலை இலட்சியத்திற்கான போரில் இன்னுயிர் நீத்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம்” என்று நோர்வையில் வசிக்கும் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. மாவீரர்களின் நினைவுகளையும் ஏனைய இயக்கங்களின் தியாகிகளின் நினைவுகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மாவீரர் நாள் எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு நாள். அதேசமயம் விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்கள் தங்களுக்கென்று தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றன. எனவே அவரவர் தங்கள் தங்கள் தியாகிகள் தினத்தைக் கொண்டாடுவதுதான் சரி. இதில் மாவீரர்…
-
- 0 replies
- 383 views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம். இந்த ஐயங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் நாட்களே பதில் அளிக்கப்படும் என்பதையும் தமிழ்தேசியப் பற்றுக்கொண்ட நாம் கூறியிருந்தோம். இதனை உறுதி செய்யும் விதமாக வடக்கு நவம்பர் 27ஆம் நாளன்று கிழக்கு தேசம் ஒளியால் நிறைந்திருந்தது. ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி என்பது மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள் வீர்ர்கள் கனவு குறித்தும் இலட்சியத் தாகம் குறித்தும் உலகிற்கு வெளிப்படுத்திய குரல் என்பதுடன் ஈழத் தமிழர் தேசத்தில் தமிழ்தேசியம் என்றும் வீழ்ச்சியுறாது என்பதும் அழுத்தமாக வ…
-
-
- 4 replies
- 401 views
-
-
மாவீரர் நாள் 2024 : மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் – நிலாந்தன்! December 1, 2024 நான்கு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் திண்ணை விருந்தினர் விடுதியில் ஒரு தூதரகத்தின் இரவு விருந்தில் கலந்து கொண்டேன். எனது மேசையில் மூத்த ஊடகவியலாளர்கள் இருவரும் ஊடக முதலாளி ஒருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் கட்சி ஒன்றின் முக்கியஸ்தரும் அமர்ந்திருந்தார்கள். எங்களோடு இருந்து கதைத்துக்கொண்டிருந்த ஒரு ராஜதந்திரி என்னைப் பார்த்துச் சொன்னார் ” எல்லா ஈழத் தமிழர்களின் மனதிலும் ஒரு நாடு என்ற கனவு உண்டு” இப்படிக் கூறிவிட்டு அருகில் இருந்த அந்தக் கட்சிப் பிரமுகரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சொன்னார் “இதோ இவருடைய தலைவர் அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவரிடமும் அந்தக் கனவு உண்டு…
-
- 0 replies
- 436 views
-
-
ஜனாதிபதியின் உரை : கொட்டை நீக்கப்பட்ட கோது……..! November 27, 2024 — அழகு குணசீலன் — ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்க பிரசங்கத்தை செய்திருக்கிறார். இலங்கையின் இன்றைய நிலையில் என்.பி.பி.என்ற போர்வையில், ஜே.வி.பி யின் முழுமையான கட்சி கட்டுப்பாட்டு ஆட்சி அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான அதிகாரப்பகிர்வு, மற்றும் பொருளாதார மந்தம் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான பொருளாதாரதீர்வு திட்டங்கள் குறித்து கனத்த எதிர்பார்ப்பு தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அநுர…
-
- 0 replies
- 242 views
-
-
க.வைத்திலிங்கம் கடந்த தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். உண்மைத் தன்மையுடனும் வெளிப்படையாகவும் அவர்கள் வாக்களித்திருந்தனர். யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுத்ததாக இல்லை. மக்கள் சுய விருப்பின் பேரில் வாக்களித்தனர். அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கக் கூடிய சூழ்நிலையம் காணப்பட்டது. கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் கொடுக்கப்பட்ட தீர்ப்பைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை, அவர்களதும் அவர்கள் தொடர்பாக வெளிவரும் சமூக வலைத்தளப் பதிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த தேர்தலுக்குப் பிறகு தமிழ் மக்களாகிய நாம் எங்கிருக்கிறோம்? எமது அரசியல் எதிர்காலம் என்ன? எம்மால் இழைக்கப்பட்ட தவறுகள் எவை? அவை எப்படி ஏற்பட்டன? அதற்கு யார் காரணம்? இழைத்த தவற…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம். பகுதி 1. சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். Ramanathan Archchuna வால் கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்… இதை சுருக்கமாக சொல்வதானால்…. 1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவ…
-
-
- 3 replies
- 482 views
-
-
கந்தையா அருந்தவபாலன் இலங்கையில் அரச கட்டமைப்புகளுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு நான்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதியையும் பாராளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றுக்கான உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்காகவே அத்தேர்தல்கள் இடம்பெறுகின்றன. அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவை எப்போது நடத்தப்படவேண்டும் என்ற கட்டாய நிபந்தனைகள் காணப்படுகின்ற போதும் ஏனைய இரு தேர்தல்களை நடத்துவதற்கான காலம் அவற்றைப் போல கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாகக் காணப்படவில்லை. இதனால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஆட்சியாளர்கள் தமது விருப்பத்துக்கேற்றவாறு கையாளும் நிலைமை காணப்படுகிறது. அதனால்தான் ம…
-
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
”வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர, “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத்தோற்றமே" ஜெ.பி. கடந்த முறையை விட இம்முறை 36 ஆயிரம் வாக்குகள் குறைவாக அளிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் கடந்த முறையை விட இம்முறை சற்றுக் குறைந்தளவே வாக்குப்பதிவு நடந்ததது (2020: 76% -2024: 69%). இதனால் யாழ்.மாவட்டத்தில் ‘தமிழ்த் தேசிய’ கட்சிகளுக்கு தனியான தாக்கம் ஏற்பட்டதாக கருதமுடியாது. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டியும் வெற்றியின் பின்னரும் தே…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான் November 26, 2024 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும் என்பதற்காகவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.அதில் ஆயுதப் போராட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது. இந்த நாட்டில் தமிழர்கள் சுயகௌர வத்துடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ வேண்டிய வயதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய் திருக்கின்றார்கள்.தன் இனம் தன்…
-
- 0 replies
- 261 views
-
-
சங்குக் கூட்டணியின் தோல்வி அல்லது DTNA யின் முடிவு November 26, 2024 — கருணாகரன் — ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கதை முடிந்து விட்டது. இல்லாத கூட்டமைப்புக்காக ஏன் அடிபட்டுக் கொள்ள வேணும்‘ என்று சில மாதங்களுக்கு முன்பு, (DTNA உருவாக்கப்பட்டபோது) ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டேன். உடனே அவர் குரலை உயர்த்தி ஆவேசப்பட்டார். ‘கூட்டமைப்பு இல்லையென்று யார் உங்களுக்குச் சொன்னது? கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சிதான் வெளியேறிச் சென்றதே தவிர, நாம் தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே இருக்கிறோம்‘ என்றார். ‘அப்படியில்லையே! நீங்கள் DTNA (ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு‘ என்றல்லவா செயற்படுகிறீர்கள்? கூட்டமைப்பு என்ற பேரில் தமிழரசுக் கட்சிதானே உள்ளத…
-
- 0 replies
- 386 views
-
-
ஈழத்தில் 2009 ல் எங்கள் ஆயுத பலத்தை இழந்தோம். இப்போ அரசியல் பலத்தையும் இழந்திருக்கிறோமா. அப்படி இப்படி நாம் அது எல்லாம் இல்லை என்று பூசி மொழுகினாலும் சில தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எதிர்காலத்தில் இது நிரந்தரமான தோல்வியாக இருக்காமல் நாம் மாற்றி அமைக்க வேண்டுமானால் நாம் விட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல் விடா கொண்டன் கொடாக் கொண்டனாக இருக்காமல் இனியாவது ஒற்றுமையோடு பயணியுங்கள். தமிழ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதோ போல் புலத்திலும் நிலத்திலும் உள்ளவர்கள் நம்மை நாமே தாழ்த்தியபடி ஆளுக்கு ஆள் மாறி மாறி தேசியம் தெருவில் கிடக்கிறது என்பதும் தமிழ் இனவாதத்தால் வந்த வினை என்பதும் இப்படி தேசியம், தேசம் …
-
- 0 replies
- 325 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல் November 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தல் கண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ‘முதலாவதுகளில்” கூடுதலான அளவுக்கு கவனத்தை ஈர்த்திருப்பவை தேசிய மக்கள் சக்தி சாதித்த இரு சாதனைகளேயாகும். தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்டமான வெற்றி இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனியொரு கட்சி அல்லது கூட்டணி பாாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற முதலாவது சந்தர்ப்பத்தை குறித்து நிற்கிறது. அடுத்ததாக நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை தவிர, ஏனைய சகலவற்றிலும் தேசிய மக்கள் சக…
-
- 1 reply
- 192 views
-
-
இனப்பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கிய ஆரம்பமாக அமையும் sachinthaNovember 22, 2024 ன் வாக்களித்த முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலேயாகும். இத்தேர்தலில், அப்போது நவசமசமாஜ கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காரவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத்தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும், எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை. நான், வாசுதேவ நாணயக்காரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத்தேசிய இன…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன். தொடக்கத்திலிருந்தே அர்ஜுனா சர்ச்சைகளின் மையமாக இருந்தார். சர்ச்சைகள்தான் அவரை வைரல் ஆக்கின. சர்ச்சைகள்தான் அவரை பிரபல்யம் ஆக்கின.சர்ச்சைகள்தான் அவருடைய அரசியல் பிரவேசத்துக்கான முதலீடு. அரசியலில் மிகக் குறுகிய காலத்துக்குள் எழுச்சி பெற்றவர் அவர். இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் ஊடகக் கவனிப்பை பெற்ற ஒருவராக குறிப்பாக,சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் குவிமையப்படுத்தப்படும் ஒருவராக அவர்தான் காணப்படுகிறார். ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும் எதையாவது வில்லங்கமாகச் செய்து விடுகிறார். பின்னர் அதை அவரே பெருமிதமாகப் பகிரவும் செய்கிறார். அவருக்கு இப்பொழுது கிடைக்கும் ஊடக கவர்ச்சி நெகட்டிவானது.ஆனால் அவர் அதை ரசிக்கிறார். கி…
-
-
- 7 replies
- 717 views
-
-
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி? - நிலாந்தன் adminNovember 24, 2024 அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்தார். நடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தமிழர்களை நோக்கி வந்த முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் அவர். யாழ்ப்பாணத்தில் அவர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் செய்து அங்கே ஒரு ஊடகச் சந்திப்பையும் நடத்தினார். ஒரு நாட்டின் தூதுவர் நாட்டின் ஒரு மாவட்டத்தில் உள்ள “பிரஸ் கிளப்புக்கு” தானாக வந்து ஊடகவியலாளர்களை சந்திப்பது என்பது பொதுவானது அல்ல. அதில் கேட்கப்பட்ட கேள்வ…
-
- 0 replies
- 319 views
-
-
தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன - எம். ஏ. நுஃமான் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இன்றி; சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இன்றி, எல்லா மக்களும் இதன் வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர். அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய மாற்றம் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 327 views
-
-
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அதனுடன் இணைந்து செயற்படும் ஊழலில் ஈடுபட்ட திமிங்கிலங்களை பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்திய சீன உறவுகளில் சமநிலையை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களிற்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி:- இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளிற்கு ஜனாதிபதி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்! Veeragathy Thanabalasingham on November 18, 2024 Photo, GETTY IMAGES நாடாளுமன்ற தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதற்தடவையாக அதேபோன்ற ஒரு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்க…
-
- 4 replies
- 527 views
- 1 follower
-
-
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வடக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் கடந்த தேர்தலில் பறி போயிருந்த கிழக்கு மாகாணம் தமிழ் மக்களினால் மீண்டும் கைப்பற்றப்படுள்ளது கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி. ) 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் என 7 ஆசனங்களையும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரம் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1ஆசனத்தையும் ஶ…
-
-
- 7 replies
- 779 views
- 1 follower
-
-
மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? November 20, 2024 — கலாநிதி சு.சிவரெத்தினம் — நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் என்பார்கள், பொருளாதார நெருக்கடியும், வரிசைக்(queue) காலமும் இடம்பெற்றதும் நன்மையாகத்தான் முடிந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த உயர்வர்க்க ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டு சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து பல கஸ்ரங்களை அனுபவித்த ஒருவர் ஜனாதிபதியானதும். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதியையும் அதிகாரத்தையும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்பதை புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசும் வெளிக்காட்டியதும் மக்களை முன்னைய ஆட்சியாளர்கள் மீது…
-
- 0 replies
- 319 views
-
-
2024 பாரளுமன்ற தேர்தல் முடிவுகள்; தேசிய மக்கள் கட்சியும் தமிழ் மக்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் எமது பாடசலை காலங்களில், இளைஞர்கள் யுவதிகள் ஒருவரை ஒருவர் காதலிப்பதும், பின்னர் பிரிவில் முடிந்ததும், அதிகமாக தமது காதல் கடிதங்களில் எழுதும் சினிமாப்படல் என்பது, 1962ம் ஆண்டில் வெளியான “நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்” வெளியான ஓர் பாடல். இப்பாடலை விரும்பியவர்கள் முழுதாக கேட்டால் இன்னும் பல சிந்தனைகளுடன் இன்றைய தமிழ் அரசியலில், விசேடமாக கடந்த வெள்ளிக்கிழமை 15ம் திகதி வெளியான இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடியும். தமிழ் வைத்தியம் என சொல்லப்படும், ஆயுள்வேத வைத்தியத்தின் மருந்துகள் மிகவும் கசப்பும் கைப்பும் நிறைந்தவை. இந்த அடிப்பட…
-
- 0 replies
- 238 views
-